விகாரி வருடம் - ஆடி மாதப் பலன்கள்
முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை
கிரக பாதசாரங்கள்
சூரியன் 4 -17 பூசம், 18 - 31 ஆயில்யம் - கடகம், 32 மகம் - சிம்மம்.
சந்திரன் - உத்திராடம் - சதயம்.
செவ் - 2 - 22 ஆயில்யம் - கடகம், 23 மகம் - சிம்மம்.
புதன் - 2 - 6 பூசம் - கடகம், 7 - 23, 14 - 17 புனர் 3 மிதுனம், 18 - 23 புனர் - கடகம், 10 வக்ர நிவர்த்தி. 24 பூசம் கடகம்.
குரு - கேட்டை 2 விருச்சிகம்.
சுக்கிரன் - 1 - 7 புனர் - மிதுனம், 8 கடகம், 9 -19 பூசம் கடகம், 20 - 30 ஆயில்யம் - கடகம், 31 - மகம் - சிம்மம்.
சனி - பூராடம் 3 தனுசு. வக்ரம்.
ராகு - புனர்பூசம் 1 மிதுனம்.
கேது - பூராடம் 3 தனுசு.
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
களத்திரம், முன்னேற்றம், வளர்ச்சி நிலை, தனவரவு வழி தடைகள், காது உபாதைகள், தகப்பன், அவர் வகை மூதாதையர் உறவில் தொல்லைகள், தன் வாக்கினால் தானே தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்திக் கொள்ளுதல், ஒரு வாரத்திற்குப் பின் தொழில் வகையில் சிறிது முன்னேற்றம், உடலில் உயர் இரத்த அழுத்த மாறுபாடு, நரம்பு பலகீனங்கள், குடும்பத்தில் இடையூறுகள், சாதகருக்கு வாகனத்தடை, உடல் துன்பம் ஏற்பட்டு விலகல், கடன், வம்பு வழக்குகள் ஏற்படும். தந்தை வழி பிணக்குகள், தொழில், இலாபத்தில் தடைகள் ஏற்படும். நேர்மையாய் இருப்பது மிக மிக அவசியம்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சிலருக்கு அரசாங்க உத்தியோகம் சிறப்பாய் அமைதல், பூர்வ புண்ணியம், தந்தை, இளைய சகோதிரம் வழி ஆதாயங்கள், கருத்து பிணக்குகள், சாதகரின் வளர்ச்சி, முன்னேற்றங்கள், திடீர் சுபச் செலவினங்கள், சிறந்த இலாபம், தனவரவு, ஆன்மீக வெளியூர் பயணங்கள், சிலருக்கு திருமணம், புத்திர பாக்கியம், அரசாங்க உத்தியோகம் அமைதல், உடலில் அசதி ஆகியன அமையும்.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தொழில் துறையில் மரியாதை, செலவினங்கள், வளர்ச்சி முன்னேற்றத் தடைகள் இருப்பினும் இலாபத்துடன் கூடிய வெற்றி, இலாபத்தில் இழப்பு, சிறந்த தனவரவு, குடும்பத்தில் குழப்பங்கள், சண்டை, சச்சரவுகள், கடன், வம்பு, வழக்கு, எதிரிகள் வகையில் தொல்லைகள், புத்திரர், மூத்த, இளைய சகோதிரர் வகைகளில் சுப, அசுபச் செலவினங்கள், வெளியூர்ப் பயணங்கள் ஆகியன அமையும்.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
புத்திரர், தொழில் வகையில் செலவினங்கள், சில இழப்புகள், தடைகள், புதிய வண்டி வாகனம் வாங்குதல், குடும்பத்தில் குழப்பங்கள், இடையூறுகள், குடும்பம், மூத்த சகோதரியால் இலாபம், சிறந்த தனவரவு, உறக்கமின்மை, அலைச்சல், உடலில் நரம்புத்தளர்ச்சி, அசதிகள், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றத்தில் சில தடைகள், சகோதிர வகையில் பெருத்த அவமானம், தொல்லைகள் ஆகியன அமையும்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பம், மூத்த சகோதிரம், இலாபம் கலந்த வழி செலவினம், பெற்றோர்களினால் செலவினங்கள், அலைச்சல், வெளியூர்ப் பயணங்கள், கரும காரியங்கள், நரம்பு, வயிறு, மர்ம உறுப்பு தொடர்பான வலி, மருத்துவச் செலவினங்கள், இருக்கும் வீடு அல்லது வாகனம் இழக்கும் நிலையில் மீண்டும் அதனை ஒறுத்தல் கட்டி மீட்டல், அல்லது புதுப்பித்துக் கட்டுதல் ஆகியன அமையும்.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெற்றோரால், மூத்த சகோதிரத்தால் இலாபம், ஆதாயங்கள், சிறந்த தனவரவு, தாயாரின் உடலுக்குக் கண்டம், பீடை காட்டுதல், வாகனத் தடைகள் ஏற்படுதல், இளைய சகோதிரம் வகைச் செலவினங்கள், சிரமங்கள், வெளியூர்ப்பயணங்கள், இருக்கும் பூர்வீகச் சொத்துகள் இழத்தல், விற்றல், நட்டம் அடைதல், அதன் வழி சொற்ப இலாபங்கள், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம் வழி இலாபங்கள், நன்மைகள், பல வழிகளில் தொழில் முன்னேற்ற வருமானம் அமையும்.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
