
கிரக பாதசாரங்கள்
சூரியன் 1–10 கிருத், 10–24 – ரோ, 25 – மிரு – ரிடபம்.
சந்திரன் - பூரட்டாதி – பரணி.
செவ்- 2–24 பூசம், 25 – ஆயில்யம் – கடகம்.
புதன் - 2 ல் வக்ர நிவர்த்தி, 7 – 21 பரணி, 22–23 கிரு– மேடம், 24–29 ரிடபம், 30 ரோ–ரிடபம்.
குரு - 6–20 அசுவினி3ல், 21 அசுவினி 4ல்மேடம்.
சுக்கிரன் - 3-5 திருவா, 6–15 புனர் – மிதுனம். 16–18 புனர் – கடகம். 19 – பூசம் – கடகம்.
சனி - 2 சதயம் 2 ல் - கும்பம்.
ராகு - அசுவினி – 3ல் மேடம்.
கேது - சுவாதி1ல் துலாம்.
மேஷம் லக்னம்
(அசுவினி 1, 2, 3, 4, பரணி 1, 2, 3, 4, கார்த்திகை 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பூர்வ புண்ணியத் தானம் பலப்படுவதால் மிகுந்த நன்மைகள் தானாகவே அமையும். திருமணம், கல்வி, வளர்ச்சி நிலை, சன்மானம், விருது, வீட்டில் சிறப்புகள், தந்தை வழி மிகுந்த நன்மை, ஆதாயம், மகான்கள், பெரியோர்கள் ஆசி ஆகியன யாவும் வெகு சிறப்பாக அமையும். எப்போதும் நேர்மை, நாணயம், ஒழுங்கு மிக மிக அவசியம். தொழில், மூத்த சகோதிரர், இளைய தாரம், மனைவி வழி நன்மை, ஆதாயம், சிறப்பு அமையும். இருப்பின் குடும்பத்தில் சில சலனங்கள் காணப்படும். முன் கோபத்தை விடுவது நன்மை தரும். கரும காரியம் நிகழும்.
ரிஷபம் லக்னம்
(கார்த்திகை 2, 3, 4, ரோகிணி 1, 2, 3, 4, மிருகசீரிடம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
வெளிநாடு உல்லாச பயணங்கள், மகிழ்வுகள், கேளிக்கைகள், உயரிய சன்மானம், விருது, வளர்ச்சி நிலைகள், ஆடை ஆபரணச்சேர்க்கை, தந்தை, தொழில், மூத்த சகோதிரர், இளைய தாரம், குடும்பத்தார், புத்திரர், வழக்கு, கடன், தாய் மாமன் வழி நன்மை, வெகு சிறப்பாய் அமையும். இருப்பினும் பல கடின முயற்சிகளுடன் வெற்றி வந்தமையும். மகான்களின் ஆசி அமையும். செவ் விலங்குகளினால் ஆபத்து முதலியவை நேரும். விட தேவதையை வணங்குதல் நன்மை தரும். கரும காரியம் நிகழும்.
மிதுனம் லக்னம்
(மிருகசீரிடம் 3, 4, திருவாதிரை -1, 2, 3, 4, புனர்பூசம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
புத்திரர்கள் வழி வெளிநாடு உல்லாச பயணங்கள், மகிழ்வுகள், கேளிக்கைகள் அமையும். விசேடப் புத்திரப்பேறு, ஆடை ஆபரணச்சேர்க்கை, திருமணம், கல்வி, வளர்ச்சி நிலை, சன்மானம், விருது, வீட்டில் சிறப்புகள் ஆகியன வெகு சிறப்பாக அமையும். தந்தை வழி நன்மை அமையும். இளைய சகோதரி வழி செலவினங்கள், நன்மை, பயணம் அமையும். வழக்கு, கடன், தாய் மாமன் வழி நன்மை, வெகு சிறப்பாய் அமையும். சில சலனங்களும் காணப்படும்.
கடகம் லக்னம்
(புனர்பூசம் 4, பூசம் 1, 2, 3, 4, ஆயில்யம் 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
குடும்பத்தில் மகிழ்வு, சிறந்த தனவரவு, வீடு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குதல், வழக்கு, கடன், தாய் மாமன் வழி நன்மை, வெகு சிறப்பாய் அமையும். மூத்த சகோதிரர், இளைய சகோதிரர், இளைய தாரம் வழி செலவினங்கள், நன்மை, பயணம் ஆகியன அமையும். களத்திரம், வளர்ச்சி நிலை வி சில சங்கடங்கள் காணப்படும். கரும காரியம் நிகழும். தாயாருக்குக் கண்டம், அறுவை சிகிச்சை முதலியன அமையும். தொழில் வழி நன்மை, ஆதாயம், சன்மானம் அமையும். கௌரவிக்கப் பெறுவீர்கள்.
சிம்மம் லக்னம்
(மகம் 1, 2, 3, 4, பூரம் 1, 2, 3, 4, உத்திரம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
கௌரவம், இளைய சகோதிரம், விசேடப் புத்திரப்பேறு வழி நன்மை அமையும். குழந்தைகள் வழி நன்மை அமையும். கரும காரியம் நிகழும். மிகுதியான நற்பலன்கள் பல சங்கடங்களின் வழி வெகு சிறப்பாய் அமையும். பல இன்னல்களில் இருந்து மயிரிழையில் விடுவிக்கப் பெறுவீர். தந்தைக்கு, தந்தை வழி, இளைய சகோதரிக்கு கண்டங்கள் அமையும்.
