கிரக பாதசாரங்கள்
சூரியன்3 – 12 மூலம், 13 – 25 பூராடம், 26 உத்திராடம் தனுசு, 29 – மகரம்.
சந்திரன் - மகம் – பூரம்..
செவ் - 3 விசாகம் – விருச்சிகம். 14 – 29 அனுடம், விருச்சிகம்.
புதன் - 2 – 8 கேட்டை – விருச்சிகம். 9 – 16 மூலம் – தனுசு, 17 – 25 பூராடம் – தனுசு, 26 – 28 உத்திராடம் – தனுசு, 29 – மகரம்.
குரு - 4 - 18 மூலம் 4, 19 பூராடம் 1 தனுசு.
சுக்கிரன் - 2 – 6 உத்திராடம் - மகரம். 7 – 17 திருவோணம், 18 - 22 அவிட்டம், மகரம், 23 அவிட்டம் கும்பம், 29 சதயம்.
சனி - 10 உத்திராடம் 4 தனுசு. 12 மேற்கே அஸ்தமனம்.
ராகு - திருவாதிரை 3 மிதுனம்.
கேது - பூராடம் 1 தனுசு.
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
எடுத்த யாவற்றிலும் சிரமங்கள் இருந்த போதிலும் வெற்றி கிடைக்கும். தொழிலில் மேன்மை, முன்னேற்றம், புத்திரர்களால் மகிழ்வு, வீட்டில் வாகன வசதிகள், சுகங்கள், மகிழ்வான கேளிக்கைகள், கடினப்பட்டதற்கான இலாபங்கள், ஆதாயங்கள், அலைச்சல், சிரமங்கள், கடுஞ்சொல், வாக்கில் நிதானம் தேவை. குடும்பத்தில் மனஸ்தாபங்கள், சில அவமானங்கள், இளைய, மூத்த சகோதிர வகையில் நன்மைகள், செலவினங்கள், ஆடை, ஆபரணச்சேர்க்கைகள் யாவும் அமையப்பெறும்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பத்தாருடன், புத்திரர்களுடன், அலைச்சலுடன் கூடிய தொலைதுார ஆன்மீக பயணங்கள், செலவினங்கள், ஆதாயங்கள், இலாபங்கள், தொழில் வளர்ச்சி தொடர்ந்த முன்னேற்றங்கள், கல்வி நிலை பயணங்கள், வாகன சுகங்கள், வீட்டில், தாயார், மூத்த சகோதரர்களால் மன மகிழ்வு ஆகியன சிறப்பாய் காணப்படும். கரும காரிய நிகழ்வு காணப்படும். தொழில் தொடர்ந்த நிலையில் அரசு தொடர்பு, வெளியூர் நிலையில் வாய்ப்பு அமையும்
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
களத்திரம், நண்பர்கள் இவற்றினால் வளர்ச்சி முன்னேற்றங்கள், வளர்ச்சி நிலைகள் ஏற்படும். முன்னேற்றத் தடைகள், சங்கடங்கள் இருப்பினும் மேன்மை, புகழ், கௌரவம், அந்தஸ்து மேம்படும். புத்திரர், வெளியூர் பயணங்களினால் கௌரவக்குறைவு, சில அவமானங்கள், நெருக்கடியான நிலை ஏற்படும். மூத்த சகோதரர் வகையில் நன்மை, ஆதாயம், இலாபம் ஏற்படும்.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தொழிலில் மேன்மை, முன்னேற்றம், நற்பெயர் அமைதல். வழக்கு, உடல்நிலை, எதிரி, களத்திரம், இளைய சகோதிரர் வகை தொடர்ந்த நிலையில் வெளியூர் பயணங்கள், செலவினங்கள், அலைச்சலுடன் கூடிய பயணங்கள். குடும்பத்தார், மூத்த சகோதிரர்களால் மன மகிழ்வு, ஆதாயம், இலாபம், புத்திரர்களால் சில சிரமங்கள், இலாபங்கள், சிறந்த தனவரவு ஆகியன அமையும்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
கௌரவம், புகழ் மேம்படுதல், சிறந்த தனவரவு, ஆதாயம், இலாபம், எதிர்பார்த்து எண்ணியது கிடைத்தல், களத்திரம், வழக்கு, வங்கிக்கடன், குடும்பம், மூத்த சகோதிரத்தால் ஆதாயம், இலாபம், நன்மை ஏற்படுதல், இளைய சகோதிரம், பணியில் அதிக சுமை காணப்படுதல், பொறுப்புகள் கூடுதல், அதன் வழி பயணங்கள், செலவினங்கள் அமைதல், அரசு தொடர்ந்த பணி சிறப்பாய் அமைதல், அதன் வழி இலாபம் அமைதல் ஆகியன காணப்படும். கரும காரியம் நிகழ்வு ஏற்படும்.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தொழிலில் பல மாற்றங்கள், முன்னேற்றங்கள், வளர்ச்சி நிலைகள் காணப்படும். சில அலைச்சலுடன் கூடிய சிறப்பான பயணங்கள், செலவினங்கள் மனமகிழ்வுடன் அமையும். இளைய சகோதிரத்தால் நன்மை, ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். குடும்பம், களத்திரம், புத்திரர், இவர்களால் மேன்மை ஏற்படும். தந்தையாரால் இலாபம் ஏற்படும்..
