நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் தனித்தனியான பலன் உண்டு என்று கனவு சாஸ்திரம் என்றழைக்கப்படும் அபிதான சிந்தாமணி கலைக்களஞ்சியம் எனும் நூல் தெரிவிக்கிறது.
கனவு நிலை மற்றும் அதற்கான பலன்களைப் பற்றித் தேவகுருவாகிய வியாழன் கூறியதாகச் சொல்லப்படுகிறது. இந்தக் கனவு சிலருக்கு அதிகப்படியான நம்பிக்கை மற்றும் உடல் நலக்குறைவு போன்றவைகளால் ஏற்படுகிறது.
காணும் கனவுகள் அனைத்தும் பலிப்பதில்லை. இருப்பினும் சில கனவுகளுக்கான பலன்களைப் பெரியோர்கள் தங்கள் அனுபவத்தினால் கண்டிருக்கிறார்கள்.
கனவு காணும் காலத்திற்கேற்றபடி அதன் பலன்கள் இருக்கும் என்பதை;
“படைத்த முதற்சாமத்தொராண்டிற் பலிக்கும் பகரிரண்டாய்க்
கிடைத்த பிற்மாசத்திற் றிங்க ளெட்டாவதிற் கிட்டுமென்ப
ரிடைப்பட்டசாமத்து மூன்றினிற் றிங்களுண் மூன்றெபராற்,
கடைப்பட்டஜாமத்து நாட்பத்திலே பலன் கைப்பெற்றதே”
என்கிறது கனவுக்கான நூல். அதவாது, கனவு இரவில் முதல் வேளையில் வந்தால் வருடம் ஒன்றிலும், இரண்டாவது வேளையில் வந்தால் எட்டு மாதத்திலும், மூன்றாவது வேளையில் வந்தால் மூன்று அல்லது நான்கு மாதங்களிலும், நான்காவது வேளையில் வந்தால் பத்து நாட்கள் முதல் ஒரு மாதத்திலும் பலன் கிடைக்கும். சூரிய உதயத்தில் தோன்றிய கனவாக இருப்பின், அன்றைக்கே பலன் கிடைக்கும் என்கிறது.
கனவுகளும் அதற்கான பலன்களும்
கனவுச் செய்தி (கண்ட கனவு) |
கனவின் பலன் |
பூமி தானம் செய்தல் |
திருமணம் நடைபெறும். திருமணம் செய்தவர்களாக இருந்தால், பெண்ணின் வழி செல்வம் வந்து சேரும் |
தன் நிலத்தில் எல்லையில்லாமலிருத்தல் |
மகிழ்ச்சியும், தனலாபமும் உண்டாகும் |
கரும் பூமி |
துன்பம் வரும் |
நிலநடுக்கம் |
செயல்கள் பாதிக்கும் |
நில அதிர்வால் சேதம் |
உறவினருக்குத் துன்பம் |
தன் காலின் கீழ் பூமி அசைதல் |
பணமிழப்பு |
மலை அசைதல் |
பெரியவர் இறப்பு நிகழும் |
தானறிந்த நாடு பூமி அதிர்ச்சியால் பாதித்தல் |
அந்த நாட்டிற்குப் பாதிப்பு |
தன் நிலம் செழிப்பாய் விளைதல் |
நிறைய செல்வம் உண்டாகும் |
தன் தோட்டத்தில் காய்கறிகள் நிறைந்த பாத்திகள் |
ஆபத்து ஏற்படும் |
தன் தோட்டத்தில் கிணறு, பூஞ்செடிகள், பழங்கள் காணல் |
நல் நடத்தையுடைய பெண்டிரும், புத்திரரும் கிடைப்பர் |
பயிர் முளையாது அழுந்தல் |
துன்பமும், நட்டமும் ஏற்படும் |
பசும்பயிர் நிறைந்த இடத்தில் நடத்தல் |
நிலையில் வளர்ச்சி ஏற்படும் |
பசும்பயிர் சுமை |
நல்லது நடக்கும் |
உலர்ந்த பயிர் சுமை |
தீமை நடக்கும் |
வயலில் கொக்கிருக்கக் காணல் |
துன்பத்திலும் மகிழ்ச்சி வரும் |
தானே ஏர் உழவு செய்தல் |
நன் மதிப்பு வரும் |
அகலமான சாலையில் நடத்தல் |
வாழ்க்கை வளமடையும் |
குறுகலான சாலையில் நடத்தல் |
துன்பம் வரும் |