விளம்பி வருடம் - மாசி மாதப் பலன்கள்
முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை
கிரக பாதசாரங்கள்
சூரியன் - 1 - 6 அவிட்டம், 7 - 19 சதயம், 20 - பூரட்டாதி கும்பம்.
சந்திரன் - கிருத்திகை - மிருகசீரிடம்.
செவ்- 12 வரை அசுவினி, 13 முதல் பரணி மேடம்.
புதன் - 5 வரை சதயம், 6 - 15 - பூரட்டாதி, 13 முதல் மீன புதன். 16 - 26 உத்திரட்டாதி - மீனம். 21 ல் வக்ரம். 27 ல் மீனம்.
குரு - 8 முதல் கேட்டை 4 விருச்சிகம்.
சுக்கிரன் - 1 -8 பூராடம், 9 - 11 உத்திராடம் தனுசு, 12 - 20 உத்திராடம் மகரம், 21 திருவோணம் மகரம்.
சனி - 12 வரை பூராடம் 3, 13 முதல் பூராடம் 4 - தனுசு.
ராகு - 21 வரை புனர் 4, கடகம், 22 முதல் புனர் 3 மிதுனம்.
கேது - 21 வரை உத்திராடம் 2, மகரம், 22 முதல் உத்திராடம் 1 தனுசு.
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குழந்தைகள் வழி மகிழ்வு, இலாபம், கடன்கள், சுப நிகழ்வுகள், புதிய மனமாற்றங்கள், அதன் வழி சிறந்த அறிவு அனுபவம் பெறுதல், திருத்தங்கள், தவறுகளைக் கண்டு அஞ்சுதல், அதற்குரிய தண்டனை வழி இப்புதிய மாற்றங்கள் அவர்கட்கு ஏற்படும். இளைய சகோதிரம் வழி நன்மை, ஆதாயம் பெறுதல், இருப்பினும் 8ல் குரு தன் வாக்கினாலே பெயர் கெடச்செய்யும். அவமானங்களைத் தேடித்தரும். நேர்மையாய் இருப்பது மிக மிக அவசியம். குடும்பத்தில் குழப்பங்கள், மகிழ்ச்சியற்ற நிலை இருக்கும். நரம்பு, உயர் இரத்த அழுத்தம் தொடர்ந்த உடல் பாதிப்பு ஏற்படும். வழக்கினால் அவமானங்கள், செலவினங்கள் ஏற்படும். முரட்டுக்கோபம், குறுக்குச்சிந்தனைகள், தீய நட்பு தீமை தரும். விலகுவது நன்று. இல்லை எனில் அரசு தண்டனை, ஒறுத்தம் முதலியனவை உண்டு. ராகு கேது இடமாற்றமும் கருமத்திற்கு ஏற்ற பலனையேத் தரும். கரும காரியங்கள் நிகழும்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம் வழி சுப செலவினங்கள், வெளியூர் பயணங்கள், வீட்டில் சுப நிகழ்வுகள், பதவி முன்னேற்றங்கள், உயர் கல்வி வளர்ச்சி நிலைகள், எண்ணியது நிறைவேறுதல், தன வரவில் தடைகள், புத்திரர்களுடன் மூத்த சகோதிரருடன் கருத்து மாறுபாடு, அவரால் ஆதாய இலாபங்கள், தந்தை, தொழில்வழி சிறந்த இலாபங்கள், தனவரவு, சில இன்னல்கள், மர்ம உறுப்புகள் பாதிப்பு முதலியவை காணப்பெறும். சிலருக்கு திருமணம் கை கூடி வரும்.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பத்தில் தொல்லைகள் இருப்பினும் மனமகிழ்வு, மூத்த சகோதிரன், தந்தையால் ஆதாய இலாபங்கள் நன்மை ஏற்படும். விட, மரண கண்டங்கள், சாதகர், குழந்தைகள் வழி முதலியவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் வீண் செலவினங்கள், அவை தொடர்ந்த அலைச்சலுடன் கூடிய வெளியூர் பயணங்கள் ஏற்படும். வீண் அவமானம், வழக்கு தொல்லைகள் உண்டு. மூத்த சகோதரி, இளைய தாரத்தினால் நன்மை கிடைக்கும். களத்திரத்துடன் பலத்த தொல்லைகள் வர வாய்ப்பு உள்ளது. தந்தையாருடன் கருத்துப்பிணக்கு வரும்.