மழை வருமா? வராதா?
முனைவர் ஸ்ரீவாலாம்பிகை
தும்பி, ஈசல், எறும்பு, தவளை, மாடு, கொக்கு, மயில், கருடன் போன்றவைகளின் செயல்பாட்டைக் கொண்டு மழை வருமா? வராதா? என்று கண்டுபிடித்து விட முடியும். இதற்குச் சில பழமொழிகளே இருக்கின்றன. அவற்றைப் பார்க்கலாம் வாங்க...!
தும்பி
* தட்டான் தாழப் பறந்தால் தப்பாமல் மழை.
* தட்டான் தாழப் பறந்தால் மழை.
* தட்டான் தாழப் பறந்தால் தப்பாமல் மழை வரும்.
* தட்டான் பூச்சி தாழப் பறந்தால் தப்பாது மழை.
* தட்டான் பூச்சி தாழப் பறந்தாமல் தப்பாமல் மழை வரும்.
* தட்டான் பறந்தால் கிட்டமழை.
* தும்பி பறந்தால் தூரத்தில் மழை.
ஈசல்
* காலைச் செல் பூத்தால் அடத்த மழை அடங்கும்.
* புற்றிலே ஈசல் புறப்பட்டாலும் மண்ணிலே கரையான் கூடினாலும் மழை வரவே வரும்.
* புற்றிலே ஈசல் புறப்பட்டாலும் மண்ணிலே கறையான்.
* புற்றிலே ஈசல் புறப்பட்டது போல.
* ஈசல் பறந்தால் மழை.
* ஈசல் பறந்தால் மழை வரும்.
* காலை செல் பூத்தால் அடுத்த மழையடங்கும்.
* அந்தி ஈசல் கடைமழைக்கு அறிகுறி. அந்தி மழை அழுதாலும் விடாது.
* அந்தி ஈசல் பூத்தால் அடுத்த மழைக்கு அடையாளம்.
* அந்தி ஈசல் பூத்தால் அடைமழை அதிகரிக்கும்.
* அந்தி ஈசல் அடைமழை.
* அந்தி ஈசல் அடைமழைக்கு அறிகுறி.
* புற்றிலே ஈசல் புறப்பட்டாலும் மண்ணிலே கரையான் கூடினாலும் மழை வரும்.
எறும்பு
* எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் பெரும் புயலும் வரும்.
* எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறின் மழை.
* எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறின் மழை பெய்யும்.
* எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை.
* எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை வரும்.
தவளை
* தவளை கத்தினால் தானே மழை வரும்.
மாடு
* மாடு மயங்கி மானம் பார்த்தால் மழை பெய்யும்.
* மாடு மயங்கி வானம் பார்த்தால் மழை.
கொக்கு
* கொக்கு மேடேறினால் உடனே மழை வரும்.
* கொக்கு மேடேறினால் உடனே மழை.
* கொக்கு மேடேறினால் மழை.
மயில்
* மயில் இரவில் கத்தினால் தப்பாமல் மழை வரும்.
கருடன்
* கருடன் இடமானால் வெயிலோடு மழை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.