விளம்பி வருடம் - மார்கழி மாதப் பலன்கள்
முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை
கிரக பாதசாரங்கள்
சூரியன் - 1 - 13 மூலம், 14 - 26 பூராடம் - தனுசு.
சந்திரன் - உத்திரட்டாதி - ரேவதி வரை.
செவ்- 3 வரை கும்பம், 12 வரை பூரட்டாதி, 13 உத்திரட்டாதி - மீனம்.
புதன் - 7 வரை அனுடம் விருச்சிகம், 7 - 16 கேட்டை விருச்சிகம், 17 - 25 மூலம் - தனுசு, 26 - பூராடம் - தனுசு.
குரு - 11 வரை அனுடம், 12 - கேட்டை விருச்சிகம்.
சுக்கிரன் - 5 வரை சுவாதி துலாம், 6 - 19 விசாகம், 20 - அனுடம் - விருச்சிகம்.
சனி - 10 வரை மூலம் 4, 11 முதல் மார்கழி 10 வரை பூராடம் 1, தனுசு.
ராகு - 18 வரை பூசம் 1, 19 புனர் 4 கடகம்.
கேது - 18 வரை உத்திராடம் 3, 19 உத்திராடம் 2 மகரம்..
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குழந்தைகளால் சுபச் செலவினங்கள், சில அவப்பெயர்கள், இளைய சகோதிரம், உடல், கடன், வம்பு, வழக்கு தொடர்ந்த நிலைகளில் செலவினங்கள், அதிக கருத்து மாறுபாடுகள், நற்பெயர் கெடுதல், அவமானம், சிலருக்கு அறுவை சிகிச்சை, மரண கண்டங்கள், குடும்பத்தில் கரும காரியங்கள் நிகழ்தல், தாயார், முப்பாட்டன் வகை நிகழ்வுகள், கடன் வாங்கி பொருட்கள் சேகரித்தல், குடும்பத்தில் கடும் வாக்குவாதங்கள், இன்னல்கள், களத்திரத்தால் அதிக அவமானங்கள், தொல்லைகள், சிலர் இதனால் வழக்கினைச் சந்தித்தல், ஒருவரை ஒருவர் இழத்தல், பிறகு மாற்றங்கள் நிலவும். ஆலயம் முதலியவற்றிற்கு தரும காரியம், அதன் வழி இலாபம் ஆகியன ஏற்படும்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இரு வகை போட்டி இலாபங்கள், பெயர், புகழ், அந்தஸ்து மேம்படுதல், முன்னேற்ற வளர்ச்சி நிலைகள், களத்திர வழி எதிர்பாராத இலாபங்கள், அதிக நன்மைகள், இலாபங்கள், சிறந்த இலாபம், பெற்றோரினால், புத்திரர்களினால், தொழிலினால் தன லாபம், சில இடையூறுகள், சுபச்செலவினங்கள், அது குறித்த வெளியூர் பயணங்கள் ஆகியன ஏற்படும்.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சிறப்பான அரசு உத்தியோகம் அமைதல், கூடுதல் பொறுப்பு பதவி நிலை, பெயர், புகழ், அந்தஸ்து மேம்படுதல், முன்னேற்ற வளர்ச்சி நிலைகள், தொழிலினால் இலாபங்கள், தந்தை, இளைய சகோதிரம் வழி இடையூறுகள், சில வளர்ச்சித்தடைகள், இழுபறிகள், விட கண்டங்கள், பல் வலி முதலியன அமைதல், இளைய சகோதிரம், தாயார் சுகக் குறைவு, சிலருக்கு அறுவை சிகிச்சை, தொல்லைகள் அமையும். சில பொறுப்பான தலைமைப் பதவிகளினால் சிக்கல்கள், சுமை ஏற்படுதல், இரண்டாம் தர வாகனங்கள் அமைதல், வீட்டு உபயோகப் பொருட்கள் அமைதல், எதிர் பார்த்த கடன் உதவி பெறுதல், வங்கிக்கடன் உதவி பெறுதல் ஆகியன அமையும்.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெற்றோரினால் ஆதாய அனுகூலங்கள், நன்மைகள், குடும்பம், களத்திரம், இளைய சகோதிரம் ஆகியோர்களினால் செலவினங்கள், இடையூறுகள், கருத்து மாறுபாடுகள், பயணத்தடைகள், சிறந்த பூர்வ புண்ணியப் பலன்கள், அதிக நன்மைகள், குழந்தைகள், தொழிலினால் மிகுந்த நன்மை, மூத்த சகோதிரத்தினால் நன்மை, அவற்றினால் சுப செலவினங்கள், வீடு வாங்குதல் யோகம் சிறப்பாய் இம்மாதத்தில் அமையும்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பத்தில் கடும் வாக்குவாதங்கள், பெற்றோரினால் ஆதாய பங்குபாகங்கள், இலாபங்கள், இளைய சகோதிரம், தொழிலினால் சில தொல்லைகள், பெயர் புகழ், கௌரவம் முன்னேற்றம் தொடர்ந்த நிலையில் சில தொல்லைகள், அவப்பெயர்கள், இலாபங்கள் தடைப்படுதல், மகான்களின் ஆசி பெறுதல், செவ்விலங்குகளினால், விட பூச்சிகளினால் ஆபத்து, அலைச்சல், உறக்கமின்மை, வீண் பயண அலைச்சல்கள், மன நிம்மதி அற்ற தன்மை, சுகமற்ற நிலை, உடல் தளர்ச்சி, இரத்த அழுத்த மாறுபாடு நிலை, நரம்பு மண்டலம் பாதிப்பு, கரும காரியம் நிகழ்தல், வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. வசதி சொகுசு வாகனங்களில் செல்லும் நிலை, எதிர்பாராத கடன், பெற்றோரினால் அவமானங்கள் ஆகியன ஏற்படும்.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சிறந்த இலாபங்கள், குடும்பத்தாருடன் சுபவெளியூர் பயணங்கள், அதிக அலைச்சல்கள், சுகக்குறைபாடுகள், தொழில் தொடர்ந்த பயணங்கள், அலைச்சல்கள், மூத்த சகோதிரத்தினால் நன்மை, இளைய சகோதிரம், வகையில் நற்பெயர், அவமானங்கள், துன்பங்கள், குடும்பத்தாருடனான உறவு நிலையில் விரிசல், கருத்து மாறுபாடுகள், சிறந்த ஆடை ஆபரணங்கள் ஆகியன அமையும்..
