சார்வரி வருடம் - மார்கழி மாதப் பலன்கள்
முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை
கிரக பாதசாரங்கள்
சூரியன் 1 – 12 மூலம், 13 – 25 – பூராடம், 26 உத்திராடம் - தனுசு.
சந்திரன் - பூராடம் - உத்திராடம்.
செவ்- 8 ரேவதி 4 ல் மீனம். 9 – அசுவினி – மேடம்.
புதன் - 2 - 9 மூலம், 10 – 17 - பூராடம், 18 – உத்திராடம் – தனுசு, 20 – 25 உத்திராடம் மகரம். 26 ல் திருவோணம்.
குரு - 8 – 21 உத்திராடம் 4 ல், 21 ல் மகரம். 22 திருவோணம் 1 ல் மகரம்.
சுக்கிரன் - 1 – 8 அனுடம், 9 – 18 ல் கேட்டை விருச்சிகம், 19 – மூலம் தனுசு.
சனி - 8 உத்திராடம் 3, 9 – உத்திராடம் 4 ல் மகரம்.
ராகு - 18 – மிருகசீரிடம் 1 ரிடபம்.
கேது - 18 – கேட்டை 3 விருச்சிகம்.
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வாக்குவாதங்கள், சண்டை சச்சரவு கட்டுக்குள் இருக்கும். முன் கோபத்தை கட்டுப்படுத்தினால் நன்மை ஏற்படும். நோய், கடன், வம்பு வழக்குகள் வலுத்துக் காணப்பெற்றாலும் குருவின் பார்வையினால் சற்று ஆறுதல், நன்மை அமையும். இளைய சகோதிரம், புத்திரர் வகையில் நன்மை, ஆதாயம், வயிற்று வலி, அவமானம் ஆகியன அமையும். தொழில், இலாபம், தந்தை அவர்கள் தொடர்ந்த உறவில் இழப்பு, பெருத்த நட்டம், கரும காரியம், அவமானம் ஏற்படும்.
மாணவர்கள், படிப்பில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக சிரத்தை முயற்சியின் பேரில் பள்ளி கல்வி, உயர்கல்வி, மேல் நிலை தொடர் கல்வி வாய்ப்பு கிடைத்ததை கவனமாய் பயன்படுத்திக் கொள்ளவும்.
பெண்களுக்குக் கருச்சிதைவு, புத்திரர் இழப்பு, அறுவை சிகிச்சை, உடல் உபதைகள் ஆகியன அமையும்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தந்தையினால் ஆதாயம், தொழிலில் மேன்மை, நன்மை, சிறிது சங்கடங்கள் இருப்பினும் நன்மை, குழந்தைகள், குடும்பம். வண்டி வாகனம் வகையில் அவமானம், பெருத்த நட்டம், இழப்பு புதிய செலவினங்கள், வெளியூர்ப்பயணங்கள், கடன், வம்பு வழக்குகள் ஆகியன அமையும். தொழிலில், இலபங்களில் முடக்கம், சிறிது மந்த நிலை காணப்படும். இருப்பினும் தடைகள் விலகி நன்மை அமையும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. இலக்னாதி, குருவின் பார்வையினால் நன்மை அமையும். இளைய சகோதிரத்துடன் கருத்து மாறுபாடு அமைந்து பின்னர் விலகும்.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தொழில், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம், தந்தை, தந்தை வழியினர், உயர்கல்வி ஆகிய பெருத்த இலாபங்கள், மகான்களின் ஆசி, ஆன்மீக பயண தரிசனம், புத்திரர்களுக்கு சில சங்கடங்கள், சிறந்த தைரியம் வகையில் பெருத்த அவமானம், இழப்பு, நட்டம் ஏற்படும். இளைய சகோதிரம், சாதரின் முயற்சி, குடும்பம் வகையில் மேன்மை, நன்மை அமையும். தொழிலில் மந்தநிலை, கரும காரிய நிகழ்வு, இழப்பு, நட்டம், இரண்டாம் தர வண்டி, வாகனம், வீடு வாங்குதல், வீட்டில் மூதாதையர் கரும காரிய நிகழ்வு, புத்திரர் வகையில் வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள், உறக்கமின்மை ஆகியன அமையும். இருப்பினும் ஆன்மீக வழிபாடு, நுால்கள் படித்தல் மிகுந்த நன்மை தரும்.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெற்றோர் வகையில் ஆடை ஆபரணச்சேர்க்கை அமையும். தொழிலில் பல தரப்பட்ட மாறுபாடு, முறையற்ற வருமானம் அமையும். கவனமுடன் இருத்தல் நன்மை தரும். களத்திரம், வளர்ச்சி, உயர்கல்வி வகையில் நன்மை. தீமை ஆகிய இரண்டும் கலந்த நிலைமை, எதிரி தந்தை வழி இழப்பு, நட்டம், அவமானம் அமையும். இளைய சகோதிரம், குடும்பம், தாய்மாமன், எதிரி வகையில் அதிக செலவினங்கள், வெளியூர்ப்பயணங்கள் அமையும். தந்தை, கடன், வழக்கு, தாய்மாமன், தந்தை வழியினர் வகையில் பிணக்குகள், அவமானங்கள், வில்லங்கங்கள் ஆகியன அமையும். தாயார், மூத்த சகோதிரம், இலாபம் வகையில் சில சங்கடங்கள், கரும காரியம் ஆகியன அமையும்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பம், மூத்த சகோதிரம், சாதகர் முயற்சி வகையில் நன்மை, இலாபம், ஆதாயம் அமையும். இளைய சகோதிரம், தொழில் வகையில் தடைகள் இருப்பினும் நன்மை ஏற்படும். உறவினர், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம் வழியில் இடையூறுகள் ஏற்படினும் இறைவழிபாடு நன்மை தரும். அவை தொடர்ந்த பயணங்கள், செலவினங்கள் அமையும். சுமாரான தனவரவு இருக்கும். தந்தை வழி மூதாதையர் கரும காரியங்கள் நிகழும்.