கிரக பாதசாரங்கள்
சூரியன்1 -10 கிரு, 11 - 24 ரோகி, 25 - 31 மிரு, ரிடபம், 32 - மிது.
சந்திரன் - உத்ர - விசாகம்.
செவ்- 3 - 23 திருவா, 24 புனர் - மிது.
புதன் - 1 -2 பர, 3 மேட, 4 - 8 கிரு, ரிட, 9 - 14 ரோகி, ரிட, 15 - 17 வரை மிருக, ரிடப, 21 - மிது, 22 -29 திருவா, 30 - புனர். மிது.
குரு - வக்ரம். 16 வரை கேட்டை 4, 17 - கேட்டை 3 விரு.
சுக்கிரன் - 2 - 6 அசு, 7 - 17 பர, 18 - 20 மேட, 21 - 28 கிரு, 29 ரோகி, ரிடபம்.
சனி - பூராடம் 4 தனுசு. வக்ரம்.
ராகு - புனர்பூசம் 3 மிதுனம்.
கேது - பூராடம் 4 தனுசு.
சனி (வ), கேது, செவ், ராகு, குரு (வ) ஆகிய கிரக நிலைகள் சேர்க்கை பொதுவாக சரியான அமைப்பினில் இல்லை. இவை எப்போதும் தீமையே. இறைபலன் வேண்டுவதே நன்மையைத் தரும்.
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வீட்டில் சுப நிகழ்வுகள், சுபப்பொருட்கள் சேருதல், தந்தை, பெற்றோர் வகையில் கரும காரியம் நிகழ்தல், பீடை காட்டுதல், உடல் நலிவு, உணவு சரிவர உண்ண இயலாமை, இளைய, மூத்த சகோதிரத்துடன் கருத்து மாறுபாடு, தந்தை, செலவினங்களில் எதிர்பார்த்தபடி செய்ய இயலாமை, செயலற்ற நிலை, கடன், வம்பு வழக்குகளில் செலவு ஏற்படுதல், புத்திரர்களால் தனலாபம், அவர்கட்குப் உடல் பீடை காட்டுதல், தன் வாக்கினால் தானே அவப்பெயர் தேடிக்கொள்ளல் ஆகியன நிகழும்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தாயார், வீடு வாகனம் முதலியவற்றால் ஆதாயம், மகிழ்வு, கௌரவம் ஏற்படுதல், வீட்டில் சுபபொருட்கள் வாங்குதல், உடல், வீடு, கௌரவம் தொடர்ந்த நிலையில் திடீர் சுப, அசுபச் செலவினங்கள், வெளியூர்ப் பயணங்கள், குழந்தைகள், குடும்பத்தாரால் தனவரவு, மகிழ்வு, கௌரவம், மரியாதை ஏற்படுதல், சுபமாய் அதிர்டகரத்துடன் திருமணம், முதலிய சுப நிகழ்வுகள் சில இடையூறுகள் இருப்பினும் நடக்கும். பற்கள், தொண்டை வலி, விடம் தொடர்ந்த கண்டங்கள், நரம்பு பாதிப்புகள், இலாபத்தில் செயலற்ற நிலை சில தடைகள், சிக்கல்கள் இருக்கும்.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குறுக்கு எண்ணங்கள், சிந்தனைகள் தோன்றும். அவ்வழிச் செல்லாது இருப்பின் நன்மை. இல்லை எனில், உடல் பீடை காட்டும். வளர்ச்சி, முன்னேற்றம், தொழில், சுப நிகழ்வுகளில் பல தடைகள் ஏற்படும். சில காலம் செயலற்ற நிலை இருக்கும். இலாபங்கள், புத்திரர்கள் வகையில் மகிழ்வான ஆதாயம், நன்மை, இலாபங்கள் கிடைக்கும். சாதகர், இளைய சகோதிரம், நகை, ஆடை, தாயார் வகையில் மகிழ்வான சுபச்செலவினங்கள், வெளியூர்ப் பயணங்கள் ஏற்படும். மூத்த சகோதிரத்தால் ஆதாயம், இலாபம், மண் மனை ஆதாயங்கள் சிரமத்தின் பேரில் ஆகியவை ஏற்படும்.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
புதிய வீடு வாங்குதல், வீட்டு உபயோகப் பொருட்கள் முதலியன வாங்குதல், சிறந்த தனலாபம், அரசாங்க ஆதாய அனுகூலங்கள், அதன் வழிச் செலவினங்கள், இளைய சகோதிர வழி ஆதாயங்கள், இலாபம், கடன், வம்பு, வழக்குகள், நோய் முதலியனவற்றினால் தொல்லைகள், இரத்த அழுத்த மாறுபாடு, குழந்தைகள், தொழில் இவற்றில் இடையூறு, அலைச்சலுடன் கூடிய வெளியூர்ப் பயணங்கள், உறக்கமின்மை, குறுக்கு எண்ணங்கள், சிந்தனைகள் அதனால் அவமானங்கள், தொல்லைகள், களத்திரம், வளர்ச்சி முன்னேற்றங்களில் அவமானம், சிரமங்கள் ஏற்படும்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பணியில் திருப்பம், வளர்ச்சி, முன்னேற்றம், தனவரவில் சிறந்த ஆதாய அனுகூலங்கள், தொழிலுக்கு, மூத்த சகோதரி வகையில் முதலீடு செய்ததன் வழி இலாபம், மூத்த, இளைய சகோதரி வகையில் இலாபம், அதன் வழி வெளியூர்ப் பயணங்கள், குடும்பத்தாருடன் மனமகிழ்வான நிலை முதலியன அமையும். புத்திரர்களால் சிரமங்கள், ஆயுள் கண்டம் பீடை காட்டுதல், செயலற்ற நிலை ஆகியன அமையும்.