இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
பொதுத் தகவல்கள்

வானியலில் சக்கரங்களின் சிறப்புகள்

முனைவர் ஸ்ரீவாலாம்பிகை


வானியலில் விளங்கக் கூடிய இன்றியமையாத சக்கரங்கள் கலப்பைச் சக்கரம், காலசக்கரம் - காலச்சக்கரதிசை, சிஞ்சுமாரம், சிம்சுமாரம் நட்சத்திர சக்கரம், குளிகாதியர் சக்கரம், திரேக்காணசக்கரம், நவாமிசச்சக்கரம் வர்க்கோத்தமச் சக்கரம், வர்க்கோத்தமச் சக்கரத்தில் வர்க்கோத்தமம் பெற்ற நட்சத்திரப்பாதங்கள், சாதகாபரணத்தில் குறிக்கப்பெறும் சக்கரங்கள், திம்பச்சக்கரம் போன்ற சிலவற்றினைப் பற்றிக் காண்போம்.

கலப்பைச் சக்கரம்

ஜோதிட கலைக்களஞ்சியம் எனும் நுால் ஏர்ப்பொருத்தம் பார்க்கும் சக்கரம். விவரம் ஆறு மூலை உள்ள கோடு கீறி, ஆறு மூலைகளிலும் சூலமிடப் பதினெட்டு முனையாகும். சதுரத்தின் கிழக்கு, மேற்கு நடுபக்கங்களிலும் ஐந்து வரை கீறில் இருபதெட்டு முனையாகும். இச்சக்கரத்தின் இடது பக்கத்தின் நடு முனைச் சூலத்தின் நடுவில், சூரியன் நின்ற நட்சத்திரத்தை வைத்து அபிஜித்துடன் வலமாக எண்ண, சூரியன் நின்ற நட்சத்திரமும், அதற்கு முன்னும், பின்னும் உள்ள நட்சத்திரமும், தீமை தரும். பின் எட்டு நட்சத்திரமும், நன்மை தரும். அதன் பின் ஒன்பது நட்சத்திரங்களும் மத்திமம். மற்ற ஏழு நட்சத்திரங்களும் நன்மையாகும் என்றும் குறிப்பிடுகின்றது. அக்காலக்கட்டத்தில் அபிஜித் நட்சத்திரத்துடன் சேர்த்து எண்ணும் வழக்கம் இருந்தது. (கிருட்டினன், ஜோதிடகலைக்களஞ்சியம், பக்கம்.50)

அபிஜித்நட்சத்திரம் என்பது உத்திராடத்தின் மூன்று, நான்கு, திருவோணத்தின் ஒன்று, இரண்டு பாதங்கள் ஆகும். இவர்கள் விசேடத்தன்மை நிரம்பப் பெற்றவர்கள்.

காலசக்கரம்

ஜோதிடக் கலைக்களஞ்சியம் ஆயுள் காலம், விடாது சுழன்று வரும் காலம். ஆயுட் காலம், ஆயுள் நியதிச் சக்கரம், கிரகபலச் சக்கரம் என்றும் குறிப்பிடுகின்றது.

காலச்சக்கர திசை

கிரக பலச்சக்கர திசை. விவரம்: மேடம், விருச்சிகம் ஆகிய இவைகளுக்கு செவ்வாய் திசை வருடம் ஏழு, இடபம், துலாம் ஆகிய இவைகளுக்கு சுக்கிர திசை பதினாறு, மிதுனம், கன்னி ஆகிய இவைகளுக்கு புதன் திசை ஒன்பது. கடகத்திற்குச் சந்திர திசை இருபத்தொன்று, சிங்கத்திற்குச் சூரியன் திசை ஐந்து, தனுசு மீனம் ஆகிய இவைகளுக்கு குரு திசை பத்து, மகரம், கும்பம் ஆகிய இவைகளுக்கு சனி திசை நான்காகும் என்றும் குறிப்பிடுகின்றது.(கிருட்டினன், ஜோதிட கலைக்களஞ்சியம், பக்கம்.56)

