விளம்பி வருடம் - ஆவணி மாதப் பலன்கள்
முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை
கிரக பாதசாரங்கள்
சூரியன் - 1 -13 மகம், 14 - 27 பூரம், சிம்மம், 28 முதல் உத்ரம் சிம்.
சந்திரன் - சுவாதி - கேட்டை வரை.
செவ்- 11வக்ர நிவர்த்தி. 30 உத்திராடம் 4 - மகரம்.
புதன் - 3 வக்ர நிவர்த்தி. 16 வரை ஆயில்யம் - கடகம். 17 - 24 மகம், 25 - 30 பூரம், சிம்மம்.
குரு - 18 விசாகம்; 2 துலாம்.
சுக்கிரன் - அஸ்தம் 1 - 7, சித்திரை 8 - 15 - கன்னி, 16 - 24 துலாம், 25 - 30 சுவாதி துலாம்.
சனி - மூலம் 3 தனுசு. 21 வக்ரநிவர்த்தி.
ராகு - 1 - 13 பூசம் 3, 14 பூசம் முதல் 2 கடகம்.
கேது - 1 -13 திருவோணம் 1, 14 முதல் உத்திராடம் மகரம்.
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குழந்தைகளால் பீடை, அவமானங்கள், முன்னேற்றத் தடைகள், ஆயுள் கண்டம், இளைய சகோதிரத்தினால் துன்பங்கள், இரத்த அழுத்தம், நரம்பு பாதிப்பு, அசிங்கம், அவமானங்கள், பணியில் நிம்மதியற்ற நிலை, பற்றற்ற நிலை, பயண அலைச்சல்கள் ஆகியன அமையும். மாதத்தின் பிற்பாதியில் உடல் நிலை, பணவரவு நிலை சற்று சுமாராக இருக்கும்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சுப பயணங்கள், செலவினங்கள், தனவரவு, தாயார் நலம், கல்வியில் மேம்பட்ட நிலை, சிறப்பான பணி அமைதல், அதன் வழி இலாபம், கௌரவம், அந்தஸ்து மேம்பட்டு அமைதல், ஆன்மீகப் பயணங்கள், இளைய சகோதிரத்துடன் கருத்து மாறுபாடு, தந்தைக்குத் தொல்லைகள் ஆகியன அமையும்.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பிதுர் - தந்தை வகை சொத்துகள், வில்லங்கம், தந்தை உடல் நலன் யாவும் இம்மாத இறுதியில் விலகி நன்மையாய் முடியும். பெயர;, புகழ், கௌரவம் தொடர;ந்த நிலையில் அவமானங்கள் ஏற்பட்டு அதனால் சாதகர;, தாய் இருவரின் உயிர் (விடம்) கண்டங்கள் யாவும் மயிரிழையில் விலகி நிற்கும். மிகுந்த தைரியம், உற்சாகம், பொலிவுடன் செயல்படுவீர்கள். சிறந்த இலாபம், குழந்தைகள், பயண வழியில் ஆதாயம், மகிழ்வு, முன்னேற்றத்தடை, மனைவியுடன் கருத்து மாறுபாடு நிலவும். செலவினம் ஏற்படும். தொழில் நிலையில் திடீரென முறையான, முறையற்ற வருமானம் ஏற்படும். கவனமுடன் இருப்பது மிகுந்த நன்மையைத் தரும்.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தலை சுற்றல், மயக்கம், நிம்மதியற்ற நிலை, வழக்கினில் திருப்பங்கள், சரியான முறையினில் தீர்ப்பு வருதல், தண்டனையில் இருந்து தப்பித்தல், களத்திரத்தினால் அபராதங்கள், செலவினங்கள், அவமானங்கள், முன்னேற்றத்தில் தடை, தொல்லைகள், இளைய சகோதிரத்துடன் கருத்து மாறுபாடு, விரசல்கள், நரம்பு பாதிப்புகள், சுப நிகழ்வுகள், வண்டி, வாகன வசதிகள், ஆடை, ஆபரணச்சேர்க்கைகள், சிறந்த தனவரவு, பதவியில் மாற்றம் ஆகியன அமையும்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
