பங்குனி மாதப் பலன்கள்
முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை
கிரக பாதசாரங்கள்
தை 30 அவிட்டம் 3, மாசி 4 வரை கும்பம்
சூரியன் - 4 - 16 உத்திரட்டாதி , 17 - ரேவதி மீனம்,
சந்திரன் - அவிட்டம் - பூரட்டாதி; வரை.
செவ்- விருச்சிகம். 15வரை மூலம். 16 - பூராடம் தனுசு.
புதன் - ரேவதி 8 முதல் வக்ரம். 20 - உத்திரட்டாதி மீனம்.
குரு - விசாகம் 3 துலாம். மாசி 25 ல் வக்ரம்.
சுக்கிரன் - 1 - 11 வரை ரேவதி, மீனம். 12 - 22 அசுவிணி, 23 - பரணி - மேசம்.
சனி - பூராடம் 1 தனுசு.
ராகு - ஆயில்யம் 1 கடகம்.
கேது - திருவோணம் 3 மகரம்.
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வாழ்க்கையில் பற்றற்ற நிலை வெறுப்பான நிலை, தைரியம், மன உளைச்சல், இலாபத்தில் ஓரளவு குறைந்த முன்னேற்றங்கள், குடும்பம், மனைவி, பெண்கள், குழந்தைகள், வளர்ச்சி, இளைய சகோதிரம், வகை கடன், வம்பு வழக்குகளில் அதிக சுப அசுப செலவினங்கள், தொல்லைகள், கர்ம காரியம் நிகழ்தல், குறைபாடுகள், இருதயம், நரம்பு குறைபாடு, இரத்த அழுத்தம் மாறுபாடான நிலை, ஆடை ஆபரணச் சேர்க்கை குறைபாடு, காது மந்தம், பூச்சிகள் காதினுள் செல்தல், அதிகக் கருத்து வேறுபாடு, வாக்குவாதம், வாகன இடையூறுகள் ஆகியன ஏற்படும்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பூர்வ புண்ணியத்தினால் நல்ல தனபலன், இலாபங்கள், அதிக முன்னேற்றம், வளர்ச்சி நிலைகள் சில சங்கடங்கள், நன்மை, தகப்பன், இளைய சகோதிரம் ஆகிய இவற்றிற்குத் துன்பம், நன்மை இரண்டும் கலந்த பலன், நல்ல தொழில், பதவி அமைதல், முன்னேற்றம் ஏற்படல், சிறந்த தைரியம் மேம்படல், ஐந்தாமிடம் வலிமை பெறுவதால் சாதகர் பெயர், புகழ், வருமானம், குடும்பம், குழந்தைகள், வாகன வசதி ஆகியன சிறப்பாய் அமையும்.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெயர், புகழ், அந்தஸ்து, கௌரவம், உயர் கல்வியில் வளர்ச்சி, ஆகியவற்றில் கடினத்துடன் கூடிய முன்னேற்றம், சிறு தடைகள், இடையூறுகள், அவமானங்கள், ஆயுள் துன்பம், கண்டம், வாக்கில் நிதானம், குழந்தைப்பேறு, புத்திரர் வகையில் மகிழ்வு, மனைவி, புத்திரர், இளைய சகோதிரம் வகையில் சுப செலவினங்கள், வீட்டில் சுப நிகழ்வுகள், திருமணம், குழந்தைகளால் மேன்மை, வளர்ச்சி முன்னேற்றங்கள், உயரிய விருதுகள், சன்மானங்கள், தொழிலில் தலைமைப்பொறுப்பு, கூடுதல் பணி, சிறந்த அமைப்பு ஆகியனவற்றை இடையூறு தந்து பின்னர் அமைத்துத் தரும். மிக வெகு சிறப்பாய் அமையும்.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வெளியூர் பயணம், முன்னேற்றத் தடைகள், குடும்பத்துடன் வெளியூர் பயணங்கள் செல்லுதல், தொழிலில் மிகச் சிறந்த நிலை, இலாபம் அமைதல், பூர்வ புண்ணிய பலன்கள் அற்புதமாய் அமைதல், புத்திரர் வகையில் இலாபம், நன்மைகள், செலவினங்கள், தாய், வண்டி வாகனம், இலாபம் கருதிய உயரிய நிலை, குடும்பத்தானம், கல்வி மேம்படல், இளைய சகோதிரம், ஆயுள் பலம் பெறல், மனைவி, சாதகர் வளர்ச்சி, குழந்தைகள், தொழில் முன்னேற்றத்தால் செலவினங்கள் ஆகியன ஏற்படும்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
மனைவி, இளைய மனைவி, மூத்த சகோதிரம், பெற்றோர், வண்டி, வாகனங்கள் ஆகியவற்றினால் நன்மை, வெம்மை தொடர்ந்த நரம்பு அழுத்தப் பாதிப்பு, குழந்தைகளினால் சில இடையூறுகள், இளைய சகோதிரம், தொழில், சாதகர், குடும்பம், இலாபம் தொடர்ந்த நிலையில் அவமானங்கள், தைரியமற்ற நிலை, முகம் பொலிவிழத்தல், பெற்றோர், மனைவி, கடன், வம்பு வழக்கின் வழி இலாபம், உறக்கமற்ற நிலை, அலைச்சலுடன் கூடிய பயணங்கள், தொழில் முன்னேற்ற வளர்ச்சியில் தடைகள், பிறந்த இடத்தில் மனக்குறைபாடுகள், செவ்விலங்குகளினால் ஆபத்து, தலைசுற்றல், இரத்த அழுத்தம், மர;ம உறுப்பு பாதித்தல், நரம்பு பலவீனம் அடைதல் ஆகியன ஏற்படும்.