
கிரக பாதசாரங்கள்
சூரியன்1 – 13 மூலம், 14 – 26 பூராடம், 27 உத்திராடம், - தனுசு.
சந்திரன் - பூரம் – அஸ்தம்.
செவ்- 8 ல் ரோகிணி 2 ரிடபம், 28 ல் வக்ர நிவர்த்தி.
புதன் - 1 – 5 பூராடம், 6 – 19 உத்திராடம், 12 ல் உத் – மகரம். 14 – வக்ரம், 15 ல் தனுசு. 17 மேற்கு அஸ்தமனம், 20 – பூராடம், தனுசு, 28 ல் வக்ர நிவர்த்தி.
குரு - 13 ல் உத்திரட்டாதி 2 ல் மீனம்.
சுக்கிரன் - 1 – 10 பூராடம், 11 - 13 உத்திராடம் தனுசு. 14 – 21 உத்திராடம், 22 – 30 திருவோணம் – மகரம்.
சனி – அவிட்டம் 2 ல் மகரம்.
ராகு - பரணி – 1 ல் மேடம்..
கேது - சுவாதி 3 ல் துலாம்.
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சுகத்தானம், தாய்மாமன், வழக்கு, உடல் நலன் போன்ற இடங்களை குரு பார்வை இடுவதால் மிகுந்த நற்பலன்கள் ஏற்படும். அதே சமயத்தில் சில குறைபாடுகள், திடீர் கண்ட விபத்து போன்றவை நிகழும். நரம்பு தொடர்ந்த உடல் நலனில் கவனம் தேவை. இலக்னத்தின் மீது செவ்வாய் பார்வையினால் கடும் கோபத்தை விட்டொழித்தல் நலம். வளர்ச்சி, முன்னேற்றங்கள் காணப்படும். புத்திரர்களால் சில குறைபாடுகள், அதே சமயத்தில் அரசாங்க நன்மை, மகிழ்வு, தலைசுற்றல், மயக்கம் இரத்த அழுத்த மாறுபாடுகள் ஆகியனவும் அமையும். இளைய சகோதிரம், தந்தை வழி, தாய்மாமன், வழக்கு, கலை, எழுத்துத்துறை, தொழில், மூத்த சகோதரியால் இலாபம், மகிழ்வு, இளைய மனைவி வழி ஆதாயம், நன்மை, வெளியூர்ப் பயணங்களில் மகிழ்வு, செலவினங்கள் ஆகியன அமையும். புத்திரர்கள், களத்திரம், தாய்மாமன், குடும்பத்தாருடன் சில பிணக்குகள் இருக்கும். கரும காரியம் நிகழும்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தந்தை, தொழிலினால் நன்மை, மேன்மை, நீடித்த இலாபம் கலந்த கடினப்பட்டதற்கான தொழில், சிறந்த இலாபம் அமைதல், வளர்ச்சி, முன்னேற்றங்கள், வாழ்க்கைத் துணை, தாய்மாமன், வழக்கு, கடன் தொடர்ந்த சிரமங்கள், முதலியவற்றுடன் சில பிணக்குகள், தன வரவு, புத்திரர்கள் வழி சில தடைகள், இளைய சகோதிரத்தால், ஆடை, ஆபரணச்சேர்க்கை ஆகியவற்றினால் இலாபம், மூத்த சகோதிரம், இளைய தாரத்தால் இலாபம் அமைதல், மகான்களின் ஆசி, செவ்விலங்குகளினிடத்தில் எச்சரிக்கையாய் இருத்தல், உறக்கமின்மை, பயண அலைச்சல், பல தடைகள், சில நாட்கள் நீடித்தல் ஆகியன நிகழும்.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வளர்ச்சி, முன்னேற்றம், சிறப்பான தொழில், தொழிலில் உயர்வு, மேன்மை, சிறந்த தனவரவு, குடும்பத்தினரால் மகிழ்வு, சிறப்புகள், வாகனம், வீடு முதலிய தேவையானவை வாங்குதல், சாதகர், தாய்மாமன், வழக்கு, கலை, எழுத்துத்துறை இவர்களால் சில இடர்ப்பாடுகள், புத்திர சோகங்கள், இலாபம், மூத்த சகோதிரம், இளைய தாரம், இவர்களால் சில இலாபம், நன்மை, சில இடர்ப்பாடுகள் அமையும். கரும காரியம் நிகழும்.