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சாதகர், தந்தை, தொழில் வகையில் ஆதாயங்கள், மகிழ்வான வெளியூர்ப் பயணச் செலவினங்கள், இளைய சகோதிர வகையில் சிரமங்கள், கரும காரிய நிகழ்வுகள், ஆயுள் கண்டப்பீடை, புத்திரர் வகையில் சில சிரமங்கள், வாகனத் தடைகள், தாயார் வழி துன்பம், உடல் நலிவு, அறுவை சிகிச்சை, கண்டங்கள் அமையும். இருப்பினும், குடும்பத்தில் அமைதி நிலவும். மூத்த சகோதிரம், இளைய தாரம், நட்பு வட்டாரம் வழி நன்மை கிடைக்கும்.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இளைய சகோதிரம், புத்திரர், பெற்றோர், குடும்பம் வகையில் அவமானங்கள், சிரமங்கள், களத்திரத்திற்கு அறுவை சிகிச்சை, உயிர் கண்டங்கள், பெண்கள் தொடர்ந்த வகையில், மூத்த சகோதிர வகையில், நம்பினவர்களினால், இளைய தாரம் இவற்றினால் அவமானம், தந்தையாருடன் அதிக கருத்துப் பிணக்குகள், அவருக்கு கண்டங்கள், செயலற்ற நிலை, ஆடம்பரமாக உல்லாசச் செலவுகள் செய்தல், வயிறு, நரம்புகள் பாதிப்பு ஆகியன அமையும். இளைய சகோதிரம், நோய், கடன், வம்பு வழக்குகள் தொடர்ந்த நிலையில் கௌரவத்தின் பேரில் கடன் எல்லையற்ற நிலையில் அமையும்.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தனவரவில், சில காலங்கட்குத் தடை, செயலற்ற நிலை, குழந்தைகள் வழியில் சிரமங்கள், குடும்பத்தில் கடும் வாக்குவாதம், மன அமைதியின்மை, இளைய சகோதிர வகையில் பிரச்சினைகள், பற்கள், தொண்டை இவற்றில் கோளாறுகள், களத்திரம், வெளியூர்ப் பயணங்கள் இவற்றினால் திடீர் கடன், செலவினங்கள், விட கண்டங்கள் ஏற்படுதல், சாதகருக்கு அறுவை சிகிச்சை முதலியன அமைதல், தொழிலில், மூத்த சகோதரியால் ஆதாயம், இலாபம், நன்மை அடைதல் ஆகியன அமையும்.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வளர்ச்சி, திருமணம், முன்னேற்றத் தடைகள், உடல் நலிவு, மனச்சோர்வு, இளைய சகோதிரம் வகையில் பீடை காட்டுதல், பற்றற்ற நிலை, எதிலும் பிடித்தம் இல்லாமை, செலவினங்கள் களத்திரம், சாதகர் வழி கடன், அறுவை சிகிச்சை முதலியன அமைதல் பணியில் கடின நிலை, மனம் இரண்டும் கலந்த நிலை ஆகியன அமையும்.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சாதகர் உடலில் சிறிது சிறிதான முன்னேற்றங்கள், ஏழரைச்சனி இருப்பினும் கெடுதல் கிடையாது. தந்தை, புத்திரர்களால் மகிழ்வு, இலாபம், வீடு, வண்டி வாகனம் முதலிய சுபப்பொருட்கள், பணியில் மகிழ்வான நிலை முதலியன சிறப்பாய் அமையும். பத்திய உணவுகள், சரியான உறக்கம், ஆன்மீக நெறி நிற்பின் யாவும் நன்மையே. சிலருக்குக் கடன், நோய், வம்பு வழக்குகள் வலுப்பெறுதல். விட கண்டங்கள், அறுவை சிகிச்சை முதலியன அமையும். முறையாய் இருப்பின் இறை பலனினால் நன்மை அடையலாம். சித்த வைத்தியம், புற்று வழிபாடு, மகான்கள் தரிசனம் நன்மை தரும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
புத்திரர் வகையில் சிரமங்கள், இலாபத்தில், முன்னேற்றத்தில், இளைய தாரம், நட்பு வட்டாரங்களில், மூத்த சகோதிரத்தால் தடைகள் ஏற்படும். பெற்றோர், பெண்கள் வகை அவமானம், வீட்டில் மன மகிழ்வுகள், சில சிரமங்கள், பெரியோர்கள் வகையில் ஆன்மீகப் பயணங்கள், உடல் அசதி, நலிவு ஆகியன அமையும்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பணியில் இடையூறுகள், குடும்பத்தில் அமைதியின்மை, வண்டி வாகனத் தடைகள், தாயாருக்கு அறுவை சிகிச்சைக் கண்டங்கள், இளைய சகோதிர வகையில் தனவரவு, அவமானங்கள், சிரமங்கள், பெற்றோர், களத்திரம் வகையில் சிரமங்கள் ஆகியன அமையும்.
* * * * *

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.