விளம்பி வருடம் - சித்திரை மாதப் பலன்கள்
முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை
கிரக பாதசாரங்கள்
தை 30 அவிட்டம் 3, மாசி 4 வரை கும்பம்
சூரியன் - 1 - 13 அசுவினி, 14 - 27, பரணி, 28 - 30 கிருத், மேசம், 31- ரிசபம்.
சந்திரன் - உத்திரட்டாதி - அசு - வரை.
செவ்- 11 வரை பூராடம், 12 - 18 உத்திராடம் தனுசு. 19 முதல் மகரம்.
புதன் - 13 வரை உத்திரட்டாதி, 14 - 25 ரேவதி, மீனம். 26 - அசு - மேசம். வக்ரம்.
குரு - 6 முதல் விசாகம் 2 துலாம். வக்ரம்.
சுக்கிரன் - 1 - 3 வரை பரணி, 4 - 5 கிருத் மேடம், 6 - 14 - கிருத் - ரிடபம், 15 - 25 ரோகிணி ரிடபம், 26 - 30 மிருக, ரிடபம், 31மிருக, மிதுனம்.
சனி - பூராடம் 1 தனுசு.
ராகு - 12 வரை ஆயில்யம் 1 கடகம். 13 - பூசம் 4 கடகம்.
கேது - 12 வரை திருவோணம் 3 மகரம். 13 - திருவோணம் 2.
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குருவின் பார்வையினால் புத்திரர் வழி மேம்பட்ட நிலை, சில இடையூகள், அவமானங்கள், பெயர், புகழ், கௌரவம், இலாபம், தொழிலில் தைரியமான நிலை, முன்னேற்றம், அதே சமயத்தில் மிகுதியான தடைகள், வர வேண்டிய இலாபங்கள் தடையாதல், உறவினர் வகை கரும காரியம், வம்பு, வழக்குத் தொல்லைகள், குடும்பத்தில் பிணக்குகள், வாகனத்தடைகள், மனைவியால் இடர், காது மந்தம், கோளாறுகள், பெற்றோர் வழி பீடை, கடன், இளைய சகோதிரம் வழி வெளியூர் பயணச் செலவினங்கள், சொத்து வகையில் வில்லங்கம், குறைபாடுகள் ஆகியன ஏற்படும்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
முகப்பொலிவு, அழகு, அனைத்திலும் வசீகரம், வளர்ச்சி முன்னேற்றங்கள், சிறந்த தொழில், தாய் வழி சுப வெளியூர் பயணம், செலவினங்கள், சிறந்த இலாபம், குடும்பத்தில், இளைய சகோதிர வகையில் சின்ன இடையூறுகள், தாயாருக்கு மேன்மை, பூர்வ புண்ணியத்தினால் நல்ல தனபலனில் சில தடைகள் ஏற்பட்டுப் பிறகு கிடைக்கும்.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
உயர் கல்வியில் வளர்ச்சி, முன்னேற்றங்களில் சிறிய தடைகள், உடல் பீடைகள், வீட்டில் அனைத்து வசதிகள் அமைதல், தாயார் சுகம், இளைய சகோதிர வழி ஆதாய அனுகூலங்கள், மிகுந்த நன்மை, சில இடையூறுகள், விட கண்டப் பீடைகளினால் செலவினங்கள், புத்திரர் வழி அவமானங்கள், சிறு வாகனத்தடை, ஆயுள் துன்பம், கண்டம், வாக்கில் நிதானம், சுக ஆடம்பரச் செலவினங்கள், தொழிலில் கடினநிலை, இடையூறு தந்து பின்னர் சிறப்பான நிலை அமைத்துத் தரும்.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
புத்திரர், தொழில் வகை வளர்ச்சி முன்னேற்றத்தடைகள், மனைவி, முன்னேற்றம், வழக்கினால் செலவினங்கள், குழந்தைகள் வகையில் மகிழ்வு, உடல் கண்டப்பீடைகள், இளைய சகோதிரம், வெளியூர் பயணம் வழி மிகுந்த நன்மை, சிறிய அலைச்சல்கள், பயணத்தடைகள், தனலாபத்தில் சிறு தடைகள், ஆன்மீகப்பயணம் எனில் மிகுந்த நன்மை ஆகியன வெகு சிறப்பாய் அமையும்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெயர், புகழ், கௌரவம் ஆகியவற்றில் மேன்மை ஏற்படும். அலைச்சல், உறக்கமின்மை, மனம் மாறுபாடு அடைதல், பெற்றோர் வகை மருத்துவச் செலவினங்கள், முன்னேற்றத்தில் தடைகள், கடன், வளர்ச்சி, முன்னேற்றம், புத்திரர் வகையில் சிரமங்கள், கடினத்துடன் கூடிய தொழில் சிலருக்கு அமையும். சிறந்த தனலாபம், தொழில், இளைய சகோதரர் வகையில் சுப கருமம், பிறந்த இடம் சொத்து விற்றல் அல்லது கை விட்டுப்போதல் ஆகியன அமையும்.