இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
தொடர்

ஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள்!

முனைவர் தி. கல்பனாதேவி


14. அடிப்படை (தொடர்ச்சி)


விஷீவம்

ஒரு புண்ணிய காலம். இது இரண்டு அயனங்கள் ஒன்று சேரும் சந்தியா காலம். இது திரிமூர்த்திகளும் ஒன்று சேரும் காலம். இக்காலத்து திரிமூர்த்திகளுக்குத் திருமஞ்சனாதிகள் செய்து அன்ன தானம் செய்யின் புண்ய உலகடைவர். இது மேஷ சங்கிர மணத்திற்கும், துலா சங்கிர மணத்திற்கும் பெயர்.

விஷீவாயனம்

மேஷ சங்கிரமனம். இஃது உதயத்தில் ஆகில் தேசத்திற்குக் கேடு உண்டாம். உச்சியில் ஆகில் பயிர்க்குக் கேடாம். இள உச்சியாகில் வியாதியும், இராச பீடையுமாம். பிற் பகலாகில் நாசமாம். சந்தியா காலமாகில் தேசத்திற்கு ஆகாது. இரவாகில் மிக நன்று. (விதான மாலை.)

தாமத வேளை

மூன்றே முக்கால் நாழிகை கொண்டு வருமோர் காலம்.

தாராபலம்

ஜென்ம நட்சத்திரம் முதல் தற்கால நட்சத்தித்திரம் வரை எண்ணி வந்த தொகையின் பலா பலன். 1,19 ஜன்மம் - மத்திமம். 2,11,20 சம்பத்து - உத்தமம். 3. 12,21 விபத்து அதமம். 4,13,22 ஷேமம் - உத்தமம். 5,14 பிரத்தியம் - மத்திமம். 6. 15,24 சாதகம் - உத்தமம். 7.நைதனம் - அதமம். 8. 17,26 மைத்திரம் - உத்தமம். 9. 18 பரம மைத்திரம் - சமம். 10.கர்மம் - மத்திமம். 16ஸாங்காதிகம் - அதமம். 23 வைநாசிகம் - அதமாதமம். 25 மானசம் அதமாதம். 27.சமுதாயிகம் - அதமம். நட்சத்திர பலன்களில் ஒன்று. அது சென்ம நட்சத்திரம் முதல் தற்கால நட்சத்திரம் வரை எண்ணி வந்த தொகையில் ஒன்று, பத்தொன்பது மத்திமம், இரண்டு. பதினொன்று, இருபது உத்தமம். மூன்று, பன்னிரண்டு, இருபத்தொன்று அதமம். நான்கு, பதின் மூன்று, இருபத்திரண்டு சேமம். ஐந்து, பதினான்கு, இருபத்து மூன்று மத்திமம். ஆறு, பதினைந்து, இருபத்து நான்கு உத்தமம். ஏழு அதமம். எட்டு, பதினேழு, இருபத்தாறு உத்தமம். ஒன்பது, பதினெட்டு சமம். பத்து மத்திமம். பதினாறு அதமம். இருபத்து மூன்று, இருபத்தைந்து அதமாதமம். இருபத்தேழு அதமம் என்பதாகும்.

திரிகால சந்தி

காலை, மாலை, உச்சிகளில் செய்யும் அனுஷ்டானம்.

திரிகாலம்

முக்காலம். அவை உச்சி, காலை, மாலை அன்றியும் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்பதும் ஆகும்.

திரிகால வர்த்தமானம்

மூன்று காலங்களிலும் நடக்கும் சம்பவங்கள்

தினபலம்

ஐந்தாம், ஆறாம், ஏழாம், எட்டாம், பதினொன்றாம், பன்னிரண்டாம் இராசிகள். நிதம் நடக்கும் பலன்.

தினபலன்

ஜன்ம நட்சத்திர முதல் அன்றைய நட்சத்திரம் வரையில் எண்ணிக் கண்ட தொகையுடன் ஞாயிறு முதல் அன்றைய வாரம் வரையிலும் பிரதமை முதல் அன்றைய திதி வரையிலுங் கூட்டிக் கண்ட தொகையைச் சேர்த்து ஒன்பதிற் கழித்த மிச்சம் 1 வியாகூலம் 2 சுபம் 3 துர்வார்த்தை 4 பந்து தரிசனம் 5 பெண் போகம் 6 சுபம் 7 கலகம், ரோகம் 8 ரோகம் 9 ஞான வாக்கியம். நிதம் நடக்கும் பலன்.

விவரம் - சன்ம நட்சத்திரம் முதல் அன்றைய நட்சத்திரம் வரை எண்ணிக் கண்ட தொகையுடன், ஞாயிறு முதல், அன்றைய வாரம் வரையிலும், பிரதமை முதல் அன்றைய திதி வரையிலும் கூட்டிக் கண்ட தொகையைச் சேர்த்து ஒன்பதில் கழித்த மிச்சம், ஒன்றுக்கு - வியாகூலம், இரண்டுக்கு - சுபம், மூன்றுக்கு - துர்வார்த்தை, நாலுக்கு - விருந்தினர் வரவு, ஐந்துக்கு - பெண் போகம், ஆறுக்கு - சுபம், ஏழுக்கு - கலகம், எட்டுக்கு - ரோகம், ஒன்பதுக்கு - ஞான வாக்கியம் எனக் கொள்வதாகும்.


தின மகாதிசை

நித்தம் நடக்கும் திசை, விவரம் சூரியன் நின்ற நட்சத்திரம் முதல் அன்றைய நட்சத்திரம் வரை எண்ணிக் கண்ட தொகையை, இரண்டில் பெருக்கி, இதனோடு சென்ம நட்சத்திரம் முதல் அன்றைய நட்சத்திரம் வரை எண்ணிக் கண்ட தொகையையும், ஞாயிறு முதல் அன்றைய வாரம் வரை உள்ள தொகையையும் கூட்டி, ஒன்பதில் கழித்து வந்த மிச்சம், ஒன்றுக்குச் சூரிய திசை, இரண்டுக்குச் - சந்திர திசை, மூன்றுக்குச் செவ்வாய் திசை, நான்குக்கு - இராகு திசை, ஐந்துக்கு வியாழ திசை, ஆறுக்குச் சனி திசை, ஏழுக்குப் - புதன் திசை, எட்டுக்கு - கேது திசை, ஒன்பதுக்கு - சுக்கிர திசையாகக் கொள்க.

