
கிரக பாதசாரங்கள்
சூரியன் 1 - 6 அவிட்டம், 7 – 21 சதயம், 22 – பூரட்டாதி – கும்பம்.
சந்திரன் - விசாகம் – அனுடம்.
செவ்- 3 - 12 ல் ரோகிணி 4, 13 – மிருகசீரிடம் ரிடபம். 29 ல் மிதுனம்.
புதன் - 3 – 10 திருவோணம், 11 – 14 அவிட்டம் மகரம், 15 – 18, அவிட்டம் கும்பம், 19 – 25 சதயம் கும்பம், 26 – பூரட்டாதி கும்பம்.
குரு - 11 வரை உதி – 4, 12 ல் ரேவதி - மீனம்.
சுக்கிரன் - பூரட்டாதி 4 ல் 5 வரை, 6 – 16 உதி , 17 - 27 ரேவதி - மீனம். 28 – அசுவினி – மேடம்.
சனி - 2 ல் அவிட்டம் 4 ல், 30 ல் சதயம் - கும்பம்.
ராகு - 8 ல் அசுவினி – 4 ல் மேடம்.
கேது - 8 ல் சுவாதி 2 ல் துலாம்.
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வளர்ச்சி, முன்னேற்றம், பெயர், புகழ் முதலியவற்றில் சில தடைகள் இருக்கும். இளைய சகோதிரம், தாய்மாமன், வழக்கு வழி ஆதாயம், நன்மை, வெற்றி அமையும். சில கருத்து மாறுபாடுகள் இருக்கும். தலைசுற்றல், மயக்கம், பதட்டம் ஆகியன நிலவும். வாக்கு முதலிய அனைத்திலும் நிதானம் தேவை. குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில், மூத்த சகோதிரம், இளைய தாரம், குழந்தைகள் வழி நன்மை, இலாபம், சில கருத்து மாறுபாடுகள், சங்கடங்கள், மனப்பிணக்குகள் ஆகியன அமையும். சில சங்கடங்களும் அமையும். அனைத்திலும் பற்றற்ற நிலை, ஈடுபாடின்றி காணப்படும். ஆன்மீகப் பயணங்கள், செலவினங்கள், தர்ம கைங்கர்யங்கள் ஆகியன அமையும்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
முன் கோபத்தினைத் தவிர்ப்பது காரியத்தில் வெற்றி, சாதனை, இலாபம் ஆகிய நன்மையைத் தரும். பெயர், புகழ், அனைத்திலும் வளர்ச்சி நிலை, மேல் நிலைக்கல்வி முதலியன, மேம்பாடு, சிலருக்குத் திருமணம், வீட்டில் விசேடம், வெளிநாடு அல்லது வெளியூர் தொடர்ந்த சுப பயணங்கள், செலவினங்கள், மனமகிழ்வு, உல்லாச கேளிக்கைகள் ஆகியவை சிறப்பாக அமையும். புதிய தாக ஆடை, ஆபரணச்சேர்க்கை, அறிவு தொடர்ந்த புதிய மாற்றங்கள், மகான்களின் ஆசி, தாய்மாமன், வழக்கு, கடன் வழி நன்மை ஆகியன சிறப்பாக அமையும். தந்தை, தாயார், மூத்த சகோதிரர், இளைய தாரம், தொழில் வழி சிறப்புகள், நன்மை, ஆதாயம், இலாபம் ஆகியன கிடைக்கும். ஆக இம்மாதம் இவர்கட்கு மிகவும் சிறப்பான மாதம். கரும காரியம் நடைபெறும்.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சிறந்த தனவரவு, வீட்டிற்கு சுபப் பொருட்கள் வாங்குதல், மனமகிழ்வு, மகான்களின் ஆசி, தாய்மாமன், வழக்கு, கடன், மூத்த சகோதிரர், இளைய தாரம், வழி நன்மை, ஆதாயங்கள், வெளியூர் தொடர்ந்த சுப பயணங்கள், செலவினங்கள், குழந்தைகள் வழி சில இடர்ப்பாடுகள், புத்திர சோகம், சில பீடைகள், தொழிலில் மாற்றங்கள், நல்ல உயரிய நிலை, மதிப்பு, மரியாதை, தாயாருக்கு, வீட்டில் சில சுகக்குறைபாடு, இளைய சகோதிரம், புத்திரர், தந்தை வழி சில கருத்துப் பிணக்குகள், இடர்ப்பாடுகள், நன்மையும் அமையும்.