விளம்பி வருடம் - கார்த்திகை மாதப் பலன்கள்
முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை
கிரக பாதசாரங்கள்
சூரியன் - 2 விசாகம் 4, 3 - 15 அனு, 16 முதல் கேட்டை விருச்சிகம்.
சந்திரன் - திருவோணம் முதல் அவிட்டம் வரை.
செவ்- 1 - 21 சதயம், 22 முதல் பூரட்டாதி கும்பம்
புதன் - 1 ல் கேட்டை1 வக்ரம், 6 - 18, அனுடம், 19 முதல் விசாகம் 4, 20 ல் வக்ர நிவர்த்தி, 22 அனுடம், விருச்சிகம்.
குரு - 10 வரை அனுடம் 2, 11 - மார;கழி 11வரை அனுடம் விருச்சி.
சுக்கிரன் - 10 சித்திரை 3, 11 - 17 சித்திரை 4, 18 - மார;கழி 2, சுவாதி - துலாம்.
சனி - 10 வரை மூலம் 4, 11 முதல் மார்கழி 10 வரை பூராடம் 1, தனுசு.
ராகு - மார்கழி 18 வரை பூசம் 1 கடகம்.
கேது - மார்கழி 18 வரை உத்திராடம் 3 மகரம்.
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
களத்திரத்தினால் மகிழ்வு, கௌரவ சுகங்கள், குறைபாடுகள், குடும்பத்தில் பிணக்குகள், மனக்கஷ்டம், புத்திரர்களால் சுபச்செலவினம், மகிழ்வுகள், சுப வெளியூர் பயணங்கள், சிறந்த தனவரவு, வீட்டில் தொல்லைகள் இருந்தாலும் நல்ல மகிழ்வு, வண்டி வாகன வசதிகள், மகிழ்வான நிலை, இலாபங்கள், இளைய சகோதிர வகை, எதிரிகளினால் அசிங்கம், அவமானங்கள், மனைவி, புத்திரர்களுடன் கருத்து மாறுபாடு, கௌரவ பகட்டான ஆடம்பரச் செலவினங்கள், எதிரி, கடன் தொல்லை, கரும காரியம் நிகழ்தல், சாதகருக்கு உடல் பீடை அதிகமாய் தருதல், இரத்த அழுத்த மாறுபாட்டால் நரம்புப் பலகீனமாய் செயலிழத்தல், மருத்துவச் செலவினம், சிலருக்கு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை, கரும காரியம் நிகழ்தல், தந்தை, வேலை வகையில் பிணக்குகள் ஆகியன நிகழும்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தெய்வ அனுகூலம், மகான்கள், பெரியோர்களின் ஆசி, சிறந்த சிறப்புகள், எதிர்பார்த்த சிறந்த இலாபம், வீட்டில் சுப நிகழ்வுகள், பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து மேம்படுதல், வர வேண்டிய பணவரவு குறைந்த அளவில் வருதல், பணியில் கடின நிலை, சிறந்த தைரியம், பணி தொடர்ந்த வெளியூர் பயணம், சுபச்செலவினம், மர்ம உறுப்புகள் தொடர்ந்த வலி ஆகியன ஏற்படும்.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சிறந்த தலைமைப்பதவி, பணி நிலை அமைதல், உயரிய முன்னேற்றம், செயலில் செயலற்ற நிலை, அலைச்சல், கடினப்பணிகள், புத்திரர்களால் மகிழ்வு, சுபச்செலவினம், விட கண்டங்கள், கருநிற, செவ்விலங்குகளினால் ஆபத்து, வாகன வசதிகளினால் சுகங்கள், உடல் தளர்ச்சி, சோர்வு, சாதகர், தாயார் உடல் பாதிப்பு, அவரால் ஆதாய அனுகூலங்கள், இளைய சகோதிரத்துடன் பிணக்குகள், பல் வலி, பல் சொத்தை, வாக்கில் நிதானம் அவசியம்.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சிறிய முன்னேற்றத் தடைகள், பணியில் கடினநிலை, வளர்ச்சிகள் காணப்படும். வண்டி வாகன வசதிகள், வீட்டுத் தேவைப்பொருட்கள் வாங்குதல், சிறந்த தைரியம், புத்திரர், பணியினால் தனவரவு, சுபச்செலவினங்கள், அரசாங்க ஆதாயங்கள், தாயாரால் சுகம், மர்ம உறுப்புகள் பாதித்தல் ஆகியன அமையும்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெரியோர், மகான், ஞானிகளின் ஆசி கிடைத்தல், செவ்விலங்குகளினால் ஆபத்து, வீட்டில் மகிழ்வு, தொழிலில் சிறப்பாய் பொறுப்புகளுடன் கூடிய உயர் பதவி நிரந்தரமாய் அமைதல், தாயாரால் சிறந்த தனவரவு, இளைய சகோதிர வகை ஆதாயங்கள், அனுகூலங்கள், குழந்தைகளினால் சிறு தொல்லைகள், தனவரவில் தடைகள், இம்மாத இறுதியில் சரியாகும். தலை சுற்றல், மயக்கம், சிறந்த கடின உடல் உழைப்பினால் உடல் அசதி, அலைச்சல், உறக்கமின்மை, திடீர் தனவரவு, நற்பெயர், புகழ் ஆகியன ஏற்படும்.ம்.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இளைய சகோதிர வகை இடையூறு, தொல்லை, செலவினம், புத்திரர், இளைய சகோதிர வகை சிரமம், சிறந்த தைரியம், தந்தையாரால் ஆதாயங்கள், கடினமான பணிநிலை, வீட்டில் சுப செலவினங்கள், சிறந்த தனவரவு, உடல் உபாதை, நரம்பு பலகீனம், பெயர், புகழ், கௌரவம் ஆகிய இவற்றில் இடையூறு ஏற்படுதல் ஆகியன அமையும்.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
