விளம்பி வருடம் - பங்குனி மாதப் பலன்கள்
முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை
கிரக பாதசாரங்கள்
சூரியன்1 - 3 பூரட்டாதி, 4 - 16 உத்திரட்டாதி, 17 ரேவதி மீனம்.
சந்திரன் - திருவாதிரை - ஆயில்யம்.
செவ்- 2 பர, 3 -7 கிருத், மேடம், 8 - 22 கிருத், ரிஷபம், 23 - ரோகிணி ரிஷபம்.
புதன் - பூரட்டாதி, 14 வக்ர நிவர்த்தி. 27 வரை கும்பம், 28 பூரட்டாதி 4 மீனம்.
குரு - 14 வரை கேட்டை4, விருச், 15 மூலம் 1 தனுசு. 27 ல் வக்ரம்.
சுக்கிரன் - 2 - 6 அவிட்டம் மகரம், 7 - 12 அவிட் கும்பம், 13 - 23 சதயம், 24 பூரட்டாதி கும்பம்.
சனி - பூராடம் 4 தனுசு.
ராகு - புனர்பூசம் 3 மிதுனம்.
கேது - உத்திராடம் 1 தனுசு.
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இளைய, மூத்த சகோதிரம், தொழில், இலாபம் ஆகியவற்றில் சிக்கல்கள், தடைகள், வளர்ச்சி முன்னேற்றங்களில் சிறிய இலாபம், கடன் வழி ஆதாயம், நன்மைகள், தன் கடும் வாக்கினால் இடையூறுகள், குடும்பத்தில் சண்டை சச்சரவுகள், பின்னர் சமாதானம் அடைதல், இருப்பினும் துன்பம் நிலவும். புத்திரர்கள் வகையில் செலவினங்கள், வெளியூர் பயணங்கள் ஏற்படும். எதிர்பாராத கடன், வம்பு வழக்குகள் ஏற்படும். தந்தை வழி பிணக்குகள் ஏற்படும்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
களத்திரம், வளர்ச்சி முன்னேற்றங்கள் வழி சுபச்செலவினங்கள், வெளியூர் பயணங்கள் மனம் மகிழ்ச்சி தரும் வகையில் அமையும். தாயார் வகை ஆதாய அனுகூலங்கள், குடும்பம், அறிவு, புத்திரர் வகை மகிழ்வுகள், இலாபம் ஏற்படும். தொழில் வகையில் புதிய முயற்சியில் வெற்றி, முன்னேற்றங்கள் ஏற்படும். திருமணத்தடை விலகும். சிலருக்கு குடும்ப பந்தம் மகிழ்வு முதலியன அமையும்.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
கிரகத் தடைகள், மந்த புத்தி, மனத்தடுமாற்றம், உடல் நலிவு ஆகியவை ஏற்படும். தந்தை, பிதுர் தோடம், மூத்த சகோதிரம் கருத்துப்பிணக்கு, இலாபத்தில் தடைகள், கடன், நோய், வம்பு வழக்கு தொடர்ந்த வழி மிகுந்த செலவினங்கள், இளைய சகோதிரம் உடல் நலிவு, பின்னர் சுகம் அடைதல் ஆகியன ஏற்படும்.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தந்தை, எதிரிகள், கடன், வம்பு வழக்கு வழி கவனம் தேவை. சிரமங்கள் இருக்கும். களத்திரம், வளர்ச்சி முன்னேற்றம் வழி இடையூறுகள், உடல் நலிவு இருக்கும். தாயாரால் ஆதாய அனுகூலம், நன்மைகள் ஏற்படும். இளைய சகோதிரத்தினால் நன்மை அமையும். வெளியூர் பயணங்கள், செலவினங்கள் இவர்களால் அமையும். பொன், பட்டு, வெள்ளி முதலியன சிலர் வாங்குவர். உறக்கமின்மை, மனச்சஞ்சலங்கள், பயணத்தடைகள், அலைச்சல்கள் காணப்படும்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
முன்னேற்றத்தடைகள், களத்திரம், வளர்ச்சித் தடைகள், உடல் நலிவுகள் காணப்படும். புத்திரர்கள் வழி உடல் நலிவுகள், மருத்துவச் செலவினங்கள், எதிர்பாராத கடன், வழக்குகள் அமைதல் ஏற்படும். வாக்குத் தடைகள், குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற நிலை, பெற்றோரால் செலவினங்கள், தொழில் வகை ஆதாயங்கள், பணியில் பல நிலைகளில் வருமானம் பெறுதல் அமையும். நேர்மையாய் இருப்பது மிக அவசியம். கவனம் தேவை. கௌரவக் குறைவு ஏற்படும்.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
