விகாரி வருடம் - ஆனி மாதப் பலன்கள்
முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை
கிரக பாதசாரங்கள்
சூரியன்6 மிருக, 7 - 20 திருவா, 21 புனர் - மிது.
சந்திரன் - அனுட - பூராடம்.
செவ் - 2 -11 புனர், 12 பூசம், கடகம்.
புதன் - 3 - 8 புனர், 9 - பூசம் கடக, 22 ல் வக்ரம்.
குரு - 10 வரை கேட்டை 3 ல் வக்ரம். 11 கேட்டை 2 விருச். 11ல் வக்ர நிவர்த்தி.
சுக்கிரன் - 2 -7 ரோகி, ரிடபம். 8 - 18 மிரு, 19 - 29 திருவா, 30 புனர் மிது.
சனி - பூராடம் 3 தனுசு.
ராகு - 24 வரை புனர் 2, 25 புனர் 1 மிதுனம்.
கேது - 24 வரை பூராடம் 4, 25 பூராடம் 3 தனுசு.
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வீட்டு உபயோகப் பொருட்கள், தனவரவு, மனமகிழ்வு, களத்திரத்தால் ஆதாயம், சுபச்செலவினங்கள், வெளியூர்ப்பயணங்களில் தடை ஏற்பட்டு விலகல், ஆயுள் கண்டப்பீடை, சிலருக்கு அறுவை சிகிச்சை, நரம்புகளில் பலவீனம் அடைதல், சிகிச்சையினால் நன்மை, பணியில், வர வேண்டிய இலாபத்தில், இளைய திருமணத்தினால், மூத்த சகோதிரத்தால் இடையூறுகள், தந்தையாருடன், தந்தை வழி உறவுகளுடன் கருத்துப்பிணக்குகள், வாக்கினில் தடுமாறல், எதிரியைத் தேடிக்கொள்ளும் நிலைமை காணப்பெறும்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தாயார், சாதகர் இருவருக்கும் உடல் பீடைகள், இரத்த அழுத்த மாறுபாடு, மர்ம உறுப்பு பாதிப்படைதல், தந்தை, தொழில் வகையில் கருத்து மாறுபாடு, செயலற்ற நிலை, விட கண்டங்கள், விட சுரங்கள், ஆயுள் கண்டப்பீடை, அச்சம் தரும் விலங்குகளினிடத்தில் கவனம் தேவை. வளர்ச்சி முன்னேற்றம், திருமணம், உயர்கல்வி போன்றவற்றில் சில சிக்கல்கள் தோன்றும்.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
திருமணம், வளர்ச்சி, கல்வி, தொழில், பணி ஆகிய இவற்றினில் முன்னேற்றத் தடைகள், முயற்சிகள், கடன் வழி தனவரவு, வம்பு, வழக்குகள், மூத்த சகோதிரம் ஆகியவற்றினால் செலவினங்கள், சிறந்த தனவரவு ஆகியன கிடைக்கும். தலைசுற்றல், மயக்கம், இரத்த அழுத்த மாறுபாடு ஆகியன காணப்படும்.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
புத்திரர்களால் அவமானம், இழப்பு, பணியில் இழப்பு, அதனால் முன்கோபம், இளைய, மூத்த சகோதிரத்தால் செலவினங்கள், சிரமங்கள், சாதகர் முயற்சி, தாய் ஆகிய இவர்களினால் சுப, அசுபச்செலவினங்கள், இலாபம், வர வேண்டிய இலாபம் தவணை முறையில் கிடைக்கப் பெறுதல், களத்திரம், முன்னேற்றத்தில் தடைகள், அதன் வழி அதிக அவமானங்கள், செயலற்ற நிலை, குடும்பத்தாருடன் அலைச்சலுடன் கூடிய பயணம் அமையும். பொன், பட்டு, வெள்ளி, வீட்டு வாகன விசேடப்பொருட்கள் சிலர் வாங்குவர். சரியான உறக்கமின்மை, மனச்சஞ்சலங்கள், பயணத்தில் பல தடைகள், அலைச்சல்கள், வயிற்று வலி, மர்ம உறுப்புகள், புதிய வியாதிகளினால் செலவினங்கள், மகான்களின் ஆசி, விட கண்டங்கள், உடல் பீடைகள் காணப்படும்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பம், பெற்றோரால் மருத்துவச் செலவினங்கள், கரும காரிய நிகழ்வுகள், மூத்த சகோதிரத்தால் ஆதாய அனுகூலங்கள், இலாபம், செலவினங்கள், சில இடையூறுகள், வெளியூர்ப்பயணங்கள், புத்திரர் வகையில் சங்கடங்கள், அவமானங்கள், சாதகரால் ஆதாயம், இலாபம், புத்திர சோகங்கள், தடைகள், மன வருத்தம் ஆகியன காணப்படும். நேர்மையாய் இருப்பது மிக அவசியம். இளைய சகோதிரம், தொழில் வகை இலாபம், கவனம் தேவை. கௌரவக்குறைவு ஏற்படும்.