விளம்பி வருடம் - ஆனி மாதப் பலன்கள்
முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை
கிரக பாதசாரங்கள்
சூரியன் - 3 மிருக, 1 - 7, 8 - 21 திருவாதிரை - மிதுனம். 22 - 32 புனர் - மிது, 32 ல் கடகம்
சந்திரன் - திருவாதிரை - மகம் வரை.
செவ்- திருவோணம் - மகரம். ஆனி 12ல் வக்ரம்.
புதன் - 4 வரை திருவா - மிது. 5 -12 புனர; 11 ல் கடகம். 13 - 22 புசம், 23 - 29 - கடகம் ஆயில்யம்.
குரு - சுவாதி 4 துலாம். வக்ரம். 26 ல் வக்ர நிவர்த்தி.
சுக்கிரன் - 3 - 8 பூசம் - கடகம். 9 - 19 ஆயில்யம் கடகம், 20 - 31 மகம் - சிம்மம், 32 - பூரம் - சிம்மம்.
சனி - மூலம் 4, தனுசு. வக்ரம்.
ராகு - பூசம் 4,3 கடகம்.
கேது - திருவோணம் 2,1 மகரம்.
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
கடன், நோய், வழக்கு வலுவான நிலை, பின்னர் சிரமத்துடன் கூடிய முடிவுக்கு வருதல், அலைச்சல், மன உளைச்சல், அவமானம், மிகவும் சங்கடமான நிலை, இளைய சகோதிரத்தினால், தந்தையினால்; தொல்லைகள், குடும்பத்தில் பிணக்குகள், முன்னேற்றம், வாகனம் ஆகியவற்றில் தடைகள் ஆகியன யாவும் ஏற்படும்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இம்மாத இறுதியில் மிகுந்த நற்பலன் ஏற்படும். தந்தை, மூத்த சகோதிரம், கருத்து மாறுபாடு, கல்வி, வெளியூர் தொடர்ந்த சுப பயணங்கள், ஆபரணச் சேர்க்கை, சிறப்பான மனதிற்குப் பிடித்த தொழில் அமைதல், இரண்டாம் தர வாகனங்கள் அமைதல் ஆகியன ஏற்படும்.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இரத்த அழுத்தத்தில் மாறுபாடு, குறைபாடு, புதிய வகை நோயினால் தாக்கம், முன்னேற்றத் தடைகள் விலகுதல், பயணங்கள், குழந்தைகள், பெண்களினால் களங்கம், அவமானம், வீண் செலவினம் ஏற்படல், உடல் நலமின்மை, சுப செலவினங்கள் ஏற்படல், வாழ்க்கையில் பற்றற்ற நிலை, அலைபாயும் மனநிலை, தந்தையாருக்கு உடல் நலமின்மை, இம்மாத இறுதியில் நன்மையான மாற்றங்கள், வரவேண்டிய நிலுவைத் தொகை ஆகியன ஏற்படும்.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இம்மாத இறுதியில் சிறப்பான தொழில் அமைதல், வழக்கு, எதிரி, கடன், நோயினால் தொல்லைகள் ஏற்பட்டு விலகுதல், மனநலம் பாதித்தல், பெண்கள், மனைவி, குழந்தைகள், வழக்கு ஆகியவற்றினில் வில்லங்கம், அவமானம் ஏற்படல், நியாயமான தீர்ப்பினால் வீண் செலவினம் ஏற்படல், அபராதம் கட்டுதல், புத்தி மாற்றத்தில் தெளிவு ஏற்படல் ஆகியன ஏற்படும்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இம்மாத இறுதியில் திருமணம் கை கூடி வருதல், வில்லங்கங்கள், சில பிரச்சினைகள், உடல் பாதிப்பு ஏற்படல், கணவர் அல்லது மனைவியினால், குழந்தைகளினால், இளைய சகோதிரம், தொழிலினால், கடன், வம்பு, வழக்குகளினால் தொல்லைகள் ஏற்படல், இலாபத்தில் இடையூறுகள் அமைதல், ஆன்மீகப் பயணங்கள், மனம் பற்றற்ற நிலை, உறக்கமின்மை, வீண் செலவினங்கள், இரத்த அழுத்தத்தில் மாறுபாடு, குறைபாடு, தலைச்சுற்றல், மயக்கம் ஆகியன ஏற்படும்.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குழந்தைகளினால் மனச்சங்கடங்கள், குடும்பத்தில் செயலற்ற நிலை, மனம் ஒருநிலையில் இல்லாதிருத்தல், பணியில் சிறிது முன்னேற்றமான நிலை, கூடுதல் பொறுப்புகள் அமைதல், சிறந்த இலாபம் அமைதல், பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து மேம்பட்ட நிலை, குடும்பத்தில் குழப்பங்கள், தாயாருக்கு உடல் கண்டம், வாகனத்தடைகள், கரும காரியம் தந்தை வகையில் ஏற்படல் ஆகியன ஏற்படும்.