தமிழ் நாட்காட்டியில் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகியன பன்னிரண்டு மாதங்கள் ஆகும். இவை குறித்த பழமொழிகள் அக்காலம் தொட்டு வழக்கினில் இருந்து வந்துள்ளது.
சித்திரை
* சித்திரை மாதத்தில் செல்வன் பிறந்தால் செல்வம் சீரழியும்.
* சித்திரை மாதத்திற் பிறந்த சீர்கேடலும் இல்லை. ஐப்பசி மாதத்திற் பிறந்த அதிர்ஷ்டவானும் இல்லை.
* சித்திரை மாதம் செல்வன் பிறந்தால் சீரும் சிறப்பும் கெடும்.
* சித்திரை மாதத்தில் செல்வன் பிறந்தால் சீரும் சிறப்பும் கெடும்.
* சித்திரை மாதத்தில் செல்வன் பிறந்தால் சீரும் கெடும். ஆன குடிக்கு அனர்த்தம்.
* சித்திரை மாதத்தில் பிறந்த சீர்கேடனும் இல்லை. ஐப்பசி மாதத்தில் பிறந்த அதிர்ஷ்டவானும் இல்லை.
* சித்திரை அப்பன் தெருவிலே வைக்கும்.
* சித்திரையென்று சிறுக்கிறதும் இல்லை. பங்குனியென்று பருக்கிறதும் இல்லை; சித்திரை மாதத்தில் செல்வன் பிறந்தால் சீரும், சிறப்புங் கெடும்.
* சித்திரை மாசத்திற் பிறந்த கேடனுமில்லை, ஐப்பசியிலே பிறந்த அதிர்ஷ்டவானும் இல்லை.
மழைச்சகுனம் - மழையும், ஆறு வௌ்ளமும்
* சித்திரை மின்னல் ஆகாது. மார்கழியும் இடிக்கலாகாது.
* சித்திரை பெய்தால் பொன்னேர் கட்டலாம்.
* சித்திரை மழை சின்னப்படுத்தும்.
* சித்திரை மாதத்து மழை சிவத்துரோகம்.
* சித்திரை மின்னல் ஆகாது.
இயற்கை பற்றி பழமொழிகள்
* சித்திரையில் சிறுக்க மாட்டான் பங்குனியில் பருக்க மாட்டான்.
உழவியல்
* சித்திரை மாதப் புழுதி பத்தரை மாற்றுத் தங்கம்.
* சித்திரை மாதம் சிறந்து மழை பெய்யாது போனால் வில்லாத்தை விற்று வௌ்ளாடு கொள்.
அழுதல்
சின்னக்குட்டி அகமுடையான், சித்தரை மாதம் அடித்தானாம். அவள் பொறுக்காமல் ஆடி மாதம் அழுதாளாம்.
வைகாசி
மழையும், ஆற்று வௌ்ளமும்
* வைகாசி மாதம் மதி குறைந்த நாலாம் நாள் பெய்யுமேயாகில் பெருமழை; பெய்யாது போனால் மாசி (மேகம்) மறுத்து, கடலும் வற்றும் ஏரிக்குள் எள்ளு விரை.
* வைகாசி மாதம் ஆற்றில் தண்ணீர்.
* வைகாசி மழை வாழை பெருகும்.
ஆனி
* ஆனியில் முற்சாரல் ஆடியில் அடைச்சாரல்
* ஆனி அடியிடாதே, கூனிக் குடி போகாதே
* ஆனி அரணை வால்பட்ட கருப்பு ஆனைவால் ஒத்தது.
* ஆனியும், கூனியும் ஆகா
இடியும் மின்னலும்
* ஆனி ஆறாந் தேதி இடி இடித்தால் ஆறு மாதத்திற்கு மழை இல்லை.
மழையும் ஆற்று வௌ்ளமும்
* ஆனி ஆருத்ரா கார்த்திகை பகலில் பிறந்தால் ஆறு மாதத்திற்கு மழை இல்லை.
