
கிரக பாதசாரங்கள்
சூரியன்- 1 – 13 அசுவினி, 14 – 27 பரணி, 28 – 30 கிருத் மேடம்.
சந்திரன் - பூரம் - சித்திரை.
செவ்- 3 – 19 சதயம், 20 முதல் பூரட்டாதி – கும்பம்.
புதன் - 1 - 8 பரணி, 9 – 10 கிருத் மேடம், 11 – 22 கிருத் – ரிடபம், 23 – ரோகிணி 27 ல் வக்ரம், 31 கிருத் – ரிடபம்.
குரு - 1 -14 கும்பம், 15 – உத்திரட்டாதி – மீனம்.
சுக்கிரன் - 2 - 4 வரை சதயம் – கும்பம், 5 -16 பூரட்டாதி 14 ல் மீனம், 17 – 28 உதி, 29 – ரேவதி – மீனம்.
சனி – 1 – 15 மகரம், 16 ல் அவிட்டம் 3 – கும்பம்.
ராகு - கிருத்திகை 2 ல் ரிடபம். 30 ல் கிருத்திகை 1 ல் மேடம்.
கேது - விசாகம் 4 ல் விருச்சிகம். 30 ல் விசாகம் 3 ல் துலாம்.
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
ஆடை ஆபரணச் சேர்க்கை சிறப்பாய் அமையும். சிலருக்கு குழந்தை பாக்கியம், திருமணம் முதலிய வீட்டில் சிறப்பான நிகழ்வுகள், கல்வி வளர்ச்சியில் சிறப்புகள், வெகுமதி அமையும். முன் கோபத்தை, பிடிவாதத்தைக் கை விடின் மிகுந்த நன்மை தரும். வழக்கு, எதிரி, நோய் நொடிகளில் இருந்து நன்மை பெறுவீர். இளைய சகோதிரம், தாய்மாமனால் ஆதாயம், இலாபம் ஏற்படும். தந்தை, தாயாரர், குடும்பம், துணைவர், மூத்த சகோதரி, இளைய தாரம் வழி வெளியூர்ப்பயணம், செலவு, இலாபம் ஆகியவை அமையும். குழந்தைகள் வழி கௌரவம், புகழ், சில இடையூறுகள் அமையினும் நன்மையாய் முடியும். தாயாருடன், குடும்பத்தாருடன் கருத்து மாறுபாடு அமையும்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தாயாரின் உடல் நலனில் முன்னேற்றம், சிலருக்கு உபாதைகள், அறுவை சிகிச்சை, இளைய சகோதிரத்துடன் கருத்து மாறுபாடு, மகான்களின் ஆசி, தாய்மாமனால் நன்மை, தனது சுய திறமை அறிவின் வழி பாராட்டு, வெகுமதி அரசாங்க ஆதாயங்கள், இலாபங்கள் அமைதல், சாதகர் தம் திறமை, துணைவர், மூத்த சகோதிரம், இளைய தாரம் வழி வெளியூர்ப்பயணங்கள் அரசாங்க ஆதாயத்துடன் இலாபமாய் அமைதல், தொழில் சிலருக்கு சிறப்பாய் கௌரவ மேன்மையுடன் அமைதல், தந்தை வழி நன்மை, செவ்விலங்குகளினால் உபாதை, உறக்கமின்மை, அலைச்சல், தாயாரைப் பிரிந்திருத்தல், குடும்பத்தார், தாயார், குழந்தைகளுடன் வெளியூர்ப்பயணங்கள் செல்லல், சிறந்த தனவரவு. குழந்தைகள் வழி மகிழ்வு, சிலருக்கு சிறப்பாய் ஆடை ஆபரணச்சேர்க்கை, திருமணம், வீட்டில் விசேடங்கள், கல்வி வளர்ச்சி முன்னேற்றங்கள், கருத்தறித்தல், (சந்தான வளர்ச்சி) குழந்தைப்பேறு, அவர்களினால் மகிழ்வு, கரும காரியம் நிகழ்வு ஆகியன அமையும்.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பல இன்னல்களில் இருந்து விலகுவீர். சிறந்த தனவரவு 15 தேதிக்கு மேல் அமையும். பெயர், பதவி, புகழ், கௌரவம் மேன்மையாய் அமையும். தாய்மாமன், வழக்கு, நோய் நிலை, மூத்த சகோதிரம் வழி தொழிலில் மேன்மை, இலாபம், பணியில் மாற்ற நிலை உயர் பதவி நிலை, அரசாங்க ஆதாயத்துடன் இலாபத்துடன் கூடிய நன்மை ஆகியன அமையும். தன வரவில் தடைகள் சில இருப்பினும் நன்மையாய் முடியும். குழந்தைகள், களத்திரம், தாய்மாமன், வழக்கு, நோய், வளர்ச்சி வழி சில தடைகள் அவமானம் இருப்பினும் பெரிதாய் பாதிக்காது. அவை தொழில் வழி நன்மையாய் முடியும். இளைய சகோதிரம், தாயாருடன் கருத்து மாறுபாடு ஏற்பட்டு விலகும். வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர். கரும காரியம் நிகழ்வு ஆகியன அமையும்.