விகாரி வருடம் - தை மாதப் பலன்கள்
முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை
கிரக பாதசாரங்கள்
சூரியன் - 4 – 9 உத்திராடம், 10 – 22 திருவோணம், 23 அவிட்டம் – மகரம்.
சந்திரன் - உத்ரம் – உத்ரம்..
செவ்- 5 - 23 கேட்டை, விருச்சிகம், 24 – மூலம் – தனுசு.
புதன் - 1 – 4 உத்திராடம், 5 – 11 திருவோணம், 12 – 15 அவிட்டம், மகரம், 16 – 19 அவிட்டம், கும்பம், 20 சதயம் – கும்பம்.
குரு - 5 – 19 பூராடம் 2 தனுசு. 20 பூராடம் 3.
சுக்கிரன் - 3 – 10 சதயம் – கும்பம், 11 – 18 பூரட்டாதி - கும்பம், 19 - 21 பூரட்டாதி மீனம், 22 உத்திரட்டாதி.
சனி - 10 உத்திராடம் 2, மகரம்.
ராகு - திருவாதிரை 2 மிதுனம்.
கேது - மூலம் 4 தனுசு.
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
முயற்சியினால் கிடைத்த இலாபங்கள், தனவரவு, ஆடை ஆபரணச்சேர்க்கை, புத்திரர்களால், அறிவினால் அரசு மரியாதை, தொழிலில் தலைமைப்பதவி, பல பொறுப்பு நிலை கூடுதல், அதிக சுமை, மூத்த சகோதிரர், தந்தை, அல்லது அவர் வழியில் உறவினர்களுக்கு இன்னல்கள், செலவினங்கள், பயணங்கள், புண்ணிய பயணங்கள் செல்லல், தொழில், மூத்த, இளைய சகோதரர், இளைய தாரம் வகையில் சிறந்த தனவரவு, இலாபங்கள், ஆதாயங்கள் ஆகியவை நிகழும்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றங்கள் தொடர்ந்த நிலையில் கௌரவம், புகழ், மரியாதை கிடைத்தல், வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் அமைதல், மூத்த சகோதரர்களினால் ஆதாயங்கள், இலாபங்கள் கிடைத்தல், தந்தை வகை நிலைத்த சொத்து, செல்வம் பெறுதல், அவர் வழி இலாபம் அமைதல், புத்திரர், குடும்பத்தாரால் மனமகிழ்வு கிடைத்தல், வீடு, வண்டி வாகன சுகங்கள் ஆகியன அமையும். சில வெளியில் தெரியாத அவமானங்கள், சங்கடங்கள் மன உளைச்சலைத் தரும்.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
கௌரவம் மேம்படுதல், மூத்த சகோதிரம், இளைய தாரத்தால் ஆதாயம், இலாபம், நன்மை கிடைக்கப்பெறுதல், ஆடை ஆபரணச்சேர்க்கை, புத்திரர்கள், தந்தையால் மனமகிழ்வு, செலவினங்கள், வெளியூர்ப்பயணங்கள், இளைய சகோதிரம், குடும்பத்தால் மனவருத்தம், அவமானம், சங்கடம் அமைதல், வீடு, வாகனங்களில் தடைகள், மன வருத்தம் அமைதல் ஆகியன நிகழும். இருப்பினும் குடும்பத்தில் மனஅமைதி, தனவரவு சிறப்பாய் இருக்கும்.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
ஆன்மீக பயணங்கள், அலைச்சல்கள், உறக்கமின்மை, செலவினங்கள், தந்தை, மடாதிபதிகளினால் ஆசி, நன்மை கிடைக்கப்பெறுதல், சிறந்த இலாபம், புத்திரர்களால், தொழிலில் ஆதாய இலாபம், மேன்மை, குடும்பம், தாய், மூத்த சகோதிரத்தால் மனமகிழ்வு, ஆதாயம், இலாபம், நன்மை கிடைக்கப்பெறுதல், குடும்பம், களத்திரத்தால் சில சங்கடங்கள், தடைகள் இருப்பினும் தனவரவு மேம்படும். தாய், மூத்த சகோதிரத்தால் குடும்பத்தில் மன வருத்தம் அமையும். கடினத்தின் பேரில் யாவும் நன்மை தரும்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இளைய சகோதிரம், தொழிலினால் மேன்மை, ஆதாயங்கள் பெறுதல், சாதகர், களத்திரம், குடும்பம், மூத்த சகோதிரர்கள், நண்பர்களுடன் கூடிய வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் அமையும். இருப்பினும் இலாபம், ஆதாயம், மகிழ்வு கிடைக்கும். மண், மனை ஆதாயங்கள், வீடு, வண்டி வாகன சுகங்கள் அமையும். பெற்றோரால் மனமகிழ்வு பெறுவீர். கரும காரியம் நிகழும்.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இளைய சகோதிரம், குடும்பத்தார், தந்தையுடன் கூடிய வெளியூர் உல்லாச பயணங்கள், செலவினங்கள், மனமகிழ்வுகள் அமையும். புத்திரர் வகையில் மனமகிழ்வுகள், சங்கடங்கள், ஆதாயங்கள், இலாபங்கள், கடன் வழி ஆதாயம் கிடைக்கும். களத்திரம், குடும்பத்தாரால் இன்னல்கள், வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள், தொழிலில் அவர்களால் மேன்மை, நன்மை பெறுவீர். ஆடை ஆபரணச் சேர்க்கை ஆகியவை பெறுவீர். இருப்பினும் சில அவமானங்கள் இருக்கும்.