உங்கள் லக்னத்திற்கான ஆவணி மாத பலன்கள்
முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை
செவ் - 11 சிம், புதன் ஆவணி - 20 வக்ரமுடிவு, குரு சித்- 27- துலாம். சுக் - 5 கடகம். சனி - துலாம் 9 வக்ர முடிவு. சந்திரன் - மிருகசீரிடம் முதல் ஆயில்யம் வரையில் பயணம்.
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சுக்கிரன் மிதுனத்தில் நிற்பதால் ஆவணி 4 வரை மிகுந்த இன்னல்கள் ஏற்படும். ஆவணி 5 முதல் செவ்வாய், ராகுவுடன் கடகத்தில் இணைவதால் சுகத்தானம் கெடுகின்றது. மேலும், உடல் நலனில் அதிகக் கவனம் தேவை. உயர் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் உடையவர்கள் குடும்பப் பிரச்சினைகளுக்கு ஆளாகுவர். நரம்பு தொடர்பான தொல்லைகளில் அதிக கவனம் தேவை. 10 ஆம் தேதிக்குப் பிறகு குடும்பத்தில், தொழிலில் ஏற்பட்ட இன்னல்கள் நல்ல முடிவுக்கு வரும். வாகனங்களில் செல்லுகின்ற போது அதிகக் கவனம் தேவை.. மேலும் தொழில் நிலையில் சில எதிர்பாராத சங்கடங்கள் ஏற்படும். இருப்பினும் தொழிலில் புகழும், மரியாதையும் நிலைத்து நிற்கும். ஆறாமிட குரு தந்த அலைச்சல் யாவும் ஆவணி 27 தேதிக்குப் பிறகு நல்ல மாற்றங்கள் ஏற்படும். 11ஆமிடம், லக்னம், 3ஆமிடம் பார்வை பெறுவதால் இலாபம், பெயர், புகழ், மரியாதை, தைரியம் முதலியன யாவும் பெற்று பொலிவுடன் இருப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சுக்கிரன் மிதுனத்தில் நிற்பதால் ஆவணி 4 வரை மிகுந்த செல்வம், இனிய வாக்கு, சுப நிகழ்வுகள் முதலியன ஏற்படும். ஆவணி 5 முதல் செவ்வாய், ராகுவுடன் கடகத்தில் இணைவதால் சுப, அசுப விரயங்கள், அதிக முயற்சி ஆகியவற்றில் இடையூறு ஏற்படும். தகப்பனாருக்கு கண்டங்கள், சிரமங்கள் ஏற்படும். 9 ஆம் தேதிக்குப் பிறகு குடும்பத்தில், இன்னல்கள் நல்ல முடிவுக்கு வரும். நான்காமிடம், புத்திநிலை, பொலிவுடன் சிறப்பாய் விளங்கும். மதிப்பு, மரியாதை கூடும். ஆவலை இல்லாதவர்களுக்கு சிறப்பான இடத்தில் அரசாங்கப்பணி, பணியில் இருப்பவர்களுக்கு உயர்ந்த நிலை சிறப்பாய் அமையும். வாகனங்களில் செல்லுகின்ற போது கவனம் தேவை. ஆறாமிட குரு வேலையில் அலைச்சல், விரயங்கள், அதே சமயத்தில் சிறந்த செல்வவளம், வாக்குபிரசித்தி முதலியன யாவும் தரும். 27 தேதிக்குப் பிறகு நல்ல மாற்றங்கள் ஏற்படும். 10 ஆமிடம், 12, 2 ஆம் இடம் பார்வை பெறுவதால் நன்மை ஏற்படும்.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சுக்கிரன் மிதுனத்தில் நிற்பதால் ஆவணி 4 வரை மிகுந்த செல்வம், இனிய வாக்கு, சுப நிகழ்வுகள் முதலியன ஏற்படும். ஆவணி 5 முதல் செவ்வாய், ராகுவுடன் கடகத்தில் இணைவதால் 2 ஆம் இட சுப, அசுப விரயங்கள், அதிக முயற்சி ஆகியவற்றில் இடையூறு ஏற்படும். தகப்பனாருக்குக் கண்டங்கள், சிரமங்கள் ஏற்படும். 9 ஆந் தேதிக்குப் பிறகு குடும்பத்தில், இன்னல்கள் நல்ல முடிவுக்கு வரும். நான்காமிடம், புத்திநிலை, பொலிவுடன் சிறப்பாய் விளங்கும். மதிப்பு, மரியாதை கூடும். வேலை இல்லாதவர்களுக்கு சிறப்பான இடத்தில் அரசாங்கப்பணி, பணியில் இருப்பவர்களுக்கு உயர்ந்த நிலை சிறப்பாய் அமையும். வாகனங்களில் செல்லுகின்ற போது கவனம் தேவை. சுப, அசுப குடும்பம், தந்தையார் வழி தொடர்ந்த செலவினங்கள் ஏற்படம். ஆறாமிடகுரு வேலையில் அலைச்சல், விரயங்கள், அதே சமயத்தில் சிறந்த செல்வவளம், வாக்கு பிரசித்தி முதலியன யாவும் தரும். யாவும் 27 தேதிக்குப் பிறகு நல்ல மாற்றங்கள் ஏற்படும். 