சார்வரி வருடம் - பங்குனி மாதப் பலன்கள்
முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை
கிரக பாதசாரங்கள்
சூரியன் 3 பூரட்டாதி 4, 4 – 17 – உதி , 18 – 30 ரேவதி – மீனம்.
சந்திரன் - உத்திரட்டாதி – அசுவினி.
செவ்- 4 - 19 வரை ரோகிணி, 20 – மிருகசீரிடம். – ரிடபம். 31 – மிதுனம்.
புதன் - 11 வரை சதயம், 12 17 பூரட்டாதி – கும்பம். 18 - மீனம். 20 - 26 உத்திரட்டாதி, 27 ரேவதி – மீனம்.
குரு - 7 அவிட்டம் - மகரம். 23 – அவிட் – கும்.
சுக்கிரன் - 3 – பூரட்டாதி மீனம். 6 – 16 உத்திரட்டாதி, 17 – 27 ரேவதி – மீனம். 28 – அசு - மேடம்
சனி - 12 திருவோணம் 3 ல் மகரம்.
ராகு - 17 –ரோகிணி 3 ரிடபம்.
கேது - 17 – கேட்டை 1 விருச்சிகம்.
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இளைய சகோதிரம், உடல் உபாதைகள், நரம்புகள், புத்திரர்கள், குடும்பம், வாழ்க்கைத்துணை, வளர்ச்சி நிலை ஆகிய இவற்றினால் செலவினங்கள், வெளியூர்ப்பயணங்கள் அதிகமாய் ஏற்படும். குடும்பத்தில் எப்போதும் போல் கடும் சண்டை, வாக்குவாதம் இருக்கும். சிலருக்கு அறுவை சிகிச்சை, இரத்த அழுத்த மாறுபாட்டால் உடல் நலிவு முதலியவை ஏற்படும். மருத்துவத்திற்குப் பின்பு உடல் குணமடையும். தந்தையார் வகையில் கரும காரியங்கள் நிகழும். தொழில் நிலையில் உழைப்பு, கடும் முயற்சி, கடினநிலை, நேர்மையுடன் இருப்பின் நன்மை தரும். கௌரவக்குறைவு, தந்தையார் வகை இழுக்குகள், அவமானங்கள் காணப்படும்.வழக்கு முதலான வகையில் சிறிய இலாபம், அவமானம், இளைய சகோதிரம், கடன் வழக்கு வம்பு வழி வகையில் இழப்புகள், நட்டம் முதலியவை காணப்படும்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
கடின முயற்சியின் பேரில் முன்னேற்ற நிலை, வளர்ச்சி காணப்படும். அவை தொடர்ந்த வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் காணப்படும். குடும்பம், புத்திரர், மூத்த சகோதிரர் வகை இலாபம், நன்மை. இழப்பு, நட்டம் ஆகியவை காணப்படும். இளைய சகோதிரம், குடும்பம் இவற்றால் நன்மையும், ஆபரணங்கள் அமைதல் ஆகியவையும் அமையும். வளர்ச்சி நிலைகள் காணப்படும்.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
கடன், வழக்குத் தொல்லை, மூத்த சகோதரி, இளைய தாரம், வளர்ச்சி முன்னேற்றங்களில் தடைகள், மன வருத்தங்கள், புத்திரர், இளைய சகோதரம், ஆடை ஆபரணங்கள் வழி மனமகிழ்ச்சி, நன்மை, இலாபம் ஆகியன கிடைக்கும். மகான்களின் ஆசி கிடைக்கும். தொழிலில், களத்திரம் வழி இழப்பு, அவமானம், நட்டம், திடீர் சரிவு நிலை, தந்தையார் அவர்வழி சில நன்மைகள் ஆகியன கிடைக்கும். சிலருக்கு அறுவை சிகிச்சை, பெயர், புகழ், கௌரவம் ஆகியவற்றில் குறைபாடு, தாயார், வீடு வழி இழப்பு, நட்டம் ஆகியவை அமையும்.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