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெயர், புகழ், கௌரவம், குடும்பம், மனைவி, தொழில், வளர்ச்சி தொடர்ந்த நிலையில் வெளியூர் பயணம், அரசாங்க உத்தியோகம், ஆகியவற்றில் சிறிய தடைகள், புத்திரர், தொழிலில் தடைகள், மனக்குழப்பங்கள், இளைய சகோதிரம், பெற்றோரால் நன்மை, அலைச்சல், வீண் செலவினங்கள், நரம்பு இரத்த அழுத்தப்பாதிப்பு, ஒரு சிலருக்கு ஏற்படும். தாயார், மனைவி, உடல் பீடை, கருத்து மாறுபாடு, வசதி வாகனத்தடைகள், கருமகாரியம் நிகழ்தல் ஆகியன அமையும்.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெற்றோர், கடன், வம்பு, வழக்கு வழி செலவினங்கள், காது மந்தம், இளைய சகோதிரத்துடன் கருத்து மாறுபாடு, தாயாருடன் பிணக்கு, வாகன வசதித்தடை, செயலற்ற நிலைகள், பெண்கள் வழி அவப்பெயர் ஏற்படாது இருத்தல் மிக மிக அவசியம். தோழிலில் மாறுபாடான நிலை ஆகியன அமையும்.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வாக்கில் நிதானம், இளைய சகோதிரத்துடன் கருத்து மாறுபாடு, காது கோளாறுகள், குடும்பத்தில் தொல்லைகள், நரம்பு, மனம், உயர் இரத்த அழுத்தம், சீறுநீரகம், மர்ம உறுப்புகள் பாதிப்பு அடைதல், சிறிது கவனமுடன் இருத்தல் நன்மை. தந்தை, முப்பாட்டன் குழந்தைகள் வழி தொல்லைகள் ஏற்படும். பூர்வ சொத்து வில்லங்கம், சிரமங்கள் ஆகியன அமையும்.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தந்தை வழி சொத்து இலாபங்கள் அமையும். வளர்ச்சி முன்னேற்றத்தடைகள், குடும்பத்தில் வாக்கு வாதம், மனக்குழப்பங்கள், வர வேண்டிய இலாபத்தில் தடைகள், தொழிலில் நன்மை, மனைவியால் ஆதாயம், தந்தையுடன் கருத்துப்பிணக்கு ஏற்படல், மர்ம உறுப்புகள் பாதித்தல், புத்திரர் வகை அவமானங்கள், விட கண்டங்கள், வெளியூர் பயணங்களில் கண்டங்கள், இரும்பு வாகனங்களில் கவனம் தேவை. தற்கொலைக்கான எண்ணங்கள் மிகுந்த கவனமுடன் இருப்பது அவசியம்.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வழக்கு இலாப ஆதாயத்துடன் முடிவுக்கு வந்து வெற்றி பெறுதல், நல்ல இலாபங்கள் அமைதல், ஆன்மீகம் வழி மிகுந்த நன்மை, உயர் அதிகாரிகளின், எதிரிகளின் தொல்லைகளில் இருந்து விடுபடல், மிகுந்த நல்ல வேலை அமைதல், அரசு ஆதாயம் அமைதல், சிறந்த புத்தித்தெளிவு ஆகியன அமையும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெயர், புகழ், கௌரவம், மேம்படல், சிறந்த தைரியம், அவமானம் ஏற்படல், குடும்பம், புத்திரர் தொடர்ந்த நிலையில் கடன், தொல்லைகள் ஏற்படல், இளைய சகோதிரம், தொழில் வழியில் செலவினங்கள், மனப்பிணக்குகள், வர வேண்டிய இலாபத்தில் தடைகள், இலக்கினாதி, விரயாதி வக்கரிப்பினால் செயலற்ற நிலை, மனக்குழப்பங்கள் ஏற்படும். ஆன்மீக வெளியூர் பயணம் நன்மை தரும்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சிறந்த வளர்ச்சி முன்னேற்றங்கள், இலாபத்தில் தடைகள், தேவையான செலவினங்கள், பெயர், இளைய சகோதிரம், தொழில் வளர்ச்சியில் தொல்லைகள், மனக்குழப்பமான நிலை, குழந்தைகள் வகையில் தொல்லைகள், வாழ்க்கையில் பற்றற்ற நிலை, குடும்பத்தில் கருத்து மாறுபாடு, பிணக்குகள், கணக்கு வம்பு வழக்குகளில் தொல்லை ஆகியன ஏற்படும்.
* * * * *

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.