துற்கரணம்

சுப காரியங்களுக்கு விலக்கப்பட்ட கரணங்கள், அவை வனசை, சகுனி, சதுர்பாதம், நாகவம், கிமிஸ்துக்கினம் என்பன.

துற்பல ராசி

சரராசி நான்குமாகும். இது மேஷம், கடகம், துலாம், மகரம் என்பனவாகும்.

துன் மரணம்

எட்டாம் இடம், துன் மரணம், அவச்சாவு, இலக்கினத்திற்கு எட்டாமிடம் என்பதாம்.

தெத்த சுவாலா தூம தோஷம்

பாபக் கிரகங்கணின்று கழிந்த நாளும், நின்ற நாளும், நிற்கப் புகுகிற நாளும், தெத்த சுவாலா தூம நாள் என்று பெயர். இந்நாட்களில் சுபங்கள் கூடா. இந்நாட்களுடன் கூடிச் சந்திரன், சுக்ரன் கடந்து போதல், உடனிற்றல், நோக்குதல் செய்யின் நன்றாம். (விதான.)

வேதை

தெட்சண வேதை - சனி, செவ்வாய் நின்ற நட்சத்திரத்திற்கு ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, பன்னிரண்டு, பதின்மூன்று, பதினாலு ஆகிய நட்சத்திரங்களாகும்.

விபரீத வேதை - கோசர வேதையில் ஒன்று, அது சந்திர லக்கினத்திற்கு ஐந்து, ஒன்பது, நான்கு, பன்னிரண்டு ஆகியவைகளில் சூரியன் இருக்க பதினொன்று, மூன்று, பத்து, ஆறு ஆகியவைகளில் வேறு கிரகம் இருப்ப தாகும். சந்திர லக்கினத்துக்கு 5, 6, 4, 12 ல் சூரியன் இருக்க முறையே 11, 3, 1, 6, ல் வேறு கிரகம் இருந்தால் சூரியன் நல்ல பலனைக் கொடுப்பான். இவ்வாறே மற்றக் கிரகங்களுக்கும் கோசார விபரீத வேதை பார்த்துக் கொள்ளவும். சூரியனும், செவ்வாயும் முற் பங்கிலும், குருவும், சுக்கிரனும் நடுபங்கிலும், சனியும், சந்திரனும் கடைப் பங்கிலும், புதனும், பாம்புகளும் எப்போதும் பலன் தருவார்கள்.


நட்சத்திரப் பொருத்தம்

மணப்பொருத்தத்துள் ஒன்று. விவரம்:- பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணிக் கண்ட தொகையை ஒன்பதில் கழித்து, மிச்சம் இரண்டு, நாலு, ஆறு, எட்டு, இவைகள் உத்தமம், ஒன்று, ஐந்து, ஒன்பது ஆனால் மத்திமம். மூன்று, ஏழு ஆனால் அதமம் என்பதாகும்.

நட்சத்திர மகா திசை

நட்சத்திரங்களைக் கொண்டு மகாதிசை கணிப்பது. விவரம்: அசுபதி, மகம், மூலம் ஆகிய இம் மூன்று நட்சத்திரங்களுக்கும் கேது திசை வருடம் ஏழு. கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய இம் மூன்று நட்சத்திரங்களுக்கும் சூரிய திசை வருடம் ஆறு. உரோகணி, அஸ்தம், திருவோணம் ஆகிய இம்மூன்று நட்சத்திரங்களுக்கும் செவ்வாய் திசை வருடம் ஏழு. திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய இம்மூன்று நட்சத்திரங்களுக்கும் இராகு திசை வருடம் பதினெட்டு. புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய இம்மூன்று நட்சத்திரங்களுக்கும் வியாழன் திசை வருடம் பதினாறு. பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய இம் மூன்று நட்சத்திரங்களுக்கும் சனி திசை வருடம் பத்தொன்பது. ஆயிலியம், கேட்டை, ரேவதி ஆகிய இம் மூன்று நட்சத்திரங்களுக்கும் புதன் திசை வருடம் பதினேழு.

நாழிகை

உத்திரட்டாதி, கடிகை, கன்னல், விகலை, இருத்தை, நாழி, பதம், விநாடி அறுபது கொண்டது.

யோகினி பலன்

யோகினி

காளி, சன்மினி, சூர்மகள், நிர்வாணி, இவள் நிர்வாணமும், விரித்த தலையும், தேகத்தில் வெண்ணீறும், சங்காபரணம் முதலிய அமங்கலமும், இரத்த நிறமும் உடையவள். ஒரு பெண் தேவதை. இவள் நிர்வாணி. விரிந்த கேசமும், தேகம் முழுவதும் வெண்ணீற்றுப் பூச்சும், மங்கல ஆபரணம் இன்றிச் சங்காபரணமும், கையில் வெறித்த கபாலமும், தீரா அமங்கலான சிவந்த வர்ணமும் உடையவள். இவளுக்கு முன்னும், இடப்புறமும் ஆகாது. பின்னும், வலப்புறமும் நன்றாம். ஆகாயம், பூமி, மத்திமம்.

யோகினிகள்

ஒரு வித மயக்கும் சக்திகள். இவர்கள் 64 கோடியர். இவர்களைச் சங்கரித்தனர். அவர்களுள் சிலர் காளியிடம் ஏவல் செய்து இருக்கின்றனர். அவர்கள் 64 திவ்ய யோகி, மகாயோகி, சித்த யோகி, கணேஸ்வரி, பிரோ தாசிபிகினி, காளராத்திரி, நிசாசரி, ஜங்காரி, ஊர்த்துவ வேதாளி, பிசாசி, பூதடாமரி, ஊர்த்துவகேசி, விரூபாட்சி, சுஷ்காங்கி, நரபோஜனி, ராட்சசி, கோர ரக்தாட்சி, விஸ்வரூபி, பயங்கரி, வீர கௌமாரி, கீசண்டி, வராகி, முண்டதாரணி, பிராமரி, ருத்ர வேதாளி, பீஷ்கரி, திரிபுராந்தகி, பைரவி, துவம்சனி, குரோதி, துர்முகி, பிரேத வாகினி, கட்வாங்கி, தீர்க்கலம் போஷ்டி, மாலினி, மந்திர யோகினி, காலாக்னி, கிறாமணி, சக்ரி, கங்காளி, புவனேஸ்வரி, பட்காரி, வீரபத்ரேசி, துாம்ராட்சி, கலகப் பிரியை, கண்டகி, நாடகி, மாரி, எம துhதி, கராளினி, கௌசிகி, மர்த்தனி, எட்சி, ரோமஜங்கி, பிரஹாரிணி, சகஸ்ராட்சசி, காமலோலா, காகதமிஷ்டரி, அதோமுகி, துார்சடி, விகடி, கோரி, கபாலி, விஷ்லங்கினி.

