ஜோதிடத்தில் காகம் தலையில் உட்கார்ந்தால் அல்லது காகம் தலையில் தட்டிச் சென்றால், அதற்கு இரு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
1. காகத்திற்கும், முன்னோர்களுக்கும் தொடர்பு இருக்கிறது, நாம் நம் முன்னோர்களை வழிபட மறந்திருந்தாலோ அல்லது முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்திருந்தாலோ அதை காகத்தின் வடிவில் வந்து நமக்கு நினைவுபடுத்தும் வகையில் காகம் நம் தலையில் தட்டிச் சொல்லும்.
2. பறவைகள் மற்றும் விலங்கினங்களுக்கு இயற்கைச் சீற்றங்களை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் தன்மை உள்ளது. எனவே நமக்கு ஏதேனும் ஒரு உடல் பிரச்சனை பிற்காலத்தில் ஏற்பட உள்ளது என்றால், அப்பொழுது காகம் நம்மை கடந்து செல்லும் போது, அதனை நமக்குக் காகம் எச்சரிக்கும் வகையில் நம் தலையில் தட்டிச் செல்லும்.
இந்த இரு நிலைகளிலும் என்ன செய்ய வேண்டும்? என்பதையும் ஜோதிட நூல்கள் பரிந்துரைக்கின்றன. அவை;
* நம் வீட்டில் நல்லெண்ணெய் ஊற்றி விளக்கேற்றி குலதெய்வத்தை வழிபட வேண்டும்.
* கோவிலுக்குச் சென்று சனீஸ்வர பகவானுக்கு எள்ளில் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
* காகத்திற்கு உணவு வைத்து வழிபட வேண்டும்.
* முன்னோர்களுக்கு அம்மாவாசை அன்று படையல் போட்டு வழிபட வேண்டும். இந்நாட்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏதாவது உதவி செய்திட வேண்டும்.
இப்படி செய்வதால் நமக்கு வரக்கூடிய தீங்குகளிலிருந்து விடுபட முடியும்.