இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
பொதுத் தகவல்கள்

நீசம் - நீசபங்க ராஜயோகம்

முனைவர் ஸ்ரீவாலாம்பிகை


நீசம் - என்றால் கெட்டு நிற்பது என்று பொருள். அவ்விதம் கெட்டு நின்ற கோள் சந்திர கேந்திரம், ஆட்சிக்கிரகத்துடன் நின்றால் நீசம் பங்கம் பெற்றதாகவும், அதனால் வெகு இராஜயோகப் பலன்கள் கிடைக்கும் என்றும் இதுவே நீசபங்க ராஜயோகம் என்றும் சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன.

கிரக உச்ச நீச அளவு, உச்சம் நீசம் பெறாத ராசிகள் - உபகிரகங்கள் பரிவேடன், இந்திர தனுசு, தூமன், தூமக்கேது உச்சம், நீசம், உச்ச நீச பலன், நீச ராசிகள், நீசபகை ஸ்தானம், அகராதிகள் தரும் விளக்கம் - சூரியன் நீசம், சந்திரன் நீசம், செவ்வாய் நீசம், புதன் நீசம், குருநீசம், சுக்கிரன் நீசம், சனி நீசம், ராகு நீசம், கேது நீசம், நீசக்கிரகம், நீச பங்க யோகம், நீச பங்க ராஜயோகம், பல கிரகம் நீசம் - இராஜயோகம், நீசன் நின்ற ராசியதிபதி குருவின் பார்வை, நவக்கிரக கோட்சார பலன் - கொம்மைப் பாட்டு ஆகியவை தெரிவிக்கும் செய்திகளைக் காண்போம்.

கிரக உச்ச நீச அளவு

கிரகங்கள் உச்சம், நீசம் பெறும் அளவுகளாக

* சூரியன் மேஷத்தில் 30 உச்சமும், துலாத்தில் 30 நீசமும் பெற்றிருக்கிறது

* சந்திரன் ரிஷபத்தில் 3 உச்சமும், விருச்சகத்தில் 3 நீசமும் பெற்றிருக்கிறது

* செவ்வாய் மகரத்தில் 28 உச்சமும் கடகத்தில் 28 நீசமும் பெற்றிருக்கிறது

* புதன் கன்னியில் 15 உச்சமும், மீனத்தில் 15 நீசமும் பெற்றிருக்கிறது

* குரு கடகத்தில் 5 உச்சமும், மகரத்தில் 5 நீசமும் பெற்றிருக்கிறது

* சுக்கிரன் மீனத்தில் 27 உச்சமும், கன்னியில் 27 நீசமும் பெற்றிருக்கிறது

* சனி துலாத்தில் 20 உச்சமும், மேஷத்தில் 20 நீசமும் பெற்றிருக்கிறது

என்கிறது அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம். (ரிஷிபானந்தர், அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், பக்.104)

உச்சம் நீசம் பெறாத ராசிகள்

ராசி வீடுகளில் மிதுனம், சிம்மம், தனுசு, கும்பம் ஆகியவற்றில் நவக்கிரகங்களில் எதுவுமே உச்சம், நீசம் பெறவில்லை. அங்கெல்லாம் உபகிரகங்கள் உச்சம், நீசம் பெறுவதாக பண்டைய ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. (அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம்)

பரிவேடன், இந்திர தனுசு, தூமன், தூமக்கேது

* பரிவேடன், மிதுனத்தில் உச்சமும், தனுசில் நீசமும் பெறுகின்றன.

* இந்திர தனுசு தனுசில் உச்சமும், மிதுனத்தில் நீசமும் பெறுகின்றது.

* தூமன், தூமக்கேது இருவரும் சிம்மத்தில் உச்சமும், கும்பத்தில் நீச்சமும், சிம்மத்தில் நீசமும், கும்பத்தில் உச்சமும் பெறுகின்றன.

என்று அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் எனும் நூல் குறிப்பிடுகின்றது.



உச்ச நீச பலன்

ஒரு ஜாதகத்தில் உச்ச நிலையில் இருக்கும் கிரகம் நன்மையான பலன்களையும், நீச நிலையில் இருக்கும் கிரகம் பாதகமான பலன்களையும் அதாவது தீய பலன்களையும் வழங்கும் என்பது பொதுவிதியாய்க் குறிப்பிடுகின்றது. (அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் பக்.70.)