உடல் நலிவு, மனக்கஷ்டம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்வு, சிறந்த தனம் ஏற்படும். தந்தையால் ஆதாயம் ஏற்படும். வண்டி வாகனத் தடைகள் சில கருத்துப் பிணக்குகள், புத்திரர்கள், எதிரிகள், வம்பு வழக்கு வழி அமையும். களத்திரத்தால், வளர்ச்சி முன்னேற்றத்தினால் சிக்கல்கள், அதிக வேலைப்பளு ஆகியன ஏற்படும். சிலருக்குப் பணி பறி போகும். இடையூறுகள் ஏற்படும். சிரமத்தின் கடின முயற்சியின் வழி நன்மை ஏற்படும். பணியில் பல நிலைகள், மாற்றங்கள், தடைகள் காணப்படும்.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
புத்திரர், இளைய சகோதிரம், தாயார், கடன்கள், வம்பு வழக்குகள், எதிரி வழித் தடைகள், சிரமங்கள், கருத்துப் பிணக்குகள் ஏற்படும். சிரமத்தின் பெயரில் பொன் பொருள் சேரும். பெண்களால் ஆதாயம் அனுகூலம் உண்டு. மிகுந்த இலாபம் கிடைக்கும். எதிரி வழக்கு வழி பெருத்த இலாபங்கள் ஏற்படும். குடும்பம், களத்திரம் வழி துன்பங்கள், அவமானங்கள் நேரும். இலாபம் இருந்த போதிலும் தந்தை, வெளியூர், தொடர்ந்த செலவினங்கள், பயணங்கள் அமையும்.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இரண்டாமிடம் பலம் பெறுவதால் குடும்பத்தில் குழப்பம், மன அமைதியின்மை, சண்டை சச்சரவுகள், பற்றற்ற நிலை, இளைய சகோதிரத்துடன் பிணக்குகள், தாயாருக்கு உடல் நலிவு, எதிர்பாராத இழப்புகள், அறுவை சிகிச்சைகள், மனம் பேதலித்தல் ஆகிய சூழல் நிலவும். தொழிலில் இலாபமற்ற நிலை, சிரமங்கள் ஏற்படும். களத்திரம், வளர்ச்சி முன்னேற்ற நிலைகளில் சங்கடமான நிலைகள், கடும் முயற்சிகள் எடுக்க வேண்டி வரும்.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வளர்ச்சி முன்னேற்றங்கள், களத்திரம், கல்வி நிலைகளில் எடுக்கும் முயற்சிகளில் தடைகள், கடின நிலைகள், புத்திரர்கள், இளைய சகோதிரத்துடன் பிணக்குகள், மூத்த சகோதரர், கடன் வம்பு வழக்கு வழி ஆதாய நன்மைகள், ஆகியன மாறி மாறி நிலவும். புத்திரர் வழி வெளியூர் பயணங்கள், செலவினங்கள் ஏற்படும். பெற்றோர் தந்தையார் உடல் நலன் நிலை மாற்றம் இருக்கும். திருமணத்தடைகள், சுபநிகழ்வுத் தடைகள் காணப்பெறும். தொழிலில் மந்த நிலை காணப்பெறும்.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தொழில், தனவருவாயில் எதிர்பாராத திடீர் நல்ல இலாபம் மாற்றம், அழகிய ஆடை ஆபரணங்கள் அணிதல், கற்ற கல்வி தொழிலினால் மேன்மை அடைதல், உடல் நலனில் கவனம் தேவை. சுவாசத்தடைகள், வயிற்று வலி, இளைய சகோதிரத்துடன் கருத்துப் பிணக்குகள், விட விலங்குகளினால் ஆபத்து, உறக்கமின்மை, பயணங்களில் மன அமைதியின்மை, மனம் பற்றற்ற நிலை, தாயாருடன் கருத்து மாறுபாடு, தந்தை, தாய்மாமன், எதிரி வகை வழி துன்பம், மூத்த சகோதிரத்தால், தாயாரால் நன்மை, இலாபம் ஆகியன ஏற்படும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெற்றோரால் நன்மை ஏற்படும். தொழில், இளைய சகோதிரம், களத்திரம், வளர்ச்சி முன்னேற்றத்தால் நன்மைகள், இலாபங்கள் ஏற்படும். குடும்பம், மூத்த சகோதிரம் வழி பயணங்கள், செலவினங்கள் ஏற்படும். அறுவை சிகிச்சை, உடல் நலிவு, விட கண்டங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. துணையுடன் கருத்துப்பிணக்கு ஏற்படும்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சிறந்த தைரியம், கர்வம், களத்திரம், தாயாருக்கு உடல் நலிவு, வளர்ச்சி முன்னேற்றங்களில் தடைகள், சிரமங்கள், தந்தையார், குடும்பம் தொடர்ந்த நிலையில் நன்மை, இளைய சகோதிரத்தால் நன்மை, ஆதாயங்கள் மகிழ்வு ஏற்படும். செலவினங்கள், பயணங்கள் சிறப்பாய் அமையும். சில அவமானங்கள் ஏற்படும். இளைய சகோதிரத்துடன் பிணக்கு ஏற்படும். முன்னேற்றத்தில் தடைகள், கௌரவக் குறைவுகள் காணப்பெறும்.
* * * * *

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.