இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
தொடர்

ஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள்!

முனைவர் தி. கல்பனாதேவி


13. அடிப்படை


அயந காலம் - துலா அயனத்துக்கும், மேட அயனத்துக்கும் இடையில் நிகழுங் காலம். விபரம்: அயனத்தில் காண்க. சூரியன் ஒரு அயனத்தை சுற்றி வருங்காலம்.

அயந சலனம் - கிரகங்கள் மத்திய வரியிலிருந்து பக்க வரிக்குத் திரும்புதல்.

அயந மண்டலம் - சம ரேகைக்கு வடக்கே அல்லது தெற்கே சூரியன் செல்லும் வீதி.

அயநமாசம் - அயநாஞ்சாறு சாரத்தி னாலே தினமான முதலிய அறியும் பொருட்டுக் கற்பிக்கப்பட்ட மாதம்.

அயநம் - பிறப்பு, வருடப்பாதி, வருடம்.

அயநாம்சம் - அயனாஞ்சானு சாரத்தினாலே தினமானம் முதலியனவற்றை அறியும் பொருட்டுக் கற்பிக்கப்பட்ட மாதம்.

அயனம் - செல்லுதல், பருதி, பிறப்பு, வருடப்பாதி, வருடம், இது உத்தராயணம். தெட்சணாயனம் என இரு வகைப்படும். குறிப்பு: ஆரியப் பட்டன் செய்த சோதிடச் சித்தாந்தத்தின் படி சூரியனைப் பூமி சுற்றி வரும் போது சூரியன் சரிவினால் சில காலம் உஷ்ணம் அதிகரித்தலாலும் சில காலங் குறைதலாலும் இருது பேதங்கள் உண்டாகின்றன. இவ்வமைப்பால் சூரியனுக்கு நேராக பூமத்திய ரேகைக்குத் தென்னிந்தியா சிறிது வடக்காக இருப்பதால் வட பாகத்தில் சூரியன் வரும் காலம் நமக்கு வேனிற் காலமாகவும், தென் பாகத்தில் சூரியன் வரும் காலம் மழைக்காலமாகவும் காணப்படும். இப்படி பூமத்திய ரேகைக்கு வடக்கில் சூரியன் இருக்கும் கால அளவை வரை இருந்து பின்னர்த் தெற்கோரம் திரும்பப் போகும் காலம் தெட்சணாயனம் என்றும், தெற்கே யிருந்து வடக்கே போகும் காலம் உத்தராயணம் என்றும் சொல்லப்படும். அன்றியும் நட்சத்திர மண்டலத் திற்குள்ள இயற்கைப் பிறழ்ச்சியாலும் இருது பேதம் நேரிடும் பஞ்கணி. இது சூரிய கதியைத் தெரிவிப்பது.

1. உத்திராயனம், தட்சணாயனம், பூரணாயனம் எனப்படும்.

2.சூரியன் ருது திரயத்தில் சஞ்சரிக்கும் காலம். இது தை மாதம் முதல் ஆறு மாதம் உத்தராயனம். ஆடி மாதம் முதல் ஆறு மாதம் தட்சிணாயனம். மேஷ வீதி உத்தாரயனம். ருஷப வீதி பூரணயானம். மிதுன வீதி தட்சிணாயனம்.

உத்தராயணம் சூரியன் தென் கிழக்குத் திசையில் இருந்து வட கிழக்கிற்குச் செல்லல் தேவர்க்கு உரியது. தட்சணாயனம் சூரியன் வட கிழக்குத் திசையில் இருந்து தென் கிழக்குத் திசைக்குச் செல்லுங் காலம். அசுராதியர்க்கு உரிய காலம். இக்கதியால் ருதுக்கள் உண்டாம். பருதி, பிறப்பு, வருடப்பாதி.


அயன காலம் - அயனத்தைப் பார்க்க. கிரகங்கள் மைய வரியிலிருந்து பக்க வரிக்குத் திரும்புதல். சூரியன் ஒரு அயனத்தைச் சுற்றி வரும் காலம்.

அயன சலனம் - கிரகங்கள் மைய வரியிலிருந்து பக்க வரிக்குத் திரும்புதல்.

