சார்வரி வருடம் - மாசி மாதப் பலன்கள்
முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை
கிரக பாதசாரங்கள்
சூரியன் 3 - 6 அவிட்டம் 4 ல் கும்பம், 7 – 19 சதயம், 20 பூரட்டாதி 1ல் கும்பம்.
சந்திரன் - சதயம் – பூரட்டாதி.
செவ்- 4 - 9 கிருத்திகை – மேடம், 10 - 26 – கிருத்திகை, 27 ரோகிணி – ரிஷபம்.
புதன் - 1 திருவோணம் 3 மகரம். 8 வக்ர நிவர்த்தி, 17 – 20 திருவோணம், 21 – 26 அவிட்டம் மகரம், 27 அவிட் – கும்பம்.
குரு - 6 – 19 திருவோணம் மகரம், 20 – அவிட்டம் 1 மகரம்.
சுக்கிரன் - 1 - 2 திருவோணம் 4, 3 – 7 அவிட் மகரம், 8 - 13 அவிட், 14 – 23 சதயம் – கும், 24 பூரட்டாதி.
சனி - 7 ல் திருவோணம் 2 ல் மகரம்.
ராகு - ரோகிணி 4 ல் ரிடபம்.
கேது - கேட்டை 2 ல் விருச்சிகம்.
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
அதிக முன்கோபத்தைக் கட்டுப்படுத்துதல் நன்மை தரும். கடினப்பட்டதற்கான இலாபங்கள், தந்தை வழி செலவினங்கள், வெளியூர்ப்பயணங்கள், தொழில் வகை மேன்மை, புத்திரர் வகை மகிழ்வுகள், வளர்ச்சி, முன்னேற்றங்கள், இலாபங்கள் அமையும். அதிக சுமை, இளைய சகோதிரம், தாய்மாமன், எதிரி, வழக்கு வகை சில தொல்லைகள், நன்மைகள் கிடைக்கும். விட கண்டங்கள், அதன் தொடர்பான தொல்லைகள், அதற்கான வைத்தியங்கள் அமையும். களத்திரம், குடும்பம், முன்னேற்றம் அதன் வகை அதிக முயற்சியின் பேரில் நன்மை அமையும். தந்தையார் வழியில் கரும காரியம் நிகழும்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தொழில் நிலையில் வாகனங்கள், வீடு முதலியன அரசு மரியாதையுடன் வெகு சிறப்பாய் சிலருக்கு அமையும். கல்வி நிலை வளர்ச்சி. முன்னேற்றங்கள், வழக்கு, எதிரி, தாய்மாமன் வகை ஆதாயங்கள், நன்மை அமையும். வசதி வாழ்க்கை மேம்பாடுகள் அமையும். தொழிலில் மேன்மை, கடின உழைப்பு, தந்தை வகை ஆதாயம் நன்மை அமையும். தலை சுற்றல், மயக்கம் இருப்பினும் குருவின் பார்வையால் நன்மை ஏற்படும். சிலருக்கு கல்வி பயிலும் போதே சிறந்த பணியும் அமையும். களத்திரம், முன்னேற்றம் வகையில் செலவினங்கள், வெளியூர்ப்பயணங்கள் வெகு சிறப்பாய் அமையும். மூத்த சகோதிரம் வகையில் சில இழப்புகள், ஆயுள் கண்டப்பீடை ஆகியன ஏற்படும்.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
புத்திரர்கள், குடும்பம், முன்னேற்றம் தொடர்பான வகையில் வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் ஆகியன அமையும். அதே சமயத்தில் அதிக நன்மை சிறந்த செல்வ வரவு ஆகியவை அமையும். மகான்கள் தரிசனம், உறக்கத்தில் மாறுபட்ட நிலைகள் ஆகியன அமையும். மூத்த சகோதிரத்தால் நன்மை, அரசாங்கத்தினால் சிறந்த இலாபம் அமையும். இளைய சகோதிரம், புத்திரர் வகையில் சிறந்த நன்மைகள் ஏற்படும். களத்திரம், தொழில் ஆகிய வகையில் பெருத்த நட்டம், இழப்பு ஏற்படும்.