புத்திரர், இளைய சகோதிரம், பெற்றோருடன் தடைகள், பிணி, பீடைகள், கரும காரிய நிகழ்வு, சிரமங்கள், கருத்துப்பிணக்குகள் ஏற்படும். குடும்பத்தில் மன அமைதி, கடன்கள், நோய், வம்பு வழக்குகள் தீருதல், களத்திரம், முன்னேற்றம், வளர்ச்சி வகையில் இழப்புகள், மூத்த சகோதிரம், குடும்பம், களத்திரம் வகையில் வெளியீர்ப்பயணங்கள், சில தடைகள் ஆகியன அமையும்.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
புத்திரப்பேறு, திருமணம் கூடி வருதல், வீட்டில் சுப நிகழ்வுகள், வளர்ச்சி முன்னேற்றங்கள் முதலியன சிறப்பாய் அமையும். குடும்பத்தில் கருத்து மாறுபாடுகள், விட கண்டங்கள், தந்தையாருக்குக் கண்டங்கள், மூத்த இளைய சகோதிர வகையில் செலவினங்கள், பல் தொல்லை, சில எதிர்பாராத இழப்புகள் ஆகியன அமையும்.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வளர்ச்சி முன்னேற்றங்கள், களத்திரம், கல்வி நிலைகளில், எடுக்கும் முயற்சிகளில் தடைகள், கடின நிலைகள் இருக்கும். இளைய சகோதிரத்துடன் கருத்து பிணக்குகள், குடும்பத்தாருடன் வெளியூர்ப்பயணங்கள், அதிகச் செலவினங்கள், புத்திரர்களினால் சோகங்கள், இழப்புகள், அவமானங்கள், மூத்த சகோதிரர் வகை இலாபங்கள், தந்தை, தொழில் வகையில் சில அவமானங்களுடன் கூடிய இலாபங்கள் அமையும்.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
கௌரவம், மேன்மையான மரியாதை கிடைக்கப்பெறுதல், தொழில், தனவருவாயில் எதிர்பாராத திடீர் நல்ல இலாபம் மாற்றம், அழகிய ஆடை ஆபரணங்கள் அணிதல், புதியதாய் வாங்குதல், தொழிலினால் மேன்மை, முன்னேற்றங்கள் அடைதல், உடல் நலனில் நல்ல முன்னேற்றம் காணப்படுதல், இளைய சகோதிரத்துடன் கருத்துப்பிணக்குகள் விலகி நன்மை பெறுதல், விட விலங்குகளினால் ஆபத்து, உறக்கமின்மை, பயணங்களில் மன அமைதியின்மை, மனம் பற்றற்ற நிலை, பத்திய உணவு முறை, தாயார் இழப்பு, உடல் அவருக்கு சுகமின்மை முதலிய குறைபாடு, உடல் இரத்த அழுத்த மாறுபாடு, கரர்பப்பை கோளாறுகள், விந்து சம்பந்தமான மறைமுக உறுப்புகள் கோளாறுகள் நீங்குதல், தந்தை, தாய்மாமன், எதிரி வகை வழி இன்ப துன்பம், இலாபம் அமைதல் ஆகியன ஏற்படும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சரியான உறக்கமின்மை, புத்திரர் வகைச் சோகங்கள், ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளுதல், சிறந்த தனவரவு, குடும்பத்தில் மனமகிழ்வு, வாகன சுகம் பெறுதல், உணவு செரியாமை, நரம்பு பலகீனம், இரத்த அழுத்த மாறுபாடு, உடல் உபாதைகள் வந்து விலகுதல், திடீர் எதிர்பாராத செலவினங்கள் ஆகியன அமையும்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தாயார், வாகனத்தடைகள், வீட்டில் அமைதியின்மை, மகிழ்வின்மை, இலாபத்தில் தடைகள், செலவினங்கள், அலைச்சல்கள், இளைய சகோதிரத்தால் நன்மை, முன்னேற்றம், முயற்சிகளில் வெற்றி பெறுதல், ஆடை, ஆபரணம் மகிழ்வு, அவமானம், குடும்பம். தந்தை அல்லது அவர் வழி இழப்பு, வாகனம், களத்திரம், திருமணம், முன்னேற்றம் வழி வம்பு, வழக்கு, அவமானத்துடன் கூடிய நன்மை, இலாபம் அமையும்.
* * * * *

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.