அயனாதி சங்கிரமம் - இரண்டு அயணங்களும் முன் 3 நாளும் பின் 2 நாளுங் கழிக்கப்படுவது. 2 விஷீவங் களுக்கு முன் ஒன்றரை நாளும், பின் ஒன்றரை நாளுங் கழிக்கப்படுவது. அல்லாத மாதச் சங்கிரமங்களுக்கு முன் 30 நாழிகையும் கழிக்கப்படுவது. நாட்களுக்கு ஆதி அந்தங்களில் இவ்விரண்டு நாழிகைகள் கழிக்கப்படும். திதிகளுக்கு ஆதியந்தங்களின் மும்மூன்று நாழிகைகள் கழிக்கப்படும். சரவண ஆண்டுக்கு 6 நாள் தவிரப்படும் நட்சத்திர ஆண்டுக்கு 2 நாட்கள் தவிரப் ஆம். சௌர ஆண்டுக்கு 3 நாட்கள் தவிரப்படும். குரு ஆண்டுக்கு 4 ஆண்டுகள் தவிரப்படும். சந்திர ஆண்டுக்கு 6 நாட்கள் தவிரப்படும். (விதானமாலை.)

ஆண்டிற்பாதி - அயனம்.

ஆண்டு - வருடம், விவரம்: வருடத்தில் காண்க. ஆயனம், சமை, அயனம், தெய்வதம், வருடம், வற்சரம். கதிரவனைப் பூமி ஒரு முறை சுற்றி வரும் கால அளவு வருடம், அவ்விடம், வருஷம்.

உத்தராயனம் - சூரியன் வடக்கில் சஞ்சரிக்கும் காலம். இது தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி என்னும் ஆறு மாதங்களாகும்.

அவமா - மூன்று திதிகள் ஒரு நாளிற் கலந்திருப்பது.

அவமாகம் - மூன்று திதியாவது, மூன்று நட்சத்திரமாவது. மூன்று யோகமாவது, ஒரு நாளில் கலந்து இருப்பது. நட்சத்திரம் காண்க.

அவசித்து - இது ஒரு நட்சத்திரம். உத்திராடத்திற்கும், திருவோணத்திற் கும் நடு நாள். அபிசித்துவைக் காண்க.

அவமிருத்துத்தானம் - அவமிருத்து ஸ்தானம் ஆறு, எட்டாம் இடங்கள்.

அவமிருந்து - ஆறாம் இடம், துர் மரணம், கேதுவின் மகன். துன் மரணம்.

அவயோகம் - துர்ச்சம்பவம், நாச யோகம், அன்றியும் இலக்கினத்திலும், பன்னிரண்டாம் இடத்திலும் ஏழு கிரகங்கள் கூடி நிற்பதாம்.

ஆகுலம் - வருடக் கடைசியில் பதினைந்து நாளும், மாதக் கடைசியில் மூன்று நாளும், நட்சத்திர முடிவில் இரண்டு நாழிகையும் ஆகும்.

ஆபரண ஸ்தானம் - இலக்கினத்திற்கு மூன்றாம் இடம். ஆறாம், ஒன்பதாம், பன்னிரண்டாமிடங்கள்.

ஆபோக்கிலீபம் - இலக்கினம் முதல், மூன்றாம், ஆறாம், ஒன்பதாம், பன்னிரண்டாம் இராசிகளாம். இலக்கினத்திற்கு மூன்றாம், ஆறாம், ஒன்பதாம் பனிரெண்டாமிடம்.

ஆறாம் இடத்தின் காரகப் பெயர் - அவஸ்தை, பிணி, யுத்தம், ரோகம், சோரம், ஆயுத பீடை, துயரம், இரணம், ஆபத்து, வயிறு, சத்துரு, கடன், அவமிருத்து, பசி, தெய்வ நிந்தனை என்பனவாம்.