யோகினி அறிதல்

சுக்ல பட்சம் பிரதமை, ஏகாதசி, கிருஷ்ண பட்சம் சஷ்டி - கிழக்கு. சுக்கில பட்சம் திருதிகை, திரயோதசி, கிருஷ்ண பட்சம் அஷ்டமி ஆக்கினேயம். சுக்கில பட்சம் பஞ்சமி, பௌர்ணமி, கிருஷ்ணபட்சம் தசமி - தெற்கு. சுக்கில பட்சம் - சதுர்த்தி, சதுர்த்தசி, கிருஷ்ண பட்சம் நவமி - நிருதி. சுக்கில பட்சம் சஷ்டி. கிருஷ்ண பட்சம் பிரதமை, ஏகாதசி - மேற்கு. சுக்கில பட்சம் சப்தமி, கிருஷ்ண பட்சம் துதியை, துவாதசி - வாயு, சுக்கில பட்சம் துதியை, துவாதசி, கிருஷ்ண பட்சம் சப்தமி - வடக்கு. சுக்கில பட்சம் அஷ்டமி, கிருஷ்ண பட்சம் திருதியை, திரயோதசி - ஈசான்யம். சுக்கில பட்சம் நவமி, கிருஷ்ண பட்சம் சதுர்த்தி, சதுர்த்தசி - ஆகாயம். சுக்கில பட்சம் தசமி, கிருஷ்ண பட்சம் பஞ்சமி, அமாவாசை - பாதாளம். இந்த யோகினியைப் பின் புறத்தில் வைத்துப் பிரயாணஞ் செய்ய நன்று. சுக்கில பட்சம் பிரதமை முதல் இஷ்ட தின திதி வரையில் எண்ணி வந்த தொகையைப் பத்தால் வகுத்த மிச்சம் 1 - க்குக் கிழக்கு, 2 - க்கு வடக்கு, 3 - க்கு தென் தெற்கு, 4 - க்கு தென் மேற்கு, 5 - க்கு தெற்கு, 6 - க்கு மேற்கு, 7 - க்கு வட மேற்கு, 8 - க்குக் வட கிழக்கு, 9 - க்கு ஆகாசம், 10 - க்குப் பூமி, வழக்கு, சூது, யுத்தம், யாத்திரை.

இவற்றிற்கு யோகினி பார்க்க வேண்டியது மிகவும் அவசியம்.

யோகினி திசை

யோகினி தேவதையா நடப்பது. யோகினி நிற்கும் திசை. விவரம்: பூர்வ பட்சத்திற்கு பிரதமை முதல் மேற்படி பூரணை வரை முறையே கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு, தென் மேற்கு, தெற்கு, மேற்கு, வட மேற்கு, வட கிழக்கு, ஆகாசம், பூமி, கிழக்கு, வடக்கு, தென் கிழக்கு, தென் மேற்கு, தெற்கு ஆகிய இத்திசைகளில் நிற்கும்.

அமர பட்சத்திற்கு பிரதமை முதல் மேற்படி அமாவாசை வரை முறையே மேற்கு, வட மேற்கு, வட கிழக்கு, ஆகாசம், பூமி, கிழக்கு, வடக்கு, தென் கிழக்கு, தென்மேற்கு, தெற்கு, மேற்கு, வட மேற்கு, வட கிழக்கு, ஆகாசம், பூமி ஆகிய இத்திசைகளில் நிற்கும் என்பதாகும். மேற் கூறிய இரு பட்சத் திதிகளுக்கு உரிய எந்தத் திக்கில் யோகினி நிற்கின்றதோ, அந்தத் திக்கிற்கு எதிராகவும், வலப் பக்கமும், பிரயாணம் செய்யலாகாது.


நித்த யோகினி நிலை

பகலை 8 பங்காக்கி 1 ஆவது பங்கில் கிழக்கிலும், 2 ஆவது வடமேற்கிலும், 3 ஆவது தெற்கிலும், 4 வது வடக்கிலும், 5 ஆவது மேற்கிலும், 6 தென் கிழக்கிலும், 7 ஆவது வடக்கிலும், 8 ஆவது தென் மேற்கிலும் நிற்கும். யாத்திரைக்கு இந்த யோகினி பின் பக்கமும், இடப் பக்கமுமாக இருத்தல் வேண்டும். இதனைப் பார்க்கும் இடத்துக் கிழக்கை முதலாகக் கொண்டு பார்க்க.

நிர்வாணி

அமங்கலை, யோகினிக்கும் பெயர்.

நிர்வாணி நிலை

ஞாயிறு, வியாழன் – தென் கிழக்கு, திங்கள், வௌ்ளி – தென் மேற்கு, செவ்வாய், சனி – வட மேற்கு, புதன் – வட கிழக்கு. இவள் பின் நிற்கும் திக்கில் பயணத்திற்கு நன்று. எதிர் நிற்கும் திசையின் நேரில் போகலாகாது. ஞாயிறு, வியாழம் - தென் கிழக்கு, திங்கள், வௌ்ளி - தென் மேற்கு செவ்வாய், சனி - வட மேற்கு புதன் - வடகிழக்கு இவள் பிரயாணத்தில் பின்னால் நன்று, முதற் பக்கந் தீது இவள் நிற்குந் திசையில் போகல் ஆகாது.