அபிதானசிந்தாமணி சக்கரத்தேராகிய ஒரு வட்டத்தைக் கீறி இதனடுவே கீழ் மேல் 2 ரேகையும், தென் வடபால் 2 ரேகையும், மூலைகளில் ஒவ்வோர் ரேகைகளுமாகக் கீறில், 12 கதிராய் 21 சக்கரமாம். இதில் நேர் கிழக்கு, நேர் தெற்கு, நேர் மேற்கு, நேர் வடக்கு இவற்றில் நிற்கும் இராசிகளாவன. இடபம், சிங்கம், விருச்சிகம், கும்பம், இதற்கு வலத்து ராசிகளாவன, மேடம், கர்க்கடகம், துலாம், மகரம் என்ற 4 ராசிகளாம். இவற்றிற்கு நாற்கோணத்து இராசிகளாவன, மிதுனம், கன்னி, தனுசு, மீனம், இப்படிக் கீறி நிறுத்தினது காலச்சக்கிரமாம். இதை வைத்துப் பலன் கூறப் பெற்றது என்று குறிப்பிடுகின்றது. (அபிதான சிந்தாமணி, பக்கம். 502)


சக்கரதிசை

ஆயுள் முடிவறியும் திசைகளில் ஒன்று. ஆயுள் முடிவு.

சக்கரம் - அறுபது வருடங் கொண்டது, அறுபது கொண்டது. கிரக நடை, சீவிய நாள், வட ஆணையா சக்கரம். செவ்வாய் நின்ற நட்சத்திரத்திற்குப் பத்தாம் நட்சத்திரம் என்றும் குறிப்பிடுகின்றது. இதனை வைத்து ஆயுள் கணக்கிடப்பெற்றது.

சிஞ்சுமாரம்

அபிதான சிந்தாமணி இது காலசக்கரம். கடவுளின் சர்வ தேவ மயமான உருவம். இது முதலையின் உருப்போன்றது என்பர். இதனைத் துருவதன், இந்திரன், வருணன், கச்யபன் முதலியோர் நாடோறும் வலம் வருவர். இதன் வாலில் பிரசாபதியும் அக்கிநியும், வால் மூலத்தில் தாதா விதாதாவும், கடிதலத்தில் சத்த இருடிகளும், முன் வாயில் அகத்தியரும், யமனும், முகத்தில் அங்காரகனும், குய்யத்தில் சனியும், பீசத்தில் பிரகஸ்பதியும், பக்கத்தில் சூரியனும், நாபியில் சுக்கிரனும், நெஞ்சில் சந்திரனும், தனங்களில் அஸ்வநி தேவர்களும், பிராணா பானங்களில் புதனும் ரோமங்களில் நட்சத்திரங்களும், சர்வாங்கங்ளிலும் சனி கேதுக்களும் வசிப்பார் என்பர் என்றும் குறிப்பிடுகின்றது. (அபிதான சிந்தாமணி, பக்கம், 770)

சிம்சுமாரம்

ஜோதிடக் கலைச்சொல் பொருள் விளக்க அகராதி வானத்தின் கண்ணுள்ள சோதிச்சக்கரம். இச்சக்கரம், துருவன். இந்திரன், வருணன், கசிபன், முதலியோர் கூடிப் பிரதட்சணமாகத் தினந்தோறும் செல்லப் பெற்று உள்ளது. இதன் வால் பாகத்தில், பிரசாபதி, அக்கினி, இந்திரன், தருமன் முதலியோரும் வால் மூலத்திலே தாதா, விதாதாவும் - கடிதடத்திலே சப்த ரிடிகளும், மேல் வாயிலே அகத்தியரும், கீழ் மோவாயிலே யமனும் முகத்திலே அங்காரகனும், குய்யத்திலே சனியும், பீசத்திலே குருவும், பக்கத்திலே சூரியனும், நாபியில் சுக்கிரனும், நெஞ்சில் சந்திரனும், ஸ்தனத்திலே அசுவினி தேவர்களும், பிராணவாயு, அபான வாயு, ஆகியவைகளிலே புதனும், சர்வாங்கத்தில் சனி, கேதுகளும், ரோமங்களிலே நட்சத்திரங்களுமாக அதிகரித்து நிற்பர். இச்சக்கரம் மகரம் முதலை வடிவம் உள்ளது ஆகும் என்றும் குறிப்பிடுகின்றது. (பி. ஆர். கிருட்டினன், ஜோதிட கலைச்சொல் பொருள் விளக்க அகராதி, பக்கம்.85 - 86)