இட விவரம் - 1,4,7,10 - கேந்திரம்: 5,9, - திரிகோணம்: 6,8,4 - சஷ்டாஷ்டகம்: 3,6,8,12 - மறைவிடம் 1 - லக்னம், 2 - கண், வாய், முகம், குடும்பம்; 3 - வெற்றி, சகோதரம் 4 - வாகனம், பூமி 5 - புத்ர ஸ்தானம், 6 - ரோகம், சத்ரு, சோரம், 7 - களத்ரம், 8 - மாரகம், ஆயுள், 9 - பிதா, குரு, செல்வம், 10 - உத்யோகம், 11 - லாப ஸ்தானம், தமயன், 12 - விரயம்.

இடை ராசி - உபய ராசிகளாகிய மிதுனம், கன்னி, தனுசு, மீனம் என்பதாம்.

இடது கன்னம்: இலக்கினத்தின் பதினோராம் இடம். (சங்.அக.)

இடது கன்னம், இடது கால், இடது செவி, இடது தொடை- இலக்கினத்திற்குப் பதினோராமிடத்தின் பெயர். இலக்கினத்தின் பதினோராம் இடம். (சங்.அக.)

இடது கன்னம், இடது தொடை - பதினோராம் இடம்.

இடது காதினிறைவன் - இலக்கினத்தின் பதினோராம் இடத்திற்கு உரியவன். இடது காதினிறைவன் பதினொன்றுக்கு உடையவன். (சுகர் நாடி ப.834.)

இடது செவி, இடது கன்னம், இடது கால், இடது துடை - இவை இலக்கினத்தின் பதினோராமிடத்தின் பெயர்.

இராசி மண்டலம் - இராசிக்சக்கரம், இராசி வட்டை, ஓரை. கோள்கள் இயங்கும் வீதி. (செ.ப.அக.) இராசிகளின் பெயர் - மேஷம், இடபம், மிதுனம், கடகம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்பனவாம். இராசியின் பெயர் - மேடம், இடபம், மிதுனம், கர்க்கடகம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்பனவாம்.

இராசி உருவம் - இன்ன ராசி இன்ன வடிவம் என்பதாகும். அவை மேஷம் வௌ்ளாடு, இடபம் எருது, மிதுனம் ஆண் பெண், கடகம் நண்டு, சிம்மம் சிங்கம், கன்னி பெண், துலாம் தராசு, விருச்சிகம் தேள், தனுசு வில், மகரம் முதலை, கும்பம் குடம், மீனம் மீன் என்பதாகும்.

இராசிகளின் உருவங்களும். அங்கங்கள் முதலியவும் - மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் இவற்றின் உருவங்களும் அங்கங்களும் முறையே, வௌ்ளாடு, எருது, ஸ்திரி புருஷர், நண்டு, சிங்கம், பெண், தராசு, தேள், வில், முதலை, குடம், மீன் அங்கங்கள் தலை, முகம், கழுத்து, தோள், மார்பு, பக்கம், முதுகு, பீஜம், தொடை, முழங்கால், கணுக்கால், பாதம் என்பனவாம்.

இவற்றின் திக்குகள் மேஷ ருஷப மிதுனம் - கிழக்கு,

கடகம், சிம்மம், கன்னி - தெற்கு,

துலாம், விருச்சிகம், தனுசு - மேற்கு,

மகரம், கும்பம், மீனம் - வடக்கு.

சாதி கட, விருச், மீன, - பிராமணன்,

சிங், தனு, மேஷ - சத்ரியசாதி,

துலா, கும்ப, மிது - வைசிய சாதி,

கன்னி, ரிஷபம் மகரம் சூத்திரசாதி.

மேஷம் - வேளாளன்,

ரிஷபம் - இடையன்,

மிதுனம் - சக்கிலி,

கடகம் - கன்னான்,

சிங்கம் - பிராமணன்,

கன்னி - நாவிதன்,

துலாம் - செட்டி,

விருச்சிகம் - வேடன்,

தனுசு - தட்டான்,

மகரம் - வண்ணான்,

கும்பம் - குயவன்,

மீனம் - பறையன்,

நிறம்

மகர - கன்,

மது - கறுப்பு,

விரு, கும், மீன - பச்சை,

மேஷ, தனு, சிங் - சிவப்பு,

ரிஷபம், துலாம், கர்க்கடகம் - வௌ்ளை.