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வழக்கு, வளர்ச்சி, முன்னேற்றம், ஆயுள் கண்டப்பீடைகள் இருப்பினும் அவற்றினின்று விலகி நன்மை அமையும். தாயார் உடல் நலிவு, கரும காரியம் நிகழ்வு ஆகியன அமையும். தன வரவில் நல்ல முறையற்ற நிலை காணப்படும். கவனம் தேவை. தாயார், குழந்தைகள், தொழில், மூத்த சகோதிரம், இளைய தாரம் வழி வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் ஆகியன அமையும். சனீஸ்வரரை வணங்குதல் மிகுந்த நன்மையைப் பெறலாம். இம்மாதத்தின் 15 ற்கு மேல் மிகுந்த நன்மை நடைபெறும். கௌரவ மேன்மை, குழந்தைகளால் மகிழ்வு, குழந்தைப்பேறு, ஆடை ஆபரணச்சேர்க்கை ஆகியன அமையும். இளைய சகோதிரம், குடும்பம் வழி பயணங்களினால் செலவினங்கள், அலைச்சல்கள், தடைகள், கரும காரியம் நிகழ்வு ஆகியன அமையும்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வீடு வாங்குதல், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குதல், அரசாங்க ஆதாயங்கள், பெற்றோர், இளைய சகோதிரம், தொழில் வகை மேன்மை, பெயர், புகழ், கௌரவம் முதலியவற்றில் மேன்மை, இவற்றினால் தன வரவு, வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள், குழந்தைகள் வகை மேன்மை, நன்மை அமையும். பயணத்தில் சில இடையூறுகள் காணப்படினும் நன்மையாய் அமையும். குடும்பம், மூத்த சகோதரி, இலாபம், இளைய தாரம் வழியில் சில தடைகள், கருத்து மாறுபாடு இருப்பினும் நன்மையாய் அமையும்.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குழந்தைகள், தாய்மாமன், கடன், வழக்கு வழி நன்மை அமையும். குடும்பம், தந்தையார், தனவரவு, இளைய சகோதிரம், தாயார், குடும்பத்தார், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம் ஆகிய வழி அரசாங்க ஆதாயத்துடன் கௌரவம், நற்பெயர், புகழ், எளிய வகை உணவு, இறை சிந்தனையில் நிற்றல் ஆகிய யாவும் அமையும்.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வாழ்வில் பற்றற்ற நிலை, வளர்ச்சி, இலாபம், முன்னேற்றங்களில் சில தடைகள், கரும காரியம் நிகழ்வு, சாதகர், குடும்பம், பெயர், புகழ், குடும்பம், களத்திரம் ஆகிய இவற்றினில் அரசாங்க ஆதாயங்கள், மிகுந்த நன்மை, சிறப்புகள் அமையும். தொழில் மேன்மை, சிறப்பாய் அமைதல், வெளியூர் உல்லாசப்பயணங்கள் சில இடர்ப்பாட்டுடன் அமைதல், சிறந்த தனவரவு அமைதல் ஆகியன நிகழும்.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
