பல்லி சொல்லும், விழும் பலன்கள்
முனைவர் ஸ்ரீவாலாம்பிகை
பல்லி -கெவுளி, இது ஒரு உடும்பு. இதன் ஒலிப்பிற்கு ஏற்ப அங்குள்ளவர்களுக்குச் சில பலன்கள் உண்டாகும். இது போல், பல்லி மனிதனின் உடலில் விழும் போது, விழுந்த இடத்திற்கேற்ப பலன்கள் உண்டாகும் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.
கெவுளி நூல் தரும் செய்திகள்
பல்லியின் அடையாளம்
ஒவ்வொரு தினத்துக்கும் உரிய பல்லியின் அடையாளம்.
ஞாயிறு - சிவந்த வர்ணமுள்ளதாயும், முதுகில் வரிரேகை உள்ளதாயும் உள்ள பல்லி ஆகாரம் கொள்ளுதலில் இருந்து ஒலிக்கும்.
திங்கள் - முதுகில் பத்து ரேகை உள்ள இரண்டு பல்லிகள் ஆண் ஒன்றும், பெண் ஒன்றுமாக ஆகாரம் கொள்ளத் திரிவதில் இருந்து ஒலிக்கும்.
செவ்வாய் - சாம்பல் வர்ணமும், எட்டு ரேகையும் உள்ள பெண் பல்லியும், நீல வர்ணம் உள்ள ஆண் பல்லியும் ஆகாரம் கொள்ளத் தெற்கு முகமாக இருந்து ஒலிக்கும்.
புதன் - பொன்னிறம் உள்ளதும், முதுகில் ஆறு வரி ரேகை உள்ளதுமான ஆண் பல்லி வடக்கு முகமாய்ப் பெண் பல்லியோடு ஆகாரம் கொள்ள இருக்கும் போது ஒலிக்கும்.
வியாழன்- ஆண் பல்லி நீல வர்ணம் கொண்ட பெண் பல்லியோடு ஆகாரம் கொள்ள இருக்கும் போது ஒலிக்கும்.
வெள்ளி - முதுகின் முன் பக்கத்தில் மூன்று வரி உடைய பல நிறம் உள்ள ஆண் பல்லி, ஆகாரம் அதிகமாய்ச் சாப்பிட்டுப் பின் நித்திரை போய் எழுந்திருக்கும் போது ஒலிக்கும்.
சனி - ஆகாரம் இல்லாமல் கறுப்பு நிறம் உள்ள ஆண் பல்லி, பெண் பல்லியோடு தூக்கம் அற்றுக் கொண்டிருக்கும் போது ஒலிக்கும்.
திசை கோணம்
1. வடக்கு
2. வடக்கிற்கும், வடகிழக்குக்கும் இடையில் உள்ள கோணம்
3. வடகிழக்கு
4. வடகிழக்கிற்கும், கிழக்குக்கும் இடையில் உள்ள கோணம்
5. கிழக்கு
6. கிழக்கிற்கும், தென்கிழக்கிற்கும் இடையில் உள்ள கோணம்
7. தென் கிழக்கு
8. தென்கிழக்கிற்கும், தெற்குக்கும் இடையில் உள்ள கோணம்
9. தெற்கு
10. தெற்குக்கும், தென்மேற்குக்கும் இடையில் உள்ள கோணம்
11. தென்மேற்கு
12. தென்மேற்கிற்கும், மேற்கிற்கும் இடையில் உள்ள கோணம்
13 மேற்கு
14. மேற்கிற்கும், வடமேற்கிற்கும் இடையே உள்ள கோணம்
15. வடமேற்கு
16. வடமேற்கிற்கும், வடக்கிற்கும் இடையில் உள்ள கோணம்
17. ஆகாயம்
18. பூமி
பல்லி சொல்லும் பலன்
முதலில் பல்லி ஒலிக்கும் சப்தமானது எந்தத் திசை அல்லது கோணத்தினின்று வந்தது என்று திட்டமாய்க் கவனிக்க வேண்டும். அப்படிக் கவனித்த பின் திசை அல்லது கோணத்தை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு, அத்தினம் ஒரு வாரத்துக்கு உள்ள ஏழு தினங்களில் எந்தக் கிழமை என்று அறிந்து, இதன் கீழ் கிழமைப் பாராவில் விவரித்திருக்கும் பல்லி சப்தித்த திசையைக் குறிப்பிக்கும் இலக்கத்தை திசை கோண விவரத்தில் கண்டு கொண்டு, அவ்விலக்கத்திற்கு நேரே அத்தினத்தில் என்ன பலன் கூறப்பட்டிருக்கிறதோ, அதுவே நமக்கு உரிய பலனாகும். அப்பலனும் அங்குள்ளோர் பலருக்கும் பொதுவாயும் பல்லியின் சப்தத்தைக் கவனித்த ஒருவருக்கே சிறப்பாயும் இருக்கினும் இருக்கும்.