பகல் விழிப்பு - சிங், கன், துலா, விருச், கும்ப, மீன - 6. இராவிழிப்பு - மேஷம், ரிஷ, மிது, கர்க்கட, தனு, மகர - ஆக - 6. சர ராசி - மேஷ, கடக, துலா, மகர - 4, ஸ்திர ராசி - ரிஷ, சிங், விரிச், கும்ப ஆக - 4. உபய ராசி - மிது, கன், தநு, மீன ஆக - 4. ஆண் அல்லது ஒற்றை - மேஷ, மிது, சிங், துலா, தனு, கும்ப, ஆக - 6. பெண் அல்லது இரட்டை - ரிஷ, கட, கன், விரி, மக, மீன, ஆக - 4. இருகால் மிது, கன், துலா, கும்ப, ஆக - 4. நாற்கால் மேஷ, ரிஷ, சிங், தனு, ஆக - 4. பலகால் - கட, விரு, ஆக - 2.

பறக்கும் ராசி - மக, மீன, ஆக - 2. தலை உதயம் மிது, சிங், கன், துலா, விரு, கும் ஆக - 6. இவை பகல் வலி உடையன. காலுதய மேஷ, ரிஷ, கட, தனு, மக. ஆக - 5. இராவலி உடையன. உடலுதய ராசி - மீனம். கடகராசி - மிது, சிங், கன்னி ஆக - 3. இலக்னத் தியாஜ்ஜியம் - மேஷ, ரிஷ, கன், தனு, அரை நாழிகை. மிது, சிங், துலா, கும்ப நடுவில் அரை நாழிகை. கர்க்கடக, விருச்சிக, மகர, மீன கடையில் அரை நாழிகைகள் ஆகும்.

இராசிகளில் கிரகங்கள் நிற்கும் காலம் - இன்ன ராசியில் இன்ன கிரகம், இவ்வளவு காலம் நிற்பது என்பது. விவரம் சூரியன், சுக்கிரன், புதன் இவர்கள் ஒரு மாதமும், செவ்வாய் ஒன்றரை மாதமும், குரு ஒரு வருடமும், சனி இரண்டரை வருடமும், இராகு கேது ஒன்றரை வருடமும், சந்திரன் இரண்டே கால் நாளும், நிற்கும் என்பதாகும்.

இராசிச்சந்தி - ஒரு ராசி விட்டு அடுத்த ராசி ஏற்கும் சமயம். இதில் மேஷம், சிம்மம், தனுசு, இவை களுக்கு முதலில் அரை நாழிகையும், கடகம், விருச்சிகம், மீனம், இவைளுக்கு முடிவில் அரை நாழிகையும் சந்தியாம். எல்லா இராசிகளிலும் கடைசிப் பாகம் இலக்கின சந்தியும் ஆகும். எல்லா இராசிகளுக்கும் கடைசியில் அதாவது முடிவில் சந்தி உண்டு என்பாரும் உளர்.

இராசியின் சாதி - இன்ன ராசி இன்ன சாதி என்பது,

அது கடகம், விருச்சிகம் அந்தணச் சாதி, சிங்கம்,

தனுசு, மேஷம் - சத்திரியச் சாதி,

துலாம், கும்பம், மிதுனம் - வைசிய சாதி,

கன்னி, இடபம், மகரம் - சூத்திரச்சாதி,

அன்றியும் மேஷம் வேளாளன், இடபம் இடையன், மிதுனம் சக்கிலி, கடகம் கன்னான், சிங்கம் அந்தணன், கன்னி நாவிதன், துலாம் செட்டி, விருச்சிகம் வேடன், தனுசு தட்டான், மகரம் வண்ணான், கும்பம் குயவன், மீனம் பறையன் என்பதும் ஆகும்.

இராசித்தலைவர் - இராசிக்கு உரியவர். அவ்வவ்விராசிக்குரியவர். (மதுரை.அக.) பொருத்தம், மணப்பொருத்தம் பத்தினொன்று.

இராசித்திசை - இன்ன ராசிக்கு இன்ன திக்கு என்பது. விவரம்

மேஷம், இடபம், மிதுனம் - கிழக்கு

கடகம், சிங்கம், கன்னி - தெற்கு

துலாம், விருச்சிகம், தனுசு - மேற்கு

மகரம், கும்பம், மீனம் - வடக்கு

என்பதாகும்.