10ஆமிடம், 12, 2ஆமிடம் பார்வை பெறுவதால் நன்மை ஏற்படும்.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தலைசுற்றல் மயக்கம் ஏற்படும். வாக்கு வன்மை, முகப்பொலிவு, உயர்கல்வி, நண்பர்கள் ஆகியவற்றினால் சுப, அசுப விரயங்கள் ஏற்படும். நல்ல தைரியம், எதிர்பாராத கண்டங்கள், அரசதண்டனை, சிறைதண்டனை போன்றவை நிகழும். இரத்த அழுத்த மாறுபாடுகள், அறுவை சிகிச்சை, வழக்கில் தோல்வி, சிக்கலான நிலைகள், அவை தொடர்ந்த வீண் செலவினங்கள், கெட்டப்பெயர்கள் ஏற்படும். குறுக்குச் சிந்தனையினால் ஏற்பட்ட இடையூறுகள், அதனால் கிடைத்த தண்டனைகள், அபராதங்கள், பிறகு திருந்துதல் போன்றவை நடக்கும். தொழிலில் அவப்பெயர்கள், பின்னர் நிலை தடுமாற்றம் உடைய தொழில், தொழிலில் மாற்றங்கள் உருவாகுதல், ஆயுள் நலம் முதலியன ஏற்படும்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
அலைச்சல், பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து, வளர்ச்சி முன்னேற்றங்கள், கௌரவ விருதுகள், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம், வீட்டில் சுப நிகழ்வுகள் முதலியன ஏற்படும். பூர்வ புண்ணியத்தானம் வலிமை பெறுவதால் தந்தைவழி ஆதாயங்கள், பெரியோர்களின் ஆசிகள், மிகச்சிறந்த இலாபங்கள் கிடைக்கும். இளைய தாரம் அல்லது இரண்டாம் தாரம் சிறப்பாய் அமைதல், மூத்த சகோதர, சகோதரிகளால் ஆதாயங்கள் போன்றவை அமையும். பங்குச்சந்தையில் இருப்பவர்கள் மிகச்சிறந்த இலாபத்தைப் பெறுவர். மகான்கள், பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். மிருகங்களினால், விலங்குகளினால் ஆபத்துகள், சிறைத்தண்டனை, சிறைவாசம் இருக்கலாம். அவற்றில் அதிகக் கவனம் தேவை. குரு மறைவிடம் செல்வது சிறப்பில்லை. தந்தை, தாய் வழி அதிக மருத்துவச் செலவினங்கள், தாயாருக்கு அறுவை சிகிச்சைகள், முன்கோபம், இரத்த அழுத்த மாறுபாடுகள் இருக்கும். சிறந்த தனலாபங்கள் முதலியன ஏற்படும்.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
மிகுந்த செல்வ நிலை, குடும்ப வாழ்க்கையில் மேம்பாடு, நோய், வம்பு, வழக்கு, எதிரிகளின் தொல்லைகளில் இருந்து விடுபடுதல் நிகழும். கண் பாதிப்பு அடைதல், பெயர், புகழ், கௌரவம், குடும்பம், தந்தை, தொழில் தொடர்ந்த நிலையில் சுப, அசுப செலவினங்கள் ஏற்படும். ஆயுள் நலம் ஏற்படும். தைரியம், புத்திரவகையில் நன்மைகள், குறைபாடுகள், கடல் கடந்த வியாபாரத்தில் அதிக இலாபம் அடைவர்.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குழந்தைப் பாக்கியம், குழந்தைகளால் மேன்மை, வளர்ச்சி முன்னேற்றங்கள், விருதுகள், சன்மானங்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக கிடைக்காமல் போன தந்தை வகை ஆதாய அனுகூலங்கள் உண்டு. பாடுபட்டதிற்கான பூர்வ பண்ணிய பலன்கள் கிடைக்கும். அரசாங்க அதிகாரிகளால் மிகுந்த நன்மை, தொழிலில் சிக்கல்கள், குடும்பம், மனைவி, வளர்ச்சி நிலையில் சிக்கல்கள், சாதகர் மனைவிக்கு அறுவை சிகிச்சை இருக்கும். வெளிநாடு தொடர்புடைய வகையில் மறைமுக வருமானங்கள், சிறந்த இலாபங்கள் கிடைக்கும். ஆலயம், வெளியூர், மனைவி, குழந்தைகள், இரண்டாம் தர வாகன வசதி தொடர்புடைய சுப செலவினங்கள் ஆகியவை ஏற்படும்.