* ஆனி யரை யாறு; ஆனி அரைத்தூக்கம். (ஆறு மெதுவாகச் செல்லும்) ஆவணி முழு யாறு.
* ஆனி அடைசாரல், ஆவணி முச்சாரல்.
* ஆனி குமுறினால் அறுபது நாளைக்கு மழை இல்லை.
* ஆனி ஆறில் இடி இடித்தால் ஆறு மாதத்திற்கு மழையில்லை. (மழை)
* ஆனி மாதம் கொரடு போட்டால் அடுத்த மாதம் மழையில்லை.
* ஆனி அடைச்சாரல் ஆவணி முச்சாரல்.
* ஆனி குமுறினால் அறுபது நாளைக்கு மழை கிடையாது.
* ஆனிக்கார் சாவியும் குரங்குப் பிணமும் கண்டதில்லை.
* ஐப்பசி மேல் காற்றும் அடித்தால் மழை இல்லை; ஆனி ஆறில் இடி இடித்தால் ஆறு மாதத்திற்கு மழையில்லை; ஆவணி ஆறில் இடி இடித்தால் நல்ல மழை.
ஆடி
* ஆடித் தென்றல் நாடு நடுங்கும்.
* ஆடிக் கீழ்க்காற்றும் ஆவணி மேல்காற்றும் அடித்தால் சொற்பனத்தாலும் மழையில்லை.
* ஆடி அமாவாசையில் மழை பெய்தால் அடுத்த அமாவாசை வரை மழை இல்லை.
* ஆடிப்பட்டம் தேடி விதை
*ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்
*ஆடிப்பால் சாப்பிடாத மாப்பிள்யை தேடிப்பிடி
* ஆடிக்கூழ் அமிர்தமாகும்
* ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை வரும்
* ஆடி அரவெட்டை போடி ஆத்தா வீட்டில்
* ஆடி அமர்ந்தது ஒரு நாழிகையில்
* ஆடி அறவெட்டை, அகவிலை நெல்விலை
* ஆடிக்கரு அழிந்தால் மழை குறைந்து போம்
* ஆடிக்காற்று எச்சில் கல்லைக்கு வழியா?
* ஆடிக்காற்றிலே அம்மியே மிதக்கும் போது இலவம் பஞ்சுக்கு என்ன சேதி?
* ஆடிக்கு அழைக்காத மாமியாரைத் தேடிப்பிடிச்சு செருப்பாலடி
* ஆடிக்கொரு தடவை, அமாவாசைக் கொரு தடவையா?
* ஆடி மாதத்தில் குத்தின குத்து, ஆவணி மாதத்ததில வலி எடுத்த தாம்
* ஆடி விதை தேடிப் போடு
* ஆடிச் செவ்வாய் தேடிப் பிடி
* ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை பெய்யும்
* ஆடி வாழை தேடி நடு
* ஆடி வாழை தேடிப்போடு
* ஆடி அவரை தேடிப்போடு
* ஆடி அடி அமுங்கினால் கார்த்திகை கமறடிக்கும்
* ஆடிக்கு ஒரு தரம் அமாவாசைக்கு ஒரு தரம்
* ஆடி கழிந்த எட்டாம் நாள் கோழி அடித்துக் கும்பிட வந்தான்
* ஆடி பிறந்தால் வெல்லப் பானையைத் திற் தை பிறந்தால் உப்புப் பானையைத் திற
* ஆடி மாதம் அடியெடுத்து வைக்காதே
* ஆடி முதல் பத்து. ஆவணி நடுப்பத்து. புரட்டாசி கடைப்பத்து. ஐப்பசி முழுதும் நடவு செய்யாதே
* ஆடியில் ஆனை ஒத்த கடா. புரட்டாசியில் பூனை போல் ஆகும்
*ஆடி மாதத்தில் குத்தின குத்து ஆவணி மாதத்தில் வலி எடுத்ததாம்
சகுனம் - மழையும், ஆற்று பெற்றமும்
* ஆடிக்கரு அழிந்தால் மழை குறைந்து போகும்
* ஆனி அடைச்சாரல். ஆவணி முச்சாரல். ஆடி அரை மழை; ஆடி அடிக்கரு; ஆடிக்கருச் சிதைந்தால் மழை குறையும். ஆடி அமாவாசையில் மழை பெய்தால், அடுத்த அமாவாசை வரை மழை இல்லை. ஆடிக் காற்றில் உதிரும் சருகு போல் வனவளம்
ஆடி, ஆவணி
* கச்சான் பெண்களுக்கு மச்சான் (கச்சான் - ஆடி, ஆவணியில் வீசும் வறண்ட காற்று)
மடமை
* ஆடி மாதம் பிறந்த நரி ஆவணி மாத வௌ்ளத்தைப் பார்த்து, ‘என் ஆயுளில் இவ்வளவு வௌ்ளத்தைக் கண்டதில்லை!’ என்றது இந்தியா பழமொழி.