இராசித்தியாச்சியம் - இன்ன ராசிக்கு இவ்வளவு நாழிகை. தியாச்சியம் என்பது. விவரம் இலக்கினத் தியாச்சியம் பார்க்க.

இராசிநாதன் - அந்தந்த ராசிக்கு அதிபதியான கிரகம். அவ்விராசி யினின்று ஆளுகை செய்யும் கிரகம், இராசியாதிபதி. அவ்வவ்விராசி யினின்று ஆளுகை செய்யுங் கிரகம். இராசிக்கு அதிகாரியான கோள். (சோதிட வ.)

இராசி நிறம் - இன்ன ராசிக்கு இன்ன நிறம் என்பதாகும். இது மகரம், கன்னி, மிதுனம், கறுப்பு: விருச்சிகம், மீனம், கும்பம், பச்சை: மேஷம், தனுசு, சிங்கம், செந்நிறம்: இடபம், கடகம், துலாம் வெண்மையாகும்.

இராசியுச்சக்கோள் - 9 – மேடத் திற்குச் சூரியன், இடபத்திற்குச் சந்திரன், மகரத்திற்குச் செவ்வாய், கன்னிக்குப் புதன், கர்க்கடகத்திற்கு வியாழன், மீனத்திற்கு வெள்ளி, துலாத்திற்குச் சனி, இடபத்திற்கு இராகு, விருச்சிகத்திற்குக் கேதுவாம்.

இராசி வீதி – இராசி வீதி - 3 - மேஷ (மேட) வீதி, இடபவீதி, மிதுன வீதி. இவற்றுள் மேட வீதியாவது இடபம், சிங்கம், மிதுனம், கர்க்கடகம். இடப வீதியாவது - மீனம், மேடம், கன்னி, துலாம், மிதுன வீதியாவது - தனுசு, மகரம், கும்பம், விருச்சிகம்.

இரு கால் ராசி - மிதுனம், கன்னி, துலாம், கும்பம், ஆக - 4.

இருது சந்தி - இரண்டு பருவங்கள் சந்திக்கும் காலம், முன் பருவத்தின் இறுதி ஏழு நாட்களும், பின் பருவத்தின் முதல் ஏழு நாட்களும் இருது சந்தி. (சங்.அக.)

இருதயம் - இலக்கினத்திற்கு ஐந்தாமிடம்.

இராமானம் - (இரா) இரவு நாழிகை. தினந்தோறும் உள்ள இரவின் அளவு.

இராவலிக்கோள் - இரவில் வலியுள்ள கிரகம். இது சந்திரன், சனி, செவ்வாய்.

இரா வலிவுள்ள ராசிகள் - இரவில் வலிமை பெற்ற ராசிகள்.

இராவிழிப்பு ராசிகள் - இரவில் விழிக்கும் ராசிகள், இவை மேஷம், இடபம், மிதுனம், கடகம், தனுசு, மகரம் என்பதாகும்.

இறங்கும் இராசி - கடகம் முதல் தனுசு வரையிலும் உள்ள ஆறு இராசிகளாகும்.

இறந்த காலம் இராசி - மேஷம், கடகம், துலாம், மகரம் என்பனவாம்.

இலக்கின கேந்திரம் -சென்ம லக்கினத்திலிருந்து 1,4,7,10 - ஆம் இடம். (சுகர் நாடி.ப.477.)

இலக்கின சந்தி - இராசிச் சந்தியில் விவரம் காண்க.

இலக்கினத்தில் பனிரெண்டு ஸ்தானங்களின் பெயர்கள்:

இலக்கினத்தின் பெயர் - தலை, நிறம், சொரூபம், மூடி, மூர்த்தி, மெய்க்கீர்த்தி, ஜன்மம், அபிஷேகம், கல்வி சிந்திதம். பிரகிருதி, சந்தோஷம், மலை, உயிர், தேகம், மனு என்பன இலக்கினத்தின் பெயராம்.