பஞ்சகம்

பஞ்சகம் பார்க்க ஐந்தின் கூட்டம். அவை பார்க்கும் விவரம்:- ஞாயிறு முதல் அன்றைய வாரம் வரையும், பிரதமை முதல் அன்றையத் திதி வரையும், அசுபதி முதல் அன்றைய நட்சத்திரம் வரையும், மேஷம் முதல் அப்போது உதயமாகும் இலக்கினம் வரையும், எண்ணிக் கண்ட தொகையை ஒன்பதில் கழித்த மிச்சம் மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது உத்தமம். மற்றவை 1,2,4,6,8 நீக்கப்படுவதாகும். 1. மிருத்து பஞ்சகம் 2. அக்கினி பஞ்சகம் 4. இராஜ பஞ்சகம் 6. சோர பஞ்சகம் 8. ரோக பஞ்சகம் ஆகிய இவற்றுள் இராஜ பஞ்சகமும், அக்கினி பஞ்சகமும், இரவில் சோர பஞ்சகமும், ரோக பஞ்சகமும், சகல காரியங்களுக்கும் மிருத்து பஞ்சகமும் ஆகாது என்பதாகும். இவற்றிற்குத் தான பிரீதி - 1. இரத்தினம் - 2. சந்தனக்குழம்பு, 4. எலுமிச்சம் பழம், 6. தீபம், 8. தான்யம்.

பஞ்சக்கோள் நின்ற தோஷம்

சூரியன் நின்ற நட்சத்திரத்துக்கு ஏழாம் நட்சத்திரம் உற்பாதம் எனவும், பத்தாம் நட்சத்திரம் தாரகம் எனவும், பதினைந்தாம் நட்சத்திரம் பிரமதண்டம் எனவும், இருபத் தொன்றாம் நட்சத்திரம் காலம் எனவும் பெயராகும்.

செவ்வாய்க்கு ஏழாம் நட்சத்திரம் சூலம் எனவும், பதினைந்தாம் நட்சத்திரம் கண்டம் எனவும், இருபத்தொன்றாம் நட்சத்திரம் காலன் எனவும் பெயராகும். அன்றியும் பத்துச் சக்கரம் என்றும், பதினைந்து காலம் என்று சொல்லும் நூல்களும் உள்ளன.

புதனுக்கு எட்டு, பதினெட்டு, இருபத்து நான்கு ஆகிய நட்சத்திரங்கள் கண்டம் என்பதாகும்.

குருவுக்கு ஏழு, ஒன்பது ஆகிய நட்சத்திரங்கள் கொடுமையாகும்.

சுக்கிரனுக்கு ஏழு, ஒன்பது ஆகிய நட்சத்திரங்கள் கொடுமையாகும்.

சனிக்கு ஐந்து, ஆறு, பத்து, பதினொன்று, பன்னிரண்டு ஆகிய நட்சத்திரங்கள் பந்தம் என்பதாகும். இராகு கேதுக்களுக்கு ஏழாம் நட்சத்திரம் பரிகம் எனவும் பெயராகும். இவை சுப காரியங்களுக்கு விலக்கப் பெற்றிருக்கிறது.

பஞ்சபட்சி

எழுத்துப் பொருத்தம் அறியும் ஐந்து பட்சி. அவை:- வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில். இவற்றிற்கு முறையே எழுத்து அ, இ, உ, எ, ஒ. இவற்றின் செய்கை உண்டி, நடை, அரசு, தூக்கம், சாவு என்பனவாகும்.

பணபரம்

இரண்டு, ஐந்து, எட்டு, பதினொன்று ஆகிய இவ்விடங்களாகும்.

பருவம்

அமாவாசை, இருது காலம், பருவ காலம், பூரணை, பெருநாள், பொழுது, வயது. அமாவாசி, இருது, பிரமாணம்.

பீமரதி

பிறந்த எழுபத்தேழாம் ஆண்டின் ஏழாம் மாதத்து ஏழாம் இரவு.

பீமாதி

ஒருவன் பிறந்த எழுபத்து ஏழாம் ஆண்டின் ஏழாம் மாதத்து, ஏழாம் இரவு.

புத்திரதானம்

புத்திரரைச் செனிப்பித்தல், புத்திரனைத் தானம் பண்ணுதல். புத்திர ஸ்தானம் என்பர். உதயத்திற்கு அல்லது இலக்கினத்திற்கு ஐந்தாம் இடம், அதற்கு ஐந்தாம் இடமாகிய ஒன்பதாம் இடமும் ஆகும். இது பாவத்பாவம் ஆகும்.

பொங்கு சனி

ஏழரை நாட்டுச் சனியில் இரண்டாம் முறையாய் வரும் சனி. இது செல்வ வளம், உத்தியோகம், கடினப் பட்டதற்கான பலனினைச் சரி செய்யும்.

மாரகன்

மாரக கேந்திர அதிபன்

கேந்திராதி பத்திய தோஷத்தால் இன்ன கிரகம் இன்ன விதமாய் இன்ன வீட்டில் இருந்தால் மாரகம் செய்யும் என்பது. விவரம்: கேந்திர ஆதிபத்திய தோஷத்தில் வியாழனும், சுக்கிரனும் மிகவும் பலவான்கள். இவர்கள் இரண்டு, ஏழு ஆகிய இடங்களில் நின்றாராகில், மாரகத்தைக் கொடுப்பார்கள். மாரக ஸ்தான அதிபதியைப் பார்க்கிலும், மாரக ஸ்தானத்தில் இருப்பவர்கள் பலவான் கள் என்பதாகும்.

மாரக ஸ்தானம்

மரணத்துக்கு உடைய ராசி. அது சரத்திற்கு இரண்டும், ஏழும், ஸ்திரத்திற்கு மூன்றும், எட்டும், உபயத்திற்கு ஏழும், பதினொன்றும் ஆகும். அன்றியும் இலக்கினத்திற்கு எட்டாம் இடமும், அதற்கு எட்டாம் இடமாகிய மூன்றாம் இடமும் ஆயுள் ஸ்தானம் ஆனதினால் இவைகளுக்கு விரைய ஸ்தானங்களாகிய ஏழாம் இடமும், இரண்டாம் இடமும் மாரக ஸ்தானமாகும்.

குறிப்பு - இலக்கனத்திற்காம் இரண்டேழ் மாரகம் என்றும், அலைக்கும் இரண்டான் கொல்லானல்லா - விலக்கினர்க்குத் தோன்றும் அந்தப் பாவிகணான் கான வருட் சொல்லுகின்ற, மூன்று, எட்டு மாரகமாய், மூட்டு. என்னும் செய்யுளாலும் அறிக. இரண்டு, மூன்று, எட்டு, பதினோராமிடங்கள்.

