மாசி மாதப் பலன்கள்
முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை
கிரக பாதசாரங்கள்
தை 30 அவிட்டம் 3, மாசி 4 வரை கும்பம்
சூரியன் - 4 - 7 அவிட்டம் 4, 7 - 20 சதயம், 20 - 27 பூரட்டாதி 3 கும்பம், 27 - பங்குனி 4 வரை பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1 மீனம்.
சந்திரன் - உத்திராடம் - திருவோணம் வரை.
செவ்- 1-22 கேட்டை, விருச்சிகம். 23 முதல் மூலம் தனுசு.
புதன் - 1 - 6 அவிட்டம் கும்பம், 6 -13 சதயம், 13 - 20 பூரட்டாதி, 20 -29 உத்திரட்டாதி, 29 ரேவதி. 19 முதல் மீனம்.
குரு - விசாகம் 3 துலாம். மாசி 25 ல் வக்ரம்.
சுக்கிரன் - 2 -10 வரை சதயம், 10 - 18 வரை பூரட்டாதி கும்பம், 18 பூரட்டாதி, உத்திரட்டாதி - மீனம்.
சனி - மூலம் 4, 18வரை, பிறகு பூராடம் 1 தனுசு.
ராகு - ஆயில்யம் -2 மாசி 9 வரை, 10 முதல் ஆயில்யம் 1 கடகம்.
கேது - திருவோணம் 4 மாசி 9 வரை, 10 முதல் திருவோணம் 3 மகரம்.
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இலாபத்தில் ஓரளவு முன்னேற்றங்கள், சில இடையூறுகள், தொழிலில் அதிகக் கடினம், இளைய சகோதர வழி, புத்திரர் வகைத் தொல்லைகள், நரம்புகள் தொல்லை, இரத்த அழுத்தம் மாறுபாடு, குடும்பத்தில் ஒற்றுமையின்மை, அதிகக் கருத்து வேறுபாடு, வாக்குவாதம், வாகன இடையூறுகள், குடும்பம், மனைவி, பெண்கள் வகை அதிகச் செலவினங்கள், கடன், வம்பு வழக்குகளில் அதிகச் செலவினங்கள் ஆகியன ஏற்படும்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சிரமப்பட்டதற்கான நல்ல தனபலன், அதிக முன்னேற்றம், வளர்ச்சி நிலைகள் அவை தொடர்ந்த செலவினங்கள், சுப வாகன வசதிகள் அமைதல், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குதல், தொழில் தொடர்ந்த சிரமத்துடன் கூடிய நற்பெயர், வர வேண்டிய வருமானங்கள் வரும். மனைவியால் மகிழ்ச்சி, அரசாங்கத்தினரால் கௌரவிக்கப்படல், சிறந்த வெகுமதி ஆகியன சிறப்பாய் அமையும்.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெயர், புகழ், அந்தஸ்து, கௌரவம், உயர் கல்வியில் வளர்ச்சி, முன்னேற்றம், ஆகியவற்றில் சிறு தடைகள், எண்ணத்தில் புதிய இலாபம் தருகின்ற அறிவார்ந்த இடையூறுகள் தொடர்ந்த சிந்தனைகள், தைரியம், அதிகாரம், வண்டி வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குதல், தந்தை வழிப் பூர்வ சொத்து, வீடு, முதலியன வில்லங்கத்துடன் அமைதல், புத்திரர், சாதகர், இளைய சகோதர வகையில் வழிச் சுபச் செலவினங்கள், மூத்த சகோதரர் வகையில் இலாபங்கள், நன்மைகள், எதிர்பார்த்த பண உதவி கிடைத்தல், உடலில் சில சுகவீனங்கள், மண்மனை ஆதாயங்கள், உத்தியோக மேன்மையினால் இலாபம், மடாதிபதிகளின் வாழ்த்துகள், குடும்பத்தில் சண்டை, முகம், பற்களில் குறைபாடு ஆகியன ஏற்படல், சிறந்த ஆன்மீகம் ஆலய வழிபாடு, வெளியூர் பயணங்கள் சிறப்பாய் அமையும்.