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இம்மாத இறுதியில் திருமண ஒப்பந்தம், திருமணம் அமையும். குடும்பத்தில் வில்லங்கங்கள் ஏற்படும். பணி நிலையினில் கடின நிலை, வீண் செலவினங்கள், அவமானங்கள், பெண்கள் வகையில் சிரமங்கள், கடன், வம்பு, வழக்கு, குடும்பம், குழந்தைகள் வகையில் கருத்து மாறுபாடுகள், மனக்குறைகள் ஏற்படுதல் ஆகியன ஏற்படும்.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வீண் விரயங்கள், இளைய வகை சகோதிரத்துடன் மனஸ்தாபங்கள், கடன், வம்பு, வழக்குகள் வலுத்தல், தந்தையினால் சிரமங்கள், குடும்பத்தில் சங்கடங்கள், தொழில் நிலையில் அவமானங்கள், பூர்வ சொத்து வகையில் வில்லங்கம் அமைதல், மனைவி, நண்பர்கள், தந்தை வகையில் செலவினங்கள் ஆகியன அமையும்.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
மிகவும் சங்கடமான நிலைகள் ஏற்படல், கணவர் அல்லது மனைவியுடன் கருத்து மாறுபாடு, குடும்பத்தாருடன், இளைய சகோதிரத்துடன் கருத்து பிணக்குகள், கடும் வாக்கு வாதங்கள், பதவியில் ஒரு நல்ல தலைமையிடத்திலான மாற்றம் அமைதல், குடும்பத்தினால் அவமானங்கள் அமைதல், இரத்த அழுத்த மாறுபாடு, வெம்மையினால் தொல்லை, நண்பர்கள், தொழிலினால் தொல்லை, கடன், வம்பு, வழக்கு, நோய்களினால் தொல்லை, அவமானம் ஏற்படல், தற்கொலைக்கான எண்ணங்கள் தோன்றுதல், சிலருக்கு கண்டங்கள் வந்து விலகுதல், அனைத்திலும் போராடுதல் ஆகியன ஏற்படும்.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இம்மாத இறுதிக்குள் விரும்பும் வண்ணம் பணி, சிறந்த இலாபம் அமையும். வழக்கு இலாப ஆதாயத்துடன் முடிவுக்கு வந்து வெற்றி பெறுதல், வளர்ச்சிப்பணிகள் யாவும் நடைபெற ஆரம்பிக்கும். வாக்குப்பொலிவு, தைரியம், பேச்சாற்றல், அரசாங்கத் தொடர்புடைய அல்லது இலாபம் கருதிய சிறப்புப்பரிசு ஆகியன கிடைக்கும். தெளிந்த நற்சிந்தனைகள் சிறந்த படிப்பினைகளைத் தரும். பணியில் நல்ல பெயர், முன்னேற்றம், மகிழ்வுகள், உடல் மர்ம உறுப்புகள் தொல்லை தருதல், வெம்மையினால் பாதிப்பு, நரம்புகள் அயர்வு, அவற்றில் இருந்து விலகுதல், வழக்கினில் நன்மை தரும்படியான மாற்றங்கள் ஆகியன ஏற்படும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இம்மாத இறுதிக்குப் பின்னரே நன்மைகள் ஏற்படும். தொழில், இளைய சகோதிரர் வழி வீண் செலவினங்கள், வெளியூர் பயணங்கள், வழக்கு, பிள்ளைகள், பெற்றோரினால் கருத்துப் பிணக்குகள், மனசங்கடங்கள், செலவினங்கள், உறக்கமின்மை, அலைச்சல்கள், பெண்கள் வகையில் அவமானங்கள், நன்மைகள் ஆகியன ஏற்படும். சிறப்பாய் திருமணம், மேல்நிலை கல்வி, வளர்ச்சிப் பணிகள் ஆகியன கைகூடி வரும்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
செயலற்ற நிலை, குடும்பம், பெற்றோர், மூத்த இளைய சகோதிரம், இவர்களுடன் கருத்துப்பிணக்குகள், தொழிலில் தடைகள், இரத்த அழுத்தக் குறைபாடுகள், தாய், குழந்தைகள் வகையில் இடையூறுகள், தன் சொல்லே தனக்கு எதிரியாய் நிற்றல், குடும்பத்தில் சங்கடங்கள், வெளியூர் பயணங்கள், செலவினங்கள், அலைச்சல்கள், இம்மாத இறுதிக்குப் பின்னர் அமைதியான மாற்றங்கள் ஆகியன நிகழும்.
* * * * *

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.