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சோம்பல், இலாபத்தடைகள், வளர்ச்சி முன்னேற்றங்களில் சில இடையூறுகள் இருக்கும். மனைவி, குழந்தைகள் தொடர்ந்த நிலையில் செலவினங்கள் இருக்கும். எதிரிகள் தொல்லை, வழக்கு, நோய் முதலானவற்றில் இருந்து விலகி நன்மை அடைவர். சாதகர், தந்தை, மனைவி, வகை கண்டங்கள், இளைய சகோதர வகையில் இடர்ப்பாடுகள் உண்டு. தொழிலில் அதிகாரத்தனம் மிகுந்த நிலையினை அடைதல், அரசாங்க ஆதாய அனுகூலங்கள், சிரமங்களுடன் கூடிய இலாபங்கள் ஆகியவை ஏற்படும்.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இளைய சகோதர ஆதாயங்கள், குழந்தைப்பாக்கியம், புத்திரர் வகை நன்மைகள் கிடைக்கும். சுபச் சடங்குகள், சுப நிகழ்வுகள், மனைவி, வளர்ச்சி, விருதுகள் ஆகியன் கிடைக்கும். விட கண்டங்கள், ஆயுள் கண்டப்பீடை, அரசாங்கம், தந்தையினால் நன்மை உண்டு. தொழில், குழந்தைகள், உடல் நலம், இலாபம், ஆகியவற்றில் எதிர்பாராத நட்டங்கள் ஆகியவை ஏற்படும். பதவியைப் பறித்த குரு மீண்டும் நல்ல இலாபத்துடன் கூடிய பதவியைத் தந்து பல பொறுப்புகளைத் தருவான். வாகன வசதி, குடும்ப மேன்மை, வாழ்க்கையில் சுகம் ஏற்படும். கருமத்தானம் வலுத்திருப்பதால் இறப்பு, கரும காரியம், குடும்பத்தில் சிக்கல்கள் இருக்கும். வாகன வசதி, குடும்ப மேன்மை, வாழ்க்கையில் சுகம் ஏற்படும்.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குரு செய்யும் தொழிலில் முதலில் பறித்து அதை விட வேறு நன்மையும், இலாபமும் தரத்தக்க சுப செலவினங்களுடன் கூடிய நல்ல பொறுப்புள்ள பதவியைத் தருவான். செல்வவளம், குடும்பத்தில் வீட்டு உபயோகப்பொருட்கள், வீடு மாறுதல். எதிரிகள் தொல்லை, வழக்கு, நோய் முதலானவற்றில் இருந்து விலகி நன்மை அடைவர். சிரமப்பட்டதிற்கான பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து, இலாபம் ஆகியவை ஏற்படும். சோதிடம், ஆன்மீகம், மருத்துவம் சார்ந்த துறையினர் வெகு பிரசித்தி பெறுவர். மிகுந்த நற்பலன்கள், வளர்ச்சி முன்னேற்றங்கள், உடல் நலக் குறைபாடுகள், தொழிலின் சிற்சில இடையூறுகளினால் நன்மை ஆகியன ஏற்படும். வயிறு வலி, காய்ச்சல், வெப்பம், இருதயவலி தொடர்ந்த தொல்லைகள் ஆகியன ஏற்படும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெயர், புகழ், அந்தஸ்து, தைரியம், தன்னம்பிக்கை, ஆடை ஆபரணச் சேர்க்கைகள், குழந்தைகளினால் நன்மை, குழந்தைப்பேறு உண்டு. எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பு, தொழில், இளைய சகோதர வகையில் இடர்ப்பாடுகள் ஆகியன யாவும் குருவின் பார்வையால் நீங்கி நன்மை அடைவர். வனவாசம், வாழ்க்கையில் பற்றற்ற நிலை, தெய்வீக சிந்தனைகள், அலைச்சல்கள், ஆன்மீக பயணங்கள், பதவியில் நற்பெயர், முன்னேற்றம் ஆகியன ஏற்படும்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெயர், புகழ், தொழில் தொடர்ந்த அலைச்சலுடன் கூடிய செலவினங்கள் உண்டு. மிகுந்த நற்பெயர், புத்திரர் வகையில் நன்மை, சில இடையூறுகள், வீட்டில் நன்மை, தீமை ஆகிய இரண்டும் கலந்த பலன்கள் ஏற்படும். இரண்டாம் தர வாகனங்கள், தைரியம், சிறந்த பேச்சாற்றல் அமையும். எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபடுதல், வயிறு, வெப்பம், இரத்த அழுத்தம் தொடர்ந்த நிலையில் உடலில் சில தொல்லைகள், தந்தைக்கு அறுவை சிகிச்சைகள், இலாபத்துடன் கூடிய செலவினங்கள் ஆகியன ஏற்படும். வளர்ச்சி முன்னேற்றங்களில் இருந்து வந்த தடைகள் விலகும்.
* * * * *

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.