இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஜோதிடம்
தொடர்

ஜோதிடம் கற்றுக் கொள்ளுங்கள்!

முனைவர் தி. கல்பனாதேவி


15. சடங்குகள்


அனாசாரங்கள்

ஆசாரம் - ஒழுக்கம். தமிழிலக்கியத்தில் சோதிடச் செய்தி குறிப்பிடப் பெற்றுள்ளது. ஆசாரக் கோவை எனும் நுால் இல்லறம், துறவறம் இருப்போர் கடைப்பிடிக்கும் ஒழுக்கங்கள் என்று சிலவற்றைக் குறிப்பிடுகிறது. அவை;

* ஆடையின்றி ஸ்நானம் செய்தலும் இரண்டன்றி ஓராடை மாத்திரம் உடுத்துக் கொண்டு உண்ணுதலும், ஒருவர் தாம் உடுத்த ஆடையைத் தோய்த்துத் தண்ணீரிலே பிழிதலும், ஓராடை உடுத்துக் கொண்டு சபையில் போதல் கூடாது.

* தலையில் தேய்த்த எண்ணெய்யை வழித்து மற்ற அவயவங்களில் பூசுதலாகாது.

* மற்றவர்கள் உடுத்த அழுக்கு வஸ்திரத்தைத் தீண்டுதல் கூடாது. பிறருடைய செருப்பைக் காலில் அணிந்து கொள்ளுதல் கூடாது.

* தண்ணீரிலே தம்முடைய நிழலைப் பார்த்தலும், சும்மா உட்கார்ந்து கொண்டு தரையைக் கீறுதலும், இரவின் ஒரு மரத்தின் அருகிலே போதலும், நீரைத் தொடாமல் எண்ணைய் தேய்த்துக் கொள்ளுதலும், எண்ணைய் தேய்த்துக் கொண்ட பின் உடம்பின் மேல் நீரைத் தெளித்துக் கொள்ளாமல் புலையனைப் பார்த்தலும் ஆகாது.

* ஐங்குரவர் சொல்லிய சொல்லைக் கடந்து ஒரு காரியத்தையும் செய்யலாகாது.

* முடிவு பெறாத குறை விரதம் உடையவர்கள், அவ்விரதத்தை மறத்தல் கூடாது.

* பூரணையில் பல் தேய்த்தலும் ஆகாது.

* மரங்களை வெட்டுதலும் ஆகாது.

* ஒருவர் உட்கார்ந்து இருக்கின்ற இடத்திற்கும், விளக்கிற்கும் நடுவிலே போதல் ஆகாது.

* சுவரின் மேல் எச்சிலை உமிழ்தல் கூடாது.

* பிறர் உடுத்துக் கிழிந்த அழுக்கு வஸ்திரத்தைக் கீழே போட்டுக் கொள்வதும், மேலே போர்த்துக் கொள்வதும் ஆகாது.

* எப்படிப்பட்ட சமயத்திலும் தாம் உடுத்திருக்கின்ற வஸ்திரத்தின் காற்று மற்றவர் மேல் படும்படி செல்லுதல் கூடாது.

* பலர் நடுவில், தாம் உடுத்தி இருக்கின்ற வஸ்திரத்தை உதறுதல் கூடாது.

* காலொடு காலைத் தேய்த்தல் ஆகாது.

* மனைவி பூப்பு நாள் மூன்றிலும் அவளை நோக்குதல் ஆகாது.

* நடுப்பகலிலும், நள்ளிரவிலும், மாலையிலும், திருவாதிரையிலும், திருவோணத்திலும், அமாவாசை, பௌர்ணமியிலும், அஷ்டமியிலும், பிறந்த நாளிலும், கலவி செய்தல் ஆகாது.

* அளக்கும் படியை மணை மேல் வைத்தலும், புது வஸ்திரத்தைத் தலைக்கடையில் பிரித்தலும், தலைக்கடையில் கட்டிலிட்டுப் படுத்தலும் கூடாது.