மாரகர்

மரணம் செய்விப்போர், மாரகத்துக்கு உடையவர், அன்றியும் இன்ன ராசிக்கு இன்ன கிரகர் மாரகம் என்பதும், இன்ன ராசியில் இன்ன கிரகர் இருந்தாலும் மாரகம் என்பதுமாகும்.

விவரம் - இலக்கினம் சர ராசியானால், இரண்டேழுக்கு உடையவர் மாரகராகும். ஸ்திர ராசியானால், மூன்றெட்டுக்கு உடையவர் மாரகராகும். உபய ராசியனால் ஏழு பதினொன்றுக்கு உடையவர் மாரகராகும். அன்றியும், இலக்கினத்துக்கு விரயாதிபத்தியம் சுக்கிரனுக்காவது, சனிக்காவது இருந்தாலும், ஏழாம் இடத்து ஆதிபத்தியம் சூரியனுக்கு இருந்தாலும், ஆறாம் இடத்து ஆதிபத்தியம் செவ்வாய்க்கு இருந்தாலும், நான்கு, பத்து இவைகளில் குளிகன் இருந்தாலும், இரண்டில் ராகு, எட்டில் கேது இருந்தாலும், சாதகனுக்கு மாரகமாகும். அன்றியும், இலக்கினத்துக்கு எட்டில், ராகு இருந்தால், பிதுர் மாரகமாகும். நான்கு, ஐந்து, ஏழு இவைகளில் ராகு இருந்தால் தாய் மாரகமாகும் ஐந்து, பதினொன்று இவைகளில் ராகு இருந்தால் சகோதர மாரகமாகும் ஆறாம் இடத்து ஆதிபத்தியம் சூரியனுக்கு இருந்தால் பிதுர் மாரகமாகும். இலக்கினத்துக்கு மூன்று, எட்டுக்கு அதிபர்கள் தங்களுடைய திசைகளில் மாரகத்துக்கு ஒப்பாகிய கண்டத்தையும், மிகவும் கஷ்ட பலன்களையும் கொடுப்பார்கள். இவர்கள் 2,3,7,8,12 ஆகிய இடங்களில் இருந்தால், மாரகத்தைக் கொடுப்பார்கள். தீர்க்காயுசு சாதகனுக்கு ஏழு, ஒன்பதாம் திசை மாரகமாகும் மத்திம ஆயுசு சாதகனுக்கு மூன்று, ஐந்து, ஆறாம் திசைகள் மாரகமாகும் அற்ப ஆயுசு சாதகனுக்கு ஒன்று, மூன்றாம் திசைகள் மாரகமாகும் நான்காவது திசை சனி திசையானால் மாரகமாகும். ஐந்தாவது திசை செவ்வாய் திசையானால் மாரகமாகும். ஆறாவது திசை வியாழ திசையானால் மாரகமாகும். ஏழாவது திசை ராகு திசையானால் மாரகமாகும். சந்திரன் நின்ற ராசிக்கு நான்கு, பத்தாம் இடங்களில் இருக்கும் பாபர்களும் மாரகர்களாகும். குளிகன் நின்ற ராசிக்குத் திரிகோணத்தில் சனி வரும் காலமும் மாரகமாகும். இரண்டாம் இடத்தில் பாபக் கிரகங்கள் இருக்க அல்லது பார்க்க இலக்கின அதிபதியும், வியாழனும், பாபக் கிரகங்களும் ஒரே இராசியில் இருக்க, எட்டில் இராகு இருக்க விஷத்தினால் மாரகமாகும்.

முகுர்த்தம்

முகுர்த்தம் - முகூர்த்தம். முகுர்த்த விசேஷம் - முகுர்த்த பலன்.

முகூர்த்தம் - இரண்டு நாழிகை கொண்ட நேரம், இரண்டரை நாழிகை கொண்டது. சுப வேளை, நற்காலம், மூன்றே முக்கால் நாழிகை கொண்டது என்பாரும் உளர்.

முகூர்த்தத்திரயம் - உதயம், மத்தி யான்னம், அஸ்தமனம்.

முகூர்த்த விசேஷம் - முகூர்த்த பலன்.

மூலத்திரிகோணம்

சூரியனுக்குச் சிங்கமும், சந்திரனுக்குக் கர்க்கடகமும், செவ்வாய்க்கு மேஷமும், புதனுக்குக் கன்னியும், குருவுக்குத் தனுசுவும், சுக்கிரனுக்குத் துலாமும், சநி, ராகுக்குக் கும்பமும், கேதுவுக்குச் சிங்கமும், குளிகனுக்கு மீனமும் ஆகும்.

லத்தைகள்

லத்தைகள் அறியும் படி - சூரியன் இருக்கின்ற நட்சத்திரத்துக்கு 12 ஆவது நட்சத்திரமும், சந்திரனுக்கு 7 ஆவதும், குஜனுக்கு 3 ஆவதும், புதனுக்கு 23 ஆவதும், குருவுக்கு 1 ஆவதும், சுக்கிரனுக்கு 25 ஆவதும், சனிக்கு 8 ஆவதும், இராகுவுக்கு 21 ஆவதும், கேதுவுக்கு 21 ஆவது நட்சத்திரமும், லத்தை என்று சொல்லப்படும். இதில் சூரியன், அங்காரகன், சனி, ராகு, கேது ஆகிய இந்த 5 பேரும் பாபக் கிரகங்கள் ஆகையால் இவர்களுடைய லத்தை உண்டாகிய நட்சத்திரங்களிலே சுப காரியங்கள் செய்யக் கூடாது.

விட்டி தோஷம், விஷ்டி தோஷம்

சுப காரியங்களுக்கு விலக்கப் பெற்ற நாள். அவை பூருவ பட்ச சதுர்த்தசியில் ஐந்தாம் சாமம் மேற்கிலும், அஷ்டமியில் இரண்டாம் சாமம் தென் கிழக்கிலும், ஏகாதசியில் ஏழாம் சாமம் வடக்கிலும், பூரணையில் நாலாம் சாமம் தென் மேற்கிலும், அமர பட்சத் திருதிகையில் ஆறாம் சாமம் வட மேற்கிலும், சப்தமியில் மூன்றாம் சாமம் தெற்கிலும், தசமியில் எட்டாம் சாமம் வடக்கிலும், சதுர்த்தசியில் முதல் சாமம் கிழக்கிலும் விஷ்டி உண்ணும் காலமாகும்.


