
கிரக பாதசாரங்கள்
சூரியன் 1 – 14 அசு, 15 – 27 – பரணி, 28 – கிருத் – மேடம்.
சந்திரன் - உத்திராடம் – சதயம்.
செவ்- 2 - 8 திருவாதிரை, 9 – 26 புனர் – மிதுனம். 27 – புனர் – கடகம்.
புதன் - 3 – பரணி, 8 ல் (வக்ரம்), 14 – 24 பரணி, 25 – அசுவினி – மேடம்.
குரு - 8 - 21 ல் அசுவினி 1 இல், 22 – அசுவினி 2 ல் மேடம்.
சுக்கிரன் - 1 – 12 ரோகிணி, 13 – 24 மிருக, 25 - திருவா – மிதுனம்.
சனி - 2 சதயம் 2 ல் - கும்பம்.
ராகு - அசுவினி – 4 ல் மேடம்.
கேது - சுவாதி 2 ல் துலாம்.
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
கூட்டுக்கிரகங்கள் இருப்பதால் பலன்களில் மாற்றங்கள் நிலவும். புத்திரர்கள், தந்தை, செலவினங்கள், வெளியூர் பயணங்கள், இளைய சகோதிரம், தாய்மாமன், வழக்கு வழி மேடத்தில் 3 கிரகங்கள் இருப்பதால் பல மாற்றங்கள் நிலவும். 8 முதல் குருவின் சேர்க்கைக்குப் பின் சலனங்கள், கடும் வாக்கு வாதங்கள், கருத்து மாற்றங்கள் ஆக அனைத்தும் ஏற்பட்டுப் பின்னர் அமைதியும், நன்மையும் ஏற்படும். நிதானமுடன் இருப்பது மிக மிக அவசியம். வீட்டில் மகிழ்வும், இன்பமும் அமைந்திருக்கும். கேதுவின் பார்வையினால் பல நல்ல முடிவுகள் கிடைக்கும். வாழ்வில் பற்றற்று அமைதியாய் சாந்தமுடன் சிந்திக்க வைத்து பல ஞானங்களைப் பெறச் செய்வார். கரும காரியம் நிகழும். தொழில், இலாபம், மூத்த சகோதிரம், இளைய தாரம் வழி நன்மை அமையும்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
மகிழ்ச்சி, இன்பம், பெயர், புகழ், கௌரவம், மேன்மை, தாய்மாமன், வழக்கு வழி ஆதாயம், நன்மை, இலாபம் ஆகியவை அமையும். பழைய வீடு குடிபுகல், புதுப்பித்தல், வாகன சுகம், தாயார் வழி நன்மை, ஆன்மிகப்பயணங்கள், தாயார், குடும்பத்தார் வழி வெளியூர் பயணங்கள், செலவினங்கள், மகான்கள் ஆசி, புத்திரர்கள் வழி பயணம், செலவினம், செவ்விலங்குகளினால் ஆபத்து, சில கண்டங்கள் யாவும் ஏற்பட்டு விலகி பின்னர் நன்மை சிறப்பாய் அமையும். குடும்பத்தார், வளர்ச்சி வழி இலாபம், நன்மை அமையும். வளர்ச்சி, முன்னேற்றங்களில் தடைகள், அலைக்கழிப்புக்கள் இருப்பினும் நன்மை அமையும். வீட்டு உபயோகப் பொருட்கள் அமையும். பெண்கள் வகையில் ஆதாய அனுகூலங்கள், நன்மை அமையும். கரும காரியம் நிகழும்.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
மூத்த சகோதிரம், இளைய தாரம், வழக்கு, கடன், தாய்மாமன் வழி நன்மை அமையும். புத்திரர்கள் வழி உல்லாசப் பயணங்கள், செலவினங்கள் அமையும். சிறந்த ஞானம் கிடைக்கும். சிலருக்குப் புத்திரப்பராப்தம் அமையும். கருத்தரிக்கும். சிறந்த ஆடை ஆபரணங்கள், திருமணம் முதலியவை வெகு சிறபபாய் இம்மாதம் 15 தேதிக்கு மேல் அமையும். மிகுந்த இலாபங்கள், பல நிலை மாற்றங்கள், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம், இளைய சகோதிரம் வழி கருத்து மாறுபாடுகள் ஆகியன யாவும் ஏற்பட்டு விலகிப் பின்னர் நன்மை அமையும். கரும காரியம் நிகழும்.