விளம்பி வருடம் - புரட்டாசி மாதப் பலன்கள்
முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை
கிரக பாதசாரங்கள்
சூரியன் - 1 -10 உத், 11 - 23 அஸ்தம், 24 சித் - கன்னி.
சந்திரன் - மூலம் - உத்திராடம் வரை.
செவ்- 10 முதல் திருவோணம் - மகரம்.
புதன் - உத் 1-7, 8 -15 வரை அஸ்தம், 16 சித், கன்னி, 20துலாம்.
குரு - 6 விசாக 2, 7 -24 விசாகம்; 3 துலாம். 25 விசாக 4 - விருச்சி.
சுக்கிரன் - 5 - 17 சுவாதி 3 - துலாம். 18 சுவாதி 4, 19 ல் வக்ரம். 21 சுவாதி 3.
சனி - மூலம் 3 தனுசு.
ராகு - பூசம் 2 கடகம்.
கேது - உத்திராடம் 4 மகரம்.
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சுபர்களின் பார்வையினால் வீட்டில் மனைவி, குடும்பம், வளர்ச்சி நிலை, தந்தை வழி தொடர்ந்த சுபகாரியங்கள், செலவினங்கள், குடும்பத்தில் சில சண்டை, இடையூறுகள், உயிர்கண்டங்கள், விடகண்டங்கள் முதலியன ஏற்படல், கரும காரியம் நிகழ்தல், இளைய சகோதிர வழி தொல்லைகள், புத்திரர் வகை நன்மை, சிரமம், செலவினம் ஆகியன நிகழும்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தாயார் வகை ஆதார அனுகூலம், தன் அறிவு வழியில் மிகுந்த நன்மை, தந்தையுடன் சில வாதங்கள், வளர்ச்சி நிலை முன்னேற்றங்கள், தொட்டது அனைத்தும் வெற்றி, சிலருக்கு உயர்ந்த பணி, பதவி அமைதல், தொழில் முன்னேற்றம் சிறந்த தனவரவு, சுப புனித வெளியூர் பயணங்கள் ஆகியன ஏற்படும்.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பத்தில் இடையூறுகள், விடகண்டங்கள், கடன், நோய், வம்பு வழக்குகள் தொல்லைகள், சுப பூர்வ புண்ணியப்பலன்கள், மனைவி, புத்திரர், வளர்ச்சி நிலையில் நன்மைகள், இலாபங்கள், சிறிது செலவினங்கள், சுப நிகழ்வுகள், வீட்டில் சுப பொருட்கள் வாங்குதல், தாயாருக்கு உடல் பாதிப்பு ஆகியன சிறப்பாய் அமையும்.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தொழிலில் சில இடையூறுகள், விட கண்டங்கள், முன்னேற்றத் தடைகள், மனைவி, உடல் பாதிப்பு, வழக்கு இவற்றின் வழி எதிர்பாராத செலவினங்கள் தாயாரால் மிகுந்த நன்மை, வீட்டில் வண்டி வாகன சுப பொருட்கள், வீடு வாங்குதல், சிலருக்கு பணியில் வெகு சிறப்பான முன்னேற்றங்கள், பதவி உயர்வு ஆகியன வெகு சிறப்பாய் அமையும்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெற்றோர் வகை கடன், செலவினங்கள், வம்பு, வழக்குகள், உறக்கமின்மை, அலைச்சல், நிம்மதியின்மை, வர வேண்டிய முறையான தனம், இலாபம், தவணை முறையில் வருதல், திடீரென எதிர்பாராத கண்டங்களைச் சந்திதித்தல், குழந்தைகளால் தொல்லைகள், பணியில் சிக்கலான நிலை ஆகியன அமையும்.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