* தம்மை அறியாதார் எதிரில் நிற்றல் கூடாது.

* திருமணப் பந்தலின் கீழ் துடைப்பம், செத்தை, பூவின் புறவிதழ், பழைய கரிப்பானை, கிழிந்த கட்டில் ஆகிய இவைகளைப் பரப்பலாகாது.


ஆனந்த சதுர்த்தசி

புரட்டாசியில் வரும் சுக்கில பட்சத்துச் சதுர்த்தசி நாள். (வாழ்வி, களஞ் - 2. ப.777.), திருமாலை வழிபடும் நோன்பு. (முன்.)

ஆண்டு நிறைவு

ஆதித்திய கெதியால் ஓராண்டு சென்ற, சென்ம மாதஞ் சென்ம நட்சத்திரத்திலே ஆதல், பஞ்சாங்க யோகம் நன்றாகப் பொருந்தினை நாளிலே யாதல் சுத்த சலத்தினாலே பிள்ளையை முழுக்காட்டிப் பிராமணருக்குப் போசனங் கொடுத்து விதான நூல் சொல்லுகிற படியே சுபக்கோள் உதயமாக ஆண்டு நிறைவிற் சிற்றாடை உடுத்திப் பொன்னரை ஞாணுந் தரிப்பது. (விதானமாலை.)

ஆயுசியவோமம்

நீண்ட ஆயுள் வேண்டி நடத்தப் பெறும் சிறப்பு வேள்வி.

இருது சங்கமனம்

இருது காலத்தில் முதன் முதலாக நாயகன் நாயகியைக் கூடுதற்குச் செய்யும் செய்கை பூண் இருது சங்கமனம் கருப்பாதானம் ….. வகுத்த பதினாறும் (திருவானைக்.பு.கோச்செங்.14.)

இருது சாந்தி

முதல் பூப்படைந்து பெண்ணுக்குத் தீங்கு நேராத படி செய்யும் பரிகாரச் செயல். (முன்)

இருது நானம் (இருது ஸ்நானம்)

முதற் பூப்பில் நடத்தும் நீராட்டுச் சடங்கு. (செ.ப.அக.)

நிமித்ததானம்

தென் புலத்தார்க்குச் செய்யுஞ் சடங்கின் ஒன்று.

முதுநீர்ச்சடங்கு

முதுகு நீர்ச்சடங்கு, சீமந்தச் சடங்கு என்பர். நிறை மாத கர்ப்பிணிக்கு ஒன்பதாம் மாதம் நிகழ்த்தும் ஓர் சடங்கு.

இடச்சுத்தம்

இன்ன இன்ன காரியங்களுக்கு இன்ன இன்ன இடம் சுத்தம் என்பது.

விபரம்:

குடி புகப் பன்னிரண்டு, முடி சூட்டப் பதினொன்று, அன்னம் ஊட்டப் பத்து மயிர் கழிக்க ஒன்பது, உபநயனத்திற்கு எட்டு, திருமணத்திற்கு ஏழு, கோடி உடுக்க ஆறு, யாத்திரை செய்ய ஐந்து, வித்தியாரம்பத்திற்கு நாலு, பொன் பூண இரண்டு ஆகிய இடங்களும் நிசேகாதிகளுக்கு இலக்கினமும் சுத்தமாய் இருப்பது என்பதாம்.

குடி புக – 12 ம், முடி புனைய 11 ம், அன்னப் பிராசனத்திற்கு 10ம், மயிர் கழிக்க 9 ம், உபநயனத்திற்கு 8ம், விவாகத்திற்கு 7 ம், கோடியுடுக்க 9ம், யாத்திரைக்கு 5 ம், வித்யாரம்பத்திற்கு 4ம், பொன் பூண 2ம், நிஷேகா திகளுக்கு இலக்னமும், சுத்தமாக இருத்தல் வேண்டும்.