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சாதகருக்கு சிறிது வளர்ச்சி, முன்னேற்றங்கள், வீட்டில் கருமம் காரியம் தொடர்பான சிரமங்கள், செலவினங்கள், தந்தையார் வகையில் சில கண்டங்கள், உடல், நரம்பு உபாதைகள், கடின உழைப்பிற்கான முறையான இலாபங்கள். புத்திரர் வகை இலாபங்கள் ஆகியன அமையும். குடும்பத்தினர், பெற்றோர் வகையில் திடீரென இழப்புகள், செலவினங்கள், தந்தையுடன் கருத்துப்பிணக்குகள், வழக்கு வில்லங்கம், இளைய சகோதிரம் வகையில் இலாபம் ஆகியன அமையும். விரதங்கள், இலட்சுமி வழிபாடு நன்மை தரும்.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தொழிலில், மூத்த சகோதரி வழியில் தனவரவு, இலாபம், ஆதாயம் ஆகியன அமையும். செலவினங்கள், திருமணம், வளர்ச்சியில் சில தடைகள் ஆகியன ஏற்பட்டு விலகி நன்மையாய் வெளியூர்ப்பயணங்களுடன், செலவினங்களுடன் சிறப்பாய் அமையும். குடும்பம், புத்திர வகையில், இழப்பு, சில நலிவு, நட்டங்கள், உடல் உபாதையினால் செலவினங்கள் ஆகியன அமையும்.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
ஆன்மீகச்சிந்தனை, பற்றற்ற நிலை, விரதம், பத்தியமிருத்தல், தாயார், குடும்பம், இளைய சகோதிரத்துடன் நல்ல நிலைமை ஆகியன அமையும். தொழிலினால் நல்ல இலாபங்கள், மகிழ்ச்சி, சில சங்கடங்கள் அமையும். பல வளர்ச்சி, முன்னேற்றம், திருமணம் முதலானவற்றில் பல தடைகள் இருப்பினும் விலகி நன்மையாய் அமையும். பரிசு, பாராட்டு, புகழ், அரசு கௌரவித்த இலாபங்கள், ஆதாயங்கள் ஆகியன எளிமையாய் அமையும்.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தந்தையினால் பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து, மேன்மை, நற்பெயர், வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியன அமையும். புத்திரர், வகை வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் அமையும். விட கண்டங்கள், சில தடைகள் ஏற்படும். ஆன்மீகப் பயணம், மூத்த சகோதிரம் வகையில் செலவினங்கள், வெளியூர்ப்பயணங்கள் ஆகியன அமையும். சிலருக்கு அரசாங்கப்பணியில் இலாபங்கள், வர வேண்டிய தொகை வந்து சேரும்.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து மேம்படும். உடல்நலனில் கவனம் தேவை. தாயார், குடும்பம், மூத்த சகோதிரர் வகையில் ஆதாயம், இலாபம், நன்மை ஏற்படும். அரசாங்க ஆதாய அனுகூலங்கள் அமையும். தொட்டது அனைத்திலும் வெற்றி, சிறந்த தைரியம் ஆகியன அமையும். தந்தையார், தாய்மாமன் வழி, உடல்நலம் வகையில் செலவினங்கள், வெளியூர்ப்பயணங்கள் ஆகியன அமையும். எப்போதும் நேர்மையே இவர்களுக்கு நன்மை தரும். தாயார், குடும்பத்தார், வளர்ச்சி, முன்னேற்றங்கள், மேற்படிப்பு, திருமணம், புத்திரபாக்கியம் ஆகியன சிறப்பாய் அமையும்.
சகோதிரர் வகையில் தந்தையார் உதவியுடன் ஆதாய அனுகூலங்கள், சிறந்த தைரியம், ஆடை, ஆபரணச்சேர்க்கை, தந்தை தம் தொழிலினால் மேன்மை, தனவரவு, கற்ற கல்விக்கு ஏற்ற தொழிலினால் சிறந்த இலாபம், மேன்மை, சிலருக்கு அரசாங்கப்பணி ஆகியன அமையும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வளர்ச்சி, முன்னேற்றம், குடும்பம், மூத்த சகோதிரம் வகையில் வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் ஆகியன அமையும். புத்திரர், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம் வகையில் சிறந்த இலாபங்கள் அமையும். கரும காரிய நிகழ்வு தாயார் வழி வகையில் அமையும். குடும்பத்தில் பிணக்குகள் ஏற்படினும் விலகி நன்மையாய் முடியும். பெற்றோர் வகையில் மிகுந்த ஆதாயங்கள், நன்மை ஏற்படும்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வளர்ச்சி, முன்னேற்றம், திருமணம், உயர் கல்வி ஆகியன சிறப்பாய் அமையும். தாயார், குடும்பம், களத்திரம், வளர்ச்சி வழியில் மிகுந்த நன்மை ஏற்படும். மேற்படிப்பு, உயர் கல்வி நிலைகள், தொழிலில் தொடர்ந்த கல்வி முன்னேற்ற வளர்ச்சி நிலைகள் ஆகியன அமையும். குடும்பம், தந்தையார் வகையில் பெருத்த அவமானங்கள் அமையும். இளைய சகோதிரத்துடன் கருத்துப் பிணக்கு இருப்பினும் நன்மை அமையும்.
* * * * *

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.