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெயர், புகழ், கௌரவம், கல்வி வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், இளைய சகோதரி, ஆடை ஆபரணச் சேர்க்கை, தாய்மாமன், வழக்கு, கடன் வழி நன்மை, ஆதாயம், இலாபம் ஆகியன அமையும். பூர்வ புண்ணியாதி பலம் பெறுவதால் ஆலய கைங்கர்யங்கள், மகான்களின் ஆசி, ஆலய பிரசாதங்கள் மிகவும் மகிழ்வாய் கிடைக்கும். களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம், தாயார், மூத்த சகோதிரம், இளைய தாரம் வழி சங்கடங்கள் இருப்பினும் நன்மை, ஆதாயம் அமையும். தனவரவில் சில தடைகள் இருக்கும்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தாய்மாமன், வழக்கு, கடன், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம், இளைய சகோதரி, தொழில் தொடர்ந்த வழி வெளிநாடு அல்லது வெளியூர் தொடர்ந்த சுப பயணங்கள், செலவினங்கள், மனமகிழ்வு, உல்லாச கேளிக்கைகள் ஆகியவை சிறப்பாக அமையும். தந்தையாருடன் கருத்து மாறுபாடு, தந்தைக்குக் கண்டம் அல்லது பீடை, இளைய சகோதிரத்துடன் கருத்து மாறுபாடுகள் ஆகியன அமையும். குடும்பத்தார், மூத்த சகோதிரம், இளைய தாரம் வழி சில இடர் இருப்பினும் நன்மை ஆதாயம், இலாபம், சில கடன், வழக்கு ஆகியன அமையும்.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
மூத்த சகோதிரம், இளைய தாரம் வழி நன்மை, ஆதாயம், பெயர், புகழ், கௌரவம், கல்வி வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், அந்தஸ்து மேம்படுதல், சிலருக்குச் சிறப்பாய் திருமணம் அமைதல், வீட்டில் சுப நிகழ்வுகள் சிறப்பாய் அமைதல், புதிய ஆடை ஆபரணச் சேர்க்கை, இளைய சகோதரம் வழி நன்மை, தாய்மாமன், வழக்கு, கடன் வழி, குடும்பத்தார், தந்தையார் வழி கரத்து மாறுபாடு, சண்டை சச்சரவுகள் இருப்பினும் அவர்கள் தொடர்ந்த வெளியூர்ப்பயணம், செலவினங்கள் ஆகியன சிறப்பாய் அமையும். விட கண்டங்கள், இரத்த அழுத்தம் அணுக்கள் ஏற்றம், இறக்கத்தினில் காணப்பெறுதல், கருமை நிற விலங்குகளினால், செவ்விலங்குகளினால் விடங்கள் முதலியன, அல்லது விட சுரம் அமைதல் காணப்பெறும். கவனமுடன் இருத்தல் நன்று.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வளர்ச்சி, முன்னேற்றம், பெயர், புகழ் முதலியவற்றில் சில தடைகள் இருக்கும். வாழ்வில் பற்றற்ற நிலை, அனுபவ ஞானம் ஆகியன கிடைக்கும். நிதானத்துடன் இருப்பது மிகுந்த நன்மையைத் தரும். தொழிலில் சில மாற்றங்கள். உயரிய நிலை, கூடுதல் பொறுப்பு, பணி, கௌரவம், மேன்மை ஆகியன அமையும். பெற்றோர் வழி வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் ஆகியன அமையும். தாயார், குழந்தைகள், மூத்த சகோதிரம், இளைய தாரம், இலாபம் வழி சில இடர்ப்பாடுகள் இருப்பினும் நன்மை அமையும்.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சிலருக்குச் சிறப்பாகத் திருமணம் நடைபெறும். ஆன்மீகப்பயணங்கள், எதிலும் பற்றற்ற நிலை, மகான்களின் ஆசி, விட கண்டங்கள், எதிரிகளிடமிருந்து வெற்றி, சில சங்கடங்கள், தந்தையார், இளைய சகோதிரம் வழி இடர்ப்பாடு இருப்பினும் நன்மை, மூத்த சகோதிரம், இளைய தாரம் வழி நன்மை, ஆதாயம். பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து மேம்படுதல் ஆகியவை நிகழும். அரசாங்க ஆதாய இலாபம், தனவரவு அமையும். கரும காரியம் நடைபெறும்.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