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம், குடும்பத்தில் வாக்குவாதங்கள், சகோதரம் வழி சுப, அசுபச் செலவினங்கள், சில இடையூறுகள், நல்ல வருமானம், மேன்மையான நிலை, ஆன்மீக ஆலயப் பயணங்கள் இவை தொடர்ந்த குடும்பத்துடன் வெளியூர் பயணங்கள் செல்லுதல், தொழிலில் மிகச் சிறந்த நிலை, இலாபம் அமைதல், பூர்வ புண்ணிய பலன்கள் அற்புதமாய் அமைதல், புத்திரர் வகையில் இலாபம், நன்மைகள், செலவினங்கள், தொழிலில் மேன்மை, சிலருக்குச் சிறப்பாய் அமைதல். அரசாங்கம் தொடர்ந்த வேலையில் செலவினங்கள் அமைதல், இம்மாதம் 15 தேதிக்கு மேல் மிகுந்த நன்மை விளையும். சிறந்த வாகனங்கள் அமையும்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
திருமணம், சிலருக்கு இளைய தாரம் அமைதல், காதல் திருமணம் அமைதல், வீட்டில் சுப நிகழ்வுகள், வளர்ச்சி முன்னேற்றத்தில் சிறந்த மாறுபாடுகள், அரசாங்கம் தொடர்புடைய வகையில், அதிகாரம் தொடர்ந்த, சிரமம் கூடிய நிரந்தர வேலை அமைதல், தொழிலில் மேன்மை, உயரிய பதவி கூடுதல், சிறந்த இலாபம், சிறந்த தைரியம், எதிரிகளிடமிருந்து நல்ல வெற்றி நிலை, ஆதாயம், உறக்கமின்மை, பயணத்தினால் அலைச்சல், தாய், இளைய சகோதரம், மூத்த சகோதரம் வகையில் சாதகருக்கு நன்மை அமைதல், மடாதிபதி, சித்தர் போன்ற மகான்களின் ஆசி கிடைத்தல், அதன் வழி பெருத்த இலாபம் அமைதல், கடினப்பட்டதற்கான இலாபம், குடும்பத்தில் மனத்தாபம், செவ்விலங்குகளினால் ஆபத்து ஆகியன ஏற்படும்.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
கடன்கள், வம்பு, வழக்குகள் தொடர்தல், நரம்பு தொடர்ந்த தொல்லைகள், கருமகாரியம் நிகழ்தல், தடைகளுடன் கூடிய அரசாங்க உத்தியோகம் சிறப்பாய் அமைதல், சற்று சிரமங்கள் இருப்பினும் மிகுந்த நன்மை ஏற்படும். நரம்பு தொடர்ந்த தொல்லைகள், கருமகாரியம் நிகழ்தல், வீட்டில் பிரச்சினைகள், அலைச்சலுடன் கூடிய வெளியூர்ப் பயணங்கள், வாகனத்தடை செல்லும் போது ஏற்படும். கவனம் தேவை. இளைய சகோதர வழியில் செலவினங்கள், இம்மாதம் மூன்றாவது வாரத்திற்கு மேல் மிகவும் விசேடப்பலன்கள் வெகுசிறப்பாய் நடைபெறும். தொழில், பெயர், புகழ், தந்தையினால் ஆதாயம், மனைவியினால் நன்மை, வெளியூர் சுபப் பயணங்கள் ஆகியன அமையும்.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குழந்தைப்பேறு, புத்திரர் வகையில் மகிழ்வு, மனைவி, புத்திரர், மூத்த சகோதரம் வகையில் செலவினங்கள், வீட்டில் சுப நிகழ்வு, திருமணம், குழந்தைகளால் மேன்மை, வளர்ச்சி முன்னேற்றங்கள், விருதுகள், சன்மானங்கள், மனைவி வகையில் ஆதாயங்கள், தந்தை, தாய் வழி ஆதாய அனுகூலங்கள், இலாபம், சுபச் செலவினங்கள், தந்தை வழி உறவில் கரும காரியம் நிகழ்தல், உயர்கல்வி விரும்பியபடி சிறப்பாய் அமைதல், பூர்வ புண்ணிய வகையில் சிறந்த பலன்கள், குடும்பம், வளர்ச்சியின் வழி பெருத்த இலாபங்கள், இளைய சகோதரத்துடன் கருத்து மாறுபாடு, பெயர், புகழ், கௌரவம் அமைதல் ஆகியன அமையும்.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