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெயர், புகழ், கௌரவம், வளர்ச்சி, முன்னேற்றம் அமையும். தந்தை, அவர் வழி நன்மை ஆகியன அமையும். சிலருக்கு புத்திரப்ராப்தம், புத்திரர்கள் வழி மகிழ்வு அமையும். மூத்த சகோதரியால், இளைய தாரத்தால் தடைகள், மனஸ்த்தாபங்கள், இளைய சகோதிரம், வெளியூர்ப் பயணங்களில் செலவினங்கள், இடர்ப்பாடுகள், தொழிலில், தாய்மாமன், கடன், வழக்கு, தன வரவில் சில தடைகள் ஆகியன அமையும். கரும காரியம் நிகழும்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சில மகிழ்வான உல்லாச வெளியூர்ப்பயணங்களில் மகிழ்வு, செலவினங்கள் ஆகியன அமையும். மூத்த சகோதிரம், இளைய சகோதிரம், இளைய தாரம், அவர் வழி சில இடையூறுகள் அமையும். தாய்மாமன், வழக்கு, கலை, எழுத்துத்துறை, களத்திரம் வழி நன்மை அமையும். சிலருக்குத் பெற்றோருடன் பிணக்கு, தொழிலில், வளர்ச்சி, முன்னேற்றங்களில், தனவரவில், பல இடையூறு, தடைகள், பூசல்கள் அமையும். கரும காரியம் நிகழும்.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
மூத்த சகோதரி, இளைய தாரத்தால் நன்மை அமையும். பெயர், புகழ், கௌரவம், வளர்ச்சி, முன்னேற்றம் இவற்றில் சில தடைகள், இடையூறுகள் ஏற்பட்டு இம்மாத இறுதியில் சரியாகும். திடீரென இரத்த அழுத்தம் மாறுபாடு, இரத்த அணுக்கள் குறைதல் இருக்கும். எனவே உடல் நலனில் கவனம் தேவை. தொழிலில் மாற்றங்கள் நிலவும். புத்திரர், தாய்மாமன், வழக்கு, கடன் வழி நன்மை அமையும். வெளியூர்ப்பயணங்களில் அலைச்சல், செலவினங்கள் ஆகியன இருக்கும். இளைய சகோதிரம், ஆயுள் கண்டம் வழி சிரமம் அமையும். கரும காரியம் நிகழும்.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தாயார், வீடு, வாகன சுகம், புத்திரர் வழி மகிழ்வு அமையும். தாய்மாமன், கடன், வழக்கு வழி நன்மை அமையும். வாழ்வினில் பற்றற்று இருத்தல், மகான்களின் ஆசி கிடைக்கும். குடும்பத்தில் கடும் வாக்குவாதம், இளைய சகோதிரம், தந்தையாருடன், தனவரவில், வளர்ச்சி, முன்னேற்றத்தில், களத்திரத்தில், மூத்த சகோதிரம், இளைய தாரம் ஆகியோரால் சில தடைகள், கருத்து மாறுபாடு, பிணக்குகள் ஆகியன அமையும்.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சிலருக்கு விசேட புத்திரப் ப்ராப்தம், இளைய சகோதிரம், ஆடை ஆபரணச் சேர்க்கை, தாயார், வீடு வாகன சுகம் ஆகியவற்றால் நன்மை மிகச் சிறப்பாய் அமையும். பூர்வ புண்ணிய பலனினால் மிகுந்த நன்மை தானாகவே அமையும். வாழ்வில் பற்றற்று இருத்தல், தன வரவில் சில தடைகள், விட கண்டங்கள், எதிரிகள் தொல்லையினின்று விடுபடுதல், வர வேண்டிய அனைத்து வாய்ப்புக்களினையும் சிக்கல்களை ஏற்படுத்தி சிறப்பாய் இம்மாதம் இறுதியில் வழங்கும். உறக்கமின்மை, வாழ்வில் பற்றற்று இருத்தல், கரும காரியம் நிகழும்.