தை மாதப் பலன்கள்
முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை
கிரக பாதசாரங்கள்
சூரியன் - 1 - 11 உத்ராடம், 11 - 23 திருவோணம், 24 - அவிட்டம் - மகரம்.
சந்திரன் - கேட்டை - பூராடம் வரை.
செவ் - 8 வரை விசாகம், 9 அனு‘ம் விருச்சிகம்.
புதன் - 1 -3 வரை மூலம், 3 -12 வரை பூ+ராடம் - தனுசு. 12 - 20 உத்ரா தனுசு, 14 ல் மகரம், 21 - 28 திருவோணம், 29 - அவிட்டம் மகரம்.
குரு - 1 -14 விசாகம் 2, 14 ல் விசாகம் 3 துலாம்.
சுக்கிரன் - 2 -7 வரை உத்ராடம், 8 -23 திருவோணம், அவிட்டம், மகரம், 24 - அவிட்டம் கும்பம்.
சனி - 17 வரை மூலம் 4, 18 பூராடம் 1 தனுசு.
ராகு - ஆயில்யம் - 2 கடகம்.
கேது - திருவோணம் 4 மகரம்..
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குருவின் பார்வையினால், சிறந்த இலாபம், பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து, தைரியம், ஆடை, ஆபரணச்சேர்க்கை ஆகியன ஏற்படும். தொழிலில் மேன்மை, வண்டி, வாகன வசதிகள் ஏற்படுதல், தொழிலில் கடின உழைப்பு, அதனால் உடல் பாதிப்பு, நரம்பு தொடர்புடைய தொல்லைகள், குடும்பத்தில் மனஸ்தாபம், தைரியத்துடன் சில முடிவுகளினால் ஏற்படுகின்ற குழப்பங்கள் ஆகியன அமையும்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சிறப்பாக விரும்பியபடி தொழில் அமைதல், சுப செலவினங்கள், தனஸ்தானம் பூர்வ புண்ணியக்கிரக பார்வையினால் வெகு சிறப்பாய் இருக்கும். பதவி, புகழ், கௌரவம், மேன்மை உயரிய பதவி நிலை, சில எதிர்பாராத அவமானங்கள், பிரச்சினைகளின் வழி அவை தீருதல், ஆகியன சிறப்பாய் கூடுதல், தந்தைக்கு உடல் சுகவீனங்கள், சாதகருக்கு தலைசுற்றல், மயக்கம், இளைய சகோதர வழி இடையூறுகள் ஏற்படுதல், வேலையில் கடினமான நிலை, சுப செலவினங்கள் ஆகியன அமையும்.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெயர், புகழ், அந்தஸ்து, கௌரவம், உயர்கல்வியில் வளர்ச்சி, முன்னேற்றம், எண்ணத்தில் புதிய இலாபம் தருகின்ற அறிவார்ந்த சிந்தனைகள், இரண்டாம் தர சிறந்த பாரம்பரிய வண்டி வாகனங்கள், தந்தை வழி பூர்வ சொத்து, வீடு, முதலியன அமைதல், புத்திரர், இளைய சகோதர வகையில் வழி சிரமங்கள், செலவினங்கள், இலாபங்கள் அமைதல், உடல் நலமின்மை, உயிர் வாழ்தலில் ஈடுபாடற்ற நிலை, மடாதிபதிகளின் வாழ்த்துகள், எளிய வகை, பத்திய வகை உணவு மேற்கொள்ளுதல், விரதம் இருத்தல் என்பது உடலுக்கு நோய் வராமல் பாதுகாக்கும். ஆன்மீக வழிபாடு சிறந்தது.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம், இளைய சகோதிரம் வழி சுப, அசுப செலவினங்கள், நல்ல வருமானம், மேன்மையான நிலை, ஆன்மீக ஆலயப் பயணங்கள் இவை தொடர்ந்த வெளியூர் பயணங்கள் செல்லுதல், தொழிலில் மிகச் சிறந்த நிலை, இலாபம் அமைதல், பூர்வ புண்ணிய பலன்கள் அற்புதமாய் அமைதல், புத்திரர் வகையில் நன்மைகள், செலவினங்கள், தொழிலில் மேன்மை, சிலருக்கு சிறப்பாய் அமைதல். அரசாங்கம் தொடர்ந்த வேலையில் செலவினங்கள் அமைதல் ஆகியன ஏற்படும்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