நீச ராசிகள்

நீச ராசிகள் சூரியனுக்கு துலாமும், சந்திரனுக்கு விருச்சிகமும், செவ்வாய்க்குக் கடகமும், புதனுக்கு மீனமும், குருவிற்கு மகரமும், சுக்கிரனுக்கு கன்னியும், சனிக்கு மேஷமும் நீச ராசிகளாகும் என்று குறிப்பிடுகின்றது. (அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம், பக்.96.)

நீசபகை ஸ்தானம்

கோட்சார முறையாக ஒரு கிரகம் அளிக்க வேண்டிய இடத்தில் நீசமடைய நேர்ந்தாலோ அல்லது அந்த இடமே அதற்குப் பகை வீடாக இருந்தாலோ நல்ல பலன்கள் நிச்சயம் நடக்காது. (அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் ப.203.)

அகராதிகள் தரும் விளக்கம்

* நீசக்கிரகம் - இராகு, கேது, உச்சத்திற்கு ஏழாமிடக் கிரகம். நீசத் தானம் அடைந்த கிரகம்.

* நீசக்கிரகம், நீசக்கோன் - இராகு, உச்சத்திற்கு ஏழாம் இடக்கிரகம், கேது, நீச ஸ்தானம் அடைந்த கிரகம்.

* நீசத்தானம் - உச்சத்திற்கேழாமிடம்.

* நீச ஸ்தானம் - உச்சத்திற்கு ஏழாம் இடம்.

* நீசநடை - தீயொழுக்கம்.

* நீச பங்க ராசயோகம் - ஓர் யோகம், ஒரு யோகம். நீசம் பெற்ற கிரகம், நீசங் கெட்டு இராஜ யோகத்தைத் தருவதாகும். (விவரம்: நீசக் கிரகம் இருந்த வீட்டுக்கு உடையவன், ஆட்சி அல்லது உச்சம் பெற்றாவது, சந்திரனுக்குக் கேந்திரம் பெற்றாவது நிற்பதாகும்)

* நீசப்படுதல் - ஈன குணம் உடைத்தாதல்.

* நீசப்பெலக் குறைவு - பங்கம்.

* நீசம் - உச்சத்திற்கு ஏழாம் இடம். ஈனம், உச்சத்திற்கேழாமிடம், கொடுமை.

* நீச ராசி - கிரகங்கள் நீசம் பெறும் ராசி. (விவரம்: கிரக நீசத்தில் காண்க என்று விளக்கம் தெரிவிக்கின்றது)



கிரக நீசங்கள்

கிரகங்கள் நீசம் பெற்றால் கீழ்க்காணும் நீசபலன்கள் இருக்கும் என்று அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் எனும் நூல் குறிப்பிடுகின்றது.

சூரியன் நீசம்

சூரியன் நீசம் பெற்றிருந்தால் உஷ்ண சம்பந்த வியாதியால் வருந்த நேரும். தந்தையின் ஆரோக்கியம் மற்றும் உறவு முறை சரிப்படாது. அறிவு ஆராய்ச்சி உள்ளவராக இருப்பர். தீயகுணம் நடத்தையுள்ளவராகவும் இருப்பர்.

சந்திரன் நீசம்

சந்திரன் நீசம் பெற்றிருந்தால் பெற்றோர் சுகம் இழந்தவராக இருப்பர். பயந்த சுபாவமுள்ளவர். ஆரோக்கியமும் குறைந்திருக்கும் சுய நலவாதியாக இருப்பர், சீதள சம்பந்தமான வியாதிகள் ஏற்படும். நீரில் கண்டமும் இருக்கும். பெண்களால் பல வகையிலும் தொல்லை அனுபவிப்பவராக இருப்பர்.

செவ்வாய் நீசம்

செவ்வாய் நீசம் பெற்றிருந்தால் எடுக்கும் காரியங்களில் வெற்றி பெறுவது கடினம். குடும்பத்தில் கலகம், பல வித பிரச்சினைகள் நிறைந்திருக்கும். மூளை பாதிப்பும் அது சம்பந்தமான நோய்க்கும் ஆளாக நேரும். வீடு, நிலம் போன்றவை இருந்தாலும் அதனால் தொல்லைகளே இருக்கும். நன்மை இருக்காது. வசதி குறைந்திருக்கும்.

புதன் நீசம்

புதன் நீசம் பெற்றிருந்தால் கல்வியில் தடை இருக்கும். வாழ்க்கையில் பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். உற்றார் உறவினர்களுக்கு விரோதியாக இருப்பர். காம இச்சை மிகுந்தவராக இருப்பர். புத்திரர்களால் எந்த நன்மையும் பெற முடியாது. பழி பாவத்திற்கு ஆளாக நேரும்.