மேற்படி பல்லியின் நிறம், செயல் ஆகியவைகளையும் திசைகள், கோணங்கள், ஆகாயம், பூமி ஆகியவைகளையும், கீழ்க்கண்ட ஒவ்வொரு கிழமையிலும் குறிப்பிட்டுள்ள பதினெட்டு இலக்கங்களையும் (எண்கள்) ஞாபகத்தில் வைத்து, குறிப்பிட்ட கிழமையில் பல்லி ஒலிக்கும் திசையையும், அதற்கு உரிய இலக்கத்தையும் கவனித்து, அந்த இலக்கத்திற்கு நேரே அத்தினத்தில் என்ன பலன் கூறப்பட்டிருக்கிறதோ அதுவே நமக்கு உரிய பலனாகக் கொள்ள வேண்டும்.
ஞாயிறு
1. மேஷபதி - தனலாபம்
2. பரிமள சுகந்தம்
3. சுக்கிரன் - ஓலை வரும்
4. உறவினர் வருவார்கள்
5. பயணம் உண்டு
6. கெடு வார்த்தை
7. கேது - சாவு
8. கலகம்
9. செவ்வாய் - ராஜகலகம்
10. காரியம் ஆகாது
11. புதன் - உற்றவர் வரவு
12. சோபன வார்த்தை
13. சனி - கலகம்
14. கெடு வார்த்தை
15. இந்திரன் - உண்ணும் வஸ்து வரும்
16. பூமி லாபம்
17. கரியன் - வெகு மனஸ்தாபம்
18. தேவேந்திரன் - காரிய சித்தி
திங்கள்
1. புதன் - வஸ்திர ஆபரணம் வரும்
2. வெற்றி உண்டாகும்
3. சுக்கிரன் - பயிர் விருத்தி
4. தள்ளா வார்த்தை
5. மேஷம் - தனலாபம்
6. பிரபல வார்த்தை, உறவினர் வரவு
7. அக்கினி கலகம்
8. சொல்லாத வார்த்தை வரும்
9. ராகு - பகையாளி வருவான்
10. பொல்லாத வார்த்தை, காரியம் ஆகாது
11. சூரியன் - சாவு
12. கலகம்
13. சந்திரன் - ராஜாவினால் சந்தோஷம்
14. உற்றார் உறவு
15. கேது - சாவு
16. பகையாளி வரவு
17. ராகு - பொல்லாத வார்த்தை
18. சந்திரன் - சகல சம்பத்து
செவ்வாய்
1. ராகு - அக்கினி பயம்
2. கெடு வார்த்தை
3. நாலுகால் பிராணி வரும்
4. நல்ல பெண் வார்த்தை
5. இந்திரன் - புத்திர சம்பத்து
6. நல்ல வார்த்தை
7. சுக்கிரன் - உற்றார் வரவு
8. சுதேசத்தார் வரவு
9. கேது - சாவு
10. அதிகப்பயம்
11. ராகு - பகைவனால் பயம்
12. இராஜ கலகம்
13. சூரியன் - காரியம் வெகு விஸ்தாரம்
14. பொருள் போகும்
15. தூரதேச உற்றார் வரவு
16. நல்ல வார்த்தை
17. சூரியன் - இதர பயம்
18. மேஷம் - தன லாபம்
புதன்
1. சுக்கிரன் - சுகம்
2. மற்றவருக்குப் புத்தி சொல்லும் காரியம்
3. சூரியன் - நினைத்த காரியம் சோர்வு
4. மனைவி காரியம்
5. இந்திரன் - சர்வ காரியம் ஜெயம்
6. தேங்காய் பழம் உண்ணும் வஸ்து வரும்
7. மேஷபதி - சம்பத்து
8. நல்ல வார்த்தை
9. சந்திரன் - சந்தோஷ வார்த்தை
10. சாவு பயம்
11. ராகு - உற்றார் வரவு, பொல்லாத காரியம்
12. கள்ளர் பயம்
13. கேது - அதிகப் பயம் உண்டு
14. அக்கினி - பொருள் நாசம்
16. அக்கினி பயம்
17. சனி - பிறரால் சாவு வார்த்தை வரும்
18. உற்றார் உண்ணும் வஸ்து வரும்
வியாழன்
1. கலகக் காரியம், வியாதி
2. பொல்லாத வார்த்தை
3. சுக்கிரன் - நல்ல பெண் வரும்