மனைவி, வளர்ச்சி, தொழில் வகை செலவினங்கள், எதிர்பாராத செலவினங்கள், அவற்றில் எதிரிகளினால் ஏற்படும் இடையூறுகள், அனைத்திலும் வெற்றி அமைதல், சிறந்த தைரியம், பேச்சாற்றல், தேகப்பொலிவு, வீட்டில் மிகுந்த மகிழ்ச்சி, பெற்றோரால் மிகுந்த நன்மை, சிறந்த தன லாபங்கள், புத்திரர் வகை, மூத்த சகோதிர வகை இடையூறுகள், புத்தி மேம்பட்ட நிலை, சிறப்பான பணி, பதவி உயர்வு ஆகியன வெகு சிறப்பாய் அமையும்.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெற்றோர், ஆன்மீக சுபப் பயணங்கள், வீட்டில் சுப வைபவங்கள், சிறந்த இலாபங்கள், பணி, பதவி, அந்தஸ்து, கௌரவம் மேம்படல், கடன், வம்பு, வழக்குகளில் வெற்றி, தொழிலில் இடையூறுகள், தாயார் வழி ஆதாயம், வளர்ச்சி, முன்னேற்றங்கள், ஆன்மீகப் பயணங்கள் மிகுந்த நன்மை தரும்.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பம், புத்திரர் வகை, மனைவி, வளர்ச்சி முன்னேற்றம் தொடர்ந்த நிலையில் சுப செலவினங்கள், இளைய சகோதிரர்க்கு மிகுந்த நன்மை, சிறந்த இலாபங்கள், வழக்குகள் வெற்றி பெறுதல், பணியில் ஏற்பட்ட பதவி முன்னேற்ற உயர்வினால் சிறந்த தனவரவு ஆதாயம் நன்மை ஏற்படல் ஆகியன வெகு சிறப்பாய் அமையும்.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பத்தில் சில இடையூறுகள், சிறந்த தனவரவு, தனலாபங்கள், பணியில் சிறந்த அதிகாரம் அமைந்த தலைமைப் பொறுப்பமைதல், ஆயுள் கண்டப்பீடைகள், பற்றற்ற வாழ்க்கை ஆகியவை அமையும். எளிய வகை உணவினை விரும்பி உண்ணுதல் உடலுக்கு மிகுந்த நன்மை அளிக்கும்
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பணி, உயர் பதவி, பொறுப்புகள் கூடிய நிலை, நிறந்த தைரியம், வர வேண்டிய தன லாபங்கள், ஆடை, ஆபரணச் சேர்க்கை, வெகு சிறப்பாய் வரும். சிலர் தவணை முறையில் பொருட்களை வாங்குவர். சிறந்த ஆன்மீக ஞானம், தங்களை நல்வழியில் கொண்டு செல்கின்றது. சிறந்த விரும்பிய பணி வளர்ச்சி, நற்பெயர், புகழ், ஆகியன உயர்வுடன் அமையும். ஆன்மீக ஆலயப்பயணங்கள், தந்தை, வழக்கு, தாய்மாமன் ஆகியோரால் மிகுந்த நன்மை கிடைக்கும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெற்றோர்களினால் ஆதாயங்கள், பொன், பொருள் ஆடை, ஆபரணச்சேர்க்கை, சிறந்த தன வரவுகள், இளைய சகோதிரம், பணியில் சிறந்த உயரிய நிலை, அதனால் சிக்கல், செலவினங்கள், உடல் பாதிப்பு, புத்திரர், மனைவி வகை சிரமங்கள், கணக்கு, வழக்கு, உரையாடல்களினால் சிரமத்துடன் ஆதாய அனுகூலம் பெறுதல் ஆகியன அமையும்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தொழில் முன்னேற்றத் தடைகள், ஆயுள் கண்டப்பீடைகள் யாவும் இம்மாதம் இறுதியில் விலகும். சில செலவினங்கள் அமையும். குடும்பம், பெற்றோர் வகையில் மிகுந்த நன்மை வளர்ச்சி, மகிழ்ச்சி, வீட்டில் சுப நிகழ்வு, வண்டி, வாகனங்கள், சுப பொருட்கள் வாங்குதல் ஆகியன ஏற்படும்.
* * * * *

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.