இன்ன இன்ன. காரியங்களுக்கு இன்ன இன்ன இடம் சுத்தம் என்பது.

விபரம்:

குடிபுகப் பன்னிரண்டு, முடி சூட்டப் பதினொன்று, அன்னம் ஊட்டப் பத்து மயிர் கழிக்க ஒன்பது, உப நயனத்திற்கு எட்டு திருமணத்திற்கு ஏழு கோடி உடுக்க ஆறு, யாத்திரை செய்ய ஐந்து, வித்தியாரம்பத்திற்கு நாலு, பொன் பூண இரண்டு ஆகிய இடங்களும் நிசேகாதிகளுக்கு இலக்கினமும் சுத்தமாய் இருப்பது என்பதாம்.


இறப்பு, பிறப்புகளின் தீட்டு

* பல் முளைக்கும் போதும் முளைத்த பின்னும் சௌளம் செய்த பின்னும், குழந்தை இறக்கின் பத்து நாள் தீட்டு உண்டு.

* தனக்குப் பிற இடத்தில் பிள்ளை பிறந்தால் மூன்று நாள் தீட்டு உண்டு.

* இறந்த குருவுக்குச் சிஷ்யன் கருமஞ் செய்தால் பத்து நாள் தீட்டு உண்டு.

* கர்ப்பத்தில் மூன்று மாதம் முதல் ஏழு மாதத்திற்கு உள்ளாகச் சிசு மரித்தால், எத்தனை மாதத்தில் மரித்ததோ, அத்தனை நாள் தீட்டு உண்டு.

* ருதுவான ஸ்திரீ அது நின்றவுடன் ஸ்நானம் செய்யின் சுத்தப்படுவாள்.

* இரண்டு வயதிற்கு முன் சிசு மரிக்கின் அதை ஊர்க்கு வெளியில் புதைக்க வேண்டியது. சஞ்சயனம் கிடையாது. அதற்குத் தான தர்ப்பணாதிகள் கிடையாது. பங்காளிகள் மூன்று நாள் தீட்டு இருக்க வேண்டியது.

* தன்னுடன் ஓதினவன் இறந்தால் ஒரு நாள் தீட்டு. ஒரு பெண்ணை நிச்சயம் செய்த பின் அவள் இறந்தால் யாருக்காக நிச்சயப்படுத்தப் பட்டாளோ, அவரும் அவர்களின் ஞாதியரும் மூன்று நாள் தீட்டு இருக்க வேண்டியது.

* தீட்டு உள்ளோர் உப்பு, மாமிசம், புணர்ச்சி மூன்றையும் நீக்க வேண்டும்.

* தேசாந்தரத்தில் இருக்கையில் ஞாதிகளின் இறப்பைப் பத்து நாட்களுக்குப் பிறகு கேட்டால் அப்பத்து நாட்களுடன் தீட்டு நீங்கும். சபிண்டர் பத்து நாளைக்குப் பின் கேட்டால் மூன்று நாள் தீட்டு. ஒரு வருடத்திற்குப் பின் கேட்டால் ஸ்நானத்தோடே போகும். பிறந்த செய்தியைப் பத்து நாளைக்கு மேலேக் கேட்டால் தீட்டில்லை. சபிண்டகன் ஞாதிகளின் இறப்பை, பிறப்பைப் பத்து நாளைக்குள் கேட்டால் கட்டின உடையுடன் ஸ்நானஞ் செய்தால் தொட யோக்கியனாகிறான்.

* பத்து நாள் தீட்டுள்ள இறப்பு பிறப்புகளில் வேறொரு தீட்டு நேரின் முன்னைய பத்து நாளோடு இதுவும் ஒழியும். அக்கினிஹோத்திரம் செய்கிறவனாயின் ஆசாரியன் இறந்தாலும் தன் பங்காளி இறந்தாலும் வேதம் ஓதின பிராமணன் தன் வீட்டில் வந்து இறந்தாலும், அம்மான் இறந்து போனாலும் மூன்று நாள் தீட்டு உண்டு.