திருமணம் ஆகாதவர்கட்கு திருமணம், சிலருக்கு இளைய தாரம் அமைதல், காதல் திருமணம் அமைதல், வீட்டில் சுப நிகழ்வுகள், வளர்ச்சி முன்னேற்றத்தில் சிறந்த மாறுபாடுகள், அரசாங்கம் தொடர்புடைய வகையில், அதிகாரம் தொடர்ந்த, சிரமம் கூடிய வேலை அமைதல், தொழிலில் மேன்மை, உயரிய பதவி கூடுதல், சிறந்த இலாபம், சிறந்த தைரியம், எதிரிகளிடமிருந்து நல்ல வெற்றி நிலை, உறக்கமின்மை, பயணத்தினால் அலைச்சல், தலைசுற்றல், மயக்கம், தந்தை, தாய் வகையில் சாதகருக்கு நன்மை அமைதல், மடாதிபதி, சித்தர் போன்ற மகான்களின் ஆசி கிடைத்தல், அதன் வழி பெருத்த இலாபம் அமைதல், கடினப்பட்டதற்கான இலாபம், மூத்த சகோதரம் வழி, வழக்கின் வழி நிலுவை முறையில் இலாபம் அமைதல், வயிற்று வலி, கர்ப்பப்பை, விந்து, நரம்பு தொடர்ந்த தொல்லைகள் ஆகியன ஏற்படும்.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சிறப்பாய் விரும்பிய அரசாங்க உத்தியோகம் அமைதல், சற்று சிரமங்கள் இருப்பினும் மிகுந்த நன்மை ஏற்படும். நரம்பு தொடர்ந்த தொல்லைகள், தாய், புத்திரர் வகையில் இடையூறு ஏற்படுதல், கருமகாரியம் நிகழ்தல், தொழிலில் அலைச்சல், வயிற்றுவலி, தீராத கடன்கள் அடைதல், வம்பு வழக்குகள் ஆகியவற்றில் இருந்து நிரந்தரமாய் விடுபடுதல், நோய் தீருதல், மர்ம உறுப்புகள் பாதித்தல், மகான்களின் ஆசி கிடைத்தல், வாக்குப்பிரசித்தி ஏற்படல், தாய், குடும்பம், ஆலயம், இலாபத்தின் வழி செலவினங்கள் அமைதல் ஆகியன ஏற்படும்.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குழந்தைப்பேறு, புத்திரர் வகையில் மகிழ்வு, வீட்டில் சுப நிகழ்வு, திருமணம், குழந்தைகளால் மேன்மை, வளர;ச்சி முன்னேற்றங்கள், விருதுகள், சன்மானங்கள், மனைவி வகையில் ஆதாயங்கள், தந்தை, தாய் வழி ஆதாய அனுகூலங்கள், இலாபம், தாயின் வழி அலைச்சல், சிரமங்கள், தந்தை வழி உறவில் கரும காரியம் நிகழ்தல், உயர்கல்வி விரும்பியபடி சிறப்பாய் அமைதல், பூர்வ புண்ணிய வகையில் சிறந்த பலன்கள், இலாபங்கள், இளைய தாரத்தின் தொழிலின் வழி மிகுந்த நன்மை அமைதல், இளைய சகோதரத்தின் வழி நன்மை, கௌரவம் அமைதல், தெளிந்த நல்லறிவு ஆகியன யாவும் அமையும்.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
மிகுந்த கோபம், வாகன வசதி, புதிய வண்டி, இரண்டாம் தர வண்டி, கடன் உதவியில் வாங்குதல், தாயின் உடலில் மிகுந்த நன்மை, அரசாங்க வேலை அமைதல் அல்லது அதற்கு இணையான வேலை, எதிரிகளின் தொல்லைகளில் இருந்து விடுபடுதல், தீராத கடன் அடைதல், கடன், நோய், வழக்கு, எதிரி ஆகிய தொல்லைகளினின்று நிரந்தரமாய் விடுபடுதல், வளர்ச்சி, முன்னேற்றம் ஏற்படுதல், குடும்பத்தில் சிரமங்கள், அவற்றின் வழி இலாபங்கள், அதற்கான தீர்வினைக் காணுதல், வெற்றி பெறுதல், சகோதர வகையில் மனக்கசப்பு ஏற்படுதல், ஆன்மீக சுப பயணங்கள் அமைதல் ஆகியன யாவும் அமையும்.