4. பல பல துன்பம், மனஸ்தாபம்
5. ராகு - மரண வார்த்தை
6. கள்ளர் பயம்
7. புதன் - உற்றார் வரவு
8. சந்தோஷ வார்த்தை
9. மேஷபதி - தனலாபம்
10. அக்கினி - கள்ளர் பயம்
11. சந்திரன் - நாடிய பொருள் கைகூடும்
12. சந்தோஷ வார்த்தை
13. அங்காரகன் - மரண வார்த்தை
14. அக்கினி பயம்
15. இந்திரன் - கல்யாண வார்த்தை
16. பெண் வரத்து
17. சனி - கலகம், கள்ளர் பயம்
18. பொல்லாத காரியம்
வெள்ளி
1. சனி - துக்கம்
2. கூக்குரல் கேட்கும்
3. சூரியன் - பகையாளியால் அதிக பயம்
4. ராஜபயம்
5. புதிய நல்ல வார்த்தை
6. பரிமள சுகந்தம்
7. கேது - உறவின் முறையால் உற்றார்க்குப் பகை
8. அக்கினி பயம்
9. புதன் - உற்றார், சிநேகிதர் வரவு
10. வஸ்திர ஆபரணம் வரவு
11. மேஷம் - வெகுமதி
12. தூரத்தில் உள்ள பகைவரால் நன்மை
13. சந்திரன் - சந்தோசமாய்ப் பணம் வரவு
14. தூரப்பயணம்
15. இந்திரன் - சோபன வார்த்தை
16. நல்ல செய்தி உள்ள ஓலை
17. சுக்கிரன் - உடையால் மேன்மை
18. எமன் - சாவு, குற்றம்
சனி
1. கேது - கெடு வார்த்தை
2. சண்டையினாலே குடி போவான்
3. சனி - அதிகக் கெடு வார்த்தை
4. ஐசுவரியம்
5. மிடி, ராசகலகம், பொல்லாத வார்த்தை
6. பித்தம், சாவு
7. சந்திரன் - நல்ல போசனம், சுகந்தம்
8. தள்ளாத வார்த்தை
9. சுக்கிரன் - ராஜாவிடத்தில் காரியம்
10. காய், பழம், வரவு
11. அங்காரகன்- நிருபம், ரொக்கம் வரவு
12. வெளிப்பயணம்
13. வியாழன் - புது வஸ்திரம்
14. உறவின் முறை வரவு
15. இந்திரன்- குருச் சந்திர லாபம்
16. பிரியமான வஸ்து வரும்
17. இந்திரன் - நினைத்த காரியம் நலம்
18. சுக்கிரன் - சுக வார்த்தை
மற்றொரு விதம் பதினாறு திக்கிலும், அருக்கன் எத்திக்கில் இருக்கின்றான் என்று தெரிந்து, அதிலிருந்து பதினாறு திக்குக்கும் முறையே பின் வரும் இரண்டு கவியால் அறியவும்.
“அருக்கன் மேல் பயநாசம் இரண்டில் சாவு, மூன்றே யாகில் உருக்கமுள்ள சாவதனைக் கேட்க நான்கு ஒரு சண்டை உண்டைந்தாம் உறவாம் ஆறு, விரிதலையும் அழுகுரலு மழையு நோயு மேன்மேலும் துக்கம் உண்டாகும் ஏழு தரித்திடும் பூச்சந்தனமும் மணமும் கொண்டு தகுதியுள்ளோர் கூடி வரலாகும் எட்டே.”
“சித்த மிக மகிழ்ச்சி உண்டாகும் நாலோடு ஐந்து, தீதாகவே உரைக்கத் தெரியும் பத்து, அத்தமிசை யாத்திரை காணாறோடு ஐந்து, அக மகிழ்ச்சி. கலியாணம் ஆறோடாறு, பத்தி வரும் காணிக்கை பதின் மூன்றுக்கு, பரந்து வரும் இழவோலை பதினாலுக்கு, மெத்த வரும் உறவின் முறையே ஏழும், எட்டு மேன் மேலும் யோகம் உண்டாகும் ஈரெட்டிற்கே”

அபிதான சிந்தாமணி தரும் செய்திகள்
பல்லி சொல்லும் பலன்
என்ன கிழமையில் என்ன திக்கில் கௌலி சொன்னால், என்ன பலன் இருக்கும்?