இரண்டாமிடத்தின் பெயர் - நேத்திர ஸ்தானம் வலது கண், பல், வாய், மூக்கு, வாக்கு, முகம், புருவம், மாரகம், குடும்பம், தனம், சௌபாக்கியம் முற் ஜென்மம், நெற்றி, பாத்திரம், ஜனரச்சகம், கேள்வி ஸ்தானம் என்பன இரண்டா மிடத்தின் பெயர்களாம்.

மூன்றாமிடத்தின் பெயர் - வல்லப ஸ்தானம், விஜயம், வெற்றி, பராக்கிரமம், தைரியம், பெலன், சகோதிரம், காவியம், அடிமை, வலது காது, ஆயுள், ஆபரணம், நல்ல பூஷணம், சேவகா விருத்தி, வலது கன்னம், பல தேச வர்த்தமானம், கேள்வி ஸ்தான மென்றும் மூன்றாமிடத்தின் பெயராம்.

நாலாமிடத்தின் பெயர் - உயர்ந்த கல்வி ஸ்தானம், வாகனம், பூமி, சுகம், சயனம், சௌக்கியம், பந்துக்கள், நிட்சேபம், வஸ்திரம், தாடகம், கிணறு, அன்னை, வர்த்தகம், கண்டம், வலக்கை, வேத நூல், கடவுள், இவை நான்காமிடத்தின் பெயர்களாம்.

ஐந்தாமிடத்தின் பெயர் - தந்தை ஸ்தானம், சேய், பக்தி, புக்தி, மந்திரம், அன்பு, ஞானம், போசனம், பிரபு, மார்பு, புத்திரன், மாமன், இருதயம், பாசம், சிந்தனை, சித்தம், கர்ப்பம், பஞ்சம ஸ்தானம் என்பன ஐந்தாமிடத்தின் பெயர்களாம்.

ஆறாமிடத்தின் பெயர் - அவஸ்தை, ஸ்தானம், பிணி, யுத்தம், ரோகம், சோரம், ஆயுதப்பீடை, துயரம், இரணம், ஆபத்து, வயிறு, சத்துரு, கடன், அவமிருத்து, பசி, தெய்வ நிந்தனை, என்பன ஆறாமிடத்தின் பெயர்களாம்.

ஏழாமிடத்தின் பெயர் - களத்திர ஸ்தானம், போகம், சுகம், விவாகம், வர்த்தகம், சற்கருமம், யாத்திரை, மன மகிழ்ச்சி, நல்யோகம், மாரகம், ஸ்தானமென்றும் ஏழாமிடத்தின் பெயர்களாம்.

எட்டாமிடத்தின் பெயர் - தண்டனை ஸ்தானம், கொடுமை, அபான நோய், ஆயுள், கொலை, அவமதிப்பு, விதி, அறிவின்மை, எளிய சீவனம், துன் மரணம், ஆயுத பீடை, பகை, விரோதம், பெருந்துயர், விக்கினம், பாழ், பிழை ஸ்தானம் என்பன எட்டாமிடத்தின் பெயர்களாம்.

ஒன்பதாமிடத்தின் பெயர் - நிதி, திரவியம், பாக்கியம், சினேகம், குரு பக்தி, திருப்பணி, தருமம், தவம், பகுணம், பக்தி, நவமணி, புத்திரர், வித்தை, மாளிகை, பிதிர், சுகம், உபதேசம், யோகம், ஞானம் என்பன ஒன்பதாமிடத்தின் பெயர்களாம்.

பத்தாமிடத்தின் பெயர் - துட்ட வௌ்ளம், இடது கை, வெகுமானம், காரியம், கருதம், தொழில், வியாபாரம், உத்தியோகம், தெய்வ பக்தி, பிரதிஷ்டை, பூர்வ கருமம், சற்கருமம், மெய்ஞ்ஞானம், கருணை, வேளாண்மை என்பன பத்தாமிடத்தின் பெயர்களாம்.

பதினோராமிடத்தின் பெயர் - இடது செவி, இடது கன்னம், இடது கால், இடது துடை, புதையல், துயர் நிவர்த்தி, ஜேஷ்ட சகோதிரம், களவு, வம்பு, மூர்க்கம், துற்சேர்க்கை, சூது, ரசவாதம், கபடம், துன்மார்க்கம், அறிவு, சிவிகை, ஆயம், லாபம், விரையம், வியம், இலக்கின மூலாமென்றும் பதினோராமிடத்தின் பெயர்களாம்.