புத்திரர், மூத்த சகோதரி, இளைய தாரம், தொழில் வகையில் கருத்து மாறுபாடுகள், பிணக்கு ஆகியவை காணப்பெறும். இருப்பினும் சிறந்த இலாபம். மேன்மை காணப்படும். தாயாரினால் மிகுந்த நன்மை அமையும். இளைய சகோதிரம், ஆடை ஆபரணம் வகை வழி இழப்பு,நட்டம் காணப்பெறும். மூத்த சகோதரி, இளைய தாரம், களத்திரம், குடும்பம், வளர்ச்சி, முன்னேற்றம் வகையில் பெருத்த நன்மைகள் ஏற்படும். அதே சமயத்தில் சிரமங்களும் ஏற்படும். நீண்ட தடைகளுக்குப் பின் திருமணம் முதலிய மங்கல நிகழ்வு நடைபெறும்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
புத்திரர், ஆயுள் கண்டப்பீடை முதலிய வழி இழப்பு, நட்டம் அமையும். கடன், வளர்ச்சி, முன்னேற்றம், திருமணம் முதலியவை சில இடையூறுகளக்குப் பின் சிறப்பாய் கடினத்தின் பேரில் அமையும். பெற்றோர்கள் வழி மிகுந்த நன்மை, ஆதாயம், இலாபம், பெயர், புகழ், முன்னேற்றம் வகை வழி சில அவமானங்கள், பெண்கள் தொடர்ந்த நிலையில் கெட்ட பெயருடன் நன்மை அமையும். கரும காரிய நிகழ்வுகள் அமையும். சிலருக்கு வயிறு தொடர்ந்த உபாதைகள், அறுவை சிகிச்சை நடைபெறும்.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தாயார், களத்திரம், குடும்பம் வளர்ச்சி முன்னேற்றம் வகையில் இழப்பு, நட்டம், மன வேதனைகள், வெளியூர்ப்பயணங்கள், அவை தொடர்ந்த செலவினங்கள் ஆகியன அமையும். பெயர், புகழ், கௌரவத்தில், தொழிலில் இழப்பு, கரும காரிய நிகழ்வு அமையும். இளைய சகோதிரத்துடன் கருத்து மாறுபாடு ஏற்படும். பூர்வ புண்ணிய சொத்தில் வில்லங்கம், வழக்கு நிலை காணப்படும்.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தொழிலில் இழப்பு, கடினநிலை, மந்த நிலை, கரும காரியம் நிகழ்வு ஆகியன அமையும். இளைய சகோதிரம், கடன் வம்பு வழக்கு வகை வழியில் இழப்புகள், அவமானங்கள் நலிந்த நிலை காணப்படும். தந்தையார், வெளியூர்ப்பயணங்கள் வகையில் அதிக செலவினங்கள், நட்டம், இழப்பு காணப்படும். மூத்த சகோதரி, இளைய தாரம், பெயர், புகழ், முன்னேற்றம் வகையில் சில அவமானங்களுடன் நன்மையாய் முடியும். திடீர் இரத்த அழுத்த மாறுபாடு, இரத்த அணுக்கள் குறைதல், சிலருக்கு அறுவை சிகிச்சையில் அபாயமான கண்ட நிலைகளைக் கடத்தல் முதலியவை அமையும். தாயார், குடும்பம், புத்திரர், தொழில் ஆகிய வகையில் எப்போதும் போல் சிரமம் இருப்பினும் நன்மை ஏற்படும். குடும்பம், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம் வகையில் பலத்த அவமானங்களில் இருந்து விடுபடுவீர்கள்.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பல இடையூகளுக்குப் பின்னர் திருமணம் கை கூடி வரும். கடன் வம்பு வழக்கினில் அவமானங்கள் காணப்படும். சில தடைகளுக்குப் பின்னர் அவை விலகும். தொழில், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றில் பெருத்த மன மகிழ்வு, செலவினங்கள், வெளியீர்ப்பயணங்கள் ஆகியவை அமையும். மூத்த சகோதிரம், இளைய தாரம், சில அவமானங்கள், குடும்பம், புத்திரர் வகையினில் எதிர்பாராத விதத்தினில் இழப்பு, நட்டம் ஆகியவை நிகழும். சிலருக்கு உடலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும்.