ஞாயிறு
1. கிழக்கு - பயம்
2. அக்னி - தீமை
3. தெற்கு - சுகம்
4. நைருதி - பந்து தரிசனம்
5. மேற்கு - சண்டை
6. வாயு - வஸ்திர லாபம்
7. வடக்கு - தனலாபம்
8. ஈசான்யம் - லாபம்
9. ஆகாயம் - ஸ்ரீ ஜயம்
10. பூமி - நினைத்த காரியமாகும்
திங்கள்
1. கிழக்கு - தனலாபம்
2. அக்கினி - கலகம்
3. தெற்கு - பகை
4. நிருதி - விரோதம்
5. மேற்கு - இராஜ சபாப் பிரவேசம்
6. வாயு - அமங்கலம்
7. வடக்கு - வஸ்திர லாபம்
8. ஈசான்யம் - கலியாண வார்த்தைகள்
9. ஆகாயம் - கேடு சமாச்சாரம்
10. பூமி - ஐஸ்வரியப் பிராப்தி
செவ்வாய்
1. கிழக்கு - சம்பத்து
2. அக்கினி - பந்துலாபம்
3. தெற்கு - விசனம்
4. நிருதி- சத்துரு
5. மேற்கு - காரியானுகூலம்
6. வாயு - தூரதேசத்துச் சமாச்சாரம்
7. வடக்கு - சத்துருபயம்
8. ஈசான்ய திசை - வாகனாரோகணம்
9. ஆகாயம் - தூரதேசப் பிரயாணம்
10. பூமி - விசேஷ தனலாபம்
புதன்
1. கிழக்கு - சந்தோஷம்
2. அக்கினி - திரவிய லாபம்
3. தெற்கு - சரீரசாட்டியம்
4. நிருதி - பந்துஹானி
5. மேற்கு - பயம்
6. வாயு - தனநாசனம்
7. வடக்கு - சுகம்
8. ஈசான்யம் - நினைத்த காரியமாகாது
9. ஆகாயம் - நல்ல சமாச்சாரம்
10. பூமி - ஐஸ்வரியம்
வியாழன்
1. கிழக்கு - அசுபம்
2. அக்கினி - பந்து சன்மானம்
3. தெற்கு - தனலாபம்
4. நைருதி சமஸ்த காரியங்கள் சித்திக்கும்
5. மேற்கு - நஷ்டம்
6. வாயு - நல்ல வார்த்தை
7. வடக்கு - நினைத்த காரியமாகாது
8. ஈசான்யம் - போஜன சௌக்கியம்
9. ஆகாயம் - கலகம்
10. பூமி - கலகம் உண்டாகும்
வெள்ளி
1. கிழக்கு - சுப வார்த்தை
2. அக்கினி - அலங்காரம்
3. தெற்கு - பந்து தரிசனம்
4. நிருதி - நல்ல கேள்வி
5. மேற்கு - சந்தோஷம்
6. வாயு - வீட்டில் கலகம்
7. வடக்கு - கலக வார்த்தை
8. ஈசான்யம் - சத்துரு பயம்
9. ஆகாயம் - வஸ்து லாபம்
10. பூமி - சூதக ஸ்நானம்
சனி
1. கிழக்கு - வெகு வார்த்தை
2. அக்கினி - சந்தன திரவிய லாபம்
3. தெற்கு - ராஜ தரிசனம்
4. நிருதி - ரோகம்
5. மேற்கு - நூதன வஸ்திர லாபம்
6. வாயு - நூதன ஸ்திரி சம்போகம்
7. வடக்கு - பிரிய சமாச்சாரம்
8. ஈசான்யம் - திருடர் பயம்
9. ஆகாயம் - காரிய ஹானி
10. பூமி - சகல காரிய சித்தி
பல்லி சொல்லும் ராசி
“எழுவாய் மேஷம் படைபூசல், இடவங்கடகங் குடி போக்கும்,
நழுவாய் மிதுன நல்வசனம், நண்டு விழுந்துத களிப்பாகும்,
கழிவேயாகுந் தனஞ்சிங்கம், தொழுதேதூதன்றுலமாகும்,
தூங்குதேள் பொன் பெண்வருத்தே”
“வில்லில் விருந்து மிகவுண்டு, வேண்டுமகரம் விண்ணமுதாம்,
நல்ல கும்பநோயுண்டாம், நாட்டு மினங்கிளியாகும்,
அல்லிற் சிறந்த குழன் மடவா, யறியச் சொன்னோ மன்னிசையாஞ், சொல்லும்
பல்லி கொடி சூரன், தும்மலென்றெ யறந்திடவே”
பல்லி சொல்லும் பதினாறு காதல்
அருக்கனமேற் பயநாச மிரண்டிற்சாவு அகன்றவர் பின் மீண்டிடுவார் மூன்றேயாகில், உருக்கமுள்ள சாவதனைக் கேட்க நாலு, ஒரு சண்டையுண்டையுண்டைந்தா முறவாமாறு, விரிதலையுமழுகுரலு மழையுநோயு மேன்மேலுந் துக்கமுண்டாகுமேழு தரித்திடு பூச்சந்தனமு மணமுங்கொண்டு, தகுதியுள்ளோர் கூடிவரலாகுமெட்டே.”