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இளைய சகோதிரம், ஆடை ஆபரணச் சேர்க்கை, குடும்பம், தனவரவு ஆகியவற்றால் இலாபம், சிலருக்குத் தொழிலில் மாற்றம், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம், தொழில், புத்திரர் வழி ஆகியவற்றில் சில சோகங்கள், சில தடைகள், தாய்மாமன், கடன், வழக்கு, மூத்த சகோதரி, இளைய தாரத்தால் சில சங்கடங்கள், வெளியூர்ப்பயணங்களில் சில அலைச்சல் முதலியன அமையும்.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
நிதானித்துச் செய்தல், சிலருக்கு உடல் நலிவில் சில மாற்றங்கள் ஏற்ற இறக்கமாய்க் காணப் பெறுதல், கடும் பலித வாக்கு, குழந்தைகள் வழி அரசாங்க நன்மை, உயரிய விருதுகள், தனவரவு, இலாபம் அமைதல், பெயர், புகழ், கௌரவம், வளர்ச்சி, முன்னேற்றம், இளைய சகோதிரம், புதிய ஆடை, ஆபரணங்கள் சேர்க்கை, புதியதாய் வாங்குதல், சிலருக்குத் திருமணம், சுக போகங்கள், சுப நிகழ்வுகள், புத்திரர்கள் வழி சில சிரமங்கள், பெற்றோருக்குக் கண்டங்கள், தாய்மாமன், வழக்கு, கடன், அரசாங்கம் வழி சில தடைகள், ஞானம், சோதிடம், ஆன்மீகம் தொடர்ந்த தொழில் நிலைகள் நல்ல புகழுடன் விளங்குதல், தடைகள் பாராது கடின முயற்சியில் உள்ளோர்க்கு வெகு சிறப்பாய் நன்மைகள் அமையும். கரும காரியம் நிகழும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சில தவிர்க்க முடியாத வெளியூர்ப்பயணங்கள், அலைச்சல், செலவினங்கள் ஆகியன அமையும். தாய்மாமன், வழக்கு, கலை, எழுத்துத்துறை, களத்திரம் வழி நன்மை அமையும். சிலருக்குத் தொழிலில் சங்கடங்கள், சிக்கல்கள் அமையும். குடும்பத்தால், தன வரவால் சில மகிழ்வுகள் அமையும். புத்திரர்கள் வழி சிரமம், சில ஆயுள் கண்டம், பெற்றோர்களினால், மூத்த, இளைய சகோதிரத்தினால், இளைய தாரத்தினால், இலாபத்தினால் சில சிரமங்கள், கருத்து மாறுபாடுகள் அமையும். பெற்றோருக்குக் கண்டம், கரும காரியம் ஆகியன நிகழும்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெயர், புகழ், கௌரவம், வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியன அமையும். இளைய சகோதிரம், மூத்த சகோதிரம், இளைய தாரம், அவர் வழி நன்மை, மன மகிழ்வு, இலாபம், சிலருக்குத் திருமணம், குடும்பத்தில், தாயாருடன், திருமணத்தில் சில வாக்குவாதங்கள், சில தவிர்க்க முடியாத வெளியூர்ப் பயணங்களில் மகிழ்வு, இளைய சகோதரியுடன் கருத்து மாறுபாடு, தொழிலில், தன வரவில் சில தடைகள், அலைச்சல், உறக்கமின்மை, கடும் வாக்கு, விட கண்டம், திடீரென இரத்த அணுக்கள் குறைபாடு, இரத்த அழுத்த மாறுபாடு ஆகியன அமையும். கரும காரியம் நிகழும்.
* * * * *