பிலவ வருடம் - ஆனி மாதப் பலன்கள்
முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை
கிரக பாதசாரங்கள்
சூரியன் 1 - 6 மிருக, 7 – 20 திருவா, 21 – 32 புனர் - மிதுனம்.
சந்திரன் - பரணி – ஆயில்யம் - அஸ்தம்.
செவ்- 2 – 14 வரை பூசம், 15 ஆயில்யம் கடகம்.
புதன் - 2 -7 ரோகிணி, 8 ல் வக்ர நிவர்த்தி, 14 – 22 மிருக – ரிடபம், 23 – 27 மிருக – 25 ல் மிது, 28 - திருவா, மிதுனம்.
குரு - 7 ல் வக்ர ஆரம்பம். சதயம் 1 ல் கும்பம்.
சுக்கிரன் 2 – 7 புனர் - மிது, 8 - 10 புனர் – கடகம், 11 – 21 பூசம் – கடகம், 22 – ஆயி – கடகம்.
சனி - திருவோணம் 3 ல் மகரம். (வக்ரம்)
ராகு - ரோகிணி 2 ல் ரிடபம்.
கேது - அனுடம் 4 ல் விருச்சிகம்.
சூரியன் – தனுசு.
செவ்வாய் – துலாம், மகரம், கும்பம், மிதுனம்.
புதன் – தனுசு.
குரு (வ) – மிதுனம், சிம்மம், துலாம்.
சுக்கிரன் – மகரம்.
சனி – விருச்சிகம், மீனம், கடகம்.
ராகு – கடகம், மீனம், விருச்சிகம்.
கேது - துலாம், மகரம், கும்பம், ரிடபம், மிதுனம், விருச்சிகம். .
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
திருமணம், கல்வி, மேல்நிலை, உயர் நிலை, வளர்ச்சி நிலை, வீட்டின் சுப நிகழ்வுகள் ஆகிய அனைத்தும் ஆடம்பரம் இல்லாமல் வெகு சிரமத்தின் பேரில் நிகழும். இளைய சகோதிரத்துடன் கருத்து வேறுபாடு, வீட்டில் வாக்குவாதங்கள், சில மரண கண்டங்கள் அல்லது அதற்கு இணையான வெகு அவமானங்கள், வழக்கு, கடன், சிறை முதலானவை நிகழும். புத்திரர், குடும்பம் வழி சில நன்மைகள் அதே சமயத்தில் சில சங்கடங்கள் நிகழும். பணியில் கடின நிலை, நல்ல பெயர், உழைப்பு ஆகியவை காணப்படும். பணி நிரந்தரம், நரம்பு பாதிப்புகள், இரத்த அணுக்கள் குறைதல், சில உடல் நலிவு, விபத்து, தந்தை வழி வயதானோர் கரும காரியம், திடீர் விபத்தில் சில மரண நிகழ்வுகள் முதலானவை நிகழும்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வாக்கில் மேன்மை, தாயார் உடல் சுகம், குடும்பத்தில் சுகம், பல இடையூறுகள் இருப்பினும் நன்மையாய் முடியும். கல்வி, திருமணம், வளர்ச்சி நிலை, தொடர்ந்த வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள், ஆடை ஆபரணச்சேர்க்கை ஆகியவை சில கடன் அல்லது தவணை வழி நிகழும். குடும்பத்தில் வாக்கு வாதம் இருப்பினும் முன் கோபத்தை விடின் வெகு சிறப்பாய் நன்மையாய் முடியும். பல குறுக்குச் சிந்தனைகள் இருப்பினும் ஆன்மீக வழி நிற்பின் நன்மையாய் முடியும். எப்போதும் கவனமுடன் இருத்தல் நன்மை. வீட்டில் கரும காரியம், களத்திரம், எதிர்பாராத நட்டங்கள், இழப்புகள், வெளியூர்ப்பயணங்களில் செலவினங்கள் ஆகியவை நிகழும்.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இளைய சகோதிரத்தால் நன்மை, புத்திரர் வகையில் வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள், அலைச்சல்கள், உறக்கமின்மை, வாகன விபத்து, சில நட்டங்கள், வீட்டில் கரும காரியம் நிகழ்வுகள், தாய்மாமன், மூத்த சகோதிரம், இளைய தாரம், கடன் வழக்கு வழி இழப்பு, அல்லது எதிர்பாராத செலவினம், நட்டம், களத்திரத்துடன் கருத்து மாறுபாடு, சில பரிகாரத்தின் பெயரில் சிலருக்கு புத்திரப்ராப்தி, ஆடை ஆபரணச் சேர்க்கை, நண்பர்கள் வகையில் இழப்பீடு, கண்டங்கள், சோக சம்பவங்கள். அவமானங்கள் ஆகியவை நிகழும்.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தாயாருடன், மூத்த சகோதிரம் வகையில் கருத்து மாறுபாடு, நெருப்பு, மின்சாரம் தொடர்ந்த விபத்துகள், வாகன விபத்துகள், வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. தொழில், புத்திர் வகையில் இழப்பு, நட்டம், கரும காரியம் நிகழ்வு, களத்திரம் தொடர்ந்த சில வழக்குகள், அவமானங்கள், கண்டங்கள் அமையும். இலாபத்தின் வகையில் வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் அமையும். குடும்பத்தில் குறைவான தனவரவு இருக்கும். மூன்று மாதத்திற்குப் பின்னர் நிலைமை சரியாகும்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இளைய. மூத்த சகோதிரம், தொழில், குடும்பம் வழியில் கண்டங்கள், வீட்டில் கரும காரியங்கள், வாகன விபத்துகள், அதிக பயணங்கள், அலைச்சல், செலவினங்கள் காணப்படும். வர வேண்டிய இலாபம் தவணை முறையில் வந்தமையும். பெற்றோர் வகையில் இழப்பு, கண்டங்கள் விபத்து, அவமானம், அலைச்சல், பயணம் ஆகியவை நிகழும். கருச்சிதைவு ஏற்படும். இறைவழிபாடு நன்மை தரும்.