மேலே குறிப்பிடப்பெற்ற சிஞ்சுமாரம், சிம்சுமாரம் எனும் இரண்டு சக்கரங்களும் ஒன்று என்பதை இதனால் நாம் அறியலாம்.

நட்சத்திர சக்கரம்

இது நட்சத்திர மண்டலம். இது 27 நட்சத்திரங்கள் 1. அசுவினி, 2. பரணி, 3. கார்த்திகை, 4. ரோகிணி, 5. மிருகசீரிடம், 6. திருவாதிரை, 7.,புனர்பூசம், 8. பூசம், 9.,ஆயில்யம், 10.,மகம், 11.,பூரம், 12.,உத்திரம், 13.,அஸ்தம், 14.,சித்திரை, 15.,சுவாதி, 16.,விசாகம், 17.,அனுடம், 18.,கேட்டை, 19.,மூலம், 20.,பூராடம், 21.,உத்திராடம், 22.,திருவோணம், 23. அவிட்டம், 24. சதயம், 25. பூரட்டாதி, 26. உத்திரட்டாதி, 27. ரேவதி மட்டும் அல்லாது விளங்கும் மற்றைய நட்சத்திரங்களையும் குறிக்கும். நட்சத்திர மண்டலம் இது நட்சத்திரபதம். இது சத்த இருடியர். உல்கைகள், மின்னல், துாமகேதுக்கள், உரோகிணியர், உட்ணபாதம் முதலிய கணதேவர்கள் இருக்கும் இடம் என்றும் தெரிவிக்கின்றது.


குளிகாதியர் சக்கரம்

சாதக அலங்காரம் துாம கோள்களுள் ஒன்றான குளிகாதியர் சக்கரம் இங்கே குறிப்பிடப் பெற்றுள்ளது. ஞாயிறு முதல் சனி வரை குளிகை கிரக நிர்ணயம் பகற்பொழுதை எட்டு பாகம் செய்து வாராதிபதி முதலாக எண்ணி எட்டாவது பாகத்தை விடுக்க சனியம்சம் குளிகக் காலமாகும். இங்கே எட்டு பாகம் செய்வது என்பது பகல், இரவு அகசுப் பிரமாணத்தை என்று அறியலாம். நிரட்ச (ஸ்தலம்) இடத்திற்குரிய சம அகசை எட்டு பங்கு செய்து இங்கு பகலிரவு குளிகாதியரின் கால ஆரம்பத்தையும், முடிவையும் குளிகாதியர் சக்கரம் குறிப்பிடுகின்றது.

பகற்கால குளிகாதியர் சக்கரத்தில் அந்தந்த வாராதிபர் முதலான கிரக வரிசையும், இராக்கால குளிகாதியர் சக்கரத்தில் அந்தந்த வாராதிபர்க்கு ஐந்தாவது வாராதிபர் முதலான கிரக வரிசையும் கொண்டு குளிகாதியரின் நிர்ணயம் குறிப்பிடப் பெற்றுள்ளது.

அதாவது பகற்காலம் ஜனனம் - பிறப்பு வியாழக்கிழமையின் ஏழரை நாழிகை முதல் பதினொன்னேகால் நாழி வரை குளிகை காலமாகும். இரவு ஜனனம் வியாழக்கிழமையின் பதினெட்டே முக்கால் நாழி முதல் இருபத்திரண்டரை நாழி வரை குளிகை காலம் ஆகும். மற்றதும் இப்படியே ஆகும் என்றும், சம அகசுடைய பூமத்திய ரேகையின் குளிகாதியர் சக்கரம் - பகற்காலம், பூமத்திய ரேகையின் குளிகாதியர் சக்கரம் - இரவுகாலம் ஆகியன பற்றி சாதக அலங்காரம் எனும் நுாலில் இச்சக்கரம் பற்றிய காலங்களைக் குறிப்பிடுகின்றது. (கீரனுார் நடராசர், சாதக அலங்காரம், பக்கம், 119, 120)