“சித்தமிக மகிழ்ச்சியுண்டா நாலோடைந்து, தீதாக வேயுரைக்குந் தெரியும் பத்து, அத்தமிசை யாத்திரைகாணாறோடைந்து, அக மகிழ்ச்சிக் கலியாணமாறோடாறு, பத்திவருங் காணிக்கை பதிமூன்றிற்குப் பறந்துவருமிழர்வாலை பதினாலுக்கு, மெத்தவரு முறவின் முறையேழு மெட்டும், மென்மேலும் யோகமுண்டாம் பதினாறுக்கே.”
பல்லி விழும் பலன்
* தலை - கலகம்
* முகம் - பந்து தரிசனம்
* புருவம் - இராஜானுக்கிரகம்
* மூக்கு - வியாதி சம்பவம்
* வலது செவி - தீர்க்காயுசு
* இடது செவி - வியாபார இலாபம்
* நேத்திரங்கள் - காராக் கிரகப்பிரவேசம்
* முகவாய்க்கட்டை - இராஜ தண்டனை
* வாய் - பயம், கண்டம் சத்துரு நாசனம்
* வலது புஜம் - ஆரோக்கியம்
* இடது புஜம் - ஸ்திரிசம் போகம்
* வலது மணிகட்டு - பீடை
* இடது மணிகட்டு - கீர்த்தி
* ஆண்குறி - தரித்திரம்
* மார்பு - தன லாபம்
* வயிறு - தானிய லாபம்
* நாபி - இரத்தினலாபம்
* உபயபாரிசம் - வெகுலாபம்
* தொடைகள் - பிதா அரிட்டம்
* முழங்கால்கள் - சுபம்
* கணைக்கால் - சுபம்
* பாதம் - பிரயாணம்
* ஸ்தனங்கள் - பாவ சம்பவம்
* புட்டம் - சுபம்
* நகங்கள் - தனநாசம்
* கூந்தல் - மிருத்துபயம்
* சிரசு நடு - பிதா மாதா பீடை
* சிரசு வலது - சேஷ்ட சகோதர பீடை
* இடைப் பாரிசம் - கனிஷ்ட சகோதர பீடை
* பிடரி - மாதுல பீடை
* நெற்றி - தன விருத்தி
* நேத்திரம், மூக்கு, காது, முகம் - பீடை
* காது - சகோதர பீடை
* மார்பு - சரீர பீடை
* இடது கை - அபமிருத்தியு பயம்
* வலது கை - அபமிருத்தியு பயம், மாதா பீடை
* வலது கை விரல்கள் - இராஜ தரிசனம்
* இடது கை விரல்கள் - ஞாதிநாசம்
* வயிறு - தானிய நாசம்
* இடுப்பு - வஸ்திர நாசம்
* முதுகு - தன நாசம்
* பின் தட்டில் - அதிக தனலாபம்
* வலது தொடை - புத்திர பீடை
* இடது தொடை - புத்திர பீடை
* முழங்கால்கள் - பொருள் செலவு
* பாதங்கள் - விலங்கு
* நகங்கள் - பந்தனம்
* இடது கட்டை விரல் - இராஜ பயம்
* வலது கட்டை விரல் - பந்தனம்
* கால் விரல்கள் - விவாதங்கள்
* உள்ளங்கை, உள்ளங்கால் - ஐசுவரிய விருத்தி
மேற்சொல்லிய அவயங்களில் ஆரோகணமாக விழுந்தால் அசுப பலனும், சுபமாய் இருக்கும். அவரோகணமாக விழுந்தால் தோஷபலன் தோஷமாகவும், குணபலன் குணமாகவும் பலிக்கும். திங்கள், புதன், வியாழன், வெள்ளி இவ்வாரங்களில் விழுந்தால் அசுப பலனுக்கு அதற்குப் பரிகாரம் ஸ்நானம் செய்யவும். ஞாயிறு, செவ்வாய், சனி வாரங்களில் விழுந்தால் கடவுளை வணங்க வேண்டும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.