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இளைய சகோதிர வகையில் தொல்லை, மூத்த சகோதிரம், இலாபம், புத்திரர் வகைத் தடைகள், அதன் வழி நன்மைகள், குடும்பத்தாருடன் வெளியூர் பயணங்கள், அலைச்சல்கள், சிறந்த தனவரவு, தொழில் மாறுபாடான நிலை, சிறந்த தெரியம், குடும்பத்தில் சுபம், மகிழ்ச்சி ஆகியன ஏற்படும்.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சுப வெளியூர் பயணங்கள், வெளியூர் பயணங்களில் தடைகள், சிறந்த ஆதாய இலாபங்கள், மூத்த சகோதிரத்தினால் நன்மை, குடும்பத்தார், குழந்தைகளினால் மிகுந்த நற்பெயர் பெறுதல், சிறிய வாக்கு வாதங்கள், இளைய, மூத்த சகோதிரத்துடன், தொழில் தொடர்ந்த நிலையில் கருத்துப்பிணக்குகள், வாகனத்தடைகள் அமைதல், பற்களில் வலி முதலியன அமைதல் ஆகியன அமையும்.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தொழிலில் சில மாற்றங்கள், அதனால் அதிக இலாபங்கள், இளைய சகோதிரம், பெற்றோர், தொழில் தொடர்ந்த நிலையில் கருத்து மாறுபாடு, வளர்ச்சி முன்னேற்ற நிலைகளில் தடைகள், குடும்பம், புத்திரர், தொழில் வகையில் சுப செலவினங்கள், வெளியூர் பயணங்கள், சோம்பல், தளர்ச்சியான நிலைகள் காணப்பெறுதல், விட கண்டங்கள், எதிலும் பற்றற்ற தன்மை ஆகியன அமையும்.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பத்தாருடன் சுப வெளியூர் பயணங்கள், அழகிய ஆடை ஆபரணச்சேர்கைகள், பொன், பட்டு, வெள்ளி, இரத்தினங்கள், மற்றும் பொருள் முதலியன சேருதல், இருப்பினும் எதிலும் பற்றற்ற தன்மை, சரியான உறக்கமற்ற நிலை, உடல் அயர்ச்சி, நரம்புத்தளர்ச்சி, தந்தை வழி சுபச்செலவினங்கள், பணியில் எதிர்பாராத மாற்றம், வளர்ச்சி ஆகியன காணப்பெறும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இளைய சகோதிரத்தினால் நன்மை, தொழிலினால் சிறந்த ஆதாய அனுகூலங்கள், சில இலாபத்தடைகள், விட கண்டங்கள், வாழ்க்கையில் மனம் பற்றற்ற நிலை, களத்திரத்தினால், குழந்தைகளினால் தொல்லைகள், அவமானங்கள், கடும் வாக்குவாதங்கள், தொழிலில் வர வேண்டிய சிறப்பு ஆதாய அரசாங்க நன்மைகள், பூர்வ புண்ணிய இலாபங்கள் வெகு சிறப்பாய் அமையும்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெற்றோரினால் நன்மை, அழகிய ஆடை ஆபரணச்சேர்கைகள், பொன், பட்டு, வெள்ளி, இரத்தினங்கள், மற்றும் பொருள் முதலியன சேருதல், இளைய சகோதிரத்துடன் கருத்துப்பிணக்கு ஏற்பட்டு பின்னர் நன்மையாய் முடியும். குடும்பம், களத்திரத்தால், தொழிலினால், பெயர், புகழ், கௌரவத்தினால் உயரிய நிலை ஏற்படும். சில இடையூறுகள் தொழிலில் காணப்பெறும். கூட்டுத் தொழில் வெற்றி பெறும்.
* * * * *

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.