திரேக்காண சக்கரம்

சாதக அலங்காரம் எனும் நுாலில் இச்சக்கரத்திற்கு திரேக்காணம் என்பது பிறந்த இலக்கினத்தை மூன்று பாகமாகப் பங்கிட்டுத் தெரியப்படுத்துவதாகும். அங்ஙனம் பங்கிட்டால் பங்கு ஒன்றுக்குப் பத்துப் பாகையாகும். அதில் மேடம் முதல் பத்துப் பாகைக்கு முதற் பங்குக்கு மேடமும், இரண்டாம் பத்துப் பாகைக்கு ஐந்தாவது இராசியான சிம்மமும், மூன்றாம் பத்துப்பாகைக்கு பங்குக்கு ஒன்பதாவது இராசியான தனுசுவும், இரண்டாவது பங்குக்கு ஒன்றாவது இராசியான இடபமும், மூன்றாம் பங்குக்கு ஐந்தாவது ராசியான கன்னியும், திரேக்காண லக்கினங்களாகும். மிதுனம் முதற்பங்குக்கு ஐந்தாவது ராசியான துலாமும், இரண்டாவது பங்குக்கு ஒன்பதாவது ராசியான கும்பமும், மூன்றாவது பங்குக்கு ஒன்றாவது ராசியான மிதுனமும் திரேக்காண லக்கினங்களாகும். ஏனைய ராசிகளில் கடகம் முதலாகிய மும்மூன்று இராசிகளுக்கும் இந்த முறைப்படியே திரேக்காண லக்கினங்களை நன்றாக அறிந்து சொல்ல வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றது. (மேலது, பக்கம். 331)

நவாமிசச்சக்கரம்

பிறந்த இலக்கினத்தைப் பார்த்தறிந்து அதனை ஒன்பது பாகம் செய்து அந்த ஒன்பது பாகத்தில் சாதகன் பிறந்தது எந்தப் பாகத்தில் என்றுணர்ந்து அந்தப் பாகத்தை மேடம், சிங்கம், தனுசு எனும் இம்மூன்று ராசிகளுக்கும் மேட முதலாகவும், இடபம், கன்னி, மகரம் எனும் இம்மூன்று ராசிகளுக்கும் மகர முதலாகவும், மிதுனம், துலாம், கும்பம் இம்மூன்று ராசிகளுக்கும் துலாம் முதலாகவும், கடகம், விர்ச்சிகம், மீனம் எனும் இம்மூன்று ராசிகளுக்கும் கடகம் முதலாகவும் கணக்கிட்டுப் பார்த்துக் கூறுதல் நவாம்சம் எனப்படும். (மேலது, பக்கம்.339)


வர்க்கோத்தமச் சக்கரம்

வர்க்கோத்தமச் சக்கரத்தில் அசுவினி முதல் பாகத்தில் இருந்த கிரகம் வர்க்கோத்தமத்தில் இருப்பதாக அறிதல் வேண்டும். இதுவன்றி எந்த இராசியில் எந்தக் கிரகமிருக்கின்றதோ, அந்த ராசியில் அந்தக்கிரகம் அமிசாச்சக்கரத்திலும் இருக்குமானால் அது வர்க்கோத்தமத்தில் இருப்பதாக அறிதல் வேண்டும். இதன் பலன் சாராவளியின் படி வர்க்கோத்தமத்தில் இலக்கினமோ அல்லது கிரகங்களோ இருக்கப் பிறந்தவன் குல சிரேட்டனாவான் என்று அறிதல் வேண்டும்.

இலக்கினம் வர்க்கோத்தமாம்சத்தில் இருந்து எந்தக் கிரகத்தினாலும் பார்க்கப்படாமல் இருந்தால் இராஜயோகமும் பங்கமாகி தரித்திர யோகத்தை உண்டாக்கும் என விளம்புகின்றது.

