
கிரக பாதசாரங்கள்
சூரியன் 4 - 6, அவி 4, 7 – 19 சத, 20 – 29 கும்பம், 30 - 3 பங்குனி வரை, பூரட்டாதி மீனம்.
சந்திரன் - திருவாதிரை – பூசம்.
செவ்- பூராடம் மாசி 8 வரை, 9 – 13 உரா (தனுசு). 14 – 26 உரா மகரம். 27 – திருவோணம்.
புதன் - 3 – 5 உரா - மகரம். 6 – 16 திருவோணம், 17 - 21 – அவிட்டம் மகரம், 22 – 25, அவிட் கும்பம். 26 சதயம் – கும்பம்.
குரு - 4 – 17 வரை சதயம் 4, 18 பூரட்டாதி கும்பம்.
சுக்கிரன் - 5 – 9 பூராடம், 10 – 14, உரா தனுசு, 15 – 25, உரா, 26 திருவோணம் மகரம்.
சனி - அவிட்டம் 1 ல் மகரம்.
ராகு - கிருத்திகை 2ல் ரிடபம்.
கேது - விசாகம் 4ல் விருச்சிகம்.
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வளர்ச்சி, கல்வி முதலானவற்றில் முன்னேற்றம், சிறந்த தைரியம், மரியாதை, ஆடை ஆபரணச்சேர்க்கை, கடன், தாய்மாமன், வழக்கு ஆகியவற்றினால் நன்மை, புத்திரரகள், அறிவு வழி நன்மை, மகிழ்ச்சி, வீட்டில் சுப நிகழ்வு, மனைவி, களத்திரம்வழி நன்மை,ஆதாயம் அமையும். தந்தை, புத்திரர் வழி இலாபம், செலவினம், பயணம் அமையும். வீட்டில் குடும்பத்தில் குழப்பங்கள், கடும் வாக்குவாதம், உயிர்க்கண்டங்கள் நிலவும். தொழிலில் கடினம், அதற்குரிய இலாபம், அவமானம், கௌரவம் அமையும். கரும காரியம் நிகழும்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சிறந்த தனலாபம், தாயார் வழி இலாபம், தனவரவு, வீட்டில் சுப நிகழ்வு, தாய்மாமன் வழி நன்மை, ஆதாயம் ஆகியன அமையும். பெயர், புகழ், முன்னேற்றம், சில கௌரவக்குறைவுகள் ஆகியன ஏற்பட்டு பின்னர் விலகும். பூர்வ புண்ணிய ஸ்தானம் வலிமை பெறுவதால் நேர்மையுடன் இருந்தால் மிகுந்த நன்மைகளை அடையலாம். மூத்த, இளைய ஸ்தானத்தினால் மிகுந்த நன்மை, கௌரவம், மேன்மை ஏற்படும். சில மனக்குழப்பங்கள், மனம் அமைதியற்ற நிலை இருக்கும். கரும காரியம் நிகழும். கடன், தாய்மாமன், வழக்கு வழி இலாபம் அமையும்.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
ஆடை, ஆபரணச்சேர்க்கை, இளைய சகோதிரத்தால், புத்திரர்களினால் மனமகிழ்வு, நன்மை அமையும். பெயர், புகழ், கௌரவம், மேன்மை ஆகியன அமையும். நேர்மையாய் இருப்பின் மிக மிக நன்மை. இல்லை எனில் சில மூத்த சகோதரத்தினால், இளைய தாரத்தால், இலாபத்தின் வழியில் பெருத்த அவமானங்கள், பழிச்சொல், வீண் அபவாதம், அசிங்கம் ஆகியன ஏற்படும். கரும காரியம் நிகழும். உறக்கமின்மை, தலைசுற்றல், வீண் மன, உடல் அலைச்சல், பயணங்களினால் தொல்லைகள் ஆகியன அமையும். கவனம் தேவை. இறைவழிபாடு நன்மை தரும். தொழில், பதவி, பணியில் வளர்ச்சி, மேன்மை அமையும்.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வளர்ச்சி. முன்னேற்றத்தில் பல்வேறான மாற்ற நிலைகள், மனக்குழப்பங்கள், இளைய சகோதிரம், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றத்தின் வழி பயணங்கள், செலவினங்கள், சிரமங்கள் ஏற்படும். திருமணத்தில் தடைகள், சில அவமானங்கள் முதலியன ஏற்பட்டு சிரமத்தின் பேரில் நிகழும். குடும்பத்தில், தாய்மாமன், பெற்றோர், மூத்த சகோதிரம் வழி ஏற்பட்ட சில அவமானங்கள், மன உளைச்சல்கள், உறவினர்களுடன் கருத்து மாறுபாடு ஆகியன இருக்கும். இருப்பினும் சில உல்லாச கேளிக்கைகள், மன மகிழ்வுகள் இருக்கும். நேர்மையாய் இருப்பின் மிகுந்த நன்மைகள், சிறந்த தனவரவு, அதிகாரிகளால் மேன்மை, புகழ், குடும்பத்தில் மகிழ்வு ஆகியன அமையும். கரும காரியம் நிகழும்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெயர், புகழ், கௌரவ மேன்மையினால் அதிக இலாபம், நன்மை, நல்ல வளர்ச்சி, முன்னேற்றம், ஆடை, ஆபரணச்சேர்க்கை ஆகியன அமையும். பெற்றோர், மூத்த, இளைய சகோதிரம், தொழில், குடும்பம், தாய்மாமன், களத்திரம், வளர்ச்சி, வழக்கு வழி சில இடையூறுகள், இலாபம், நன்மை ஆகியன அமையும். வம்பு, வழக்குகளில் கவனம் தேவை. கரும காரியம் நிகழும். தாயார் உடல்நலனில் கவனம் தேவை. தொழிலில் பல்வேறு மாற்றங்கள், முறையற்ற வருமானங்கள் இருக்கும். கவனம் தேவை.