ஏழு நாட்கள் கொண்டது ஒரு வாரம். இரண்டு வாரம் கொண்டது ஒரு பட்சம். பதினைந்து நாட்கள் கொண்டது ஒரு பட்சம். பக்கம் எனும் பெயராலும் இது அழைக்கப் பெறுகின்றது. இரண்டு பட்சம் கொண்டது ஒரு மாதம்.
பட்சம்
தேய்பிறை பட்சம் என்பது அமரபட்சம், கிருட்டிண பட்சம் என்றும், வளர்பிறை பட்சம் என்பது பூர்வபட்சம், சுக்லபட்சம் என்றும் அழைக்கப் பெறுகின்றது.
”பூர்வபட்சம், கிருட்ண பட்சம், சுக்லபட்சம்” எனும் பழமொழி வழக்கினில் உள்ளது.
வளர்பிறைத் திதிகள் பதினைந்து, தேய்பிறைத் திதிகள் பதினைந்து ஆக திதிகள் முப்பதாக வகுக்கப் பெற்றுள்ளது. அமாவாசை கழித்து வரும் திதிகள் சுக்லபட்சத் திதிகள் எனவும், பௌர்ணமி கழித்து வரும் திதிகள் அமரபட்சத் திதிகள் எனவும் அழைக்கப் பெறுகின்றது.
திதிகள் பற்றிய பழமொழிகள்
அமாவாசை
* ஐயர் வருகிற வரையில், அமாவாசை காத்திடுமா?
அமாவாசையென்பது குறிப்பட்ட நேரம் வரைக்கும்தான். எந்தவொரு காரியமும் எவருக்காகவும் காத்திருக்காது. எனவே உரிய நேரத்திரலேயே செய்து முடித்தல் சாலச் சிறந்தது, என்பதை உணர்த்துவதே இப்பழமொழி.
* ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்குமா?
* ஐயர் வருகிற வரையில் அமாசாசை காத்திருக்குமா?
* சமாசாரம் தெரியாமல் அமாவாசைக்குப் போகிறேன்
* நித்தம் கிடைக்குமா அமாவாசை சோறு
* அமாவாசை கருக்களில் பெருச்சாளி போனதெல்லாம் வழி, அமாவாசை சோறு எப்பவும் கிடைக்குமா?
* அமிஞ்சிக்கு உழுதால் சரியாக விளையுமா?
* அமாவாசை சோறு தினம் கிடைக்குமா?
* இந்த அமாவாசைக்கும் வெட்கமில்லை; வருகிற அமாவாசைக்கும் வெட்கமில்லை
* அமாவாசை சோறு தினந்தோறும் கிடைக்குமா? ஜயர் வரும் வரை அமாவாசை காத்துக் கொண்டிருக்குமா?
* அப்துல் காதருக்கும், அமாவாசைக்கும் என்ன சம்பந்தம்?
* அமாவாசைச் சோறு அன்றாடம் கேட்டால் கிடைக்குமா?
* அமாவாசை கருக்கலிலே பெருச்சாளி போனதெல்லாம் பாதை , அய்யர் வரும்வரை அமாவாசை காத்திருக்குமா?
மகத்துவம் நிறைந்த ஏகாதசி விரதம்
“ந காயத்ரியா பர மந்த்ர:
ந மாது தைவதம்
ந காச்யா பரமம் தீர்த்தம்
ந ஏகாதச்யா ஸமம் வீரதம்”
“காயத்ரிக்கு மேலான மந்திரமில்லை,
தாயினும் சிறந்த தெய்வமில்லை
காசிக்கு சமமான தீர்த்தமில்லை
ஏகாதசிக்கும் மேலான விரதமில்லை.”
பகவான் மகாவிஷ்ணு உறங்கிக் கொண்டிருந்த போது, அவரது திவ்ய சரீரத்திலிருந்து ஒரு சக்தி, ஸ்திரி ரூபத்தில் வெளியே சென்று உலகத்தையேத் துன்புறுத்திக் கொண்டிருந்த ஒரு அசுரனைக் கொன்றதாம். சக்தி வடிவான அந்த பெண்ணிற்கு ‘ஏகாதசி’ என பகவான் பெயரிட்டு ஏகாதசி விரதத்தை ஏற்படுத்தியதாக ‘பத்ம புராணம்’ கூறுகிறது. பாற்கடலை கனடந்து அமிர்தம் பெற்ற நாளை ‘ஏகாதசி’ என்றும் கூறுவதுண்டு. இந்துக்கள் அனைவருக்கும் மிக விசேஷமானது ஏகாதசி விரதமாகும். ஏகாதசியன்று உபவாசம் இருப்பது வழக்கம்.
