விகாரி வருடம் - மாசி மாதப் பலன்கள்
முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை
கிரக பாதசாரங்கள்
சூரியன் 1 – 6 அவிட்டம், 7 – 20 சதயம், 21 பூரட்டாதி – கும்பம்.
சந்திரன் - அஸ்தம் – சுவாதி.
செவ்- 5 – 14 மூலம், 15 – பூராடம் – தனுசு.
புதன் - 5 வக்ரம். 19 – சதயம், 20 அவிட்டம், 27 வக்ர நிவர்த்தி. – கும்பம்.
குரு - 7 – 23 பூராடம் 4, 24 உத்திராடம் 1, தனுசு.
சுக்கிரன் - 2 – 4 உத்திரட்டாதி, 5 – 15 ரேவதி – மீனம், 16 – 27 அசுவினி. 28 - பரணி – மேடம்.
சனி - 10 உத்திராடம் 3, மகரம்.
ராகு - திருவாதிரை 2, மிதுனம்.
கேது - மூலம் 4, தனுசு.
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
கௌரவம், மேன்மை, ஆடை ஆபரணச் சேர்க்கை அமையும். நரம்புத் தளர்ச்சி, இரத்த அழுத்த மாறுபாடு முதலிய சில உபாதைகள் இருக்கும். தந்தையாருடன் கருத்து மாறுபாடு இருப்பினும் நன்மை நடைபெறும். வளர்ச்சி, முன்னேற்ற நிலை, கல்வி தொடர்ந்த வெளியூர்ப் பயணங்கள், செலவினங்கள் அமையும். குடும்பம், களத்திரத்தால் செலவினங்கள், பயணங்கள், மகிழ்ச்சி ஏற்படும். நல்ல முன்னேற்றங்கள் அமையும். கடினத் தொழில் அமையும். இளைய சகோதிரம், மூத்த சகோதிரம், அறிவின் வழி ஆதாயம், இலாபம் கிடைக்கும். புத்திரர்களால் சிரமங்கள், சிலருக்கு தவறான பாதையினால் சிறைவாசம், ஒறுத்தல் கட்டுதல் ஆகியவை நிகழும்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பம், புத்திரர்களுடன் கருத்து மாறுபாடு நிலவும். ஆதலால் மனசங்கடங்கள், அமைதியின்மை, வாக்கு வாதம் ஆகியவை நிலவும். தொழில், தந்தையாருடன் அதிக இணக்கத்தினால் நன்மை கிடைக்கும். பெயர், புகழ், முன்னேற்றம், மேன்மை அடைதல், மகிழ்வான வெளியூர் உல்லாச பயணங்கள், ஆதாயங்கள், இலாபங்கள், வீடு, வாகன சுகங்கள், தாயாரால் நன்மை ஆகியவை அமையும்.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
புத்திரர், வெளியூர்ப் பயணங்களினால் செலவினங்கள், ஆதாயம், இலாபங்கள், களத்திரம், தொழில், மூத்த சகோதிரம் தொடர்ந்த நிலையில் மன மகிழ்வுகள், வளர்ச்சி, முன்னேற்றங்கள், கௌரவம் அடைதல், ஆடை ஆபரணச்சேர்க்கை, சிலருக்கு நிலைத்த அரசாங்கத்தொழில், புத்திரர்களினால் மன மகிழ்வு, குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஆகியன அமையும்.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
முன்னேற்றத்தடைகள், நேர்மையான வழி இல்லை எனில் தண்டனைகள், மன வருத்தங்கள், தொழிலில் நற்பெயர், மேன்மை, சிலருக்கு அரசுத் தொழில் அமைதல், தந்தை தொடர்ந்த நிலையில் வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள், முன்னேற்றங்கள், குடும்பத்தில் மன மகிழ்வான நிலை, சிறந்த தனவரவு, இளைய சகோதிரத்துடன் கருத்து மாறுபாடு, சில அவமானங்கள், சங்கடங்கள், தாயாரால் மனமகிழ்வு, மிகுந்த நன்மை, அலைச்சல்கள், உறக்கமின்மை, களத்திரத்தால் நன்மை, மகான்களின் ஆசி ஆகியன அமையும்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தனவரவில், ஆதாயம், இலாபத்தில் தடைகள், சங்கடங்கள் ஏற்பட்டு இம்மாத இறுதியில் விலகி நன்மை தரும். தந்தை, மூத்த சகோதிரத்தால் மன மகிழ்வு, ஆதாயம், இலாபம், நன்மை கிடைக்கும். இளைய சகோதிரம், தொழிலில் தடைகள் ஏற்பட்டுப் பின்னர் இம்மாத இறுதியில் நன்மை செய்யும். களத்திரம், வளர்ச்சி, முன்னேற்ற வழியில் பயணங்கள், செலவினங்கள் ஏற்படும்.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தொழிலில் இருந்த தடைகள் விலகும். இளைய சகோதிரத்தால் நன்மை ஏற்படும். மூத்த சகோதிரத்தால் ஆதாயம், இலாபம் சிரமத்தின் பெயரில் கிடைக்கும். தொழிலில் ஏற்பட்ட சிக்கலினால் தொலை துார பயணங்கள், செலவினங்கள், குடும்பத்தில் மனமகிழ்வு, சுகங்கள், ஆடை ஆபரணச்சேர்க்கை, குடும்பம், தந்தையால் மகிழ்ச்சி, முன்னேற்றம், சில அவமானங்கள், சங்கடங்கள் முதலியனவும் அமையும்.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
