சார்வரி வருடம் - தை மாதப் பலன்கள்
முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை
கிரக பாதசாரங்கள்
சூரியன் 1 – 9 உத்திராடம், 10 - 23 திருவோணம், 24 – அவிட்டம் – மகரம்.
சந்திரன் - திருவோணம் – அவிட்டம்.
செவ்- 2 -3 அசு, 4 பரணி – மேடம்.
புதன் - 2 – 5 திருவோணம் – மகரம். 6 – 11 அவிட் மகரம், 12 அவிட்டம் 3 கும்பம், 17 வக்ரம், 22 – 27 அவிட்டம் – மகரம், 28 – திருவோணம்.
குரு - 8 – 21 திருவோணம் 2 ல் மகரம். 6 மே. அஸ்தமனம் . 22 திருவோணம் 3.
சுக்கிரன் - 1 – 11 பூராடம், 12 – 13 உத் தனுசு. 14 – 21 உத்திராடம் 4, 22 திருவோணம் மகரம்.
சனி - 9 திருவோணம் 1 ல் மகரம்.
ராகு - 9 ரோகிணி 4 ல் ரிடபம்.
கேது - 9 கேட்டை 2 விருச்சிகம்.
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வாக்குவாதங்கள், சண்டை சச்சரவு கட்டுக்குள் இருக்கும். முன் கோபத்தை கட்டுப்படுத்தினால் நன்மை ஏற்படும். நோய், கடன், வம்பு வழக்குகள் வலுத்துக் காணப்பெற்றாலும் குருவின் பார்வையினால் சற்று ஆறுதல், நன்மை அமையும். இளைய சகோதிரம், புத்திரர் வகையில் நன்மை, ஆதாயம், வயிற்று வலி, அவமானம் ஆகியன அமையும். தொழில், இலாபம், தந்தை அவர்கள் தொடர்ந்த உறவில் இழப்பு, பெருத்த நட்டம், கரும காரியம், அவமானம் ஏற்படும்.
மாணவர்கள், படிப்பில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக சிரத்தை முயற்சியின் பேரில் பள்ளி கல்வி, உயர்கல்வி, மேல் நிலை தொடர் கல்வி வாய்ப்பு கிடைத்ததை கவனமாய் பயன்படுத்திக் கொள்ளவும்.
பெண்களுக்குக் கருச்சிதைவு, புத்திரர் இழப்பு, அறுவை சிகிச்சை, உடல் உபதைகள் ஆகியன அமையும்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
புகழ், கௌரவம், அந்தஸ்து, வளர்ச்சி, முன்னேற்றங்கள் காணப்படும். சிலருக்கு புத்திரபாக்கியம், ஆடை, ஆபரணச்சேர்க்கை ஆகியன அமையும். குடும்பத்தில் பிணக்குகள் இருப்பினும் பெரிதும் பாதிக்காது. ஆயுள் கண்டங்கள் வந்து விலகும். தந்தை, தொழிலில் நல்ல நிலை காணப்படும். வளர்ச்சி, முன்னேற்றம், களத்திரம், மேல்நிலைக்கல்வி நிலைகளில் செலவினங்கள், வெளியூர்ப்பயணங்கள் ஆகியன அமையும். பெண்கள், சாதகர், எதிரிகள், கடன், வம்பு வழக்குகளினால் அவமானம் தொழில், மூத்த சகோதிர வகையில் இழப்பு, சிரமங்கள், அவமானம் ஆகியன அமையும். பின்னர் யாவும் பிரச்சினையினால் விலகி நன்மையாக முடியும்.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வசதி, கேளிக்கை, சுகங்கள், செல்வ வளம் சிறப்பாய் அமையும். புத்திரர்கள் வகையினால் மனமகிழ்வான செலவினங்கள், வெளியூர்ப்பயணங்கள் ஆகியன அமையும். மகான்கள் தரிசனம் அமையும். உறக்கமின்மை, உடலில் அலைச்சல், நரம்பு பாதிப்புத்தொல்லைகள், செவ்விலங்குகளினால் ஆபத்து காணப்படும். இளைய சகோதிரம், களத்திரம், கல்வி, முன்னேற்றம், வளர்ச்சி நிலை, தந்தை, தந்தையாதியர், தொழில் வகையில் திடீர் இழப்பு, நட்டம், கவலை, நரம்பு பாதிப்பு ஆகியன ஏற்பட்டு பின்னர் விலகி நன்மை ஏற்படும். உடலில் கவனம் தேவை.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சிறந்த தனவரவு, நல்ல இலாபம், பணியில் முன்னேற்றம், சுகஸ்தானம் கெடல் ஆகியன அமையும். களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம், இளைய சகோதிரம், மூத்த சகோதிரம், குடும்பம், தந்தை அவர் வகையினர் ஆகிய யாவற்றிலும் சங்கடங்கள், அவமானங்கள், அதே சமயத்தில் சிறிது மேன்மையான முன்னேற்ற நிலை, தாயார், அரசு வெகுமதி, குடும்பம், மூத்த சகோதிரம் வகையில் செலவினம், அவமானம், வெளியூர்ப்பயணங்கள், கருத்து வேறுபாடுகள் ஆகியன அமையும். எதிரி, தந்தை, அவர் வகையினர், வகையில் இழப்பு, நட்டம், பெருஞ்செலவினம், தந்தை, தாய்மாமன் வகை இழப்பு, நலிவு, அவமானம் ஆகியன அமையும்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