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இளைய சகோதிரம் வழி ஆதாயங்கள், புத்திரபாக்கியம், புத்திரர் வகையில் நன்மை, மகிழ்ச்சி, வளர்ச்சி, விருதுகள், வீட்டில் சுப நிகழ்வுகள், தொழில், குழந்தைகள் தொடர்ந்த வெளியூர் சுபப்பயணங்கள், செலவினங்கள், தொழிலில் வளர்ச்சி, முன்னேற்றம், சிறந்த தைரியம் அமைதல், பூர்வ புண்ணிய பலன்கள் சிறப்பாய் அமைதல், அரசாங்கச் சன்மானங்கள், விருதுகள், குடும்பத்தில் சில இடையூறுகள், உயர்கல்வி நிலை - கல்லூரிப் படிப்பு எதிர்பார்த்தபடி சற்று சிரமத்துடன் அமைதல் ஆகியவற்றிற்கான பலன்கள் ஏற்படும்.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சிறந்த புத்தித்தெளிவு, அரசாங்கத்தினால் கௌரவித்து வரக் கூடிய எதிர்பாராத வருமானம், இலாபங்கள், விருது, ஆன்மீகப்பரிசு, கல்வி, தொழில், திடீர் வருமானத்தின் வழி மிகுந்த நன்மை, சிறப்பாய் இம்மாதத்தில் ஏற்படும். அந்தஸ்து மேன்மை கூடுதலாய் அமையும். கடன், நோய், வழக்கு, எதிரி ஆகிய தொல்லைகளினின்று விடுபடுவர். வீடு, வண்டி வாகன வசதிகள், கால்நடைகள் சிறப்பாய் அமைதல், சிறப்பான செல்வவளம், வாக்கு வன்மை அமைதல், வீட்டு உபயோகப் பொருட்கள் சிறப்பாய் அமைதல், பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து, வரவேண்டிய நிலுவை வருமானங்கள், கடினப்பட்டதற்கான வருமானங்கள் யாவும் மகிழ்வாய் இவர்களைப் பெருமைப்படுத்த வந்து சேரும். தொழிலில் எதிர்பாராத சிறந்த மாற்றம் மனமகிழ்விற்கு ஏற்றபடி அமையும். நீர்நிலை, விடப்பொருட்களில் கவனம் தேவை. புத்தகப் பயிற்சி மிகுந்த நனமையைத் தரும் ஆகிய சிறப்பான பலன்கள் அமையும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தந்தை, தாய், மனைவி, வளர்ச்சி வழி வெளியூர் பயணங்கள், வளர்ச்சி முன்னேற்றத்தில் அதிக அலைச்சல், செலவினங்கள், பெயர், புகழ், அந்தஸ்து, தைரியம், தன்னம்பிக்கை, சிறந்த ஆடை ஆபரணச் சேர்க்கைகள், பொன், பவழம், பட்டாடை முதலியன சிறப்பாய் பெறுவர். குழந்தைகளினால் நன்மை, குழந்தைப்பேறு, விடகண்டம், செவ்விலங்கினால் ஆபத்து, அரசாங்கத்தினால் சிறப்பாய் கௌரவிக்கப்படுவார்கள். பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் சிறப்பான சன்மானம், கௌரவம், விருது, அரசாங்கச் சலுகைகள், இலாபம், புத்திரர் வகையில் மிகுந்த நன்மை, வெளியூரில் அல்லது வெளிநாடு சிறப்பாய் அமையும். பூர்வ புண்ணிய நற்பலன்கள் அதிகமாய் ஏற்பட்டு இராஜயோகப் பலனைச் செய்வர்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பம், வழக்கு, தந்தை வகை இலாபங்கள், குடும்பம், மனைவி, வளர்ச்சி முன்னேற்றம் வழி செலவினங்கள், பெயர், புகழ், அந்தஸ்து, சிறந்த தைரியம், இளைய சகோதரியுடன் கருத்து வேறுபாடு, வேலையில் இடையூறு, புதிய, இரண்டாம் தர வண்டி வாகனங்கள் அமைதல், தான் பேசிய வார்த்தைகளே எதிரியாய் அமைதல், எனவே வாக்கினில் நிதானம், தாயுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு பின்னர் விலகுதல், சுப செலவினங்கள், புத்திர வகையினில் சுப, அசுப செலவினங்கள் ஆகியன ஏற்படும்.
* * * * *

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.