மகோதயம்

மஹோதயம் என்பர். தை, மாசி மாதங்களில் அமாவாசையும், திருவோண நட்சத்திரமும் கூடிய நாள். இது ஞாயிற்றுக் கிழமையில் வரின் நன்று. அறுபது வருடத்திற்கு ஒரு முறை வரும் விசேஷ நாள். அது அருத்தோ தயத்தில் கூறிய படி அமாவாசையானது திங்கட் கிழமை யோடு கூடி வருவதாகும். மஹோதயம் - மகத நாட்டிலுள்ள ஒரு பட்டணம். இது விஸ்வாமித்திரன் இராஜதா நிகுசிகன் மகன் குசநாபனாலே நிர்மிக்கப்பட்டது. தை மாசமும், அமாவாசையையும், திருவோண நட்சத்ரமுங் கூடிய சுபதினம் மஹோதய புண்ய காலம் எனப்படும். இப்புண்ய காலத்திலே செய்யப்படும் தாந தர்ப்பணம். முதலியன நற்பலன் தரும்.

பைத்திரா கோரத்திரம்

பிதிர்களின் ஓர் நாள், அது மனிதருக்கு ஓர் மாதம்.

தேவாண்டு

தேவராண்டு. அஃது முந்நூற்றறுபத்தைந்து மானிட வருஷங் கொண்டது.

தீபம்

சோதி நட்சத்திரம், சோதிநாள்.

தீபாவளி

தீபாவலி, தீபாவளி, தீபாளி - தீவாளி

இது விசேஷமான ஓர் பெரு நாள், இது ஐப்பசி மாதம், அமர பட்சத்துச் சதுர்த்தசித் திதியின் இரவு, நாலாம் சாமத்தில் கொண்டாடுவதாகும்.

தீபாவளிப் பண்டிகை

இது ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்சத் திரயோதசி இரவில் சதுர்த்தசி சம்பந்தம் அடைகையில் உலகத்தைத் துன்புறுத்தின் துன்ப இருள் மூடச் செய்திருந்த பிராக் சோதிடபுரி ஆண்ட நரகாசுரனைக் கண்ணன் கொன்றதன் பொருட்டுக் களிப்பினால் எண்ணெயிட்டு ஸ்நானம் (குளியல்) செய்து விளக்கிட்டுக் களிப்பது.

திருமணப் பொருத்தங்கள்

பொருத்தம் - இணக்கம், தகுதி, விவாகப் பொருத்தம் முதலியன.

மணப்பொருத்தம் - கலியாணப் பொருத்தம், திருமணப் பொருத்தம், விவாகப் பொருத்தம். இவை பதினாறு வகைப்படும்:

விவரம் - 1.இராசிப்பொருத்தம், 2.இராசி அதிபதிப் பொருத்தம் 3.இரட்சுப் பொருத்தம் 4.கணப்பொருத்தம் 5.பெண் தீர்க்கப் பொருத்தம் 6.தினப் பொருத்தம் 7.மகேந்திரப் பொருத்தம் 8.யோனிப் பொருத்தம் 9.வசியப் பொருத்தம் 10.வேதைப்பொருத்தம் 11.ஆயுள் பொருத்தம் 12.நட்சத்திரப் பொருத்தம் 13.விருட்சப்பொருத்தம் 14.பச்சிப்பொருத்தம் 15.பஞ்ச பூதப்பொருத்தம் 16.நாடிப்பொருத்தம் என்பதாகும். விவாகத்திற்குரிய பொருத்தம் பத்து அவை இராசி, இராசித்தலைவர், இரச்சு, கணம், திரி தீர்க்கம், தினம், மகேந்திரம், யோனி, வசியம், வேதம்.

பொருத்தங்கள் - அக்காலத்தில் திருமணம் செய்வதற்கு மிகுதியான பொருத்தங்கள் இருந்ததையும், பார்த்ததையும் இப்பகுதி அழகாய்ப் பதிவிடுகின்றது.

1. நட்சத்திரப் பொருத்தம்

பெண் நட்சத்திர முதல் புருஷனுடைய நட்சத்திரம் வரையில் எண்ணிக் கண்ட தொகையை 6 இல் கழித்த மிச்சம் 2, 4, 6, 8. ஆனால் உத்தமம், 1, 5, 9 ஆனால் மத்திமம், 3, 7 ஆனால் அதமம்.

2. ஏக தினப் பொருத்தம்

ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், அஸ்தம், உத்திரட்டாதி, திருவோணம், ரேவதி, இவை 8 ம் ஸ்தீரீ புருஷர்களின் ஒரு நாளாகில் உத்தமம். அசுவனி, கார்த்திகை, மிருகசீரிடம், புனர்பூசம், உத்திரம், சித்திரை, அனுஷம், உத்திராடம், இவை 8 ம், ஸ்திரீ புருஷர்களின் ஒரு நாளாகில் மத்திமம். இதில் ஸ்திரி புருஷர்கள் நாள் ஒன்றாகி இரண்டாமிராசிக்குப் பங்குபட்ட நாளாகில் முதலிராசி நாள் புருஷனும் இரண்டாமிராசி நாள் பெண்ணுமாகில் பொருந்தும், இது மாறி வரினும் இதிற் சொல்லப்படாத நாட்களும் ஒரு நாளாகிற் பொருந்தாது.


3. கணப் பொருத்தம்

பெண் நட்சத்திரமும், புருஷனுடைய நட்சத்திரமும் ஒரே கணமானாலும், பெண் மனுஷ கணமும் புருஷன் தேவ கணமானாலும் உத்தமம். பெண் தேவ கணமும் புருஷன் மனுஷ கணமானாலும், இராட்சத கணமானாலும் மத்திமம். பெண் இராட்சத கணமும் புருஷன் தேவ கணமானாலும், பெண் மனுஷ கணமும் புருஷன் இராட்சத கணமானாலும் அதமம் பெண் இராட்சத கணமும் புருஷன் மனுஷ கணமுமானால் அதமாதமம். பெண்ணினுடைய நட்சத்திரத்திற்கு 2, 4 ன் மேற் புருஷ நட்சத்திரம் வரினும் இருவருக்கும் அதிபதி நட்பாட்சியாயிருப்பினும் பெண் இராட்சத கணமானாலும் பொருந்தும்.