காற்று - இடி - மின்னல்
* ஆடி, ஆவணி, கீழ்க்காற்றும் ஐப்பசி மேல் காற்றும் அடித்தால் சொற்பனத்திலும் மழை இல்லை.
* ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை
வானவில்
* ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசியில் வில் போட்டால் பஞ்சம்.
* ஆடிப்பட்டம் தேடி விதை.
* ஆடிப்பிள்ளை தேடிப் புதை.
* ஆடிக் கொரு விதை போட்டால் கார்த்திகைக்கொரு காய் காய்க்கும்.
உழவியல்
* ஆடிமழையில் நாற்று நட்டால் காற்றோடு போகும்.
* ஆடி வாழை தேடி நடு,
* ஆடி விதைப்பு ஆவணி முளைப்பு.
* ஆடிப் பருவத்தைத் தேடி விதை.
* ஆடி வாழை தேடி சூடு.
* ஆடிக்காற்றில் இலவம் பஞ்சு பறந்தது போல.
* ஆடிப் பனங்காய் தேடிப் பொறுக்கு.
* ஆடிப்பட்டம் தேடி விதை.
* ஆடி விதைப்பு ஆவணி முளைப்பு.
* ஆடிப்புழுதி ஆவணிச்சேறு.
* ஆடிக்கொரு விதை போட்டால் கார்த்திதைக்குக் காய் காய்க்கும்.
* ஆடி வாழை, தேடி நாடு.
* ஆடிப்பிள்ளை தேடி விதை. (வாழை, தென்னை)
* ஆடி மாதம் அடி மின்னலைப் பார்த்துப் பட்டறை திற
ஆவணி
* ஆவணி மூலம் அரசாளும் யோகம்
* ஆவணி ஆறில் இடி இடித்தால் நல்லமழை.
ஆவணி முழக்கம்
* ஆவணி மாதத்தில் உண்டாகும் இடி முழக்கம். (சோதிட சிந்207/செ.ப.அக.) மழைக்குறியில் ஒன்று. இது ஆவணி மாதம் ஆறாம் தேதி மேகம் முழங்கினால், மழை உண்டு என்று சொல்வது.
ஆவணி அவிட்டம்
* ஆவணி தலை வௌ்ளமும், ஐப்பசி கடை வௌ்ளமும் கெடுதி.
* ஆவணி மருதாணி அடுக்காய்ப் பற்றும்.
* ஆவணி முதலில் நட்ட பயிர் பூவணி அரசர் புகழ் போலும்.
* ஆவணி முதலில் நட்டபயிர் பூவணி அரசர் புகழ்போல்.
* ஆவணிக் காரில் பூசணிப்பூ.
மழைவளம்
* ஆவணி மாதம் அழுகைத் தூற்றல்.
* ஆவணி ஆறாம் (தேதி) முழக்கம் நல்ல மழை தரும். (சிங்க முழக்கம் என்றும் சொல்லுவர்.) இடியும், மின்னலும்
* ஆவணி தலை வௌ்ளமும், ஜப்பசி கடை வௌ்ளமும் கெடுதி.