இளைய சகோதிரம், குடும்பத்தார், தந்தை, அவர் வழி, மூத்த சகோதிரம், இளைய தாரம், ஆகியோருடன் கருத்து மாறுபாடு நிலவினும் நன்மை, மகிழ்வு, இலாபம் ஆகியன அமையும். சிலருக்கு கருக்கலைப்பு, கர்ப்பத்தில் தடை கோளாறுகள் அமையும். எனவே கவனமுடன் இருத்தல் மிக மிக அவசியம். குழந்தைகள் வழி அவப்பெயர் நிகழும். மூத்த சகோதிரம், இளைய தாரம் வழி இலாபம், நன்மை ஆகியன அமையும். சிறப்பான தொழில் நிலை மாற்றங்கள், செலவினங்கள், வெளியூர்ப் பயணங்கள் ஆகியன அமையும்.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பூர்வ புண்யாதியின் பார்வை நன்மை செய்யும். வழக்கு, தந்தை, தாய்மாமன், மகான்கள், தொழில் ஆகிய வழி நன்மை, வளர்ச்சி நிலை ஆகியன தரும். தனவரவில், குழந்தைகள், தொழில் வழி இலாபம், முன்னேற்றம், கடினப்பட்டதற்கான ஆதாயங்கள், நன்மை ஆகியன அமையும். இளைய சகோதிரம், ஆடை ஆபரணங்கள், பயணங்கள் வழி நன்மைகள், செலவினங்கள் ஆகியன அமையும். மூத்த சகோதிரம், இளைய தாரம், நட்பு வட்டாரங்கள் தொடர்ந்த வழி பயணங்கள், செலவினங்கள் அமையும். தாயுடன் கருத்துப்பிணக்கு, தாயாருக்கு உடல்நலக் குறைவு ஆகியன இருக்கும். கரும காரியம் நிகழும். உயிர்க்கண்டங்கள், அறுவை சிகிச்சை முதலானவை வந்து விலகும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தாய்மாமன், வழக்கு, கடன் உதவி வழி நன்மை அமையும். சிலருக்குத் தொழிலில் சிறப்பான முன்னேற்றம் அமையும். குழந்தைகள் வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் அமையும். களத்திரம், வளர்ச்சி முன்னேற்றத்தில், பெற்றோருடன், இளைய சகோதிரம் ஆகியவற்றுடன் கருத்துப் பிணக்கு, மாறுபாடு, சண்டை, சச்சரவுகள் நிலவும். நிதானித்துச் செயல்படுவது நன்மை தரும். மகான்களின் ஆசி, ஆலய சிறப்புத் தரிசனம், தந்தைக்கு கண்டம், அறுவை சிகிச்சை, தாயார் பாட்டி வழி உறவில் பீடை காட்டுதல், ஆடை, ஆபரணம், இளைய, மூத்த சகோதிரம், இளைய தாரம், தொழில் வழி இலாபம், நன்மை அமைதல். குடும்பத்தில் மன மகிழ்வு, சிறந்த தனவரவு ஆகியன அமையும். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. கவனமுடன் செல்ல வேண்டும். குடும்பத்தில் கடும் கோபத்தினைத் தவிர்ப்பது நன்மை. கரும காரியம் நிகழும்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
மூத்த சகோதிரம், இளைய தாரம், இளைய சகோதரி, ஆடை, ஆபரணங்கள், தாய்மாமன், கடன், வழக்கு, வழி வெளியூர்ப்பயணங்கள், எதிர்பாராத செலவினங்கள், ஆலய கைங்கர்யங்கள், தான தருமங்கள் ஆகியன அமையும். குடும்பத்தில் சில வாக்குவாதம், பிணக்குகள் ஏற்படும். விட கண்டங்கள், இரத்த அழுத்தம் அணுக்கள் ஏற்றம், இறக்கத்தினில் காணப்பெறுதல், கருமை நிற விலங்குகளினால், செவ்விலங்குகளினால் விடங்கள் முதலியன, அல்லது விட சுரம் அமைதல் காணப் பெறும். கவனமுடன் இருத்தல் நன்று. கரும காரியம் நிகழும். குடும்பத்தார், தாயார், களத்திரம், வளர்ச்சி, முன்னேற்றம், புத்திரப்பராப்தம், விசேடப் புத்திரப்பேறு, குழந்தைகள் வளர்ச்சியில் நன்மை, சிலருக்குத் திருமணம், இளைய தாரம் அமைதல், விருப்ப வாழ்வு அமைதல் வழி நன்மை அமையும். தந்தையார் வழி நன்மை அமையும்.
* * * * *