பிலவ வருடம் - வைகாசி மாதப் பலன்கள்
முனைவர் ஸ்ரீ வாலாம்பிகை
கிரக பாதசாரங்கள்
சூரியன் 4 - 10 கிருத், 11 – 24 ரோகிணி, 25 மிருக - ரிடபம்.
சந்திரன் - மிருக - பூசம்.
செவ்- 2 – 18, புனர் மிது, 19 – 20 புனர் கடக, 22 பூசம் – கடகம்.
புதன் - 2 – முதல் 11 மிருக ரிடபம், 12 மிது, 15 ல் வக்ரம். 19 ல் ரிடபம்.
குரு - 8 ல் சதயம் 1 ல் கும்பம்.
சுக்கிரன் 1 – 8 ரோகிணி, 9 - 16 மிருக – ரிஷபம். 17 – மிருக 19, 20 – 30 திருவா, 31 ல் புனர் மிதுனம்.
சனி - திருவோணம் 3 ல் மகரம். 9 ல் வக்ரம்.
ராகு - ரோகிணி 2 ல் ரிடபம்.
கேது - அனுடம் 4 ல் விருச்சிகம்.
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
புத்திரப்பேறு, கல்வி, வளர்ச்சி நிலை, முன்னேற்றங்கள், திருமணம், உயர்கல்வி மேம்பாடு ஆகியன சிறப்பாய் அமையும். குடும்பத்தில் கடும் முன்கோபம் பிடிவாதத்தினால் கருத்துப்பிணக்குகள், இளைய சகோதிரத்துடன் வாக்குவாதம், மனசலனங்கள், நரம்புக்கோளாறு, ஆயுள் கண்டப்பீடை, விட சுரம் ஆகியவை ஏற்பட்டு விலகும். இலாபத்துடன், தந்தையார் வழி கூடிய விரயங்கள். வெளியூர்ப் பயணங்கள் ஆகியவை அமையும். பணியில் சுமை, இடர்ப்பாடுகள், வர வேண்டிய இலாபத்தில் தடை, கரும காரியம் ஆகியவை நிகழும்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தனவரவு, முன்கோபம், கடும் வாக்குவாதம், வீடு, வாகன சுகங்கள், மூத்த சகோதிரம், இளைய மனைவியால் மனவருத்தங்கள், இடையூறுகள் அமையும். கடன், நோய், வழக்கு, எதிரிகள் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர். தந்தை, தொழில் வழி மனசஞ்சலங்கள், வருத்தங்கள் அமையும். தடைகளுடன் கூடிய திருமணம், வளர்ச்சி நிலைகள் ஆகியன அமையும். சிலருக்கு திருமண வாழ்வில் மனமுறிவு, செலவு, வெளியூர்ப்பயணம் கூடிய நிலை, வளர்ச்சி முன்னேற்றத்தின் வழி இலாபம், செலவினம் ஆகியன அமையும்.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இளைய சகோதிரம், புத்திரர் ஆகியோருடன் கூடிய கருத்து மாறுபாடு, வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் அமையும். எதிரி, நோய், கடன், வம்பு வழக்கு, மூத்த சகோதிரம், இளைய தாரம், நன்மை, கௌரவம், மேன்மை ஆகிய வழி சிறப்புகள் அமையும். கல்வி, வளர்ச்சி, முன்னேற்றம், திருமணம், தொழில், பதவி முன்னேற்ற கௌரவம் ஆகிய நிலையில் சிறப்புகள் அமையும். சில சங்கடங்கள் ஏற்பட்டு விலகும். சிலருக்குப் புத்திரர், இளைய சகோதிரத்தினால் சிரமம், செலவினம், பயணம் ஏற்பட்டு விலகும். ஆடை ஆபரணங்களில் இழப்பு, நட்டம் ஏற்படும். சிலருக்கு புத்திர ப்ராப்தி அமையும். தந்தையார், அவர் வழி உறவினர்கள், ஆயுள் கண்டப்பீடைகள், கருத்துப்பிணக்குகள், சண்டை ஏற்பட்டு விலகும்.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
புத்திரர், தொழில், இளைய சகோதிரம், ஆடை ஆபரண வழிச் செலவினம், வெளியூர்ப் பயணங்கள், உடலில் வெப்ப நோய் அதிகரித்தல் ஆகியன அமையும். வளர்ச்சி, முன்னேற்றம், கல்வி நிலைகளில் சில சங்கடங்கள், தடைகள் அமையும். எனினும் வரவு, செலவினம் யாவும் கட்டுக்குள் இருக்கும். தந்தை, தாய்மாமன், நோய், கடன், வம்பு, வழக்கு, எதிரி வழி சங்கடங்கள் அமையும். தனவரவு, வாகன சுகங்கள், தாயார் உடல் நல முன்னேற்றம் சிரமம் ஏற்பட்டு நன்மையாய் அமையும்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தொழிலில் கண்டங்கள், கரும காரிய நிகழ்வுகள், குடும்பம், மூத்த சகோதிரத்தால், இளைய தாரத்தால், சங்கடங்கள், கண்டங்கள், தாய்மாமன், கல்வி, வளர்ச்சி, நிலை, முன்னேற்றம், திருமணம் ஆகியவற்றின் வழி தடைகள், மன சலனங்கள் இருக்கும். தலைசுற்றல், இரத்த அழுத்த மாறுபாடு, வெப்பம், நரம்பு, மர்ம உறுப்பு தொடர்ந்த நோய் காணப்பெறும். இளைய, மூத்த சகோதிரம், தொழில், கரும காரியம் வழி இழப்பு, நட்டம் ஆகியவை நிகழும்.