4. மாகேந்திரப் பொருத்தம்

பெண் நட்சத்திர முதல் புருஷ நட்சத்திரம் 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆனால் விவாகம் செய்யலாம். மணப் பொருத்தத்துள் ஒன்று. அது பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் நான்கு, ஏழு, பத்து, பதின்மூன்று, பதினாறு, பத்தொன்பது, இருபத்திரண்டு, இருபத்தைந்து ஆனால் உத்தமம் என்பதாகும்.

5. ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்

பெண் நட்சத்திரம் முதல் புருஷ நட்சத்திரம் 13 - க்கு மேற்பட்டால் விவாகஞ் செய்யலாம். மங்கை தீர்க்கம் - மங்கை தீர்க்கப் பொருத்தம் என்பர். இது தசப் பொருத்தம் ஆகிய மணப் பொருத்தத்துள் ஒன்று. அது பெண் நட்சத்திரத்திற்கு ஆண் நட்சத்திரம் பதின்மூன்றுக்கு மேலாய் இருத்தல். மணவாளி நாளுக்கு மணவாளனாள் பதின் மூன்றுக்கு மேற்பட்ட நாளாய் இருத்தல்.

6. பிராணிப் பொருத்தம்

பெண்ணுக்கும், புருஷனுக்கும் ஒரு பிராணி நட்சத்திரமானால் உத்தமம். அதில் ஆண், ஆணாகவும், பெண், பெண்ணாகவும் இருந்தால் அதிக உத்தமம். இதர பிராணி நட்சத்திரமாகிலும் வைரசாதியாகாமற் போனால் விவாகஞ் செய்து கொள்ளலாம்.

யோனிப்பொருத்தம் - மணப் பொருத்தத்துள் ஒன்று. விவரம்: யானைக்கு மனிதனும், குதிரைக்கு பசுவும், எருமையும், பசு, எருமை, கடா, மான், நாள் இவைகளுக்குப் புலியும், குரங்குக்கு ஆடும், எலிக்குப் பூனையும், பாம்பும், பாம்புக்குக் கீரியும், ஆடும், புனைக்கு நாயும், புலியும் பகையாகும்.

மானுக்குப் பசுவும், ஆட்டுக்குக் குதிரையும், நாய்க்கு மனிதனும் நட்பாகும்.

இவைகள் அல்லாதவை சமமாகும். சகல யோனிகளுக்கும் குரங்கு நட்பு என்பதுமாகும்.

குறிப்பு: பெண், ஆண்களுக்கு யோனி ஒன்றாயினும், நட்பு யோனியில், இருவருக்கும் பெண் யோனியானாலும், ஆணுக்கு ஆண் யோனி ஆனாலும், பெண்ணுக்குப் பெண் யோனியானாலும் உத்தமம். இருவருக்கும் ஆண் யோனியானால் மத்திமம். ஆணுக்குப் பெண் யோனியும், பெண்ணுக்கு ஆண் யோனியாயினும், இருவருக்கும் சத்துரு யோனி யாயினும் பொருந்தாது என்பதாகும்.

7. இராசிப் பொருத்தம்

பெண்ணும் புருஷனும் ஒரு இராசியாயினும், பெண்ணிராசிக்குப் புருஷன் இராசி 6-க்கு மேற்படினும் உத்தமம். பெண்ணிராசிக்குப் புருஷன் இராசி 3-ம் 4-ம் இராசி ஆகில் மத்திமம். 2-ம், 5-ம், 6-ம் இராசியாகில் அதமம்.

8. இராசி அதிபதிப் பொருத்தம்

சூரியனுக்குக் குருவும், சந்திரனுக்குக் குருவும் புதனும், செவ்வாய்க்குப் புதனுஞ் சுக்கிரனும் நட்பு மற்றவர்கள் சத்துரு. புதனுக்குச் சூரியனும், குருவுக்குச் செவ்வாயும், சுக்கிரனுக்குச் சூரியனும் சந்திரனும், சனிக்குச் சூரியனும் சந்திரனும் செவ்வாயும் சத்துரு, மற்றவர் மித்துரு ஸ்திரீ ராசி அதிபதியும் புருஷ ராசி அதிபதியும் மித்துருவானால் பொருந்தும், சத்துருவானால் பொருந்தாது.

9. வசியப் பொருத்தம்

மேஷத்திற்குச் சிங்கமும் விருச்சிகமும், இடபத்திற்குக் கடகமும் துலாமும், மிதுனத்திற்குக் கன்னியும் கடகத்திற்கு விருச்சிகமும் தனுவும், சிங்கத்திற்குத் துலாமும், கன்னிக்கு மிதுனமும் மீனமும், துலாத்திற்கு மகரமும், விருச்சிகத்திற்குக் கடகமும் கன்னியும், தனுவுக்கு மீனமும், மகரத்திற்கு மேடமும், கும்பமும், கும்பத்திற்கு மேடமும், மீனத்திற்கு மகரமும் வசியமாம், இப்படிப் பார்த்து ஸ்திரீயுடைய ராசிக்கு வசியமான ராசி புருஷ ராசியாகில் உத்தமம், புருஷனுடைய இராசிக்கு வசியமான ராசி ஸ்திரீ ராசியாயின் மத்திமம் இருவருடைய இராசியும் இவ்வாறு வாராதிருந்தால் வசியம் பொருந்தாது.

10. விருட்சப் பொருத்தம்

புருஷ நட்சத்திரம் வயிர மரமும் பெண்ணின் நாள் பால் மரமுமாகில் பிள்ளைப் பேறுண்டாம். பெண் வயிர மரமும். புருஷன் பால் மரமுமாகில் மலடாவர். இருவரும் வயிரமாகில் மலடாவர். இருவரும் வயிரமாகில் பிள்ளைச் சேதமும். அர்த்த சேதமுமாம். இருவர் நட்சத்திரமும் பால் மரமாகில் அதிகப் பிள்ளைகளும் பாக்கியமும் உண்டாம்.