* ஆவணி மாதம் நெல் விதைத்தால் ஆனைக்கொம்பு விழும்.
* ஆவணியில் நெல் விளைத்தால் ஆனைக்கொம்பு விழும்.
புரட்டாசி
* புரட்டாசி பொன் உருகக் காயும். மண் உருகப் பெய்யும் (பேயும்). வழக்கு பழமொழி.
மழையும் ஆற்று வௌ்ளமும்
* புரட்டாசி பெய்தாலும் பெய்யும், காய்ந்தாலும் காயும்.
* புரட்டாசி பேய்ந்து பிறக்க வேண்டும்; ஐப்பசி காய்ந்து பிறக்க வேண்டும்.
* புரட்டாசி பதினைந்தில் நடவு.
* அறுநான்கிலே பெற்ற பிள்ளையும் புரட்டாசி பதினைந்துக்குள் நட்ட நடுவும் பெரியோர் வைத்த தனம்.
* புரட்டாசியில் வில் போட்டால் உணவற்றுப் போகும்.
* புரட்டாசி பெய்தாலும் பெய்யும் காய்ந்தாலும் காயும்.
* புரட்டாசி பெருமழை.
* புரட்டாசி பேய்ந்து பிறக்க வேண்டும். ஐப்பசி காய்ந்து பிறக்க வேண்டும்.
* புரட்டாசி மாதத்தில் கோவிந்தா என்ற குரலுக்குப் பஞ்சமா?
* புரட்டாசி விதையாகாது. ஐப்பசி நடவாகாது.
* புரட்டாசி பெய்தாலும் பெய்யும் காய்ந்தாலும் காயும்.
* புரட்டாசி பெய்து பிறக்கணும். ஐப்பசி காய்ந்து பிறக்கணும்.
* புரட்டாசி பெய்து பிறக்கணும். ஐப்பசி காய்ந்து பிறக்கணும்.
* புரட்டாசி விதைப்பாகாது.
ஐப்பசி
* ஐப்பசி அடை மழை. கார்த்திகை கன மழை.
* ஐப்பசி மாதத்து எருமைக் கடாவும், மார்கழி மாதத்து நம்பியானுஞ் சரி.
* ஐப்பசி மாதத்து வெயிலில், அன்று உரித்த தோல் அன்றே காயும்.
* ஐப்பசி மாதம் அழுகைத் தூற்றல். கார்த்திகை மாதம் கனத்த மழை.
* ஐப்பசி மாதம் அழுகைத் தூற்றல். கார்த்திகை மாதம் கனத்த மழை.
* ஐப்பசி தலை வௌ்ளமும், கார்த்திகை கடை வௌ்ளமும் கெடுதி.
* ஐப்பசியில் நெல் விதைத்தால் அவலுக்கும் கூட நெல் ஆகாது.
* ஐப்பசி மருதாணி அரக்காகப் பற்றும்.
* ஐப்பசி மாதத்து நடவும், அறுபது பிரயத்தில் பிள்ளையும் பயன் இல்லை.
* ஐப்பசி வௌ்ளாமை அரை வௌ்ளாமை.
* ஐப்பசி மாதம் அடி மின்னலைப் பார்த்துப் பட்டறை திற.
சகுனம்
* ஐப்பசி ஆறில் இடி இடித்தால் அடிப்பானை விதைக்கும் ஆனி உண்டாம். (இடியும், மின்னலும்)
* ஐப்பசி வௌ்ளாமை அரை வௌ்ளாமை.
* ஐப்பசி நெல் விதைத்தால் அவலுக்கும் ஆகாது.
* துலாம் (ஐப்பசி மாதம்) இருக்கிறது; பிடிடா ஏற்றத்தை (மழை இல்லை, அதனால் ஏற்றம்) இடியும், மின்னலும்
மழையும், ஆற்று வௌ்ளமும்
* ஐப்பசி அடைமழை, ஐப்பசி பனி அத்தனையும் மழை.