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தாயால் நன்மை. வீண் செலவினங்கள், குழந்தைகள், களத்திரத்தினால், இளைய சகோதிரத்தினால், குடும்பம், வழக்குத் தொடர்ந்த நிலைகளில் செலவினங்கள், அவமானங்கள், இடர்கள் ஏற்படும். வழக்கில் வில்லங்கங்கள் ஏற்படும். புத்திரர்களுடன் கருத்து மாறுபாடு, சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாகனத்தடைகள், விலங்குகளினால் ஆபத்து ஏற்படும். அலைச்சல்கள், வெளியூர் பயணங்கள் அமையும். தொழில் வகையில் நிலைத்த மண்மனை, சொத்து, பழைய வீட்டினைப் புதுப்பித்தல், புதிய வீடு சிரமத்தின் பேரில் ஏதேனும் அமையும். வீட்டு வில்லங்கங்கள் முடிவுக்கு வரும்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தாயாருடன் கருத்துப்பிணக்குகள், தந்தையாரால் நன்மைகள் ஏற்படும். சிறந்த ஆதாய இராபங்கள், மூத்த சகோதிரரால் நன்மைகள், கருத்துப்பிணக்குகள், புத்திரர்களால் மகிழ்வுகள், வீட்டு சுப நிகழ்வுகள், இன்னல்கள் ஏற்படும். தடைபட்ட முன்னேற்ற வளர்ச்சி நிலைகள் சரியாகும். மகான்களின் ஆசி, உறக்கமின்மை, அலைச்சல்கள் உண்டு. இம்மாத இறுதியில் இந்நிலை மாறும். குழந்தைகள் வழி இடையூறுகள் ஆகியன ஏற்படும். தொழிலில் கடினம் காணப்படும். மந்தம், சோம்பல் நிலை ஆகியவை உண்டு.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வீட்டில் சுப நிகழ்வுகள், மனமகிழ்வுகள், வளர்ச்சி நிலைகள், உயர் கல்வி நிலை முதலியவை அமையும். பணியில் தொல்லைகள், பளு, அதிகாரிகளுடன் கருத்து மாறுபாடு ஏற்படும். இளைய, மூத்த சகோதிரத்தால் நன்மை, சிரமம் ஏற்படும். குடும்பத்தில் கடும் வாக்கு வாதங்கள், முன்கோபம் ஏற்படும். பூர்வ புண்ணிய நற்பலன்கள் சிறப்பாய் அமையும். தாய், தொழில் வழி சிரமங்கள், நன்மை ஏற்படும். வழக்கு, எதிரிகள் வழி வெளியூர் பயணம், செலவினம் ஏற்படும்.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
கௌரவம் தொடர்ந்த நிலையில் மகிழ்வு, முன்னேற்றம், செலவினங்கள், தந்தை, தந்தையார் வழி சிரமங்கள், கரும காரியங்கள், வாக்கு வாதங்கள் ஏற்படும். தாயாருக்கு உடல் நலிவு, இளைய சகோதிரத்துடன் கருத்துப்பிணக்குகள் உண்டு. களத்திரம், வளர்ச்சிநிலை, உயர்கல்வி தொடர்ந்த நிலைகளில் செலவினங்கள், வெளியூர் பயணங்கள் உண்டு. தொழிலில் பல வித மாற்றங்கள் நிகழும். பல வித சிறு வருமானம் உண்டு.