விகாரி வருடம் - ஐப்பசி மாதப் பலன்கள்
முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை
கிரக பாதசாரங்கள்
சூரியன்3 சித் 3, 4 - 6 சித் 4, 7 - 19 சுவாதி 20 - 29, விசா - துலாம், 30 விசா - 4.
சந்திரன் - ரோகிணி – திருவாதிரை.
செவ் - 2 அஸ்தம் 2, 3 -13 அஸ், 14 -23 சித் – கன், 24 ல் சித் – துலாம்.
புதன் - 2 விசா 2, 3 – 5 விசாக துலா, 6 – 12 விசா விருச், 13 – அனு 1, 14 வக்ர ஆரம்பம், 16 – 20 விசாக 4, விருச், 21 – 28 துலா, 29 சுவா – துலாம்.
குரு - 17 கேட்டை 4 விருச், 18 மூலம் 1 தனுசு.
சுக்கிரன் - 3 – 10 விசாக துலா, 11 – 12 விசா விருச், 13 - 23 அனுடம் விரு, 24 – கேட்டை விருச். சனி – பூராடம் 3 தனுசு.
சனி - 1- 16 பூராடம் 2, 17 முதல் பூராடம் 3 தனுசு.
ராகு - 26 வரை திருவாதிரை 4, 27 முதல் திருவாதிரை 3 மிதுனம்.
கேது - 26 வரை பூராடம் 2, 27 முதல் பூராடம் 1 தனுசு.
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இளைய சகோதிரம், உடல் நலிவு தொடர்ந்த செலவினங்கள், அலைச்சலுடன் கூடிய பயணங்கள், நரம்புகள், மர்ம உறுப்பு தொடர்ந்த வகைகளில் உபாதைகள், குடும்பம், மனைவி, வளர்ச்சி வழியில் நல்ல முன்னேற்றங்கள், தொழில், இலாபம், தந்தை, குடும்பம், களத்திரம் வகையில் சில எதிர்பாராத சங்கடங்கள், அவமானங்கள் ஏற்படும். குருப்பெயர்ச்சிக்குப் பின்னர் நன்மை ஏற்படும்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
எடுத்த காரியத்தில் வெற்றி, சிறந்த பொலிவு, தைரியம் மேம்படுதல், அதிக முன் கோபம், நல்ல வளர்ச்சி, முன்னேற்றம், சிறந்த தனவரவு, தேகம் பொலிவுடன் காணப்படுதல், இருந்த விட கண்டங்கள் யாவும் விலகுதல், இலாபம் கருதிய செலவினங்கள், வெளியூர் பயணங்கள் ஆகியன அமையும். சிலருக்கு திருமணம், இளைய தார திருமணம் முதலியன எளிய முறையில் அமையும்.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
எடுத்த காரியங்களில் இருந்த தடைகள் யாவும் வரும் குருப்பெயர்ச்சிக்குப் பின்னர் விலகும். கரும காரியம் நிகழும். அரவுகளின் உபாதையால் இரத்த அழுத்த மாறுபாடு ஏற்ற இறக்கத்தில் இருந்தமையால் அளவு கடந்த சோதனைகள் மயக்கம், தலைசுற்றல், உடல் சோர்வு, உறக்கத்தில் குறைபாடு முதலியன உடலில் ஏற்படுத்தியது. அதிக அளவிலான செலவினங்கள் திடீரென சிலருக்கு அமைந்து விலகும். விலகி இருக்கும். அவை யாவும் விலகும்.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
அலைச்சலுடன் கூடிய அதிக பயணங்கள், வீண் செலவினங்கள், வீண் அலைச்சல், உறக்கமின்மை, களத்திரம், வளர்ச்சி முன்னேற்றத்தில் கருத்து மாறுபாடான நிலை, பிணக்குகள் யாவும் நிகழும். கரும காரியம் நிகழும். இம்மாத மூன்றாவது வாரத்தில் ஒரு முடிவுக்கு வரும். சிலருக்கு சிரமத்தின் பெயரில் தொழில், குடும்பம், திருமணம், இளைய தாரம் ஆகியன அமையும். தாயார், மூத்த சகோதிரம் தொடர்ந்த வகையில் இளைய சகோதிரத்துடன் வாக்கு வாதம், கருத்து மாறுபாடு ஏற்படும். தொழில் நிலையில் மாற்றம், நல்ல முன்னேற்றம், அலைச்சலுடன் கூடிய பயணம் காணப்படும்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
அளவு கடந்த முன்கோபம், குடும்பம், பெற்றோர் வகையில் எதிர்பாராத அவமானங்கள், இருப்பினும் எதையும் எதிர் கொள்ளும் தைரியம், பேச்சாற்றல் காணப்படும். இம்மாத இறுதிக்குப் பின்னர் நன்மை ஏற்படும். புத்திரர் வகையில், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம் வகையில் சங்கடங்கள் இருப்பினும் இலாபங்கள், மூத்த சகோதிரர்களால் ஆதாயங்கள், கருத்து மாறுபாடுகள், பெற்றோர், குடும்பம், தொழில் வகையில் செலவினங்கள் ஆகியன அமையும். வர வேண்டிய நிலுவைத்தொகை, இலாபம் கிடைக்கப்பெறும். எதிர்பாராத சிறந்த பூர்வ புண்ணியப்பலன் கிடைக்கும். மிகுந்த மனமகிழ்ச்சி ஏற்படும்..