குரு நீசம்

குரு நீசம் பெற்றிருந்தால் தீயவராக பழி பாவத்திற்கு அஞ்சாதவராக இருப்பர். கல்வி கற்றாலும் அதனால் பயன் பெறாதவராவர். ஆசாரம் இல்லாதவர். கரு உற்பத்தியில் சிதைவு காட்டும். புத்திரர்கள் இருப்பின் அவர்களால் தொல்லை மிகுந்திருக்கும்.

சுக்கிரன் நீசம்

சுக்கிரன் நீசம் பெற்றிருந்தால் களத்திர சுகங்கள் குறைவு, பெண்கள் வகை ஆதாய அனுகூலங்கள் குறைவு, சுகத்தானம் பலம் இழத்தல், ஆடை, ஆபரண வசதிகள், வண்டி வாகன வசதிகள் குறைவு, பால் பசு, தாயினால் கிடைக்கக் கூடிய சுகங்கள் இன்மை, செல்வவளம் குறைதல், கால்நடைகள் நன்மை தராது இருத்தல் ஆகியன ஏற்படும்.

சனி நீசம்

சனி நீசம் பெற்றிருந்தால் தீயகுணம் முரட்டுத்தனம் மிக்கவராக இருப்பர். பிறர் வெறுக்கும் காரியங்களைச் செய்வர். ஆரோக்கியம் குன்றி இருக்கும். கீழான பெண்களுடன் அல்லது ஊனமுற்ற பெண்களிடம் தொடர்பு கொண்டு இருப்பார். சோம்பல் மிகுந்து இருக்கும். வறுமை இருக்கும். மனைவிக்கு தோஷம் உண்டு அல்லது மனைவியை விட்டுப் பிரிந்தவராக இருப்பர்.

ராகு நீசம்

ராகு நீசம் பெற்றிருந்தால் எதற்கும் குதர்க்கம் பேசுபவராக இருப்பர். தர்க்கவாதம் புரிவர். எதையும் யோசித்து செய்ய மாட்டார்கள். இருந்தாலும் செய்யும் காரியங்களில் தீவிரமும், அக்கறையும் காட்டுவர். பித்தத் தொடர்பான வியாதி காட்டும். ஆயுதங்களால் தொல்லை ஏற்படும். குடும்பத்தில் வெறுப்புற நேரும்.

கேது நீசம்

கேது நீசம் பெற்றிருந்தால் பிறரையும் தம்மைப் போல எண்ணும் சுபாவம் உடையவராக இருப்பர். ஆன்மீகத்துறையில் ஈடுபாடும் அத்துறைக்கு தலைமை ஏற்று நடத்தும் வாய்ப்பும் சில காலம் கிட்டும். தாய்வழி உறவினருக்கு தோஷம் காட்டும். மருந்து மாந்தீரிகத்தினால் தொல்லைகளை அனுபவிக்க நேரும்.



சோதிட சிகாமணியினுள் இவ்விரு ராகு, கேது கோள்களுக்கு மிதுனம், தனுசு உச்ச நீச வீடுகளாகக் குறிப்பிடப் பெற்றுள்ளது. இச்செய்தியும் இராகு மிதுனத்தில் உச்சம் எனில் தனுசில் கேது நீசம். கேது மிதுனத்தில் உச்சம் எனில் தனுசில் இராகு நீசம் என்றும் கொள்ளலாம். இரு கோள்களும் ஒரே இராசியில் உச்சமோ நீசமோ பெற வாய்ப்பு இல்லை இதுவும் ஆய்வுச்சிந்தனைக்கு உரியதாக உள்ளது என்றும் குறிப்பிடுகின்றது.

பெரிய ஜோதிட சில்லரைக்கோவை நூலினுள் இராகு விருச்சிகம் இராசியில் உச்சம் என்றும் இடபம் இராசியில் நீசம் என்றும் குறிப்பிடுகின்றது.

“பாம்பது கன்னி செட்டி பார்தனுமகர கும்பம்
கோம்பிலா மீனம் நட்பு சோர்விலா மிதுன மாட்சி” (ஜெயமுனி சோதிட சூத்திரம், பா.எ.8, ப.377.)

“கேதுயாழ் விடையுங்கூட கெட்டியாஞ் செட்டி நட்பாம்
வாதைசெய் தேளு மீனம் மகர்தனு கன்னி ஆட்சி.” (ஜெயமுனி சோதிட சூத்திரம், பா.எ.9, ப.377.)

எனும் பாடல்கள் சான்று பகர்கின்றன.