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தொழில் தொடர்ந்த பயணங்கள், செலவினங்கள், முன்னேற்றங்கள், தலைமைப்பதவி வெகு சிறப்பாய் அமையும். வீட்டில் கரும காரியம் நிகழும். இளைய சகோதிரம், வழக்கு வகையில் இழப்பு, கண்டங்கள் அமையும். குடும்பம், தந்தையார் வழி இலாபம் நன்மை இருப்பினும் சில கண்டங்கள், அவமானங்கள், வழக்கு, விபத்துகள் ஆகியவை ஏற்படும்.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தொழில் நிரந்தரம், அழகிய இடத்தில் சிறந்த பணி, பணியில் சுமை அதிகம், நரம்பு பாதிப்புகள், இரத்த அணுக்கள் குறைதல், சில உடல் நலிவு, விபத்து, குடும்பத்தார், களத்திரம், தந்தை வழி வயதானோர் கரும காரியம், திடீர் விபத்தில் சில மரண நிகழ்வுகள், இளைய சகோதிரம், வழக்கு ஆகியவற்றில் இழப்பு, அவமானங்கள், கண்டங்கள், சுப நிகழ்வில் தடைகள், கல்வி வளர்ச்சியில் இழப்பீடு, நட்டம், தொல்லைகள், இழுபறிகள், வீட்டில் கரும காரியம் நிகழ்வுகள் முதலானவை நிகழும்.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இளைய சகோதிரம் வகை நன்மை அமையும். பெயரில் கௌரவக்குறைவு, உயிர்க்கண்டங்கள், உடல்நலிவு, தாய்மாமன், வழக்கு வழி அவமானம், இழப்பு, களத்திரம், வளர்ச்சி முன்னேற்றத்தில் தடைகள், பயணங்கள், எதிர்பாராத செலவினங்கள், திருமணத் தடைகள், தொழில் வகையில் அவமானங்கள், சிறை வாசம், மன உளைச்சல், செயலற்ற நிலைகள், பற்றற்ற நிலைகள் ஆகியவை காணப்படும்.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தொழிலில் மேன்மை, கௌரவம், வளர்ச்சி வெகு சிறப்பாய் அமையும். அரசாங்கத்தாரால் கௌரவிக்கப் பெறுவீர்கள். வாக்கில் நிதானமுடன் இருந்தால் மேலும் சிறப்புப் பெறுவீர்கள். மூன்று மாதத்திற்குப் பின்னர் நல்ல முன்னேற்றங்கள் நிகழும். சிலருக்கு பலத்த சிரமத்தின் பெயரில் திருமணம். கல்வி நிலை, தொழில் ஆகியவை அமையும். அலைச்சல், உறக்கமின்மை, ஆன்மீகப் பயணங்கள் அமையும். புத்திரர் இழப்பு, நட்டம், மூத்த சகோதிரர், இளைய தாரம், கடன் வம்பு வழக்கு வழி கண்டங்கள், அவமானங்கள், நட்டங்கள், கரு விலங்குகளினால் ஆபத்து ஆகியவை நிகழும்.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தாயார், மூத்த சகோதிரம், இளைய தாரம், நண்பர்கள் வகையில் நட்டம், இழப்பீடு, கண்டங்கள் ஆகியவை அமையும். வெளியில் செல்லும் போது கவனம் தேவை. தொழில், அறிவு வளர்ச்சி நிலையில் நிதானமுடன் செயல்பட்டால் நன்மை அடையலாம். சிலருக்கு அரசாங்கப்பணியில் வெளியூர் பணி வெகு சிறப்பாய் வாய்ப்பு வந்தமையும். உடலில் நரம்பு பாதிப்புகள் இருக்கும். தந்தையார் வகையில் வாக்குவாதம், இடையூறுகள் இருக்கும். ஆன்மீகப்பயணங்கள், இறை சிந்தனைகள் நன்மை தரும். கடின உழைப்பு வெற்றி, நன்மை, இலாபத்தைத் தரும். வீட்டில் கரும காரியம் நிகழும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பம், மூத்த சகோதிரத்தால், இளைய தாரத்தால் நன்மை அமையும். பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து, மேம்பாடு ஆகியவற்றின் வழி செலவினங்கள், வெளியூர்ப்பயணங்கள் ஆகியன அமையும். கரும காரியம் நிகழும். பெற்றோர் வழி, புத்திரர், ஆயுள் கண்டம் வழி சிரமம் ஏற்படும். புத்திரர், திருமணம், கல்வி. வளர்ச்சி நிலை முன்னேற்றங்கள், தந்தை அவர் வழி நன்மை அமையும்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெயர், புகழ் கௌரவத்தில் குறைபாடு, தொழிலில் தடைகள், அலைச்சல், தேவையற்ற பயணங்கள், செலவினங்கள் அமையும். குடும்பம், தந்தை, களத்திரம், வளர்ச்சி நிலை ஆகியவற்றில் இழப்பு, நட்டம், கண்டம், அவமானம், வீட்டில் கரும காரியம், இளைய சகோதிரத்துடன் அவமானம், இழப்பு. நட்டம், அவமானம் முதலானவை நிகழும். இருப்பினும் அவை யாவும் விலக மூன்று மாதங்கள் ஆகி பின்னர் நிலைமை சரியாகும்.
* * * * *

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.