மிகுந்த செலவினங்கள், அலைச்சல்கள், பயணத்தடைகள், உறக்கமின்மை, நிம்மதியற்ற நிலை, மிகுந்த கோபம், தலைக்கனம், இதனால் உடல் பாதித்தல், முன்னேற்றத்தடைகள், மனவேதனைகள், குழந்தை, மனைவியுடன் கருத்து மாறுபாடு, மகான்களின் ஆசிகள், செவ்விலங்குகளினால், விடத்தினால் கண்டங்கள், இம்மாத இறுதியில் நன்மைகள் ஆகியன அமையும்.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பம், தந்தைக்கு இழப்பு அல்லது கண்டங்கள், நல்ல தனவரவு, வழக்கு, எதிரிகளின் தொல்லைகளினின்று விடுபடுதல், தாயாருக்கு, குழந்தைகட்கு கண்டம், பீடைகள், தொழிலில் முன்னேற்றத் தடைகள், தொல்லைகள், தொழில் தொடர்ந்த சுப செலவினங்கள், சுப பயணங்கள் ஆகியன ஏற்பட்டு இம்மாத இறுதியில் நல்ல மாற்றங்கள் நிலவும்.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இலாபம், சுப விரயம் அமைதல், ஆயுள் கண்டப்பீடை ஏற்பட்டு விலகல், தொழிலில் இடையூறு ஏற்படல், தாயாருக்கு உடல் கண்டம், பீடை ஏற்படல், குடும்பத்தில் பற்றற்ற நிலை, தந்தை உடல் நலன் வகையில் செலவினம், மூத்த சகோதரி, தந்தை வகையில் சிறந்த இலாப ஆதாயம், இளைய சகோதிரர் வகையில், புத்திரர் வகையில் இருந்த இடையூறு இம்மாத இறுதியில் விலகும்.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சிறந்த தைரியம், குடும்பத்தில் இடையூறு, வாகனத்தடைகள், குடும்பம், குழந்தைகள், மனைவி வகையில் சுப பயணங்கள், சுப செலவினங்கள், தொழிலில் முன்னேற்றம், சில பொறுப்புகள் கூடுதல், அதன் வழி சிறந்த இலாபம் அமைதல், தந்தை வகையில் பீடை, கண்டம், துன்பம் ஏற்படல் ஆகியன அமையும்.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பத்தில் குழப்பங்கள், இளைய சகோதிர வகையில் தொல்லைகள், வண்டி, வாகனத்தடைகள், சுகக்குறைபாடு, விட கண்டங்கள், புதிய வகை நரம்பு பாதிப்பு, தந்தையால் ஆதாய அனுகூலம், வழக்கு, எதிரி, மூத்த சகோதிரர் வகையில் இழப்பு, தீமைகள் ஏற்பட்டுப் பின்னர் நன்மைகள் அமையும். சிறந்த ஆதாயம், இலாபம் அமையும்.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வழக்கினில் வில்லங்கம், ஆதாயத்துடன் கூடிய வெற்றி, அதன் வழி கண்டம், பீடைகள் ஏற்பட்டு விலகல், தந்தையார், உயர் பணி வகையில் மனக்கஷ்டங்கள் ஏற்பட்டுச் சிறந்த முறையில் மிகுந்த நன்மையைத் தரும். 15 தேதிக்கு மேல் சிறந்த பொறுப்புடன் கூடிய பணி, ஆலயம், குடும்பம், தொடர்ந்த சுப செலவினங்கள், பணி நிமித்தம் தொடர்ந்த வர வேண்டிய நிலுவைத் தொகை வருதல் ஆகியன அமையும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வாழ்க்கையில் பற்றற்ற நிலை, சுப ஆன்மீகப்பயணங்கள், கடின உழைப்பிற்கான இலாபம், பெற்றோர் வகையில் இடையூறு ஏற்பட்டுப் பின்னர் நன்மை விளையும். மனைவி, வளர்ச்சி முன்னேற்ற நிலையில் மிகுந்த நன்மை, பயணத்டைகள், விட கண்டப்பீடைகள், நரம்பு பாதிப்பு ஏற்படல் ஆகியன ஏற்படும்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
ஆயுள் கண்டப்பீடை, இளைய சகோதிர வகையில் இழப்பு, சிறந்த தைரியம் மேம்படல், புத்திரர், மூத்த சகோதரி, மனைவி, முன்னேற்றம் தொடர்ந்த வகையில் வில்லங்கம், தொல்லைகள், இலாபம், செலவினம் கட்டுக்கடங்கா நிலை ஆகியன அமையும். இம்மாத இறுதியில் மாற்றம் நிலவும்.
* * * * *

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.