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வாக்கினில் நிதானம் மிகுந்த நன்மையைத் தரும். பெயர், புகழ், கௌரவக்குறைபாடு இருக்கும். தாயார், குடும்பம் வகையில் இழப்பு, நட்டம், எதிர்பாராத நிலைகள் அமையும். சிலர் பழைய வீட்டினைப் புதுப்பிப்பர். இளைய தாரம், மூத்த சகோதிரம், புதிய கடன் வசதி வழக்கினில் ஆகியவற்றினால் மிகுந்த நன்மை அமையும். மன மகிழ்வுகள், ஆடம்பரப்பொருட்கள் அமையும். ஆலயம், மகான்கள் தொடர்ந்த ஆன்மீக வழிபாடு, வெளியூர்ப்பயணங்கள் ஆகியவை அமையும். புத்திரர் வகை வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள், மனமகிழ்வுகள் ஆகியவை அமையும். தொழில், களத்திரம் ஆகியவற்றில் திடீர் சரிவு, நட்டம், இழப்பு ஆகியவை காணப்படும். உடலில் சிலருக்கு அறுவை சிகிச்சை அமையும். கவனம் தேவை.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
எப்போதும் நிதானமுடன் செயல்படுவது மிகுந்த நன்மையைத்தரும். நல்ல கடினப்பட்டதற்கான இலாபங்கள், ஆதாயங்கள் கிடைக்கும். எப்போதும் நேர்மை நன்மை தரும். இளைய சகோதிரம், ஆடை ஆபரணம் வகை செலவினங்கள், நட்டம், இழப்பு காணப்படும். தாயார், மூத்த சகோதரம், இளைய தாரம் ஆகியோர்களுடன் கருத்துப்பிணக்கு, அதே சமயத்தினில் அவர்களால் நன்மை, ஆதாயம், இலாபம் ஏற்படும். கடன், வம்பு, வழக்கு, தந்தையார் வகை வழி இழப்பு, நலிவு, நட்டம் காணப்படும். கருமாதி நிகழ்வுகள் நடைபெறும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
கடன், வழக்கு, புத்திரர் வகை இழப்பு, நட்டம் காணப்படும். இளைய சகோதிரம், தொழில், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம் வகையில் மிகுந்த நன்மை, ஆதாயம், ஆபரணச்சேர்கை, மனமகிழ்வுகள் முதலானவையுடன் சில அவமானங்கள் சேர்ந்து அமையும். இலாபங்களில் நட்டம், பெருத்த இழப்புகள் காணப்பெறும். சாதகர் தொடர்ந்த வெளியூர்ப்பயணங்கள் அமையும். இளைய சகோதிரத்துக்கு அறுவை சிகிச்சை, அவருடன் கருத்து மாறுபாடு, தொழிலில் கருத்துப்பிணக்குகள், வாக்கு வாதம் முதலானவை அமையும்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சிலருக்கு இரண்டாம் திருமணம் நடைபெறும். மிகுந்த தைரியம் காணப்பெறும். மிடுக்கு இல்லாது இருத்தல் நன்மையைத் தரும். பெயர், புகழ், தொழில் முதலானவற்றில் திடீர் கௌரவக்குறைவு, அவமானம், நட்டம் காணப்பெறும். இலாபம், வெளியூர்ப்பயணங்கள், அவை தொடர்ந்த செலவினங்கள் தேவையானவை மிக சிறப்பாய் அமையும். அதனால் நன்மை ஏற்படும். மகான்களின் ஆசி கிடைக்கும். தந்தை, குடும்பம் வகையில் கருத்துப் பிணக்குகள் காணப்படும். தாயார், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம் வகையில் பெருத்த இழப்பு, நட்டம் ஆகியவை காணப்படும். கரும காரியம் நிகழும்.
* * * * *

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.