விகாரி வருடம் - கார்த்திகை மாதப் பலன்கள்
முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை
கிரக பாதசாரங்கள்
சூரியன்4 – 16 அனுடம், 17 - 29 கேட்டை – விருச்சிகம், 30 – மூலம் – தனுசு.
சந்திரன் - புனர்பூசம் – ஆயில்யம்.
செவ் - 4 - 21 சுவாதி, 22 - விசாகம் – துலாம்.
புதன் - 3 வக்ர நிவர்த்தி, 10 - 18 விசாகம் – துலா, 19 – 20 விசாகம், 21 அனுடம் – விருச்சிகம்.
குரு - 5 - 19 மூலம் 2, 20 மூலம் 3 தனுசு.
சுக்கிரன் - 2 – 4 கேட்டை விருச், 5 – 15 மூலம், 16 – 25 பூராடம், 26 – 28 உத்திராடம் - தனுசு, 29 – மகரம்.
சனி - 9 பூராடம் 4 தனுசு.
ராகு - திருவாதிரை 3 மிதுனம்.
கேது - பூராடம் 1 தனுசு.
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
மண், மனை ஆதாயத்தொடர்புகள், பூர்வ புண்ணியத்தானம் பலம் பெறுவதால் நன்மைகள், புத்திரர்கள், களத்திரம் ஆகியவர்களால் அவமானம், சங்கடங்கள் இருந்த நிலை சற்று மாற்றம் பெறும். நரம்பு, இரத்த அழுத்தம் போன்றவற்றினால் உடல் பாதிப்பு ஏற்படலாம். சிலருக்கு காது கோளாறுகள், இளைய சகோதிர வகைப்பிரச்சினைகள் ஏற்படலாம். முன்னேற்றம், வளர்ச்சி நிலை வகையில் சில நன்மைகள் ஏற்படலாம். மண் மனை ஆதாயங்களினால் சில அவமானங்களுடன் நன்மைகள், இலாபம், தொழில் கிடைக்கும்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பத்தில் மன ஸ்தாபங்கள், பல் வலி முதலியன தோன்றுதல், வந்த விட கண்டங்கள் விலகுதல், உடல் நலிவு, சுரம், திடீரென இரத்த அணுக்கள் குறைதல், பிறகு வைத்தியத்தினால் சரியாதல் முதலிய நிலைகள் இவ்வளவு நாட்களாய் இருந்த நிலையில் நல்ல மாற்றங்கள், புத்திரர் வகை சுபச்செலவினங்கள், உடல் தொடர்ந்த நிலையில் செலவினங்கள், முன்னேற்றம் காணப்படும்.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
முன்னேற்றங்கள், வளர்ச்சி நிலைகள் ஏற்படும். முன்னேற்றத் தடைகள், சங்கடங்கள் இருந்த நிலை இனி மாறும். தலை சுற்றல், மயக்கம், மனக்குழப்பங்கள் முதலியன மாற்றம் அடையும். இளைய சகோதிரத்தால் செலவினங்கள், வழக்குகள், பயணங்கள், மூத்த சகோதிரத்தால் இலாபம், ஆதாய நன்மைகள் ஆகியன அமையும். மேலும் இலாபம், கடன் வம்பு வழக்குகளினால் சில அவமானங்கள், சங்கடங்கள் ஏற்படும்.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
களத்திரம், தந்தை, எதிரி, குடும்பம், மூத்த சகோதிரர்கள், முன்னேற்ற வகை ஆகியோர்களால் செலவினங்கள், அவமானங்கள், சங்கடங்கள் , வீண் அலைச்சல்கள், பயணங்கள், சிரமங்கள் ஏற்படும். தனவரவில் மேன்மை, இரண்டாம் தர வானங்கள் அமைதல் ஆகியன அமையும். உறக்கமின்மை, அலைச்சல், உடல் அசதி, நரம்பு பலகீனங்கள், சிறந்த தனவரவு, இலாபம் காணப்படும்
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
முன்னேற்றம், பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து மேம்படுதல் ஆகியன யாவும் கடினப்பட்டதற்கான நற்பலன் இனி மேன்மையாய் படிப்படியாய் கிடைக்கும். மூத்த சகோதிரர்களால் ஆதாயங்கள், சிறந்த இலாபங்கள், நன்மைகள், தொழிலில் இலாபம், நன்மை, சிலருக்கு இரண்டாவது அல்லது இளைய இரகசிய திருமணம், கரும காரிய நிகழ்வு ஆகியன அமையும்.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
புத்திரர்கள், தொழிலில் பல இடையூறுகள், அவமானங்களில் இருந்து நுாலிழையில் தப்பித்தல், அதிக சுமை காணப்படுதல், குறுக்கு வழிகளை நாடுதல், அதில் சிக்கல் ஏற்பட்டு விலகுதல், அதனால் சிலருக்கு சிறை தண்டனை, அபராதம், சிறை செல்லாமல் ஒறுத்தலுடன் தப்பித்தல், அதிக செலவினங்கள், பயணங்கள், சுப அசுப விரயங்கள், பயணங்கள், இளைய சகோதிர வகை செலவினங்கள், சில அவமானங்கள், குடும்பத்தில் பிரச்சினைகள் ஆகியன அமையும்.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