ஆலய வழிபாடு, வெளியூர்ப்பயணங்கள், சுபச் செலவினங்கள், சுப அசுப நிகழ்வுகள், தொழிலில் மேம்பட்ட நிலை, முன்னேற்றம், வருமானம், இலாபம், அதன் வகை பயணங்கள், குடும்பத்தில் மகிழ்வு ஆகியன நிலவும். இளைய சகோதிரம், தொழில் வகை ஆதாயம், இலாபம், வெளியூர்ப்பிரயாணங்கள் ஆகியவை ஏற்படும். மூத்த சகோதிரத்தால் கருத்துப்பிணக்குகள் ஏற்பட்டு விலகும். தாயார், குடும்பம் வகையில் சில நலிவு ஏற்படும். புத்திரர் வகை இழப்பு, நலிவு, சோகம் ஏற்படும். மூதாதையர் வகை மரண சம்பவம் நிகழும். தந்தையினால் ஆதாயம், நன்மை அமையும். சில முரண்பாடுகள், ஆயுள் கண்டங்கள், அவமானங்கள் ஆகியன ஏற்படும்.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
மிகவும் நன்மை ஏற்படும் காலம் இது. தொழிலில் முன்னேற்றம், நன்மை அமையும். இளைய சகோதிரம் வகையில் சிரமம் இருப்பினும் நன்மையாக முடியும். புத்திரர், தாய்மாமன், வகை ஆதாயம் இலாபம், நன்மை ஏற்படும். தாய், குடும்பம், களத்திரம் வகை இழப்பு நட்டம் ஏற்படும். அறிவு நிலைத்தடுமாற்றங்கள், வெளியூர்ப்பயணங்கள். செலவினங்கள், மனமகிழ்வுகள் ஆகியன அமையும். தந்தை, தொழில், குடும்பம் வகையில் மனமகிழ்வுகள் அமையும். குடும்பத்தில் கடும் வாக்குவாதங்கள் நிலவும்.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சிலருக்கு சிறப்பான அரசாங்க தொழில், தொழிலில் மேன்மை, பதவி உயர்வு, பணிச்சுமை, பொறுப்பு நிலைகள் ஆகியன அமையும். ஆபரணங்கள், இளைய சகோதிரம், தாய்மாமன் வகை இழப்பு, நட்டம் அமையும். குடும்பத்தாருடன் வாக்குவாதங்கள், சுப அசுப நிகழ்வுகள், இளைய சகோதிரம், தாய்மாமன் வகை இழப்பு, நட்டம், சிரமங்கள் ஏற்படும். ஆயுள் கண்டங்கள், பிணி, பீடைகள் வந்து விலகும். வீட்டில் கரும காரியம் நிகழும். தந்தை, குடும்பத்தார், மூத்த சகோதிரம், இளைய தாரம் இவர்களுடனான வெளியூர் உல்லாசப்பயணங்கள் சிறப்பாய் அமையும்.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
எதிலும் பற்றற்ற நிலை, இரண்டாம் தர வண்டி வாகனங்கள், தாயார் உடல் சுகம், குடும்பத்தில் மகிழ்வான நிலை, குடும்பம், புத்திரர் வகை இழப்பு, நட்டம், சோகம் ஏற்படும். களத்திரம், குடும்பம் வகை மன மகிழ்வுகள், அதே சமயத்தில் வெளியூர்ப்பயணங்கள், அவமானங்கள் நிகழும். தொழில், இளைய, மூத்த சகோதிரம், புத்திரர்கள் வகையில் கருத்து மாறுபாடுகள், சுப அசுப நிகழ்வுகள் அமையும். சிலருக்கு விருப்பத்திருமணம், விருப்ப இரகசிய உறவுகள் மிக சிறப்பாய் அமையும்.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பணியில் பல்வேறு நிலை மாற்றங்கள், குடும்பத்தினருடன் கருத்து மாறுபாடு ஆகியன காணப்படும். தந்தை, தந்தையாரின் வழி உடல்நலத்தினில் கவனம் தேவை. ஆன்மீகப்பயணங்ள், மகான்கள் தரிசனம், விட கண்டங்கள், உடல் சுகமின்மை ஆகியன அமையும். புத்திரர் வகையில் இலாபம், ஆதாயம், நன்மை, மகிழ்வான நிகழ்வுகள் ஏற்படும். குடும்பம், இளைய சகோதரி வகையில் நன்மை. அதே சமயத்தில் கடும் வாக்குவாதங்கள், பலத்த அவமானங்கள், பெருத்த நஷ்டங்கள், இழப்புகள், அளவு கடந்த சோதனைகள் ஆகியன அமையும். வாழ்க்கையில் விரக்தியான நிலை, உறக்கமின்மை ஆகியன காணப்படும். ஆன்மீக வழிபாடு பெருத்த நன்மையைத்தரும்.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