நீச பங்க இராஜ யோகம்

அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் நூலில் சிறப்பு விதியாக ஒரு கிரகம் நீசம் பெற்றிருந்து அதுவே நீசபங்கம் பெற்றிருக்குமானால் உச்சம் பெற்ற கிரகத்தை விட மேலான பலன்களைக் கொடுக்கும். இதையே நீசபங்க ராஜயோகம் என்பர் என்கிறது.

மேலும்; ஒரு கிரகம் நீசம் பெற்றிருக்க அந்த வீட்டிற்குரிய அதிபதியோ அல்லது அந்த வீட்டின் உச்ச கிரகமோ சந்திரனுக்கு கேந்திர ஸ்தானத்தில் இருந்தால் நீசபங்க ராஜயோகம் என்கின்றது. இந்த அமைப்பு யோகமுள்ள அமைப்பு. கிரகங்களின் ஆட்சி, உச்சத்தால் ஏற்படும் நற்பலன்களை விட நீசபங்க ராஜயோகத்தினால் அதிகமான பலன்கள் நடக்கும் என்று பழைய நூல்களில் நம்பப்படுவதைக் குறிப்பிடுகின்றது. நீச பங்கம் பெற்ற கிரகத்தின் தசை நடைமுறைக்கு வர வேண்டும் அப்போது தான் இது சாத்தியம் என்றும் தெரிவிக்கின்றது.

பல கிரகம் நீசம் - இராஜயோகம் ஒரு ஜாதகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் நீசம் பெற்றிருந்து அதில் ஒரு கிரகம் நீச பங்கம் பெற்றிருந்தாலும் போதும். மற்ற நீசக் கிரகங்களினால் எந்த கெடுதல் பலன்களும் நடக்காது. அத்தோடு மிக உயர்வான நிலையை ஏற்படுத்தும். அரசாளும் தகுதியையும் உண்டாக்க வல்லது.

நீசன் நின்ற ராசியதிபதி

ஒரு ஜாதகத்தில் நீசக் கிரகம் நின்ற ராசிக்குரியவன் பரிவர்த்தனை பெற்றிருந்தால் கூட நீசபங்க ராஜயோகம் என்று கூறுவது உண்டு என்கின்றது அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம்.

குருவின் பார்வை - குரு பார்க்க கோடி பாவம் நிவர்த்தியாகும். அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் சுபக்கிரகமான குருவுக்கு 5, 7, 9 ம் பார்வை உண்டு. குரு தானிருக்கும் ஸ்தானத்தை விடப் பார்க்கும் ஸ்தானத்தையேப் பலப்படுத்த வல்லவன். ஒரு கிரகம் தோஷம் பட்டிருந்து குருவின் பார்வை பெற்றிருந்தால் தோஷம் நீங்கிப் பலப்பட்டு விடும். இதனால் குரு பார்க்கும் ஸ்தானங்களையும் அவன் பார்வைபடும் கிரகங்களையும் பற்றி ஆராய்ந்து பலனறிய வேண்டும் என்று தெரிவிக்கின்றது.

நவக்கிரக கோட்சார பலன் - கொம்மைப் பாட்டு

கொம்மைப்பாட்டு இதனைக் கோட்சாரப் பலாபலக் கொம்மைப்பாட்டு எனவும் வழங்குவர்.

கோட்சார பலன் - கோள், சாரம், பலன். ஒன்பது கோள்கள் விண்ணில் தாங்கள் எப்பொழுதும் சென்று கொண்டிருக்கும் பயணம் கோள்களின் சாரம் கோட்சாரம் என வழங்கப்பெறும். இதன் பலன்களைக் குறிப்பிடுவதே கோட்சார பலன் எனப்படும். கோட்சார பலன் இந்நூலினுள் கொம்மைப் பாட்டு எனும் தலைப்பில் ஒன்பது கோள்கள் ஆகிய ஒவ்வொன்றன் உட்தலைப்பிலும் பாடல்கள் மட்டும் அமைக்கப் பெற்றுள்ளது. பொருளுரை இடம் பெறவில்லை. தீய பயன்கள் மட்டுமே குறிப்பிடப் பெற்றுள்ளன. நற்பயன்கள் குறிப்பிடப் பெறவில்லை. பத்துப்பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இந்நூலாசிரியரின் பெயர் தேவராச கவிராயன் என்றும் பாடலில் குறிப்பிடப் பெற்றுள்ளதால் அறியலாம். அப்பாடல்,

“கொம்மைப் பாட்டாக மொழிந்தவனாரெனில் கோதைதிருவடி
தாடொழுது, நம்மையாழுந் தேவராச கவிராயன் நாடிச்சொன்னான்
மானிடரே” (நவக்கிரக கோட்சார பலன் கொம்மைப்பாட்டு, பா.எ.10, ப.272.)