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பம், களத்திரம் தொடர்ந்த நிலையில் சிறந்த வகை இலாபங்கள், தனவரவுகள் காணப்படும். வளர்ச்சி முன்னேற்றங்கள், திருமணம் கூடி வருதல், உயர் கல்வி, வளர்ச்சி நிலை அமைதல், தந்தையார் வகையில், பாட்டன் சொத்து வகையில் ஆதாயங்கள், மிகுந்த புகழ், இலாபம், நன்மை கிடைக்கும். வீடு, வாகன சுகங்கள் ஏற்படும்.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சிறந்த தனவரவு, ஆதாயங்கள், இலாபங்கள் வீட்டில் மனமகிழ்வு முதலியன அமையும். சிலருக்கு அரசு பணி சிறப்பாய் அமையும். வாகனம், வீடு முதலியன சிறப்பாய் குடும்பத்தார், புத்திரர்கள், மூத்த சகோதிரர், தொழில், ஆகியவற்றினால் மேன்மை, தனவரவு, இலாபம், மகிழ்வு ஆகியன அமையும்.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
முன்னேற்றங்கள், வளர்ச்சிநிலைகள், திருமணம், புகழ், மரியாதை, வீடு, வாகன சுகங்கள், வாங்குதல், சிறந்த தனவரவு, இலாபம், குடும்பத்தில் மனமகிழ்வு, புத்திரர்களால் மனமகிழ்வு, தந்தையாரால் புகழ், மேன்மை, ஆலய சிறப்பு தரிசனங்கள், மடாதிபதிகளின் ஆசி ஆகியன யாவும் கிடைக்கும். புத்திரர்களால் மனமகிழ்வு, வெளியூர் உல்லாச பயணங்கள், அதிக செலவினங்கள், தொழிலில் நற்பெயர் ஏற்படுதல், மேன்மை யாவும் கிடைக்கப் பெறுவீர்.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பணியில், புத்திரர்களினால் முன்னேற்றம், மேன்மை, சிறந்த தனவரவு, அரசாங்கப் பணி கூடி வருதல், மூத்த சகோதிரர்கள், அரசாங்கம் தொடர்புடையவர்களால், மண், மனை ஆதாயங்கள், வீடு, வண்டி, வாகன சுகங்கள் அமைதல், பதிப்பு, கடன், வழக்கு தொடர்ந்த நிலையில் நல்ல ஆதாயங்கள், இலாபங்கள், நிலுவைத் தொகைகள் பெறுதல் வளர்ச்சி, முன்னேற்றம், தொழில் நிலை சிறப்பாய் மேம்பட்டு நிற்கும். பதிப்பு நிலைச் செலவினங்கள் வங்கிக்கடன் உதவியால் அமையும். எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி பெறும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெற்றோரால் வெளியூர் பயணங்கள், செலவினங்கள், அலைச்சல்கள் காணப்படும். மூத்த சகோதிரர், சாதகர் முயற்சி, புத்திரர்கள் ஆகியோரால் சுபச்செலவினங்கள், இலாபங்கள், இளைய சகோதிரம், தொழிலினால் மேன்மை, நன்மை, வளர்ச்சி, முன்னேற்றம், திருமணம் ஆகியன சிறப்பாய் அமையும்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பணியில் பல பொறுப்பு நிலை அமைதல், தொழிலில் ஊதியம் கூடுதல், சாதகரின் சிறப்பான முயற்சி பலிதம், தொட்டது அனைத்தினாலும் ஆதாயங்கள், இலாபங்கள், தாயார், களத்திரம், வீட்டாரால் மனமகிழ்வு, குடும்பம், பெற்றோரால், இளைய சகோதிரத்தால் நன்மை, இலாபம் கருதிய வெளியூர் பயணங்கள், வெகு புகழ் பெறுதல் ஆகியன சிறப்பாய் அமையும்.
* * * * *

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.