எடுத்த காரியங்கள் மிக மிக சிறப்பாய் அமையும். அளவு கடந்த கடின உழைப்பு, முயற்சி சிறந்த வெற்றியைத் தரும். புத்திரர், பணி தொடர்ந்த நிலையில் வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள், அலைச்சல்கள் அமையும். மிக மிக சிறப்பான அரசாங்கப்பணி, பணி உயர்வு, பணியில் முன்னேற்ற நிலைகள், சிறந்த விருதுகள், அரசாங்க சன்மானங்கள், இராஜமரியாதை, புத்திரர் வழி, தந்தை, தந்தையார் வகை வழி, அவர் தம் தொழில் வழி, மகிழ்வுகள், நன்மைகள் அமையும். அட்டமாதி 8 ல் உலவுவதால் இரத்த அழுத்த மாறுபாடு, தலை சுற்றல், மயக்கம், நரம்பு பலகீனம், வயிறு, மர்ம உறுப்புகள், கால் தொடர்ந்த உபாதைகள் ஏற்பட்டு மருத்துவத்தினால் நன்மை அமையும். உடல் நலத்தினில் கவனம் தேவை. குடும்பம், தாயார், மூத்த சகோதிரம் வகையில் மகிழ்வு, ஆதாயம், இலாபம், அரசாங்க வகை ஆதரவுகள், நன்மைகள் மிக சிறப்பாய் அமையும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பம், மூத்த சகோதிரம், புத்திரர் வகையில் இழப்பு, நட்டம், அவமானம் ஏற்படும். வெளியூர்ப்பயணங்கள், அலைச்சல்கள், உறக்கமின்மை, அவமானங்கள் இருந்த போதிலும் நன்மை அமையும். வழக்குகள், குடும்பத்தாருடன் கருத்துப்பிணக்குகள், பலத்த செலவினங்கள், அரசாங்க ஆதாயங்கள், நன்மைகள், திருமண உறவினில் விரிசல்கள், சில இரகசிய உறவுகள், இரண்டாம் தர வண்டி வாகன வசதி மேம்பாடுகள் ஆகியன அமையும். இளைய சகோதிரம், தொழில் வகையில் நன்மை, ஆதாயம் மிக சிறப்பாய் அமையும்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
திருமணம், இரண்டாந்திருமணம், குடும்பத்தினில் மனமகிழ்வுகள், தந்தையார் வழி ஆதாயங்கள், நன்மைகள் ஆகியன அமையும். தந்தையார், குடும்பம் வழி நன்மைகள் அமையும். தொழில், முயற்சிகளில் பெருத்த அவமானம், நட்டம், இழப்பு ஆகியன அமைந்து விலகும். அதன் வழி வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள், அலைச்சல்கள், மானக்குறைவு அமையும். இளைய சகோதிரம் வகையில் நன்மை, தீமை, கருத்துப்பிணக்கு ஆகியன அமையும். இருப்பினும் கேளிக்கை, மகிழ்வுகள், உல்லாச உறவுகள் மகிழ்வினைத்தரும். மிகுந்த இலாபம், ஆதாயங்கள் இருப்பினும் மனசஞ்சலங்கள் இருக்கும்.
அனைத்து இராசியினருக்கும் பரிகாரங்கள்
அனைத்து இராசியினருக்கும் ஆன்மீக வழிபாடு மிக மிக சிறந்தது. குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு மிகுந்த நன்மையைத் தரும். பெருத்த அவமானங்களைத் தடை செய்ய நேர்த்திக்கடன்கள் இருக்கும் இராசி இலக்கினத்தார்கள் அவற்றினை நிறைவு செய்து கொள்வது நன்று. ஏன் எனில் பலத்த இடர்கள் யாவும் இறையருளால் விலகப்பெறுவீர்.
மேடம்– சிவபெருமான்.
ரிடபம்– திருமால்.
மிதுனம்- சிவபெருமான்.
கடகம்– முருகன்.
சிம்மம்– குரு.
கன்னி– தனித்த கிராம தேவதைகள். சப்த கன்னியர். காளி முதலானவை.
துலாம்- தனித்த கிராம தேவதைகள். சப்த கன்னியர். காளி முதலானவை.
தனுசு– குரு.
மகரம்– சிவபெருமான்.
கும்பம்– திருமால்.
மீனம்– பார்வதி.
தானங்கள் அன்னதானம். வஸ்திர தானம் மிகுந்த நன்மையைத் தரும்.
* * * * *

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.