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெயர், புகழ், கௌரவம், குடும்பம், மனைவி, இளைய சகோதிரம், தொழில், வளர்ச்சி தொடர்ந்த நிலையில் வெளியூர் பயணம், அரசாங்க உத்தியோகம் சிறப்பாய் அமைதல், சற்று சிரமங்கள் இருப்பினும் மிகுந்த நன்மை ஏற்படும். நரம்பு தொடர்ந்த தொல்லைகள், கரும காரியம் நிகழ்தல், மூத்த சகோதரர் வழியில் இலாபம், தொல்லை, குழந்தைகள் வகையில் இடர்கள், உடல் குறைபாடுகள், வாகனத்தடைகள், ஆயுள் கண்டங்கள் ஆகியன அமையும்.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சாதகர், பெயர், மூத்த சகோதிரம், தந்தை வழி, ஆகியன தொடர்ந்த நிலையில் வெளியூர் பயணங்கள், செலவினங்கள், கடன்கள், சிக்கல்கள் ஏற்படல், தாய், குழந்தைகள். சிரமங்கள், பின்னர் மேன்மையான நிலை, காது கோளாறுகள், ஆடை ஆபரணத்தில் தடைகள், இளைய சகோதிரம் வகையில் இடர்ப்பாடுகள், தாய்க்குக் கண்டம், குடும்பத்தில் சுகம் இல்லாத நிலை, தொழிலில் கடின நிலை ஆகியன ஏற்படும்.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இளைய சகோதிரம், தந்தை, குடும்பம், சாதகர், எதிரி வகை தொல்லை, வீட்டில் மகிழ்வின்மை, தொல்லைகள் ஏற்படல், குழந்தைகள், வளர்ச்சி, முன்னேற்றம். ஆயுள் கண்டம், உடல், ஆகியவற்றினால் இலாபம், செலவினங்கள், வாகன வசதிகள், வீட்டு உபகரணப்பொருட்கள் ஆகியன ஏற்படும்.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பம், குழந்தைகளினால் வளர்ச்சி முன்னேற்றத் தடைகள், செலவினங்கள், விட கண்டங்கள், உயிர் ஆபத்து, காதாபரணம், இளைய சகோதிரம் வழி நன்மை, தொழிலில் சிறிய முன்னேற்றம், வளர்ச்சி, தற்காலிகமாகப் பொறுப்பு நிலை, பதவி அமைதல், வரவேண்டிய இலாபங்கள் நிலுவையில் பெறுதல், வாகன வசதி அமைப்பினில் பயணங்கள் சிறப்பாய் அமைதல், வெளியூர் சுப கருமங்கள், காரியங்கள் நிகழ்தல் ஆகியன ஏற்படும்.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெயர், புகழ், கௌரவம், குழந்தைகள், வெளியூர், தாய், மூத்த சகோதிரம், வாகனம் தொடர்ந்த நிலையில் பயணம், சிறந்த புத்தித்தெளிவு, அரசாங்கத்தினால் கௌரவித்து வரக் கூடிய எதிர்பாராத திடுக்கிடும் இலாபத்துடன் கூடிய தனவரவு, மரியாதை ஏற்படும். அழகிய சிறந்த பட்டாடை, ஆபரணம், பொன்னாடை, ஆகியன அமையும். தந்தை வழி, குழந்தைகள் வழி பெருத்த நன்மைகள், பதவியில் திடீர் மாற்றங்கள் மிகச் சிறப்பாய் எதிர்பாராதபடி இடையூறு ஏற்பட்டுப் பின்னர் மிகுந்த நன்மையுடன் அமையும். கடன், நோய், வழக்கு, எதிரி ஆகிய தொல்லைகளினின்று விடுபடுவர். சிறு உடல் நலிவுகள், தலை சுற்றல். மயக்கம் சிறந்த தைரியம் அமைதல், நீர் நிலை, விடப்பொருட்களில் கவனம், குடும்பம், தாய், இலாபம் ஆகியவற்றில் சிறிய செலவினங்கள், வயிறு வலி ஆகியன ஏற்படும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
ஆன்மீகப் பயணங்கள், வாழ்க்கையில் பற்றற்ற நிலை, சுப, அசுப தொழில் தொடர்ந்த செலவினங்கள், குழந்தைகள், மனைவி, வளர்ச்சி, இளைய சகோதிரம், தொழில் தொடர்ந்த குடும்பச் செலவினம், துன்பம், கெட்டப்பெயர்கள், இலாபத்தினால் மகிழ்வு, பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து மேம்படுதல், கருவிலங்குகளினால் ஆபத்து, விடங்களினால் ஆபத்து, ஆக இரண்டும் கலந்த பலன்கள் ஏற்படும்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இரண்டாம் தர வாகன வசதிகள் அமைதல், தாய், எதிரி ஆகியவர்களினால் தொல்லைகள், கண்டங்கள், கடினமான நிலை, குழந்தைகளினால் சில இடையூறுகள், மூத்த சகோதிரம், இளைய மனைவி, இலாபம் ஆகியவற்றில் நன்மையின்மை, தந்தை, குடும்பம், இலாபம், தொழில் தொடர்ந்த நிலையில் செலவினங்கள், கடினநிலை, தன் வாக்கினால் அவப்பெயர், தொழில் தொடர்ந்த நிலையில் சுப பயணம் அமைதல் ஆகியன ஏற்படும்.
* * * * *

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.