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தந்தையார், கடன், தாய்மாமன், வழக்கு, எதிரி வகையில் இழப்பு, அவமானம், இருப்பினும் முயற்சிகளில் வெற்றி, இரண்டாம் தர வாகனங்கள், பழைய வீடு வாங்குதல், மூத்த சகோதிர வகையில் ஆதாயம், நன்மைகள் அமையும். இளைய சகோதிரம் வகையில் கருத்து மாறுபாடுகள், செலவினங்கள், ஆன்மீக வெளியூர்ப்பயணங்கள் ஆகியன அமையும். குடும்பம், தாயார், மூத்த, இளைய சகோதரன், சகோதரி வகையில் பெருத்த அவமானம், தொல்லைகள், கருத்துப்பிணக்குகள் ஆகியன அமையும். கரும காரியம் நிகழும்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வளர்ச்சி, முன்னேற்றங்கள், கௌரவம், மேன்மை, புகழ் முதலியன அமையும். குடும்பம், மூத்த, இளைய சகோதிரம், புத்திரர், களத்திரம் ஆகிய வகையில் சிரமங்கள் இருப்பினும் நன்மையே. ஆன்மீக வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள், சிறந்த தொழில் அமைப்பு, பணியில் பல மாறுதல், முன்னேற்றங்கள், நன்மை, இலாபம் ஆகியன அமையும். புத்திரர், ஆயுள் கண்டப் பீடை முதலியனவற்றில் இழப்பு ஏற்படும். கடினப்பட்டதற்கான சிறந்த செல்வ வரவு அமையும். கரும காரியம் நிகழும்.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இளைய சகோதிரம், ஆயுள் ஆரோக்கியம் வகையில் நன்மை அமையும். தாயார், குடும்பம், களத்திரம் வகையில் இழப்பு, அவமானம் ஏற்படும். தந்தையாருடன் கருத்துப்பிணக்குகள் ஏற்படும். தந்தை வகையினர், குடும்பத்தார் ஆகியோருடன் வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் ஆகியன அமையும். குடும்பத்தார், தந்தையார், இளைய சகோதிரம் ஆகிய வழியில் கருத்துப்பிணக்குகள் ஏற்படும்.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
முன்கோபத்தை கட்டுப்படுத்துதல் நன்மை. முன்னேற்ற வளர்ச்சி நிலைகள் காணப்படும். இளைய சகோதிரம், கடன், வம்பு, வழக்குகள், எதிரி வகைகளில் இழப்பு, பெருத்த நட்டம் ஏற்படும். மூத்த சகோதிரம், தந்தை வகையில் சிறந்த இலாபங்கள், மனமகிழ்வுகள் ஆகியன அமையும். விட கண்டங்கள் அமையும். கரும காரிய நிகழ்வுகள் அமையும். சிலருக்கு சிறப்பான தொழில் அமையும்.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சிறந்த தலைமைப்பதவி, தொழில் முன்னேற்ற வளர்ச்சியுடன் வெகு சிறப்பாய் அமையும். சிரமத்தின் பல முயற்சியின் பேரில் திருமணம், வளர்ச்சி நிலை, முன்னேற்றங்கள் காணப்படும். இதன் வகையில் சிறப்பான வெளியூர்ப்பயணங்கள் அமையும். மூத்த இளைய சகோதரி வகையில் சிரமங்கள் ஏற்படும். குடும்பம், புத்திரர் வகையில் இழப்பு, நட்டம் ஏற்படும். கரும காரியம் நிகழும்.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