திருமணம், தந்தை, முப்பாட்டன் வகை வில்லங்கங்கள் விலகும். இளைய சகோதிர வகை, புத்திரர் வகை, முன்னேற்றம் வகையில் சங்கடங்கள் இருப்பினும் நன்மை ஏற்படும். கரும காரியம் நிகழும். குடும்பம், களத்திரம், முன்னேற்றம், தந்தையார் வகையில் செலவினங்கள், பயணங்கள் ஏற்படும். சிறந்த வகை இலாபங்கள், தனவரவுகள் காணப்படும்.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
விட கண்டங்கள், அவமானங்கள் இருந்த நிலை விலகும். பெயர், முன்னேற்றம், புகழ், அதிக முன்கோபம், இலாபங்கள் ஆகியன அமையும். பயணச் செலவினங்கள், குடும்பத்துடன், முன்னேற்றத்துடன் செலவினங்கள், வெளியூர் பயணங்கள் முதலியன அமையும். இளைய சகோதிர வகையில் சிரமங்கள் இருப்பினும் நன்மை.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பல சங்கடங்கள் இருந்த நிலை இனி முழுவதுமாக மாறும். பெயரில் முன்னேற்றங்கள், பெயர், புகழ், கௌரவம் முதலியன ஏற்படும். சிலருக்கு திருமணம், தொழிலில் வளர்ச்சி நிலை, உயரிய நிலைகள், பதவி மாற்றங்கள் ஆகியன ஏற்படும். பூர்வ புண்ணியத்தானங்கள் தொழில் தொடர்ந்த வெளியூர் பயணங்கள், சுப செலவினங்கள், புத்திரர்கள் வகையில் மனமகிழ்வினால் ஆதாயங்கள், இலாபம், பயணச் செலவினங்கள், தந்தையினால் செலவினங்கள், பயணங்கள், மூத்த சகோதிரர் வகை ஆதாயங்கள், நன்மைகள், இலாபங்கள், அதிக தனவரவு, குடும்பத்தில் மனமகிழ்ச்சி ஆகியன ஏற்படும்.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
கடினப்பட்டதற்கான முயற்சியில் இலாபம், ஆதாயங்கள், நன்மைகள் ஏற்படும். அதிக முன்னேற்றம், தொழில், வளர்ச்சி தொடர்ந்த நிலையில் சுப பயணங்கள், சுப செலவினங்கள், நுால், பதிப்பு, அச்சுத்துறை தொடர்ந்த செலவு, பயணங்கள் ஏற்படும். தொழிலில் பெருத்த மாற்றம், உயர்வு காணப்படும். அதனால் அலைச்சல் இருப்பினும் மனமகிழ்வு காணப்படும்.சகோதிரர் வகையில் நன்மை, ஆதாயம், இலாபம்,சில செலவினங்கள், பயணங்கள் ஏற்படும். தந்தை தம் தொழிலினால் மேன்மை, பிரசித்தி, பிரபல்யம், புகழ் ஏற்படும். அதன் வழி அரசாங்க ஆதாயங்கள், இலாபம், பதவி கிடைக்கவும் வாய்ப்பு ஏற்படும். 12 ல் உள்ள கிரகம் யாவும் நன்மையே.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
ஆடை, ஆபரணச்சேர்க்கை, புத்திர பிராப்தம், அவர்களால் மனமகிழ்வு, சிலருக்கு திருமணம், உயர்கல்வி, வளர்ச்சி, முன்னேற்ற நிலைகள் காணப்படும். 11 ல் பல கிரகங்கள் பயணிப்பதால் குடும்பம், மூத்த சகோதிரம், வழியில் பெருத்த இலாபங்கள், நன்மை, ஆதாயங்கள் கிடைக்கும். அவர்களுடன் மனமகிழ்வான வெளியூர் பயணங்கள், சுபச்செலவினங்கள் அமையும். இளைய சகோதிரம், புத்திரர், தொழில் தொடர்ந்த வகையில் மிகுந்த நன்மை, புகழ், தொழில் அமைய வாய்ப்பு அமையும். பதவியில் தலைமைப் பொறுப்பு, மேன்மை, அதிகார நிலை காணப்படும்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தொழிலில், இளைய சகோதிரர் வகையில் அதிக சுமை இருப்பினும் கௌரவம், மேன்மை, புகழ் ஆகியன காணப்படும். காது தொடர்ந்த வலிகள் குணமாகும். வாகன வசதிகள் ஏற்படும். இலாபம், அதிக வெளியூர் பயணங்கள், குடும்பத்தாருடன் சுபச்செலவினங்கள் ஆகியன ஏற்படும். தந்தை, குடும்பம், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம் வகைகளில் சில சங்கடங்கள், அவமானங்கள் சந்திக்க வேண்டி வரும்.
* * * * *

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.