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இளைய சகோதிரம், களத்திரம், வளர்ச்சி முன்னேற்ற நிலையில் சங்கடங்கள், அவமானங்கள், திடீர் அறுவை சிகிச்சைகள், தொழிலில் தடைகள் இருப்பினும் குறுக்கு வழியிலான இலாபங்கள் ஆகியன அமையும். நேர்மையாய் இருப்பது மிகவும் அவசியம். இல்லை எனில் சிலருக்கு சிறைவாசம், அவமானம், வழக்கு வில்லங்கம், குடும்பத்தில் செலவினங்கள், பகை முதலியன அமையும். சாதகர் வளர்ச்சி, தொழில் தொடர்ந்த நிலையில் இடையூறு ஏற்படும். கரும காரியம், கண்டங்கள் நிகழும்.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சிறந்த தலைமைப்பொறுப்பு வகையில் இலாபம், ஆதாயம், வளர்ச்சி, முன்னேற்றம், இம்மாத 20 தேதிக்குப் பின்னர் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பம், களத்திரம், வளர்ச்சி நிலைகளில் அதிக செலவினங்கள், வெளியூர்ப்பயணங்கள் ஏற்படும். அதிக அலைச்சல், உடல் தொல்லைகள் காணப்பெறும். பெற்றோருடன் இருந்த பிணக்குகள் விலகும். சிலருக்கு சிறப்பாய் திருமணம், உயர்கல்வி, இலாபம் முதலியன அமையும்.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பத்தில், இருந்த தடைகள் விலகும். விடகண்டங்கள் யாவும் விலகும். கரும காரியம் நிகழும். தொழில் தொடர்ந்த அலைச்சலுடன் கூடிய பயணங்கள் அமையும். மூத்த சகோதிரம், இலாபம், இளைய களத்திரம் வகையில் அவமானங்கள், சங்கடங்கள், செலவினங்கள், பயணங்கள், சிறைவாசம் முதலியன அமையும்.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இம்மாத இறுதிக்குப் பின்னர் யாவும் வெற்றியே. தொழிலில் சிறந்த உயரிய பதவி, வளர்ச்சி, முன்னேற்றம், கடின நிலை, வெகு புகழ், பிரசித்தி ஆகியன தடைகள் இல்லாது எதிர்பார்த்தபடி கிடைக்கும். சிறந்த சன்மானங்கள், விருதுகள், திருமணம், வளர்ச்சி நிலைகள் கிடைக்கப் பெறுவீர். பலத்த உடல் அசதி, சோம்பல்தனம் இருப்பினும் அயராத உழைப்பினால் வெற்றி கண்டதன் பலன் அமையும். உடலில் புதிய சுறுசுறுப்பு, வலிமை காணப்பெறும். மூத்த சகோதிரம், களத்திரம் ஆகிய வகையில் எப்போதும் மகிழ்வு, வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் அமையும். அதிக இலாபங்கள் சிறப்பாய் கிடைக்கப்பெறும்.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இளைய சகோதிரம், தொழில், குடும்பம், முன்னேற்றம், சாத்திரம் தொடர்ந்த நிலை, பதிப்பு வகையில் அனுமதி ஆணைகள், அலைச்சலுடன் கூடிய பணிகள், சுபச்செலவினங்கள் ஆகியன அமையும். சிலருக்கு புதிய வீடு வாங்கி குடிபுகுதல், வேறு வாடகை வீடு மாறுதல், பதவி பணி நிலைகளில் மாற்றம் ஏற்பட்டு அதன் வழி அலைச்சல், வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள், இளைய சகோதிரம், ஆடை, ஆபரணங்கள் ஆகியவற்றால் ஆதாயங்கள், தொழில் நிலையில் சிரமங்கள் இருப்பினும் இலாபங்கள் அமையும். உடல் நிலையில் நல்ல மாற்றங்கள் ஆகியன அமையும். சாதகர், தந்தை உடல்நலனில் சிரமம் ஏற்பட்டு விலகும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பத்தாரால் ஆதாயங்கள், சிறந்த தனவரவு, இலாபங்கள், அதே சமயத்தில் சாதகரின் வளர்ச்சி கருதிய செலவினங்கள், இளைய சகோதிரம், தொழில், புத்திரர் தொடர்ந்த வகையில் அவமானம், தடைகள், தந்தைக்கு உடல் நலிவு ஆகியன அமையும். இம்மாத இறுதிக்குப் பின்னர் நன்மைகள் அமையும்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தொழிலில் பல்வேறு மாற்ற நிலைகள், அதிகமாகப் பொறுப்பு நிலை கூடுதல் அலைச்சல், வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் அமைதல் ஆகியன நிகழும். இம்மாத இறுதிக்குப் பின்னர் குடும்பத்தில் இருந்து வந்த தடைகள் யாவும் விலகும். சிலருக்கு திருமணம், இளைய தாரம், வர வேண்டிய தனவரவு, வாகன வசதிகள், வழக்கு அவமானத்துடன் கூடிய நிலுவைத்தொகை ஆகியன கிடைக்கப்பெறும்.
* * * * *

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.