என்ற பாடல் மூலம் அறியலாம்.

சிறப்புகள்

“மந்திரவாதி வாயடங்கினாற்போல”,

“எவ்வாறோ பிள்ளை பெண்சாதி பெற்றார் நிலை”

என்ற அழகிய தமிழ் உவமைகள் கையாளப் பெற்றுள்ளன. சந்திரன், செவ்வாய் கோட்சாரப் பலன் கூறுமிடத்து இவை கையாளப் பெற்றுள்ளன.

இப்பத்துப் பாடல்களும் மானிடரே எனும் முடிவு அமைப்பினிலேயே முடிக்கப் பெற்றுள்ளன. முற்றும் துறந்த முனிவர் பாடினார் என்ற குறிப்பும் இதனுள் காணப்பெறுகின்றது. இப்பத்துப் பாடல்களும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு கேதுக்கள் எனும் உள் தலைப்பிலேயே இடம் பெற்றுள்ளன.


நவக்கிரக கோட்சார பலன் கொம்மைப்பாட்டு எனும் பெயரினுள் 10 பாடல்களாக நவகோள்களுக்கும் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, இராகு, கேது கோட்சார பலன்கள் குறிப்பிட்டுள்ளது.

நவக்கிரக கோட்சாரபலன் கொம்மைப்பாட்டு எனும் இந்நூல் இப்பாடல்களின் இறுதியினில் கோட்சாரப் பலாபலக் கொம்மைப்பாட்டு என்று குறிப்பிட்டுள்ளது.

இந்நூலினுள் தீய பலன்கள் விளைவினைக் குறிப்பிடுகின்றது.

* சூரியன் 1, 4, 5, 7, 8, 9, 12 இல் வீரியமாக நின்றால் தீய பலன்கள் விளையும்.

* சந்திரன் 2, 4, 6, 8, 11 இல் தனித்த நிலையில் பலமாய் நிற்பின் மந்திரவாதி வாயடங்கினாற் போல பலன்கள் மாறும்.

* செவ்வாய் 1, 2, 4, 8, 10, 7, 12 இல் நின்றால் பிள்ளை பெண்சாதி பெற்றவரின் நிலையினைப் போல மிகவும் சிரமப்படுவர்.

* புதன் 1, 3, 4, 6, 8, 10, 11 இல் இவ்விடங்களில் தீயவர்களோடு சேர்ந்திருப்பின் எந்நேரமும் துன்பம் இருக்கும்.

* குரு 1, 4, 6, 8, 3 இல் கூடி நின்றாலும், 10,12 இல் இருந்தாலும் தீய பலன்களே விளையும் என்று முன்னோர்கள் கூறி உள்ளனர்.

* சுக்கிரன் 3, 6, 7, 9 இல் நின்றால் அழுகை, அவமானம் ஆகிய கெடுபலன்களே விளையும்.

* சனி 1, 2, 4, 8, 10, 11 இல் நின்றால் பிசாசு பூதம், பேய், கருப்பன், எதிரிகளின் ஏவலாய் மேற்கூறியவற்றினால் இன்னல்கள் ஏற்படும்.

* இராகு கேதுக்கள் 1, 2, 8, 9, 12 இல் நின்றால் பைத்தியத்தினால் கலங்கி நிற்பர். பாகுசேர் மொழியாள் என்பதனால் இது பெண்களுக்கு என்று கொள்ளலாம்.

* மேற்சொல்லப் பெறாத மற்ற இடங்களான 3, 4, 5, 6, 7, 10, 11 இல் இராகு, கேது இருந்தால் மிகுதியான செல்வமும், யோகமும் அமையும்.

என்று முற்றும் துறந்த முனிவர் கூறியுள்ளதையும்,

இக்கிரகங்கள் நீசம் என்று தள்ளி இராமல் இந்நீசன் நின்ற வீட்டோன் உச்சமானால் யோகப் பலன்களே விளையும் என்றும், இவ்வனைத்துப் பாடல்களினையும் பாடியவர் கோதைத் திருவடித்தாள் தொழும் தேவராச கவிராயன் என்றும் இந்நூலிலுள்ள 11 பாடல்களின் வழி இச்செய்திகளை நாம் அறியலாம்.

“நீசமென்றுநீ தள்ளாதே நிலையுச்சமனங்கொள்ளாதே,
நீசனிருந்த வீட்டா னுச்சமானால் நிலைக்குமே யோகம் மானிடரே.” (பெரிய ஜோதிட சில்லரைக்கோவை, பா. எ.10, ப.272.)