11. ஆயுட்பொருத்தம்

பெண்ணினுடைய நட்சத்திர முதல் புருஷனுடைய நட்சத்திரம் வரையும், எண்ணின் தொகையையும், புருஷனுடைய நட்சத்திர முதல் பெண்ணினுடைய நட்சத்திரம் வரையும் எண்ணினத் தொகையையும், தனித்தனியே ஏழிற் பெருக்கி 27 க்கீந்த சே‘ம் பெண்ணினுடைய நட்சத்திரத் தொகை குறையில் ஆயுட்பொருத்தம் பொருந்தும். புருஷனுடைய நட்சத்திரத் தொகை குறையில் பொருந்தாது.

12. பஞ்ச பட்சிப் பொருத்தம்

மயிலுக்கும் கோழிக்கும் வல்லூறும் ஆந்தையும். காகத்திற்கு ஆந்தையும். வல்லூறுக்கு ஆந்தையும், மயிலும், கோழியும் பகை. இதில் சொல்லப் படாதவை எல்லாம் உறவு. பெண்ணுக்கும் புருஷனுக்கும் ஒரே பட்ஷியானாலும், பகை இல்லா திருந்தாலும் பட்ஷி பொருந்தும். பகையானால் பொருந்தாது.

13. பஞ்ச பூதப் பொருத்தம்

அசுவினி முதல் 5 - நாள் பிருதுவி - திருவாதிரை முதல் 6 - நாள் அப்பு - உத்திரம் முதல் 6 - நாள் தேயு - கேட்டை முதல் 5 - நாள் வாயு - அவிட்டம் முதல் 5 - நாள் ஆகாய என்றறியப்படும். ஸ்திரீயும், புருஷனும் ஒரே பூதமாயின் உத்தமம். அப்புவும் தேயுவுமாயின் அதமம், மற்றப் பூதங்களாயிருப்பின் மத்திமம்.

14. வேதைப் பொருத்தம்

அசுவினி, மகம், மூலம் தம்மில் பொருந்தாது. பரணிக்குக் கேட்டை, கார்த்திகைக்கு அனுஷம், ரோகணிக்கு விசாகம், மிருகசீரிடத்திற்குச் சோதி, திருவாதிரைக்கு அவிட்டம். புநர்பூசத்திற்குத் திருவோணம், பூசத்திற்கு உத்திராடம், ஆயிலியத்திற்கு பூராடம், பூரத்திற்கு ரேவதி, உத்திரத்திற்கு உத்திரட்டாதி, அஸ்தத்திற்குப் பூரட்டாதி, சித்திரைக்குச் சதயம் பகை. ஆதலால் பொருந்தாது. மேற் சொன்ன நாட்கள் ஒழிய மற்றுள்ள நாட்கள் எல்லாம் பொருந்தும்.

15. இரஜ்ஜீப் பொருத்தம்

மிரு – சித் -அவி இந்த 3 - ம், சிரோ ரஜ்ஜீ, ரோ - திருவோ - அஸ் - சுவா - திருவா - சத இந்த 6 - ம் கண்ட ரஜ்ஜீ, கார் - புன - உத்திரம் - விசா - உத்ரா - பூரட் இந்த 6 - நாபி ரஜ்ஜீ, பா - பூசம் - பூரம், அனு - பூரா - உத்திரட் - இந்த 6 - ம் தொடை ரஜ்ஜீ, அசு - ஆயி - மக - கேட் - மூல - ரே இந்த 6 - ம் பாத ரஜ்ஜீ, வதூவரர்களுடைய நட்சத்திரங்கள் ஒரு ரஜ்ஜீவிலிருந்தால் பொருந்தாவாம்.

16. கோத்திரப் பொருத்தம்

அச்சுவினி முதல் 4 - ம் மரீசியும். மிருகசீரிடம் முதல் 4 - ம் அத்திரியும், ஆயிலியம் முதல் 4 - ம் வசிட்டரும், அத்தம் முதல் 4-ம் அங்கிராவும், அனுஷம் முதல் 4-ம் புலத்தியரும், உத்திராடம் முதல் 3 - ம் புலகரும், சதயம் முதல் 4 - ம் கிருதுவுமாம். ஸ்திரீ புருஷர்கள் ஒரு கோத்திர நட்சத்திரங்களாயின் கோத்திரம் பொருந்தாது. மாறி வரின் பொருந்தும்.


17. வருணப் பொருத்தம்

கடக, விருச்சிக, மீனம் - பிராமண வருணம். மேட, சிங்க, தனுசு - சத்திரிய வருணம், இடபம், கன்னி, மகரம் - வைசிய வருணம். மிதுனம், துலாம், கும்பம் - சூத்திர வருணம். ஸ்திரீ ராசி தாழ்ந்த வருணம், புரு‘ராசி உயர்ந்த வருணமுமாயினும், 2-ம் ஒரு வருணமாயினும் வருணம் பொருந்தும். மாறி வரின் பொருந்தாது.

18. நாடிப் பொருத்தம்

அசு - திருவா - புன - உத்தரம் அஸ் - கேட் - மூல - சத - பூரட். இந்த 9 - நட்சத்திரங்கள் இடை நாடி, பா - மிரு - பூச - பூரம் - சித் - அனு - பூரா - அவிட் - உத்திரட் இந்த 9 நட்சத்திரங்களும் சுழிமுனை நாடி, கார் - ரோ - ஆயி - மக - சுவா - விசா - உத்திரா - திருவோ - ரேவ - இந்த 9-ம் பிங்கலை நாடி, ஸ்திரீ நட்சத்திரமும், புருஷ நட்சத்திரமும், ஒரு நாடியில் இருந்தால் விவாகஞ் செய்யக் கூடாது. மாறியிருந்தால் உத்தமம். பிராமணருக்கு அதிபதிப் பொருத்தமும், சத்திரியருக்குக் கணப் பொருத்தமும், வைசியருக்கு ஸ்தீரி தீர;க்கப் பொருத்தமும், சூத்திரர், சங்கரசாதி முதலானவர்களுக்கு யோனிப் பொருத்தமும், பிரதானமாக இருத்தல் வேண்டும்.

(கற்பித்தல் தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/astrology/serial/p14.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License