விட கண்டங்கள், உயர் இரத்த அழுத்தம், நரம்பு பாதிப்புகள், சில இன்னல்கள் இருப்பினும் நன்மை அமையும். இளைய சகோதிரம், தாயார் வகை நன்மை அமையும். களத்திரம், சாதகர், தாய்மாமன, கடன், நோய், வழக்கு வழி நன்மை, நற்பெயர், கௌரவம். மேன்மை அமையும். அரசாங்க ஆதாயம், நன்மை அமையும். மாதத்தின் பிற் பாதியில் தந்தையால் நன்மை, மூத்த சகோதரி, இளைய தாரம் இவற்றால் நன்மை, சிறந்த இலாபம், பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து மேம்படும்.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தாயார், சாதகர், குழந்தைகள், மூத்த சகோதரி, இளைய தாரம், தாய்மாமன், கடன், வழக்கு, நோய் வழி அரசாங்க ஆதாயம். இலாபம், பெயர், புகழ், கௌரவ மேன்மை, நன்மை ஆகியன அமையும். நிலைத்த வருமானம், குழந்தைகள், மூத்த சகோதரி, இளைய தாரம் வழி சில இன்னல்கள் ஏற்படும். களத்திரம், வளர்ச்சி முன்னேற்றம், தொழில் நிலை, தந்தை முதலியவற்றுடன் கருத்து மாறுபாடு தந்தைக்கு கண்டம் ஆகியன அமையும். சில இன்றியமையாத வெளியூர்ப்பயணங்கள் செலவினங்கள் ஆகியன அமையும்.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சுப நிகழ்வுகள் அமையும். கடின உழைப்பில் நற்பலன்கள், புண்ணியப்பலன்கள் வெகு சிறப்பாய் ஆதாய இலாபத்துடன், மன மகிழ்வாய் அமையும். வளர்ச்சி, முன்னேற்றத்தில் மாறுபாடுடன் கூடிய நிலைத்த பணி, தனவரவு, இலாபம், குழந்தைகள், தொழில், மூத்த, இளைய சகோதரி, இளைய தாரம், தாயார் வழியில் வெளியூர் உல்லாசப்பயணங்கள், செலவினங்கள் கௌரவத்துடன் மன மகிழ்வாய் அமையும். வீட்டில் சிறப்பான நிகழ்வுகள், கல்வி வளர்ச்சி முன்னேற்றங்கள், சன்மானங்கள், அரசாங்க ஆதாயங்கள், சிறந்த ஆடை ஆபரணச் சேர்க்கை முதலியன அமையும். தர்ம, ஆன்மீகச் சிந்தனைகள் மேலோங்குவதால் நன்மைகள் தானே நிகழும். தாய்மாமன், வழக்கு, தந்தையார் வழி சில இன்னல்கள் அமையும். கரும காரியம் நிகழும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பம், தன வரவில், மூத்த சகோதரி, இளைய தாரம், இதனால் இலாபம், பெற்றொர் வழி மன மகிழ்வு, இளைய சகோதிரம் வழி, தொழில் தொடர்ந்த நிலையான வெளியூர்ப்பயணங்களில் செலவினம், சிறப்பான தொழிலின் மேன்மை நிலையை அடைதல் பெயர், புகழ், கௌரவம், மரியாதை, அரசாங்க ஆதாயங்கள், மிகுந்த நன்மைகள், சிறந்த தன வரவின் இலாபம், வழக்கு, நோய், கடன் இவற்றிலிருந்து விடுபடல். களத்திரத்தால், வளர்ச்சி நிலைகளில், தாயாரால், தாய்மாமனால் நன்மை, சில இன்னல்கள் ஆகியன அமையும்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இம்மாதத்தின் பிற்பாதியில் குழந்தைகளினால் மேன்மை, மகிழ்வு, கருத்தறித்தல், வீட்டில் சிறப்பு நிகழ்வுகள், திருமணம் முதலியன நடைபெறல், கல்வி முதலானவற்றில் வளர்ச்சி நிலைகள் அமைதல், தந்தை, தன வரவினால் நன்மை, இளைய சகோதிரம் ஆகிய வழி மகிழ்வு, அரசாங்க ஆதாயம், கௌரவம் பெறுதல், கடினப்பட்டதற்கான ஊாதிய உயர்வு மேன்மை, புகழ், இலாபம் அமையும். குடும்பத்தில் வாக்கு வாதம் காணப்படும். விட கண்டங்கள் வந்து விலகும். உயர் இரத்த அழுத்தத்தின் காரணமாக இரத்த அணுக்கள் ஏற்ற இறக்கமாய் காணப்படும். நரம்பு தொடர்ந்ந தொல்லைகள் இருந்து குணமாகும்.
* * * * *