பனிரெண்டாமிடத்தின பெயர் - ஜீவனம், வேள்வி, வியாச்சியக் கவலை, சன்னியாசம், அசௌக்கியம், ஊழி, திரவிய சேதம், தேசாந்திரம், சாவு, துற்சேற்கை, செலவு, மோட்சம், தியாகம், சயனம், சமாதி, இடது கண், இவை பனிரெண்டாமிடத்தின் பெயர்களாம்.


இலக்கினத்தோன் – இலக்கினத் தோன் எந்த இராசியில் உதிக்கிறதோ அந்த இராசிக்குரிய கிரகர். (சுகர்நாடி. ப.119.)

இலக்கினம் - இராசி, இராசிகளின் உதயம், முகூர்த்தம், உதயம், ஓரை, நல்லியம், ஜென்மம், தேகம், ரூபம், சிரசு, மலை, வர்த்தமான ஜென்மம் என்பதாகும். இராசிகளுடைய உதயத்திற்குப் பெயர்.

இலக்கினப் பத்திரிகை - மங்கல முகூர்த்தத்தைக் குறிப்பிடும் பத்திரிகை. (சங். அக.)

ஈன ஸ்தானம் - மூன்று, ஆறு, எட்டு, பன்னிரண்டாம் இடங்கள் ஆகும்.

உசற்காலம் - உஷற்காலம், சூரியோதயம். உசா காலம், உஷா காலம் என்பர். சூரிய உதயத்திற்கு நான்கு கடிகை முற்பட்ட காலம்.

உடு திசை - நட்சத்திர திசை. இது சந்திர சூரியருடைய புடங்களைக் கூட்டிக் கண்ட நட்சத்திர திசை.

உதயஅதிபன் - உதயத்திற்கு உரியவன், சென்ம இராசியில் சுய சேத்திரம் பெற்ற கிரகம், இலக்கின அதிபதியும் ஆகும்.

உதயகாலம், உதயகாலை - சூரியன் உதிக்கும் நேரம், விடியற்காலம், அன்றியும் குழந்தை செனனமாகும் நேரமும், அருணோதயமும் ஆகும்.

உதயபலம் - புதன் உதயத்து நிற்கின் 500 குற்றத்தைப் போக்குவன். சுக்கிரனும் உதயத்து நிற்கின் 500 குற்றத்தைப் போக்குவன். வியாழன் உதயத்து நிற்கில் 10 லக்ஷம் குற்றம் நீக்குவன். இவர்கள் கேந்திரங்களில் நின்றாலும் தோஷங்களைப் போக்குவர். இவை நட்பாட்சி உச்சமாகில் நலம் என்ப.பகை நீசமாகில் ஆகாது.

உதய லக்கினம் - சென்ம லக்கினம், புலரி, விடியல், வைகறை அன்றியும் ஆருடத்திற்கு அப்போது உதிக்கும் இராசியும் ஆகும். சென்ம லக்கினம், தற்காலத்து உதிக்கும் இராசி.

உத்தம காலம் - அடுத்த காலம், சாந்திரி மாதம், அது பூரணை துவக்கி மற்றப் பூரணையளவும் வருங்காலம்.

உத்தரகாலம் - அடுத்த காலம், சாந்திர மாதம். இது பூரணை தொடங்கி மற்றையப் பூரணை வரை வருங்காலம்.

உசற்காலம் - உஷற்காலம், சூரியோதயம். உசாகாலம், உஷா காலம் என்பர். சூரிய உதயத்திற்கு நான்கு கடிகை முற்பட்ட காலம். உஷை, உஷா, உசை - இரவு, காலை, மாலை, இரவு.

நாற் கோண வேதை - சனி, செவ்வாய் நின்ற நட்சத்திரத்துக்கு இருபத்தாறு, இருபத்தொன்று, மூன்று, இருபதாவது நட்சத்திரங்களாகும்.

(கற்பித்தல் தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/astrology/serial/p13.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License