விகாரி வருடம் - சித்திரை மாதப் பலன்கள்
முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை
கிரக பாதசாரங்கள்
சூரியன்1 - 14 அசு, 15 - 27 பரணி, 28 கிரு - மேஷம்.
சந்திரன் - பூசம் - பூரம்.
செவ்- 3 - 12 ரோகிணி, 13 - 23 மிருக, வரை ரிடபம், 24 முதல் மிதுனம்.
புதன் - 2 -11 உதி, 12 - 19 ரேவதி வரை மீனம், 20 அசுவினி மேடம்.
குரு - 9 கேட்டை 4, விருச், வக்ரம்.
சுக்கிரன் - 4 வரை பூரட்டாதி, 5 - 13 உதி, 16 - 26 ரேவதி, மீனம், 27 - அசு - மேடம்.
சனி - பூராடம் 4 தனுசு வக்ரம்.
ராகு - 24 வரை புனர்பூசம் 3, 25 புனர் 2 மிதுனம்.
கேது - 24 வரை உத்திராடம் 1 தனுசு. 25 பூராடம் 4 தனுசு.
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பத்தில் கடும் வாக்குவாதங்கள், கடும் கோபத்தினால் மன அமைதியின்மை, இரத்த அழுத்த மாறுபாடு, உடல் சுகமின்மை, நரம்பு பலகீனங்கள், மர்ம உறுப்பில் குறைபாடு, இளைய சகோதிரத்துடன் கருத்து மாறுபாடுகள், உயிரிழப்பு, மரண கண்டங்கள், உடல் சிகிச்சைகள், இலாபத்தில், தனவரவில் முடக்கம், தன் சொல்லினால் தானே தனக்கு எதிரியைத் தேடிக்கொள்ளல், சிக்கலுடன் கூடிய வெளியூர்ப் பயணங்கள், செலவினங்கள் தந்தையார், தொழில், தாயார் பாட்டி வகையரா ஆகியோர் வகையில் பிணக்குகள் ஏற்படும்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
திருமணம், கல்வி வளர்ச்சி தொடர்ந்த நிலையில் சிக்கலான முறையில் சுப செலவினங்கள், சிலருக்கு நிச்சயித்தத் திருமணம் தடைபடல், வெளியூர்ப் பயணங்கள், தனவரவு, இலாபத்தில் இவற்றில் திடீர் தடைகள், உடல் நரம்புகள் பலவீனம், தந்தை, தொழில், பெற்றோர் வகை பாட்டன், பாட்டி வகை சங்கடங்கள், பற்கள், தொண்டை கோளாறுகள், விட கண்டங்கள், அவை தொடர்பான நிகழ்வுகள், குடும்பம், புத்திரர் இவற்றில் இழப்பு, கண்டம் ஆகியவை ஏற்படும்.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
கிரகத் தடைகள், மந்தப் புத்தி, மனத் தடுமாற்றம், தலை சுற்றல், உடல் நலிவு ஆகியவை ஏற்படும். தந்தை, பிதுர் தோடம், மூத்த சகோதிரத்தினால் செலவினங்கள், இளைய சகோதிரத்தினால் இலாபங்கள், வண்டி வாகன வசதிகள், வீட்டு வசதிப்பொருட்கள் அமைதல், கௌரம் தொடர்ந்தன சிறப்பாய் சில தடை, பெரும் முயற்சியுடன் சிறப்பாய் அமைதல், தாயாருக்கு, சாதகருக்கு மரண கண்டங்கள், உயிர் இழப்பு அமைதல் ஆகியவை ஏற்படும்.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வீண் பகட்டான செலவினங்களாக தேவைக்கேற்ற ஆடை, ஆபரணங்கள் அமையும். தொழில், குழந்தைகள், புத்தியின் வழி சிறந்த இலாபங்கள், திருமணம், வளர்ச்சி, முன்னேற்றம் குறித்த அதிகச் செலவினங்கள், பல தடைகள், உறக்கமின்மை, மனச்சஞ்சலங்கள், பயணத்தடைகள், அலைச்சல்கள், வழக்கினில் பல சிக்கல்கள், மன அழுத்தம், உடலில் நரம்பு, வாதம், மர்ம உறுப்புகள் தொடர்ந்த உபாதைகள், இளைய சகோதிரம் இழப்பு, மரண கண்டங்கள், தாயார், மூத்த சகோதிரம், உறவுகள் வழி ஆதாய இலாபங்கள் ஆகியவை காணப்படும்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தொழிலில் முன்னேற்றம், சிலருக்குப் பணி நிரந்தரமாய் சிறந்த இலாபம், இளைய சகோதிரத்தினால் ஆதாயம், இலாபம், குடும்பம், மூத்த சகோதிரம் ஆகிய இவற்றில் ஓர் இழப்பு, அல்லது மரண கண்டங்கள், முன்னேற்றத் தடைகள், களத்திரம், வளர்ச்சித் தடைகள், உடல் நலிவுகள், வசதிகள் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலைமை காணப்படும். நரம்புத் தொல்லைகள், தலைசுற்றல், மனத்தடுமாற்றங்கள், வாக்குத் தடுமாற்றங்கள், வழக்கு, பெண்களால் அவமானங்கள் ஆகியவை ஏற்படும். கௌரவக்குறைவு ஏற்படும்.