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சாதகரின் கடின முயற்சியின் பேரில் ஆதாயங்கள், இலாபங்கள் அமையும். குடும்பத்தில் கரும காரிய நிகழ்வுகள், அவமானங்கள் ஏற்படும். குடும்பத்தில், மூத்த சகோதிரத்தால் சங்கடங்கள், மன உளைச்சல்கள், போராட்டங்கள் இருக்கும். தொழிலில் இடையூறு இருக்கும். இருப்பினும் நன்மையே.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சங்கடங்கள், அவமானங்கள் விலகும். தொழில், மூத்த சகோதிரத்தால் சில சங்கடங்களுடன் நன்மை ஏற்படும். களத்திரத்தால் ஆதாயம், இலாபம், மனமகிழ்வு, சுகங்கள் ஏற்படும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது மிகுந்த நன்மையைத் தரும். குடும்பம், புத்திரர்களால் மனமகிழ்வு ஏற்படும். தனவரவில் மேன்மை அமையும்.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தொட்டது யாவும் வெற்றியே. நன்மை ஏற்படும். வளர்ச்சியில் இருந்த தடைகள் விலகி மிகவும் நன்மை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி, மன அமைதி, கௌரவம் இருப்பினும் மனச்சலனங்கள் உண்டு. ஜென்ம குரு வனவாசம் என்பார்கள். கட்டிப் போட்ட நிலையாய் இருப்பதை உணர்வீர்கள். தந்தை வகையிலும் தனவரவு உண்டு. சிறந்த கடினப்பட்டதற்கான தனவரவு, இளைய சகோதிரத்தால் மகிழ்ச்சி, செலவினங்கள் உண்டு. வளர்ச்சி, தொழில், களத்திரம், மூத்த சகோதிரம் ஆகிய இவற்றினால் தனவரவும், ஆடை ஆபரணச்சேர்க்கையும், ஆதாயம், இலாபம், மனமகிழ்வு உண்டு.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இளைய சகோதிரம், வகையில் செலவினங்கள், பயணங்கள், ஆடை, ஆபரணச் சேர்க்கை கடன் வகை ஆதாய இலாபத்தில் பெறுதல், மனமகிழ்வு, நன்மை, பணி, நுால் அச்சிடுதலினால் ஆதாயங்கள், நன்மை ஏற்படுதல், வீடு, வாகனங்கள் வாங்குதல், அமைதல், சுகங்கள் ஏற்படுதல், தாயார், மூத்த சகோதிரம், புத்திரர்களால், அரசு தொடர்பு உடையவர்களால் ஆதாயங்கள், இலாபங்கள் ஏற்படுதல், அரசு கடன் உதவி பெறுதல், வளர்ச்சிப்பணி, முன்னேற்றம் பெறுதல், சில உடல் உபாதைகள், தந்தையாரால் புகழ், மேன்மை, வெகு பிரபல்யம் பெறுதல், தந்தை தொழிலில் ஆதாயங்கள், உதவிகள் யாவும் மகிழ்வாய் மனதிற்கு உகந்த படி கிடைக்கும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பம், மூத்த சகோதிரத்தால் சிறந்த ஆதாயங்கள், இலாபங்கள், மனமகிழ்வு முதலியன கிடைக்கும். வளர்ச்சி, களத்திரம் தொடர்ந்த நிலையில் சங்கடங்களுடன் கூடிய வெளியூர்ப்பயணங்கள் அமையும். தாயார், குடும்பத்தாரால் மனமகிழ்வு, நன்மை கிடைக்கும். வாகன சுகங்கள், வீடு வசதி முதலியவை சிறப்பாய் அமையும். இளைய சகோதிரம், ஆடை ஆபரணச் சேர்க்கை, நிலைத்த சொத்துக்கள், தந்தை வகையில் ஆதாயங்கள், நன்மைகள், அரசு அதிகாரிகளால் நன்மை, மண், மனை ஆதாயங்கள் சிறப்பாய் அமையும். தொழில் சிறப்பாய் இருக்கும். புத்திரர்களுடன் கூடிய ஆன்மீகப்பயணங்கள், உடல் அசதி ஆகியவை இருக்கும்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பம், தந்தையால் மனமகிழ்வு, சிறந்த தனவரவு, வீட்டில் மன மகிழ்வு, சுபபொருட்கள் வாங்குதல், இலாபங்களுடன் கூடிய விரயங்கள், களத்திரம், மூத்த சகோதிரம், வளர்ச்சி, முன்னேற்றம், தாய் ஆகியோரால் இலாபங்கள், செலவினங்கள், வெளியூர்ப்பயணங்கள் ஆகியவை ஏற்படும். வழக்கினால் இலாபம், ஆதாயம் மிக குறைவாகக் கிடைக்கும். அரசு நிரந்தரப்பணி சிலருக்கு சிறப்பாய் அமையும். இளைய சகோதிரத்தால் சங்கடங்கள், செலவினங்கள் ஏற்படும். மனதிற்குள் சோகங்கள் நிலவும்.
* * * * *

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.