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தொழில் வளர்ச்சியில் மேன்மை, கௌரவம், குடும்பத்தார், தாயார், களத்திரம், வளர்ச்சி, மேன்மை வழி வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள், தனவரவு, புத்திரர்களுடன், தந்தையாருடன் மனமகிழ்வு, கருத்து மாறுபாடு, கடினங்கள், மன உளைச்சல்கள், வழக்கு, எதிரிகளிடமிருந்து வெற்றி ஆகியன அமையும். இளைய சகோதரியுடன் கருத்து மாறுபாடு, மூத்த சகோதரி, இளைய தாரத்தால் சில சங்கடங்கள் இருப்பினும் நன்மை அமையும். கரும காரியம் நிகழும்.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெயர், புகழ், கௌரவம், மேன்மை அகியன அமையும். குடும்பத்தில் சிரமங்கள், மகிழ்வு, தொழிலில், மூத்த, இளைய சகோதரி, இளைய தாரம், தாய்மாமன், புத்திரர்கள் வழி நன்மை, இலாபம். ஆதாயம் ஆகியன அமையும். கரும காரியம் நிகழும். தொழிலில் இடையூறுகள் ஏற்படும். நேர்மையாய் இருப்பின் மிகுந்த நன்மை ஏற்படும். சில அவமானங்கள், சங்கடங்கள், தந்தையார், வெளியூர் பயணங்கள் வழி செலவினங்கள் அமையும்.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சிறப்பான கௌரவ விருதுகள், முதன்மை அதிகாரிகள் பாராட்டு அமையும். அரசாங்க ஆதாயம், இலாபம், நன்மை ஆகியன அமையும். மனக்குழப்பங்கள், மனத்தடுமாற்றங்கள், அனைத்திலும் வளர்ச்சியில் சில தடைகள் காணப்படும். குடும்பத்தில் வாக்குவாதம், கடன், வழக்கு பளு, தாய்மாமன் இடையூறு ஆகியன அமையும். முயற்சிகளில், திருமணத்தில் சில தடைகள் காணப்படும். பழைய வண்டி வாகனங்கள், பழைய வீடு வாங்குதல், புதுப்பித்தல் முதலானவை அமையும். கரும காரியம் நிகழும்.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
ஆன்மீக பயணங்கள், வாழ்வில் பற்றற்ற நிலை. அலைச்சல், உறக்கமின்மை, மனக்குழப்பங்கள், சலனங்கள் காணப்படும். குடும்பத்தில், புத்திரர்கள், இளைய சகோதிரத்தால், களத்திரம், தொழில் வழி சிரமங்கள், நன்மைகள் காணப்படும். விட கண்டங்கள், விட சுரம் முதலியவை காணப்படும். கருவிலங்கு, செவ்விலங்குகளினால், விட பூச்சிகள் அல்லது விடம் சார்ந்தவைகளினால் ஆபத்து ஏற்படும்.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
எடுக்கும் கடின முயற்சிகளில் வெற்றி, வளர்ச்சி, முன்னேற்ற நிலைகளில் பெருத்த மாற்றங்கள், நன்மைகள், இலாபங்கள், பெற்றோர், தாய்மாமன் வழி ஆதாயங்கள், நன்மைகள் காணப்படும். இளைய சகோதிரம், ஆடை ஆபரணச்சேர்க்கை ஆகியவற்றினால் இலாபம், நன்மை, பயணங்கள் அமையும். நிலைத்த நன்மைகள், தீவிர அனுபவ ஞானம், நரம்பு பலகீனங்கள், சாஸ்திர ஞானம், அதில் உன்னதமான பரிசு, மருத்துவம் பெற்று உடல் குணமாதல், நிலைத்த தனவரவு, தொழில் வளர்ச்சி, மேன்மை, தாய்மாமன், தந்தையார், புத்திரர்கள் வழி சிரமம் இருப்பினும் மனமகிழ்வு, பெருத்த நன்மை ஆகியன அமையும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தன வரவில், வளர்ச்சியில் பெயர், புகழ், கௌரவம், முன்னேற்றம், சிறப்பான திருமணம், வீட்டில் சுப நிகழ்வுகள் ஆகியனவற்றில் வளர்ச்சி அமையும். மூத்த சகோதிரம், இளைய தாரத்தால் நன்மை அமையும். இளைய சகோதிரம், தொழில், புத்திரர்களுடன் ஆன அலைச்சலுடன் கூடிய வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் ஆகியன அமையும். வீட்டில் கரும காரியம் நிகழும். தாயாருடன் கருத்துப் பிணக்கு காணப்படும். கரும காரியம் நிகழும். வாகனங்களில் தடை, வீட்டில் மகிழ்ச்சியின்மை காணப்படும்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வீட்டில் சுப பொருட்கள் வாங்குதல், தாயார், இளைய தாரம், மூத்த சகோதிரம், பெற்றோர், குடும்பத்தார் வழி வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் அமையும். சுப செலவினங்கள், விசேடங்கள் ஆகியன அமையும். தந்தையார் வழி நன்மை அமையும். கரும காரியம் நிகழும்.
* * * * *