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பத்தார், தந்தை, தொழில் வகைச் செலவினங்கள், பல இடையூறுகள், பல புதிய பிரச்சினைகள், வாகனத்தடைகள், புத்திரர், எதிரி, கடன், வம்பு வழக்கு வகைகளில், குடும்பத்தில், களத்திரம், முன்னேற்ற வகையில் மனவருத்தங்கள், இளைய சகோதிர வகையில் இழப்பு, மனவருத்தங்கள், தொழில் வழி இலாபம் ஆகியன காணப்படும்.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
கௌரவமான முறையில் குடும்பத்தை பல இன்னல்களுடன் கடந்துச் செல்லல், இளைய சகோதிரம், கடன், வழக்கு, எதிரி வழி திடீர் கடன்கள் மேலும் பெருதல், பெற்றோர் வழி செலவினங்கள், கருத்துப்பிணக்குகள், ஆதாயம், இலாபம், மனசங்கடங்கள், தொழில் வகை சில இழப்புகள், குடும்பத்தார், களத்திரம், முன்னேற்றம் வழி பயணங்கள் அமையும்.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பத்தில் குழப்பம், சாதகருக்கு விட கண்டம், உடல் பீடைகள், மன அமைதியின்மை, சண்டை சச்சரவுகள், பற்றற்ற நிலை, களத்திரம், தொழில், வளர்ச்சி முன்னேற்ற நிலைகளில் சங்கடமான நிலைகள், அவமானங்கள், இளைய சகோதிரத்துடன் பிணக்குகள், தாயாருக்கு உடல் நலிவு, எதிர்பாராத இழப்புகள், அறுவை சிகிச்சைகள், மர்ம உறுப்புகள் பாதித்தல், மனம் பேதலித்தல் ஆகிய சூழல் நிலவும்.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வளர்ச்சி முன்னேற்றங்கள், களத்திரம், கல்வி நிலைகளில், எடுக்கும் முயற்சிகளில் தடைகள், கடின நிலைகள், புத்திரர்கள், தொழில், தந்தை, இளைய சகோதிரத்துடன் பிணக்குகள், சோகங்கள், இழப்புகள், செலவினங்கள், மூத்த சகோதரர், கடன் வம்பு வழக்கு வழி சிரமங்களுடன் கூடிய நன்மைகள், குடும்பத்தாருடன், தாயாருடன் இணக்கமற்ற நிலை ஆகியன காணப்படும்.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தாய்மாமன், எதிரி, வழக்கு, தந்தையார் வழி ஆதாயங்கள், நன்மை கிடைக்கும். உடல் நலனில் கவனம் தேவை. சரியான உறக்கமின்மை, வயிற்றுவலி, மர்ம உறுப்பு பாதித்தல், தொழில் நிலையில் சில சங்கடங்கள், அலைச்சலுடன் கூடிய வெளியூர்ப்பயணங்கள், செலவினங்களின் வழி இலாபங்கள், தாயார், மூத்த சகோதிரம் ஆகியோருக்கு உடல் கண்டம், பீடை காட்டும். இலாபம் ஆகியவற்றில் இழப்பு காட்டும். இளைய சகோதிரத்தால் நன்மை அமையும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
உடல்நிலை காரணமான செலவினங்கள், புத்திரர், பெற்றோர் வகை இடையூறுகள், மூத்த சகோதிரர், குடும்பத்தார் வகையில் செலவினங்கள், சில சங்கடங்கள், இளைய சகோதிரம், தொழில் வகையில் இழப்புகள், சங்கடங்கள், அறுவை சிகிச்சை, உடல் நலிவு, விட கண்டங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. துணையுடன் கருத்துப்பிணக்கு ஏற்படும்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பத்தார், தந்தை, இளைய சகோதிரம், திடீர் கடன், அவமானங்கள், வண்டி வாகனத்தடைகள், செலவினங்கள், மன உளைச்சல்கள், குடும்பம், தந்தை வகையில் இழப்பு, களத்திரம், முன்னேற்றம் வகையில் நன்மை, தீமை கலந்த பலன்கள் அமையும். ஆன்மீகப் பயணங்கள், கரும காரியங்கள் செல்ல நேரும்.
* * * * *

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.