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இளைய சகோதிரம், ஆயுள் கண்டப்பீடைகளில் இருந்து விடுபடுவீர். பெயர், புகழ், கௌரவம், முன்னேற்ற நிலை, குடும்பம், தந்தையார் வழி சங்கடங்கள், வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள், கருத்துப் பிணக்கு, வாக்குவாதம் ஆகியன அமையும். புத்திரர், தாய்மாமன், நோய், கடன், வம்பு, வழக்கு வழி சிரமங்கள் ஏற்படும். கரும காரியம் நிகழும். வரவும், செலவும், வெளியூர்ப் பயணங்களும் வெகு சிறப்பாய் இருக்கும்.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
மூத்த சகோதிரம், இளைய தாரம், தந்தை, அவர் வழி உறவுகள், குடும்பத்தார், பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து, ஆயுள் கண்டம் ஆகியவற்றில் அவமானங்கள், மரண கண்டப்பீடைகள், வீண் செலவினங்கள், வெளியூர்ப்பயணங்கள் ஆகியவை அமையும். தாயார், வீடு, வாகனம், புத்திரர் வகை சிரமங்கள் காணப்பெறும். கரும காரியம், அல்லது அதற்கு இணையான சம்பவங்கள் பலமாக நிகழும். இருப்பினும் தந்தையார், அவர் வழி, மூத்த சகோதிரம், இளைய தாரம், சாதகர் வழி நன்மை அமையும்.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பதவியில் நல்ல நிலை, முன்னேற்றம், அவமானங்களில், கடும் கண்டங்களில் இருந்து விடுபடல், இளைய சகோதிரம், தாயார், அவர் வகை வழி சிரமங்கள் அமையும். தொழில், களத்திரம், கல்வி, வளர்ச்சி நிலை, முன்னேற்றம், திருமணம் ஆகியவற்றில் தடைகள், அவமானங்கள், சங்கடங்கள், செலவினங்கள், வெளியூர்ப்பயணங்கள் ஆகியவை ஏற்படும்.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
புத்திரர் வழி மனமகிழ்வுகள், சுப நிகழ்வுகள், திருமணம், வளர்ச்சி, முன்னேற்றங்கள், கடும் போராட்டத்திற்குப் பின் தந்தையார் வழி நன்மைகள் அமையும். மூத்த சகோதிரம், இளைய தாரம் வகை பிணக்கிற்குப் பின் நன்மை விளையும். குடும்பத்தார், இளைய சகோதிரம் இவற்றால் சங்கடங்கள், வாக்குவாதங்கள் அமையும். தொலை துார ஆன்மீகப்பயணங்கள் அமையும். தாயார், சாதகர் வகை சங்கடங்கள் அமையும். தந்தை, மூத்த சகோதிரம், இளைய தாரம், தாய்மாமன், கடன், நோய், வம்பு வகை வழி சிரமங்கள் ஏற்படும். கரும காரியங்கள் நிகழும்.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
ஓரளவிற்கு செலவுடன் கூடிய தனவரவு, இளைய சகோதிரத்தால் நன்மை, புத்திரர், தொழில் வகை வழி சங்கடங்கள் இருப்பினும் நன்மையாய் முடியும். தொழிலில் முன்னேற்றம் நன்மை அமையும். ஆயுள் கண்டப்பீடைகள் விலகும். எதிரி, கடன், நோய், வம்பு வகை வழி விலகி நன்மையாய் முடியும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பம், மூத்த சகோதிரத்தால், இளைய தாரத்தால் நன்மை அமையும். பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து, மேம்பாடு ஆகியவற்றின் வழி செலவினங்கள், வெளியூர்ப்பயணங்கள் ஆகியன அமையும். கரும காரியம் நிகழும். பெற்றோர் வழி, புத்திரர், ஆயுள் கண்டம் வழி சிரமம் ஏற்படும். புத்திரர், திருமணம், கல்வி. வளர்ச்சி நிலை முன்னேற்றங்கள், தந்தை அவர் வழி நன்மை அமையும்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தாயார், அவர் வழி, வீடு, வாகனம், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம், திருமணம், இளைய சகோதிரம், தொழில், சாதகர் வழி ஆகிய வழி சங்கடங்கள், அவமானங்கள், வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் ஆகியவை அமையும். மூத்த சகோதிரம், இளைய தாரம் வகை சங்கடங்கள் இருக்கும். கரும காரியம், அவமானம், கண்டங்கள் பலமாய் நிகழும். இருப்பினும் இலாபம், மூத்த சகோதிரம், இளைய தாரம் இவர்களால் நன்மை, கௌரவ முன்னேற்றம், இளைய சகோதிரத்தால், ஆடை ஆபரணச்சேர்க்கையால் நன்மை அமையும்.
* * * * *

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.