ஆடை ஆபரணச்சேர்க்கை, சிறந்த தொழில், புத்திரர் வகை நன்மை ஆகியன அமையும். தந்தையார், மூத்த சகோதிரம் வகையில் நன்மை ஏற்படும். சிறந்த தனவரவில் சில தடைகள், வளர்ச்சி, தொழில், முன்னேற்றம், களத்திரம், ஆதாயம் ஆகிய இவற்றின் வழி சிரமங்கள் இருப்பினும் நன்மையே. இலக்னாதி, சாதகர், தாயார் ஆகிய வழி இழப்பு, பெருத்த நட்டம் அமையும்.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
மிகச் சிறப்பான வளர்ச்சி, முன்னேற்றங்கள், கல்வி நிலை மேற்கல்வி, திருமணம், சிறந்த புத்திரப்பாக்கியம், தந்தையார் வகை நன்மை, ஆராய்ச்சி மேல்நிலை கல்வி, முதலியன வெகு சிறப்பாய் அமையும். எடுக்கும் காரியங்களில் சிரமங்கள் இருப்பினும் யாவும் நன்மையாய், வெற்றியாய் முடியும். புத்திரர், தொழில் வகையில் சிறந்த தனவரவு, நிரந்தரமான பணியில் மாறுபாடான நிலை, ஆடை ஆபரணச்சேர்க்கை, வாகன வசதிகள் ஆகியன அமையும். உடல் அசதி இருப்பினும் ஆன்மீக வழிபாடு நன்மை தரும். ஆன்மீகம் தொடர்பானவைகள் மன மகிழ்வினைத்தரும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
ஆன்மீகப்பயணங்கள், செலவினங்கள், எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, சிலருக்கு விருப்பத் திருமணம், வளர்ச்சி, முன்னேற்ற மேம்பாடான நிலைகள், இளைய சகோதிரத்தால் ஆதாயம், நன்மை, வண்டி வாகனம், வீடு வாங்கும் யோகம் முதலியன அமையும். கரும காரியம் நிகழ்வு, மூத்த சகோதிரம், குடும்பம் வகையில் இழப்பு, நட்டம் ஆகியன ஏற்படும்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சாதகர், தொழில் நிலை முதலியவற்றில் நட்டம், பெருத்த இழப்பு, அவமானம் ஆகியவை ஏற்படும். எதிர, கடன் வம்பு வழக்குகளின் வழி செலவினங்கள், வெளியூர்ப்பயணங்கள் அமையும்.தாயார், களத்திரம், மூத்த, இளைய சகோதிரம் ஆகியோருடன் கருத்துப்பிணக்கு இருப்பினும் நன்மையே. குடும்பத்தில் கடும் வாக்கு வாதம் நிலவும். இளைய சகோதிரத்தினால் அதிக சிரமங்கள் ஏற்படும்.
அனைத்து இராசியினருக்கும் பரிகாரங்கள்
அனைத்து இராசியினருக்கும் ஆன்மீக வழிபாடு மிக மிக சிறந்தது. குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு மிகுந்த நன்மையைத் தரும். பெருத்த அவமானங்களைத் தடை செய்ய நேர்த்திக்கடன்கள் இருக்கும் இராசி இலக்கினத்தார்கள் அவற்றினை நிறைவு செய்து கொள்வது நன்று. ஏன் எனில் பலத்த இடர்கள் யாவும் இறையருளால் விலகப்பெறுவீர்.
மேடம்– சிவபெருமான்.
ரிடபம்– திருமால்.
மிதுனம்- சிவபெருமான்.
கடகம்– முருகன்.
சிம்மம்– குரு.
கன்னி– தனித்த கிராம தேவதைகள். சப்த கன்னியர். காளி முதலானவை.
துலாம்- தனித்த கிராம தேவதைகள். சப்த கன்னியர். காளி முதலானவை.
தனுசு– குரு.
மகரம்– சிவபெருமான்.
கும்பம்– திருமால்.
மீனம்– பார்வதி.
தானங்கள் அன்னதானம். வஸ்திர தானம் மிகுந்த நன்மையைத் தரும்.
* * * * *

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.