மூத்த, இளைய சகோதிர வகையில் குடும்பத்தில் பிணக்குகள், தந்தை வகையில் கருத்து மாறுபாடு, வீண் செலவினங்கள், பணியில் பல புதிய மாற்றங்கள், மனைவியுடன் கருத்து மாறுபாடு, மனைவி, மூத்த சகோதரியால் இலாபங்கள், சிறந்த சுகங்கள், வளர்ச்சி நிலைகள், தந்தைக்கு உடல் பீடை ஆகியன அமையும்.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வீட்டில் சுப நிகழ்வுகள், புத்திரர் உற்பத்தி, திருமணம் முதலிய நிகழ்வுகள், பெயர், புகழ் மேம்படுதல், பணியில் தலைமைப்பதவி, சிறப்பான பணிநிலைகள், மூத்த சகோதரத்துடன் கருத்துப்பிணக்குகள், அரசாங்க ஆதாய உடுப்புத் துறைத் தொடர்ந்த சிறப்புப்பணிகள், சிறந்த தனவரவு, வளர்ச்சி நிலைகள், மனைவி வகையில் சுப செலவினங்கள் வழக்கில் வில்லங்கம் ஆகியன அமையும்.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சோம்பல், மந்தமான கடின நிலை, உடல் தளர்ச்சி, பொலிவின்மை, உற்சாகமின்மை, சிறந்த தனவரவு, தைரியம், குடும்பத்தாருடன் சுப வெளியூர் பயணங்கள், அதிகச் செலவினங்கள், கணவன் அல்லது மனைவி, வளர்ச்சி, தொழில் தொடர்ந்த நிலையில் ஆகியவற்றின் தொடர்பாக அதிகச் சுப செலவினங்கள், விட கண்டங்கள், மாறுபட்ட மனம், வாழ்க்கையில் பற்றற்ற நிலை ஆகியன அமையும்.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பொன், வெள்ளி, பட்டு முதலிய ஆடை ஆபரணச் சேர்க்கைகள் அமைதல், ஏழரைச்சனியின் பிடி நன்மை தரும். நிதானித்த நல்ல ஆதாயத்துடன் வழக்கின் முடிவினால் நன்மை அமையும். சிறந்த பாதுகாப்பு கிடைக்கும். வாழ்க்கையில் மனம் பற்றற்ற நிலை இருக்கும். விட கண்டங்கள் விலகிச் செல்லும். முறையான தனவரவுகள் சிறப்பாய் கிடைக்கும். தந்தை, கடன் தொல்லை இருப்பினும் பெரிய பாதிப்பு இல்லை. வயிற்று வலி, நரம்பு பலகீனம் பாதிப்பு ஏற்பட்டு விலகும். சிறந்த பணி நிலை முடிவாய் அமையும். உறவினர் தொடர்ந்த சுப நிகழ்வுகள், மகிழ்வான வெளியூர் பயணங்கள் அமையும். வர வேண்டிய நிலுவைத்தொகை வரும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இளைய சகோதிர வகை, பணி தொடர்ந்த நிலையில் சிறந்த ஆதாய அனுகூலங்கள், வீட்டில் மகிழ்வு, இலாபத்துடன் கூடிய ஆன்மீகப் பயணங்கள், வண்டி வாகன வசதிகள் அமைதல், உடல் அசதி ஏற்படுதல், மூத்த சகோதிர வகை நன்மை, செலவினம் ஏற்படுதல், சிறந்த தனவரவு, பணி, வளர்ச்சி நிலையில் கௌரவமான சிறந்த தலைமைப்பதவி, புத்திரர்களின் உடல் நலிவு, அறிவு தடுமாற்றம், பெற்றோரால் நன்மை, உடல் பாதிப்பு அடைதல் ஆகியன ஏற்படும்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பணி, பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து ஆகியன வெகு சிறப்பாய் அமைதல், எதிரிகள் சரணடைதல், நன்மை, ஆதாயம் ஆகியன அமைதல், நல்ல முன்னேற்றம், தொழிலில் கடினநிலை, செலவு இருப்பினும் நன்மையே. பெண்களால் அவமானங்கள் ஏற்படும். கவனம் தேவை. பொன், வெள்ளி, பட்டு, ஆடை ஆபரணச் சேர்க்கைகள் முதலியன அமைதல், தந்தை வகை சொத்துகள் கிடைத்தல், தொழில் வகை நன்மை, வீடு புதுப்பித்தல், மிகுந்த பூர்வ புண்ணியப்பலன்கள் ஆகியன அமையும்.
* * * * *

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.