அழகிய ஆடை ஆபரணச்சேர்க்கைள், குடும்பம், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றத்தால் நல்ல மன மகிழ்ச்சி, தந்தையால் நன்மை, சில கருத்து மாறுபாடு, தந்தை, மூத்த சகோதிரத்துடன் வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள், நிலைத்த தனவரவு, சிலருக்கு திருமணம் நிகழ்தல், இரண்டாம் தர அல்லது புதிய வண்டி, வீடு வாங்கும் யோகம், சிலருக்கு அரசாங்கத்தொழில், அல்லது அதன் தொடர்புடைய தொழில் சிறப்பாய் அமையும்.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சிறந்த தனவரவு, நல்ல மகிழ்ச்சி, இளைய சகோதிரம், தாயாரால், குடும்பத்தால் நன்மை ஏற்படும். வங்கிக்கடன் உதவி பெறுதல், வழக்கு, எதிரிகளிடமிருந்து வெற்றி பெறுதல், தொழில், மூத்த சகோதிரர் வகையில் சில பிணக்குகள், சங்கடங்கள், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம் வகையில் மனமகிழ்ச்சி,வெளியூர் உல்லாச பயணங்கள், செலவினங்கள் அமையும். தந்தை, தொழிலில் கருத்து மாற்றங்கள் நிலவும்.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சிறந்த தனவரவு, ஆதாயம், இலாபம் கிடைக்கும். வீடு, வண்டி வாகன சுகங்கள், மூத்த சகோதிரர் வகையில் நன்மை கிடைக்கும். குடும்பம், இளைய சகோதிரர் வகையில் மன மகிழ்வு, நன்மை, சாதகர் முயற்சி, தாயார், குடும்பத்தார், புத்திரர்கள் வகையில் வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள், மன மகிழ்வுகள் அமையும். களத்திரம், தொழில், தந்தை தொடர்ந்த நிலையில் கருத்து மாறுபாடு, பிணக்குகள் காணப்படும். இருப்பினும் விலகி நன்மை ஏற்படும்.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தாயார், மூத்த, இளைய சகோதிரம், மண் மனை, வீடு, சகோதிரர் வகையில் செலவினங்கள், வெளியூர்ப்பயணங்கள் அமையும். கடன், வழக்குகள் வெற்றி பெறும். நன்மை, ஆதாயம் கிடைக்கும். நரம்பு, அரத்த அழுத்த குறைபாடு தொடர்ந்த உடல் உபாதை இருக்கும். பின்னர் சரியாகும். இருப்பினும் எடுத்த காரியத்தில் வெற்றி, முன்னேற்றங்கள், வளர்ச்சி நிலைகள், சிறந்த தனவரவு யாவும் கடினப்பட்டதற்கான பலனைப் பெறுவீர்கள். ஆடை ஆபரணச்சேர்க்கை, புத்திரர்களினால், தொழிலினால் மேன்மை. நன்மை, ஆன்மீக ஆலயப்பயணங்கள் கிடைக்கும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இளைய சகோதிரம், மூத்த சகோதிரம், தொழில் ஆகியவற்றினால் சிறந்த ஆதாயம், இலாபம், சிறந்த தனவரவு, வெளியூர் பயணங்கள், செலவினங்கள், தாயார், களத்திரம், புத்திரர்களினால், குடும்பத்தாரால் மனமகிழ்வு, கௌரவம் அமையும்..
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இளைய சகோதிரத்தால் மகிழ்ச்சி, சில சங்கடங்கள், சாதகர் முயற்சி, தொழிலினால் மேன்மை, நன்மை, மூத்த சகோதிரத்தால் ஆதாயம், நன்மை, இலாபம், ஆதாயத்துடன் கூடிய வெளியூர்ப்பயணங்கள் ஆகியன அமையும். குடும்பத்தார், தாயார், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம் தொடர்ந்த நிலையில் சங்கடங்கள் ஏற்பட்டு விலகும்.
* * * * *

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.