என்றும் பாடல் தெரிவிப்பதால் யோகப்பலனினை நாம் அறியலாம்.

எந்தக் கிரகம் கெட்டு நின்று இராஜயோக அமைப்பில் உள்ளதோ அக்கிரகம் முதலில் அவ்வீட்டுப்பலனில் நன்மையை ஏற்படுத்திப் பின்னர் கெடுத்து அதை விட மிக அற்புதமான இராஜயோகப் பலன்களை வாரி வழங்கும் தன்மை உடையது. திசாபுத்தி நடைமுறைக்கு வர வேண்டும். இலக்ன கேந்திரத்தில் குரு சந்திரன் நீச பங்கத்தில் நிற்பின் ஈசனின் கடாட்சம் உண்டு. இவ்விதம் நீசக்கிரகங்கள் இராஜயோகப் பலன்களைச் செய்கின்றது.

நீசம் நிலை

பெரிய சோதிட சில்லரைக்கோவை இலக்கினத்திற்கு மூன்றாம் இடத்திற்கு உடையவர்கள் சனி, ராகு, கேது, செவ்வாயுடன் சேர்ந்தாலும், மூன்றாமிடத்தில் பாபர் இருக்க, இலக்கினம் முதல் ஆறு இராசிக்கு மேல் மூன்று இராசிக்குள்ளே ஒரு இராசிக்கு உடையவன் நீசமாய்ப் போனால், அந்த ஜாதகனுக்கு வீரியம் பூமியிலே விழுந்து போகும் என்கின்றது கோவை நூல். ப.9.

இலக்கின இடத்தின் அதிபதி நீசன் ஆனாலும், சூரியனுடன் சேர்ந்திருந்தாலும், நாலில் ஒரு பாகம் பலனாய் இருப்பதற்காகும் என்கின்றது கோவை நூல். ப.13.

சுக்கிரன் நீசம் - பெரிய சோதிட சில்லரைக்கோவை - ஜம்புமகரிஷி வாக்கியம் எனும் நூல் களத்திரத்தில் இருக்கும் சுக்கிரனுடனே புதனும் சேர்ந்திருந்தால் தனது மனதிற்கினியவளுடனே சேர்ந்து சுகமாய் இருப்பர். ஆனால், இவ்விடத்தில் சுக்கிரன் நீசமாய் இருந்தால் இலட்சுமி அருளில்லாமல் இருந்தால் தீய மனது அமைந்தவனாய் தனது வயதிற்கு மூத்தவளுடனே சேர்ந்து சுகம் இல்லாமல் எப்போதும் கவலையுடன் இருப்பான். ஆனால் மற்றக் கோள்களின் நிலையை ஆராய்ந்து பலனைச் சொல்ல வேண்டும் என்று குறிப்பிடுகின்றது. (பெ.சோ.சி.கோ. செ.எ.66, பக்.35 -36.)

சந்திரன் நீசம் - பெரிய சோதிட சில்லரைக்கோவை - நவக்கிரகமாலை எனும் நூல் சந்திரன் இராகு கேதுக்களுடனே சேர்ந்து துலாத்தில் இருந்தாலும், அல்லது சந்திரனுக்கு நீச இடமாகிய விருச்சிகத்தில் இருந்தாலும், பலவிதமாகிய துன்பமும், கலவரமும், அச்சமும், பயங்கரமும், வறுமையும், துன்பமும், துயரமும், அலைச்சலும் உண்டாகி, பலவிதமான கொடுமைகளும் நேரிட்டு துயரப்படச் செய்யும். ஆதலால் இலக்கின பலமும், கோள்கள் பார்வை தொடர்பும் சோதித்துணர்ந்து பலன் சொல்ல வேண்டும். (பெ.சோ.சி.கோ. செ.எ.16, ப.120.)

செவ்வாய் நீசம் - பெரிய சோதிட சில்லரைக்கோவை - நவக்கிரகமாலை எனும் நூல் கடக ராசியில் செவ்வாய் நீசமாய் இருக்கும் போது சூரியனும், இராகுவும் அவருடன் சேர்ந்திருந்தால் மிகவும் கொடிய கொடுமையும், துன்பமும், துயரமும், மனக்கவலையும் சூழ்ந்து துயரப்படச் செய்யும் படியான கஷ்டமும், கவலையும் அடைந்து துயரப்படச் செய்யும். அன்றியும் எவராவது மிரட்டி அதட்டிப் பேசினால் மனம் பயங்கரம் அடைந்து “பாம்பைக் கண்ட தேரையைப்போல” அச்சம் அடைந்து கண்ணீர் சொரிந்து கலக்கம் அடைந்து துயரால் கலங்கும் படியான கவலை உண்டாகும் என்பதனை,

“கடகத்திலேசெவ்வாய் நீசமாக
கதிர்இராகுசேர்ந்திருந்தால் கொடுமையப்பா
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
விடநாகன் தனைக்கண்ட தேரையைப் போல்
விசனமாய்துயருற்று திகைப்பர் தானே”

என்று பாடல் குறிப்பிடுகின்றது. (பெ.சோ.சி.கோ. செ.எ.18, ப.121.)