மிகுந்த கோபம், வாகன வசதி, புதிய வண்டி, இரண்டாம் தர வண்டி வாங்குதல், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குதல், குடும்பத்தில் சிரமங்கள், தந்தை, இளைய சகோதரர் வகையில் இடையூறுகள், மண், மனை ஆதாயங்கள், அரசாங்கத் தொடர்புடைய தொழில் சிறப்பாய் அமைதல், பதவியில் கூடுதல் பொறுப்பு, முன்னேற்றம், தொழில், மனைவி, வகையில் சுப செலவினங்கள், வெளியூர்ப் பயணங்கள், புத்திரர் வகையில் மகிழ்வு ஆகியன யாவும் அமையும்.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
எண்ணங்களில் சிறு தடைகள், சோம்பல் தனம், வீட்டில் சுப நிகழ்வு, மகிழ்வு, திருமணம், விசேடங்கள், வளர்ச்சி முன்னேற்றங்கள், சன்மானம், அரசாங்கச் சன்மானங்கள், விருது, கௌரவிக்கப்படல், அதன் வழி வருமானங்கள், சிறந்த தைரியம், வாழ்க்கையில் பற்றற்ற நிலை, உடல் நலமின்மை, தொழிலில் வளர்ச்சி, முன்னேற்றம், உயர் கல்வி நிலை - கல்லூரிப் படிப்பு எதிர்பார்த்தபடி சற்று சிரமத்துடன் அமைதல், சிறந்த இலாபம், அலைச்சலுடன் கூடிய வெளியூர்ப் பயணங்கள் ஆகியவற்றிற்கான பலன்கள் அமையும்.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சிறந்த புத்தித்தெளிவு, அரசாங்கத்தினால் கௌரவித்து வரக் கூடிய எதிர்பாராத தொழில் நிலை, புத்திரர் வழி வருமானம், இலாபங்கள், கடன், நோய், வழக்கு, எதிரி ஆகிய தொல்லைகளினின்று விடுபடுவர். வீடு, வண்டி வாகன வசதிகள், கால்நடைகள் சிறப்பாய் அமைதல், சிறப்பான செல்வவளம், வாக்கு வன்மை அமைதல், வீட்டு உபயோகப் பொருட்கள் சிறப்பாய் அமைதல், சிறந்த தைரியம் அமைதல், நீர்நிலை, விடப்பொருட்களில் கவனம் தேவை. புத்தகப் பயிற்சி மிகுந்த நன்மையைத் தரும். ஏழரைச் சனியினால் மிகுந்த நன்மையே விளையும். பதவியில் திடீர் மாற்றங்கள் அமையும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
ஆன்மீகப் பயணங்கள், வாழ்க்கையில் பற்றற்ற நிலை, சுப, அசுப செலவினங்கள், குழந்தைகள் வகையில் இடையூறுகள், சிறந்த தைரியம் அமைதல், பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து மேம்படுதல், தந்தை, தாய், மனைவி, குழந்தை வளர்ச்சி வழி மிகுந்த நன்மை அமைதல், கருவிலங்குகளினால் ஆபத்து, விடங்களினால் ஆபத்து, தைரியம், தன்னம்பிக்கை, சிறந்த ஆடை ஆபரணச் சேர்க்கைகள், பொன், பவழம், பட்டாடை, இவற்றினால் இலாபம், பூர்வ புண்ணிய நற்பலன்கள் அதிகமாய் ஏற்பட்டு இராஜயோகப் பலனைச் செய்வர்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
கடன், வம்பு, வழக்குகளினால், இளைய சகோதரம், குடும்பம், மனைவி, வீட்டு வசதி வகையில் செலவினங்கள் ஏற்படும். புத்திரர் வகையில் சிரமங்கள், நற்பெயர், தொழிலில் இடையூறு, வாகனத்தடை, இலாபத் தடைகள், இம்மாதம் 20 தேதிக்குப் பிறகு மிகுந்த நன்மைகள் ஏற்படும். தொழில், வளர்ச்சி, மனைவி, முன்னேற்றங்கள், பெயர், புகழ், முதலியன அமையும்.
* * * * *

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.