எல்லா கிரகங்களும் வர்க்கோத்தமாம்சத்தில் இருந்தாலும், பகை நீசத்தில் இருந்தாலும் இராஜயோக பங்கம் உண்டாகும் என்று குறிப்பிடப் பெற்றிருக்கின்றது. இதனால் இலக்கினம் வர்க்கோத்தமாம்சாகி ஏதேனும் ஒரு கிரகத்தினால் பார்க்கப்படுமானால் இராஜயோகம் உண்டாகும் ஏற்படும் என்கின்றது. பிருகத் ஜாதகப்படி ஜனன லக்கினம் அல்லது சந்திர லக்கினம் வர்க்கோத்தமாம்சத்தில் இருந்து சந்திரன் நீங்கலாகவுள்ள ஏனைய கிரகங்களில் நான்கு முதலிய கிரகங்களால் பார்க்கப்பட்டால் இருபத்திரண்டு இராஜயோகங்கள் உண்டாகும் என்றும் குறிப்பிடுகின்றது.

வர்க்கோத்தமச் சக்கரத்தில் வர்க்கோத்தமம் பெற்ற நட்சத்திரப் பாதங்கள்

அசுவினி 1, ரோகிணி 2, புனர் 3, 4, பூரம் 1, சித்திரை 2, 3, அனுசம் 4, உத்ராடம் 1, 2, சதயம் 3, ரேவதி 4 ஆகியன ஆகும். (பக்கம், 340)

சாதகாபரணத்தில் குறிக்கப்பெறும் சக்கரங்கள்

திம்பச்சக்கரம், சனி சக்கரம், சூரியகால நாள் சக்கரம், சந்திரகாலநாள் சக்கரம், நலன் தருசக்கரம், சர்வதோபத்ர சக்கரம் ஆக இந்த ஆறு சக்கரங்களை சாதகாபரணம் எனும் நுால் தெரிவிக்கின்றது. திம்பச்சக்கரம் பற்றிக் காண்போம்.


திம்பச்சக்கரம்

திம்பச்சக்கரம் என்பது ஒரு குழந்தையின் வடிவம் ஒன்றினை வரைந்து நெற்றி - மூன்று நட்சத்திரங்கள், முகம் - மூன்று நட்சத்திரங்கள், தோள் - இரண்டு நட்சத்திரங்கள், முன் கைகள் - இரண்டு நட்சத்திரங்கள், கைகள் - இரண்டு நட்சத்திரங்கள், மார்பு - ஐந்து நட்சத்திரங்கள், கொப்பூழ் - ஒன்று, குய்யம் - ஒன்று, தொடைகள் - இரண்டு, ஒரு பாதம் மூன்று என இரு பாதங்கள் - ஆறு நட்சத்திரங்கள், ஆக இருபத்தியேழு நட்சத்திரங்களும் குறிக்கப்பெறும்.

பிறந்த காலத்தின் சூரியன் நின்ற நட்சத்திரம் முதல் இதனைக் கணக்கினில் கொண்டு நெற்றி முதலாக வரிசையாய் அமைத்து வர வேண்டும். எந்தப்பாகத்தில் சந்திரன் நின்ற நட்சத்திரம் வருகின்றதோ அதை வைத்துப் பலன் பார்க்கப்பெறுகின்றது.

நெற்றி இப்பாகத்தில் அமைந்தால் நவரத்தினங்கள் பெற்றிருப்பர். நேர்த்தியான ஆடைகள், நவீன வாகன வசதிகள், அரச சன்மானம், மரியாதை, உன்னத பதவி ஆகியவை பெற்று வாழ்வர்.

முகம் இப்பாகத்தில் அமைந்தால் அறுசுவைகளுள் இனிப்பு வகை உணவுகளை உண்பவர்கள். அழகிய படுக்கை விரிப்பு வசதிகள், சிறந்த பேச்சாளர், எப்பொழுதும் புன்முறுவல், மகிழ்வு ஆகியவற்றுடன் காணப்படுவர்.