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெயர், புகழ், கௌரவம், முன்னேற்ற வளர்ச்சி நிலைகள் ஆகியவை சிறந்து காணப்படும். வழக்கு, வில்லங்கம் முதலியவற்றில் வெற்றி, ஆதாயம், நன்மை உண்டு. புத்திரப்பேறு, குழந்தைகளால் நன்மை, வீட்டில் சுப நிகழ்வுகள், தந்தையால் ஆதாயங்கள், இலாபங்கள் ஏற்படும். குடும்பத்தில் வாக்குவாதம், கருத்துப்பிணக்குகள், தாயாருடன், இளைய சகோதிரத்துடன் கருத்து மாற்றம், தந்தையாருக்கு உடல் நலிவு, பின்னர் சுகம் ஆகியவை ஏற்படும்.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வண்டி வாகன சுகம், குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலைகள், வழக்குகளில் வெற்றி, தொட்ட செயல் யாவும் சிரமத்தின் பேரில் வெற்றி கிடைக்கும். சோம்பல், உடல் சுகமின்மை, முன்னேற்ற வளர்ச்சித்தடைகள், தந்தை, இளைய சகோதிரத்துடன் கருத்து மாறுபாடு, பலமின்மை, சிறந்த கடினப்பட்டதற்கான தனவரவு, முயற்சியற்ற நிலை, எதிலும் தயக்கம், புத்திரர்களால் மகிழ்வு, களத்திரம், தொழில் வழி நன்மைகள் ஏற்படும். கருத்து மாறுபாடுகளும் ஏற்படும்.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
நினைத்த செயல்கள் யாவும் நடைபெறும். தந்தை, தாய்மாமன், மூத்த சகோதிரம், தாயார், வழக்கு வழி ஆதாய இலாப நன்மைகள், தனவரவு ஏற்படும். சிறந்த தனவரவு அமையும். பதவி பொறுப்புகளுடன் கூடிய சிறந்த தொழில் நிலை மாற்றங்கள் சிறப்பாய் அமையும். தனவரவில் சிறந்த மாற்றம் இலாபமாய் அமையும். மனை மண், மனை வீடு வாசல் ஆதாயங்கள் சிறப்பாய் அதிர்ஷ்டகரமாய் அமையும். உடல் நிலையில் கவனம் தேவை. மகான்களின் ஆசி கிடைக்கும். விட கண்டங்கள் முதலியவற்றில் எச்சரிக்கைத் தேவை.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பதவியில் பொறுப்பான நிலைகள் கடினமானதாய் அமையும். இளைய சகோதிரம், தொழில், தந்தை வழி நன்மை, இலாபம், ஆதாயம் ஏற்படும். சிலருக்குப் பதவி பறிபோய் வேறு மாற்றம் நிலை ஏற்படும். அல்லது பதவியில் கடினமான நிலை அமையும். களத்திரத்தினால் வளர்ச்சிகள், தடைகள், இளைய சகோதிரத்தினால் நன்மை, மூத்த சகோதிரம், புத்திரர்கள் வழி சிரமங்கள், மகிழ்வு, நன்மைகள், செலவினங்கள் அமையும். கடின உடல் உழைப்பினால் உடல் அசதி, அலைச்சல், உறக்கமின்மை, விட கண்டங்கள், மாறுபட்ட மனம், வாழ்க்கையில் பற்றற்ற நிலை ஆகியன அமையும்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பணி, பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து ஆகியன வெகு சிறப்பாய் அமைதல், வழக்கு, எதிரிகள், தொழில் வழி செலவினங்கள், வெளியூர் பயணங்கள் ஏற்படும். இளைய சகோதிரத்தினால் மிகுந்த நன்மை, களத்திரத்தால் மகிழ்வு, தொழிலில் இடையூறுகள், தாயாருக்கு நலிவு, அறுவை சிகிச்சை, குடும்பத்தில் சுகக்குறைவுகள், சிறந்த தனவரவு, தந்தை, தொழில் வழி ஆதாய இலாபம், நன்மைகள் ஏற்படும்.
* * * * *

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.