கன்னி லக்னம்
(உத்திரம் 2, 3, 4, அஸ்தம் 1,2, 3, 4, சித்திரை 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
சில விசேட வெளியூர்ப் பயணங்கள், செலவினங்கள், அமையும். புத்திரர், தாய்மாமன், வழக்கு வழி நன்மை அமையும். மூத்த சகோதரர், இளைய தாரம் வழி நன்மை அமையும். கரும காரியம் நிகழும். தொழில் வழி தனவரவு அமையும். குடும்பத்தில் சில சலனங்கள் இருப்பினும் நன்மை அமையும். விட கண்டங்கள், இரத்த அழுத்தம், அணுக்கள் ஏற்ற இறக்கங்களில் காணப்படுதல், சில கண்டங்கள் வந்து விலகுதல் ஆகியன அமையும்.
துலாம் லக்னம்
(சித்திரை 3, 4, சுவாதி 1, 2, 3, 4, விசாகம் 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
மூத்த சகோதரர், இளைய தாரம் வழி நன்மை, சில சங்கடங்கள் அமையும். பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து மேம்படும். சிறந்த ஆடை ஆபரணச் சேர்க்கைகள், தாய்மாமன், வழக்கு, கடன் வழி ஆதாய நன்மைகள் அமையும். மகிழ்வான உல்லாச வெளியூர்ப் பயணங்கள் சில தடைகள் இருப்பினும் வெகு சிறப்பாய் அமையும். சிலருக்கு தொழிலில் சில மாற்றங்கள் நிலவும். கரும காரியம் நிகழும்.
விருச்சிகம் லக்னம்
(விசாகம் 4, அனுஷம் 1, 2, 3, 4, கேட்டை 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தொழில், தொழில் வகை உயர்வு, முன்னேற்றங்கள், வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள், மகான்களின் ஆசிகள், மூத்த சகோதிரர், இளைய தாரம், தாயார் வழி நன்மை ஆகியன அமையும். இளைய சகோதிரம், ஆடை ஆபரணச்சேர்க்கை வழி நன்மை அமையும். தாய்மாமன், கடன், வழக்கு வழி இழுபறி நிலவும். பின்னர் நன்மை அமையும்.
தனுசு லக்னம்
(மூலம் 1, 2, 3, 4, பூராடம் 1, 2, 3, 4, உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
தந்தை வழி ஆதாயம், வெற்றி, மூத்த, இளைய சகோதிரர், இளைய தாரம் வழி நன்மை ஆகியன அமையும். ஆடை ஆபரணச்சேர்க்கை அமையும். புத்திரர்கள் வழி வெளியூர்ப் பயணங்கள், செலவினங்கள் ஆகியன அமையும். தாயார், குடும்பத்தின் வழி நன்மை அமையும்.
மகரம் லக்னம்
(உத்திராடம் 2, 3, 4, திருவோணம் 1, 2, 3, 4, அவிட்டம் 1, 2 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
மூத்த சகோதிரர், இளைய தாரம், அரசாங்கத்தின் வழி மிகுந்த நன்மை அமையும். தொழில் வகை முன்னேற்றங்கள், வளர்ச்சி நிலைகள், பதவி உயர்வுகள், உல்லாச மகிழ்வான வெளியூர்ப் பயணங்கள், செலவினங்கள் ஆகியன வெகு சிறப்பாய் அமையும். தாய்மாமன், வழக்கு, கடன் வழி மிகுந்த நன்மை அமையும். மந்திரம், வழிபாடு, மகான்கள் தரிசனம் வழி மிகுந்த நன்மை அமையும். கரும காரியம் நிகழும்.
கும்பம் லக்னம்
(அவிட்டம் 3, 4, சதயம் 1, 2, 3, 4, பூரட்டாதி 1, 2, 3 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
பெயர், புகழ், கௌரவம், அந்தஸ்து வழி வெளியூர்ப்பயணங்கள், செலவினங்கள் ஆகியன வெகு சிறப்பாய் அமையும். திருமணம், வீட்டில் விசேடங்கள், சன்மானம், வளர்ச்சி நிலைகள், கௌரவம், அந்தஸ்து மேம்படும். தந்தை, மகான்கள், மூத்த சகோதிரர், இளைய தாரம், வழி நன்மை, ஆதாயம் அமையும். சில கண்டங்களும் அமையும்.
மீனம் லக்னம்
(பூரட்டாதி 4, உத்திரட்டாதி 1, 2, 3, 4, ரேவதி 1, 2, 3, 4 ஆகிய நட்சத்திரங்களின் பாதங்களில் பிறந்தவர்கள்)
மூத்த சகோதிரர், இளைய தாரம், இளைய சகோதிரம் வழி வெளியூர்ப் பயணங்கள், செலவினங்கள் அமையும். தனவரவில் சில தடைகள் இருப்பினும் நன்மை அமையும். தாய்மாமன், ஆடை ஆபரணம், வழக்கு, கடன் வழி வெற்றி, நன்மை அமையும். சிலருக்கு சிறப்பான தொழில் அமையும். கரும காரியம் நிகழும்.
* * * * *