* ஐப்பசி மாதத்து வெயிலில் அன்று உரித்த தோலும் காயும்.
* ஐப்பசி அடைமழை. கார்த்திகை கன மழை.
இடியும், மின்னலும்
* சோதி (சுவாதி - ஐப்பசி) மின்னல் சோறு அகப்படும்.
* ஐப்பசி கார்த்திகை அடை மழை.
* ஐப்பசி மாதம் அழுகைத் தூறல், கார்த்திகை மாதம் கனத்த மழை.
* ஐப்பசி மருதாணி அரக்காகப் பற்றும்.
* கொள்ளுக்கு ஐப்பசி, எள்ளுக்கு மாசி.
* ஐப்பசி நடவாகாது.
ஆவணி - ஐப்பசி காற்று
* ஆவணி கீழ்க்காற்றும், ஐப்பசி மேல் காற்றும்.
* ஐப்பசி மாதம் இடி இடித்தால் கிணற்றடியில் அருகு முளைக்கும்.
* ஐப்பசி மாதம் நெல் விதைத்தால் அவலுக்கும் நெல் ஆகாது.
கார்த்திகை
* காணக் கிடைத்தது கார்த்திகைப் பிறை போல.
* கார்த்திகை கால் கோடை.
* கார்த்திகைக்கு மிஞ்சிய மழையும் இல்லை. கர்ணனுக்கு மிஞ்சிய கொடையும் இல்லை.
* கார்த்திகை பிறையைக் கண்டதைப் போல.
* கார்த்திகை மாதத்துப் பூமாதேவி போல.
* கார்த்திகை மாதத்தில் கடுமழை பெய்தால், கல்லின் கீழ் இருக்கும் புல்லும்; கதிர் விடும்.
* கார் அறுக்கட்டும்; கத்திரி பூக்கட்டும். (கார்காலம்)
* கார்த்திகை குமுறல் கருந்தண்டு ஈன்றல். (எல்லாம் பதர்)
இடியும், மின்னலும் மழையும், ஆற்று வௌ்ளமும்
* கார்த்திகை மாதம் கலங்கழுவ மழை விடாது.
* கார்த்திகைக்குப் பின் மழையும் இல்லை; கர்ணனுக்குப் பின் கொடையும் இல்லை.
* கார்த்திகை பிறை கண்டது போல. (மேகம் மூடிக்கிடக்கும், பிறை காண முடியாது.)
* கார்த்திகைக்குப் பிறகு கால் கோடை.
* அசுவினி கார்த்திகையில் இடி இடித்தால் ஆறு கார்த்திகைக்கு மழையில்லை.
* கார்த்திகை கன மழை.
கார்த்திகை - தீபம்
* கொசுக்கள் எல்லாம் கூடிக் கார்த்திகை தீபத்திற்கு நெய்க்குடம் எடுத்ததாம்.
* கார்த்திகைக்கு மிஞ்சின மழையும் இல்லை கர்ணனுக்கு மிஞ்சின கொடையும் இல்லை.
* கார்த்திகைக்கு மேற்பட்டு கைப்பயிர் எறிய வேண்டும்.
* காயும் கனியும் உண்டானால் கார்த்திகை மாதம் கல்யாணம்.
“அரிசி பருப்பு இருந்தால் ஐப்பசி மாசம் கல்யாணம்; காய் கறி இருந்தால் கார்த்திகை மாசம் கல்யாணம்.
எள்ளு
“புரட்டாசி மாதத்தில் பேர் எள் விதை. சித்திரை மாதத்தில் கூர் எள் விதை. தை எள்ளு தரையில். மாசி எள்ளு மடியில் பணம். வைகாசி எள்ளு வாயிலே”
உழவியல்
* காரியும், வௌ்ளையும் கடுதிப் பயிர் செய்.