* ஏகாதசித் திருடியை ஏற்றடா ரதத்தின் மேல்.
* ஏகாதசி மரணம் துவாதசி தகனம்.
* ஏகாதசி விரதம் என்று நாக்கை பிடுங்கிக் கொள்வார்களா?
உணவு
* ஏகாதசிக்கு மா இடித்தாற் போல.
* ஏகாதசி தோசை; இளையாள் மேல் ஆசை.
* ஏகாதசியார் வீட்டுக்குச் சிவராத்தியார் வந்து போனாராம்.
தூய்மையின்மை
* ஏகாதசி என்றைக்கு என்றால் அகமுடையாள் புடைவையைப் பார்த்துச் சொல்கிறேன் என்றானாம்.
துவாதசி - ஏகாதசி
* இருந்தால் துவாதசி; இல்லாவிட்டால் ஏகாதசி.
தசமி
தசமி எண்ணெய் தந்தால் தேய்த்துக் கொள்ளலாம்; ஏகாதசி எண்ணெய் இரந்தும் தேய்க்கலாம்; துவாதசி எண்ணெய் தந்தாலும் கூடாது.
சட்டி
* சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.
ஆன்மீதவாதிகள் பிள்ளை வரம் கேட்டு வரும் பெண்களுக்கு ஞானிகள், சட்டியில் (சட்டியில்), விரதம் இருந்தால் தானே அகப்பையில் உடலின் உள்ளே உள்ள கருப்பையில் ஏற்படும் இயற்கையான மாறுபாட்டில் ‘கரு’ உண்டாக வாய்ப்பு வரும் என்றும் கூறியுள்ளனர், என்று சுராவின் பழமொழிகள் விளக்கங்கள் நூலில் மனோதத்துவ ஜோதிடர் தெரிவிக்கிறார்.
“சட்டியில் இருந்தால் அல்லவா அகப்பையில் வரும்!”
சட்டியில் சோறு இருந்தால் தான் அள்ளும் பொழுது அகப்பையில் அது வரும் என்றும் சட்டியை முகந்தால் என்ன ஆகும்? அது போன்று கையில் பொருள் இருந்தால் தான் பிறருக்கு அதைக் கொடுக்க முடியும்? ஒருவனிடத்துக் கல்வியறிவாகிய செல்வம் இருந்தால் தான், அவன் அறிஞர் வியக்கக் கூடிய விடயங்களை வெளியிட்டுப் பேசவும் எழுதவும் இயன்றவனாவான்.
பிள்ளையில்லாதவர்கள் சட்டியில் விரதம் இருந்து வந்தால் கர்ப்பம் உண்டாகும் என்று இப்பழமொழிக்குச் சிலர் விளக்கம் கூறுவதும் உண்டு.
அட்டமி, நவமி
அட்டமி, நவமியில் தொட்டது துலங்காது.
”சந்தியா காலத்தில் கற்ற வித்தை பயன் தராது”
இதற்கு முதலில் கற்றுக் கொடுப்பர் (குரு) அட்டமி திதியன்று கற்றுக் கொள்பவருக்கு (சிஷ்யனுக்கு) வித்தைகளுக்குப் பயிற்று வித்தாரானால் அந்த குருவிற்கு கற்ற வித்தைகள் மறந்து போகும். இதைத் தான் “அட்டமியில் ஓதினால் ஆசானுக்கு ஆகாது” என்று கூறுவர்.
அமாவாசை முடிந்து பிரதமை ஆரம்பிக்கும் தறுவாயில் அதாவது, இருபத்தி நான்கு நிமிடம் இருக்கும் நேரத்தில் இதையே ‘உவா காலம்’ எனவும் கூறுவர். பௌர்ணமி முடிந்து பிரதமை ஆரம்பிக்கும் நேரத்தில் இரண்டு நாழிகை அதாவது நாற்பத்தி எட்டு நிமிடம் இருக்கும் தறுவாயில். தசமி முடிந்து அமாவாசை ஆரம்பிக்கும் நேரம் இரண்டு நாழிகை அதாவது நாற்பத்தி எட்டு நிமிடம் இருக்கும் தறுவாயில் தொடங்கும் தொழில்கள், வியாபாரம், வித்தைகள் எல்லாம் பாதியில் நின்று விடும் அல்லது பயன் தராது என்று கொள்ளலாம் என்கின்றனர்.