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தொழில் நிலையில், புத்திரர், குடும்பத்தார், தாய்மாமன், கடன், வழக்கு, தந்தை, தாயார், இளைய சகோதிரம் ஆகியோர் வழி சில இன்னல்கள் ஏற்பட்டு விலகி பின்னர் நன்மை அமையும். வெளியூர்ப் பயணங்கள், செலவினங்கள் ஆகியன இவர்கள் வழி அமையும். தனவரவில் சில மாற்றங்கள், தாயாருக்கு உடல் நலிவு, கண்டங்கள், வழக்கு, கடன், தாய்மாமன் வழி நன்மை அமையும். கரும காரியம் நிகழும்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து முதலியவற்றில் சில தொல்லைகள், இளைய சகோதிரம், தொழில், புத்திரர்கள், பெற்றோர் வழி கண்டங்கள், சிரமங்கள், ஏற்பட்டு விலகி பின்னர் நன்மையாய் அமையும். ஆடை ஆபரணச்சேர்க்கை அமையும். சிலருக்கு புத்திரப்பராப்தம் அமையும்.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தாயார், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றங்கள் வழி வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் வழி சிரமங்கள் ஏற்பட்டுப் பின்னர் விலகி நன்மை அமையும். வாழ்வில் பற்றற்ற நிலை, பத்திய வகை உணவுகள், கடும் விரதங்கள் மிகுந்த நன்மையைத் தரும். தாயார் வழி ஆதாயம், இலாபம் அமையும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். கரும காரியம் நிகழும். புத்திரர்கள், தாய்மாமன், கடன் வழக்கு வழி நன்மை அமையும்.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தாய்மாமன், கடன், வழக்கு, திருமணம், வளர்ச்சி நிலையில் தடைகள் ஏற்பட்டு விலகி பின்னர் நன்மை அமையும். வாழ்வில் பற்றற்ற நிலை, மனம் புத்தி பேதலித்தல், மன உளைச்சல்கள் ஆகியன காணப்படும். மூத்த சகோதரம், இளைய தாரம், நன்மை, தந்தை, ஆன்மீகம் தொடர்ந்தன வழி வெளியூர்ப் பயணங்கள், செலவினங்கள் அமையும். பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து, மேன்மை, தாயார், குடும்பம், புத்திரர் வழி நன்மை அமையும். சிறந்த இலாபம், மூத்த சகோதிரம், இளைய தாரம் வழி நன்மை, சிறந்த ஆடை ஆபரணம் ஆகியன வெகு சிறப்பாய் அமையும்.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வாழ்வில் பற்றற்ற நிலை இருக்கும். ஆன்மீகப் பயணங்கள் நன்மையைத் தரும். சிறப்பு வளர்ச்சி, முன்னேற்றங்கள், ஆன்மீக வழி வெளியூர்ப் பயணங்கள், செலவினங்கள், சிறந்த தனவரவு, குடும்பத்தில் மகிழ்வு, தொழில் வழி நன்மை, மாற்றங்கள், உயர் நிலை ஆகியன அமையும். இளைய சகோதிரம், தாயார், குடும்பத்தார் வழி நன்மை அமையும். பழைய பூர்வீக வீடு குடி புகல், புதுப்பித்தல் நன்மையைத் தரும். கடும் வாக்குவாதங்கள் நிலவும். தொழில், குடும்பத்தார், புத்திரர். மூத்த சகோதிரம், இளைய தாரம் வழி சிரமம் ஏற்பட்டு விலகிப் பின்னர் நன்மை அமையும்.