புதன் நீசம் - பெரிய சோதிட சில்லரைக்கோவை - நவக்கிரகமாலை எனும் நூல் மீன ராசியில் புதன் பலமற்று நீசமாய் இருக்க அவருடன் இராகு சேர்ந்திருந்தால் பலவிதமான மனசஞ்சலமும், கஷ்டமும், கவலையும், துன்பமும், துயரமும் நேரிடும். ஆனால் சுபக் கோள்களின் பார்வையும், இலக்கின பலனும். மற்ற கோள்களின் இடபலனும் ஆராய்ந்து உணர்ந்து பலன் சொல்ல வேண்டும். இவர்கள் சிவனை பூசை செய்து வந்தால் நலமுடன் வாழ்வார்கள் என்றும் பரிகாரப் பலன் சொல்லப் பெற்றுள்ளது என்று பாடல் குறிப்பிடுகின்றது. (பெ.சோ.சி.கோ. செ.எ.20, ப.122.)

குரு நீசம் - பெரிய சோதிட சில்லரைக்கோவை - நவக்கிரகமாலை எனும் நூல் மகரராசியில் குரு நீசமாய் இருக்கும் போது சனி விருச்சிகத்தில் பகை பெற்று மூன்றாம் வீட்டுப் பார்வையாக மகரத்தைப் பார்த்தால் அந்த ஜாதகன் மனவருத்தமும், மந்த மதி வாய்ந்தவனுமாய் மனக்கலக்கம் அடைந்து துன்பத்துடன் வாழ்ந்திருப்பர். ஆகையால் இலக்கினப் பலனையும், மற்றக் கோள்களின் இடபலனையும் ஆராய்ந்து உணர்ந்து திசையின் குறிப்புணர்ந்து பலன் சொல்ல வேண்டும். (பெ.சோ.சி.கோ. செ.எ.21, ப.122.)


நீசபங்க ராஜயோகம்

சந்திரன் நீசம், செவ்வாய்

சந்திரன் நீசம் பெற்று செவ்வாயுடன் இணைந்து நிற்றல், அவ்விடம் லக்ன சந்திர கேந்திரமாய் நின்றாலும், அல்லது லக்னத்திற்கு எவ்விடமாய் இவ்விதம் நின்றாலும், அவ்விடத்தைக் குரு பார்த்தாலும், அல்லது இணைந்து நின்றாலும் நீசபங்க இராஜயோகத்தினைப் பெறும்.

குரு நீசம், சந்திரன்

குரு நீசம் பெற்று லக்ன சந்திர கேந்திரமாய் நின்றாலும், அல்லது லக்னத்திற்கு எவ்விடமாய் இவ்விதம் நின்றாலும், சனியுடன் இணைந்து நின்றாலும், செவ்வாய் நீசம் பெற்று நின்று இதனைப் பார்த்தாலும் நீசபங்க இராஜயோகத்தினைப் பெறும்.

செவ்வாய் நீசம், சந்திரன்

செவ்வாய் நீசம் பெற்று லக்ன சந்திர கேந்திரமாய் நின்றாலும், அல்லது லக்னத்திற்கு எவ்விடமாய் இவ்விதம் நின்றாலும், நீச குருவால் பார்க்கப் பெற்றாலும், நீசபங்க இராஜயோகத்தினைப் பெறும்.

புதன் நீசம், சந்திரன்

புதன் நீசம், சந்திரனுடன் இணைந்து லக்ன சந்திர கேந்திரத்தில் நிற்பினும், நீச புதன், குருவுடன் இணைந்து நிற்பினும் நீசபங்க இராஜயோகத்தினைப் பெறும்.

சுக்கிரன் நீசம், சந்திரன்

சுக்கிரன் நீசம் பெற்று சந்திரனுடன் லக்ன கேந்திரத்தில் இணைந்தாலும், புதனுடன் இணைந்தாலும், அல்லது லக்னத்திற்கு எவ்விடத்தில் இணைந்தாலும், குரு பார்வை அல்லது சேர்க்கைப் பெறினும் நீசபங்க இராஜயோகத்தினைப் பெறும்.