கார்த்திகை - மழைவளம்
* கார்த்திகைக்கு மிஞ்சின மழையும் இல்லை. கர்ணனுக்கு மிஞ்சின கொடையும் இல்லை.
* கார்த்திகை மாசத்து மழை கலம் கழுவுகிறதுக்கு முன்னே வந்து போகும்.
* கார்த்திகை மாதத்தில் கடுமழை பெய்தால் கல்லிடுக்கின் கீழும் புல்லும் கதிர் விடும்.
* கார்த்திகை மாதத்து நாய் போல அலைகிறான்.
* கார்த்திகைக்கு முன்பு இடி இடித்தாலும், காரியம் நிறைவேறும் முன் பதறினாலும் கெடுதலாகும்.
*கார்த்திகைக் கீரை கணவனுக்குக் கொடாதே
*கார்த்திகை எண்ணெயும் கனுவுப் பழையதும் ஆர் இடுவார் அம்மா என்று அழுதாளாம்.
* கார்த்திகைக் கார் கடைவிலை. தைச்சம்பா தலைவிலை.
* காயும் கனியும் உண்டானால் கார்த்திகை மாதம் கல்யாணம்.
* கார்த்திகை மாதத்துப் பூமா தேவியைப் போல
மார்கழி
மார்கழி மழையும், ஆற்று வௌ்ளமும்
* மார்கழி மத்தியில் மழை பெய்தால், சீர் ஒழுகும் பயிர்களுக்கு, சேமம் உண்டாகும்.
* சித்திரை மின்னலாகாது. கண்டக்கால் மார்கழி மழையுமாகாது.
* மார்கழி பிறந்தால் மழை இல்லை. பாரதம் முடிந்தால் படை இல்லை.
* மார்கழி மழை மண்ணுக்கு உதவாது.
தை
* தை பிறந்தால் வழி பிறக்கும்.
* தையில் வளராத புல்லுமில்லை. மாசியில் முளையாத மரமுமில்லை.
* தை மழை நெய் மழை.
* தையும் மாசியும் வையகத்துறங்கு.
* தைப்பிறந்தால் தலைக் கோடை.
* தைப்பிறந்தால் தரை வறண்டது. தை நெய் மழை.
* அவரை எம்மாதம் போட்டாலும் தை மாதம் காய்க்கும்.
* அவரை எம்மாதம் போட்டாலும் தை மாதம் முளைக்கும்.
* தை ஈனாப் புல்லும் இல்லை மாசி ஈனா மரமும் இல்லை
* தையில் வளராத புல்லும் இல்லை. மாசியில் முளைக்காத மரமும் இல்லை.
* தை மாசியும் வையகத்துறங்கு.
* தை உழவோ நெய் உழவோ?
* தையுழவு ஐயாட்டுக் கிடை.
* தைப்பனி தரைப்பனி.
* தைக் குறுவை தரையைத் துளைக்கும். மாசிப் பனி மச்சைத் துளைக்கும்.
மாசி
மாசி சகுனம் - மழையும், ஆற்று வௌ்ளமும்
* மாசி மின்னல் மரம் தழைக்கும்.
* மாசி மின்னல் மழை தழைக்கும்.
* மாசிப் பனி மச்சையும் துளைக்கும்.
* மாசிப் பிறையை மறக்காமல் பார்.
* மாசி மழையில் மாதுளை பூக்கும்.
* மாசிப்பனியில் மச்சுவீடும் குளிரும்.
* மாசி மின்னல் மரம் தழைக்கும்.
பங்குனி
மழையும், ஆற்று வௌ்ளம்
* பங்குனி மாதப் பகல் வழி நடந்தால் படுபாவி.
* பங்குனியென்று பருப்பதும் இல்லை, சித்திரையென்று சிறுப்பதும் இல்லை.
* பங்குனி மழை பத்துக்கு நட்டம்
* பங்குனி மழை பெய்தால் பத்து எட்டுச் சேதம்.
இவ்விதம் பழமொழிகள் வழங்கி வருகின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.