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தாய்மாமன், கடன், வழக்கு வழி வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் ஆகியன அமையும். குடும்பத்தார், இளைய சகோதிரம் வழி நிலைத்த நன்மை அமையும். மூத்த சகோதரி, இளைய தாரம், தந்தை வழி, தொழில், வளர்ச்சி, முன்னேற்றம், களத்திரம், பெயர், புகழ், கௌரவம், தாயார், குடும்பத்தார் தொடர்ந்த வழி நன்மைகள் சிரமங்கள் ஏற்பட்டு விலகிப் பின்னர் அமையும். பூர்வ புண்ணிய பலனினால் மிகுந்த நன்மை அமையும். சிறந்த நிலைத்த இலாபம் அமையும். கௌரவத்தில் நல்ல புகழ் நிலை நிலவும். கரும காரியம் நிகழும்.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சிறந்த தெளிந்த நல் ஞானத்தினால் நற்பெயர், புகழ், கௌரவம், மரியாதை கிடைக்கும். பெயர், புகழ், கௌரவம் ஆகியவற்றில் மேன்மை, நற்பெயர் அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும். மூத்த, இளைய தாரம், இளைய சகோதிரம், தந்தை, தாய்மாமன், கடன், வழக்கு வழி சிரமம் ஏற்பட்டு விலகிப் பின்னர் நன்மை அமையும். தாயாருக்கு உடல் நலிவு, கண்டங்கள் அமையும். புத்திரர்கள், தொழில் வழி நற்பெயர், நன்மை, சிறப்புகள், இலாபம் அமையும். கரும காரியம் நிகழும். உல்லாச மகிழ்வுடன் வெளியூர்ப்பயணங்கள் வெகு சிறப்பாய் அமையும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து, மேன்மை, நற்பெயர், வெளியூர்ப் பயணங்கள், செலவினங்கள், மன மகிழ்வுகள் ஆகியன அமையும். சிலருக்குத் திருமணம், வளர்ச்சி, முன்னேற்றங்கள், வீட்டில் சிறப்புகள், பூர்வ புண்ணிய நற்பலன்கள், தந்தை வழி நன்மை, ஆதாயம், மூத்த சகோதிரம், இளைய சகோதிரம், இளைய தாரம் வழி இலாபம், நன்மை ஆகியன அமையும். தாயார், பெண்கள் வழி மன மகிழ்வுகள் வெகு சிறப்பு அமையும். மகான்களின் ஆசி வெகு சிறப்பாய் அமையும். களத்திரம், வளர்ச்சி, புத்திரர், இளைய சகோதிரம், தொழில் வழி சிரமம் ஏற்பட்டு விலகி நன்மை அமையும்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தாய்மாமன், கடன், வழக்கு, தொழில் வழி நன்மை அமையும். குடும்பத்தில் கடும் வாக்கு வாதங்கள், சண்டை சச்சரவுகள் நிலவும். தாயார், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம், தொழில், சாதகர் வழி சிரமம் ஏற்பட்டு விலகிப் பின்னர் நன்மை அமையும். மூத்த சகோதரி, இளைய தாரம் இவர்களால் நன்மை, வெளியூர்ப் பயணங்கள், செலவினங்கள் ஆகியன அமையும். விட கண்டங்கள் அமையும். கரும காரியம் நிகழும். இரத்த அணுக்களில் ஏற்ற இறக்கங்கள், இரத்த அழுத்த மாறுபாடு, விட சுரம் முதலானவை அமையும். சில அவமானங்கள் அமையும். குடும்பம் இவற்றில் பூசல்கள், கடும் வாக்குவாதங்கள், அதிக மனக்கஷ்ட்டங்கள், பண வரவில் சில முறைகேடுகள், தடைகள், காணப்படும். நேர்மையாய் இருத்தல் மிக மிக அவசியம். உடல் உயிர் கண்டங்கள் ஏற்பட்டு பின்னர் விலகி நன்மை பெறுவீர்.
* * * * *