புதன் நீசம் பெறுகின்ற போது நீசம் பெற்றக் கோள் ஆன சுக்கிரனின் பார்வை பெற முடியாது. அதைப்போல சுக்கிரன் நீசம் பெறுகின்ற போது புதன் நீசம் பெற்றக் கோளின் பார்வை பெற முடியாது. ஏன் எனில் சூரியன், சுக்கிரன், புதன் இம்மூவரும் 90 பாகைக்குள்ளாகப் பயணம் செய்பவர்கள். எனவே இங்கே இவ்விதி பொருந்தாது. இங்கு மட்டுமே நீசனை நீசன் பார்க்காத நிலை உள்ளது.

சூரியன் நீசம், சந்திரன்

சூரியன் நீசம் பெற்று சந்திரனுடன் லக்ன கேந்திரத்தில் இணைந்தாலும், சுக்கிரனுடன் இணைந்தாலும், அல்லது லக்னத்திற்கு எவ்விடத்தில் இணைந்தாலும், நீச சனியால் பார்க்கப் பெறினும், குரு பார்வை அல்லது சேர்க்கைப் பெறினும் நீசபங்க இராஜயோகத்தினைப் பெறும்.

சனி நீசம், சந்திரன்

சனி நீசம் பெற்று சந்திரனுடன் லக்ன கேந்திரத்தில் இணைந்தாலும், செவ்வாயுடன் இணைந்தாலும், அல்லது லக்னத்திற்கு எவ்விடத்தில் இணைந்தாலும், நீச சூரியனால் பார்க்கப் பெறினும், குரு பார்வை அல்லது சேர்க்கைப் பெறினும் நீசபங்க இராஜயோகத்தினைப் பெறும்.

நீசம் மட்டும் இருந்தால் நன்மை தராது. நீசம் பங்கம் பெற்றும், சுபர் சேர்க்கை, சுபர் பார்வையில் அமைதல் வேண்டும். அப்போது தான் மிகுந்த ராஜயோகப் பலன்கள் விளையும். குருவுடன் நிற்பதால் சகல தோடம் விலகுவதாக ஐதீகம். குரு கடாட்சம் பரிபூரணம். குரு பார்க்கக் கோடி பாவம் நிவஎத்தியாகும்.

தீய கோள்கள் நீசம் பெறும் போது அவற்றின் தீய பலன்கள் குறைகின்றன. நற்கோள்கள் நீசம் பெறும் போது நற் பலன்கள் குறைகின்றன. நீச பங்கத்தில் அவை நிற்கின்ற போது அவை அவ்வீட்டுப் பலனையும், அவமானம் தொடர்ந்த நிலையில் முன்னேற்றத்தையும் அவை ஏற்படுத்தத் தயங்குவதில்லை. கேந்திரம் 1, 4, 7, 10 ஆகிய வீடுகளாய் இருப்பினும், திரிகோணம் 1, 5, 9 ஆகிய வீடுகளாய் இருப்பினும், 6, 8, 12 ஆகிய தீய வீடுகளாய் இருப்பினும் அவை தான் எவ்விதம் அமைந்துள்ளனுவோ அப்படியே பலன்களையும் தருகின்றன.

லக்ன சந்திர கேந்திரத்தில் உள்ள சந்திரனுடன் இணைந்த நீசபங்க ராஜயோகம் பெற்ற சாதகருக்கு அளவு கடந்த சோதனைகள் ஏற்படும். பின்னர் யாவும் ஈசனின் கருணைக் கடாட்சத்தினால் துன்பங்கள் வந்ததொரு சுவடு தெரியாமல் யாவும் விலகி மிகுந்த நன்மையினைப் பெறுவர்.

நீச பங்க ராஜயோகம், உச்சம் பெற்ற கோள்கள் தரும் நற்பலன்களை விட மிகுதியான நற் பலன்கள் ஏற்படுத்தி விடும் அமைப்பு உடையது. ஒரு ஜாதகத்தில் கோள்கள் உச்சம் பெற்ற நிலையைக் காட்டிலும், கோள்கள் நீசம் பெற்று இருப்பது சிறந்தது தான். அதைக் காட்டிலும் நீச பங்க ராஜயோகத்தில் இருப்பது மிகமிகச் சிறப்பு. இதன் பலன் உச்சம் பெற்றவரை விட இவர் மிகச் சிறப்பாய் வாழ்வார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

நவகோள்களைப் போற்றுவோம்!

*****




இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/astrology/general/p41.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License