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பம், தந்தையால் கௌரவம், மேன்மை, அதிக அதிர்ஷ்டம், இலாபங்கள், உடல் நரம்பு, தாயார் வகையில் பிணக்குகள், வாகனத் தடைகள், தொழிலில் தடைகள், சிலர் பணி, பதவி இழத்தல், அவமானப்படுதல், குறுக்கு வழியில் வருமானங்கள் ஆகியவற்றால் சிறை செல்லும் நிலைமை, கௌரவக்குறைவு, வழக்கினைச் சந்தித்தல், இளைய சகோதிரத்தினால் சொத்து விவகாரங்களில் சங்கடங்கள், நேர்மையாய் இருத்தல் மிக அவசியம். குடும்பம், மனைவி, வளர்ச்சி முன்னேற்றத்தில் செயலற்ற நிலைமை ஆகியன அமையும்.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வளர்ச்சி, முன்னேற்றங்கள், இலாபம், பதவியில் உயரிய நிலை, கௌரவம் ஏற்படல், தந்தையார், அவர் வழி பாட்டன் கரும காரிய நிகழ்வு, கண்டங்கள், அறுவை சிகிச்சை அதன் வழி வழக்கு, சுப அசுபச் செலவினங்கள், பயணங்கள் அமையும். கௌரவக்குறைவு, தற்கொலை எண்ணங்கள், சிலர் மரண கண்டங்களைச் சந்தித்தல், உடல், மனம் மகிழ்வில், களத்திரம், வளர்ச்சி முன்னேற்றத்தில் சில அவமானங்கள், சில வீண் செலவினங்கள், குடும்பம் அதிக சிரமத்தில் கௌரவமாய் கொண்டு செல்லும் நிலைமை ஆகியன அமையும்.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சிறந்த தைரியம், பேச்சாற்றல், குடும்பம், புத்திரர் வகை செயலற்ற நிலை, அதிகச் சிக்கல்கள் தலை துாக்கல், குடும்பத்தில் அமைதியின்மை, பற்கள், தொண்டை வலி ஏற்படல், இளைய சகோதிரத்துடன் தாயார், தந்தையார் வகை பாட்டன் உறவுகளில் இடையூறுகள், மூத்த சகோதிரத்தால் அவமானம், கண்டங்கள், இழப்புகள், இளைய சகோதிரத்தால் கருத்து மாறுபாடு, சாதகருக்கு மரண, விடம் தொடர்ந்த கண்டங்கள், அவமானம், வழக்குகள், மனைவி, வளர்ச்சி முன்னேற்றம், வகை சிறந்த இலாபம், செலவுகளுடன் அமையும்.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
மூத்த சகோதிரத்தால் ஆதாய அனுகூலங்கள், அனைத்து வசதிகள், தந்தையாரால் நன்மை, புத்திரர், குடும்பம், தாயார், வழக்கு, வெளியூர் பயணங்களின் வழி வீண் செலவினங்கள், மன அமைதியின்மை, சிக்கல்கள், வளர்ச்சி முன்னேற்றங்கள், களத்திரம், கல்வி நிலைகளில், எடுக்கும் முயற்சிகளில் தடைகள், கடின நிலைகள், எதிர்பாராத இழப்புகள், மரண கண்டங்கள், கடும் வாக்கு வாதங்கள், உடல், மனம் தெளிவற்ற நிலைமை, தைரியம் இழத்தல், சோர்வு, முறையற்ற வழி செல்ல எண்ணுதல், புத்தி பேதலித்தல், குறுக்கு வழி ஆகியன காணப்படும்.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தொழில் நிலையில் திடீர் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, தக்க சன்மானங்கள், ஆடை ஆபரணங்கள் ஆகியன அமையும். நரம்பு பலகீனங்கள், உடல் நலிவு, தாய்மாமன் வழி கரும காரியம் நிகழ்வுகள், தந்தையார்க்கு கண்டங்கள் அமையும். தாயாரால் மனச் சங்கடங்கள் இருப்பினும் நன்மை, ஆதாயம் அமையும். விட கண்டங்கள், ஆன்மீக வெளியூர்ப் பயணங்கள் அமையும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
புத்திரர் வகை இழப்பு, கண்டங்கள், மனைவி, வளர்ச்சி வழி சிறந்த தைரியம், அதிக நன்மை அடைதல், இளைய சகோதிரம், தொழிலினால் இலாபம், பெற்றோரால் ஆதாய அனுகூலங்கள், மன மகிழ்வுகள், இலாபம், தன வரவில், இலாபத்தில் சில தடைகள், செயலற்ற நிலை, உடல் பலகீனம் அடைதல், தலை சுற்றல், மயக்கம் ஆகியன காணப்படும்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சிறந்த தைரியம், பேச்சாற்றல், கர்வம், தாயார், களத்திரம், வளர்ச்சி முன்னேற்றத்தில் பெருத்த இழப்பு, கண்டங்கள், இளைய சகோதிரம், பெண்கள் வகையில் நன்மைகள், சில அவமானங்கள், பெற்றோர், இரு வகை பாட்டன், பாட்டி வகையில் கரும காரிய நிகழ்வுகள், தொழில் முடக்கத் தடைகள், பெருத்த இழப்புகள், வீண் செலவினங்கள் ஆகியன அமையும்.
* * * * *

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.