தோள்களில் அமைந்தால் அவர் பிறந்த குடும்பத்திற்கு மிகவும் சிறந்தவராகக் காணப்படுவர். உயர்ந்த புயங்கள், சிறந்த வலிமை, மிகுந்த புகழ், தைரியசாலி, தயாளக்குணம் உடையவர். நல்ல விழாக்கள் கொண்டாடுவர்.

முன் கைகளில் அமைந்தால் தன் நாடு விட்டு நீங்கி வெளிநாட்டில் புகழ் பெறுவர். அதிக பெருமையும், புகழும் உடையவர்.

கைகளில் அமைந்தால் தானம் செய்தல், நற்குணங்கள் முதலியன இருக்காது. நகைகளைச் சோதிப்பவர், பொய், உண்மை இரண்டும் கலந்து பேசும் தன்மை, எவ்விடத்தில் எப்படிப் பேச வேண்டுமோ அப்படிப் பேசுவதில் திறமை, அனுபவம் உடையவராக இருப்பார்.

மார்பில் அமைந்தால் தன் குடும்பத்தில் அரசர் போன்றவர். நற்பண்புகள், மிகுந்த புகழ், சாத்திரங்களை ஓதி உணருவார்.

கொப்பூழில் அமைந்தால் அவர் மன்னிக்கத் தெரிந்த மாண்பு உடையவர். யுத்தகளத்தினில் நின்று போர் செய்ய மாட்டார்கள். கலைகளில் திறனும், அனுபவமும் உடையவர். சமய வளர்ச்சி உடையவர். தயாள மனப்பான்மை உடையவர்.

குய்யத்தில் அமைந்தால் காமவெறி உடையவர். நன்மை அறியாதவர். நற்செயல்கள் செய்யாதவர். இசையில் ஆர்வம், நாட்டியத்தில் விருப்பம், கலைகளில் திறனும், அனுபவமும் உடையவர். இதன் வழி மிகு புகழ் உடையவர்.

தொடைகளில் அமைந்தால் அவர் பல நாடுகளில் பல வழிகளில் தன் பெயரை விளம்பரம் செய்து கொள்ளுதல், தன் வேலையில் ஈடுபாடு, திட சிந்தனையற்ற நிலை, மெலிந்த தேகம், வஞ்சகத்தன்மை, பொய் கூறும் தன்மை ஆகியன காணப்படும்.

பாதங்களில் இருந்தால் அவர் வேளாண்மைத் தொழிலில் ஈடுபடுதல், சமயப் பணிகளில் ஈடுபடுதல், எதிரிகளைக் கண்டு அஞ்சுதல் ஆகியன காணப்படும். இவ்விதம் அக்காலத்தில் பலன் பார்த்துச் சொல்லும் வழக்கம் இருந்துள்ளது என்பதை நாம் அறியலாம்.

கலப்பைச்சக்கரம் ஏர்ப்பொருத்தம் பார்க்கும் சக்கரம். காலசக்கரம் ஆயுள் காலம், சிஞ்சுமாரம், சிம்சுமாரம் எனும் இரண்டு சக்கரங்களும் ஒன்று. நட்சத்திர சக்கரம் வழி அனைத்து நட்சத்திரங்கள், குளிகாதியர் சக்கரம், திரேக்காண சக்கரம், நவாமிசச்சக்கரம் வர்க்கோத்தமச் சக்கரம் ஆகிய இவற்றின் பலன்கள், இராசிச்சக்கரம் நாம் எந்த நட்சத்திரத்தில் பிறந்தோம் என்பதையும், அவ்வீட்டின் அது அமைந்த விதம் பொறுத்துப் பலனையும், நவாம்சம் வழி அதன் நட்சத்திரப் பாதத்தின் பலனையும், திம்பச்சக்கரம் வழி பலனையும், நாம் அறிந்து பயன் கொள்ளலாம். இவ்விதம் சக்கரங்களினால் ஏற்படும் நன்மைகளை நாம் அறியலாம்.

*****




இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/astrology/general/p56.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License