* ஆசாரியன் மனைவி இறந்தால் ஒரு நாள் தீட்டு உண்டு.

* மாணாக்கன், அம்மான் குமரன் முதலிய சுற்றத்தவர்கள் இறந்து போனால் 10 நாழிகைக்குத் தீட்டு உண்டு.

* இராசா பகலில் இறந்தால் பொழுது போகிற வரையிலும், இரவிலானால் நட்சத்திரம் மறைகிற வரையிலும் தீட்டு உண்டு.

- இவ்வாறு கூறிய தீட்டுகளில் பிராமணர்களுக்குப் பத்து நாட்கள் தீட்டும், க்ஷத்திரியர்க்குப் பன்னிரண்டு நாட்கள் தீட்டும், வைசியனுக்குப் பதின்மூன்று நாட்கள் தீட்டும், சூத்திரனுக்கு முப்பது நாட்களும் தீட்டுண்டு. பறையன், தூர ஸ்திரி, பதிதன் பிரசவித்தவள், பிணம், பிணத்தைத் தொட்டவன், இவர்களைத் தெரியாமல் தொட்டவன் ஸ்நானஞ் செய்தால் பரிசுத்தனாவான்.

* நித்ய கர்மங்களை விட்டவர்கள். சங்கரசாதியாரில் பிறந்தவர்கள், வேதத்தைத் தூஷித்துச் சாப்பிட் டாவது, சந்நியாசி வேஷம் பூண்டவர்கள் விஷத்தைச் சாப்பிட்டாவது, கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்டாவது இறந்தவர்கள், விபசாரிகள், கருப்பத்தை அழிக்கின்றவர்கள், கணவனுக்குத் துரோகம் செய்கிறவர்கள், மத்யபானஞ் செய்கிறவர்கள் இவர்களுக்குத் தர்ப்பணஞ் செய்ய வேண்டியது இல்லை.

* அரசன் திக்குப்பாலகர் தன்மையை அடைந்து இருப்பதால் அவனுக்குத் தீட்டில்லை.

* ஒரு கிராமத்தில் பிணங்கிடக்கின் அது தகனம் ஆகும் வரையில், கிராமத்தார் சோறும், நீரும், தாம்பூலமும் உண்ணலாகாது.

* ஆசௌசம் உடையோர் தேவதாராதனம், ஓமம் முதலிய செய்தலாகாது. ஆசௌசம் உடையோர் வீட்டில் அது நீங்கும் வரை எவரும் உண்ணலாகாது.

* ஒருவனுக்குப் பெண் பிறந்தால் அவன் தாயத்தாருக்கு ஆசௌசம் இல்லை. தாய்க்குப் பத்து நாட்கள் ஆசௌசம் உண்டு.

* மணக்கோலக் காலத்திலும், யாக காலத்திலும் உற்சவத்திற்குக் கங்கணம் பூண்ட காலத்திலும் ஆசௌசம் நேர்ந்தால் அத்தொழில் பூண்டானுக்கு ஆசௌசம் கிடையாது.

* பந்துக்களின் பிணத்தைத் தூக்கினால் மூன்று நாள் தீட்டு உண்டு.

* பிணம் தூக்குகிறவன் தீட்டு உள்ளான் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டு இருந்தால் அவனுக்குப் பத்து நாள் தீட்டு உண்டு.

* பிணத்தைத் தொடர்ந்தவன் கட்டின வஸ்திரத்துடன் ஸ்நானஞ் செய்தால் தீட்டு இல்லை.

* சிசு சூதகம் - கருப்பந் தரித்து ஆறு மாதத்திற்கு உட்பட்டு எந்த மாதத்திலாயினும், அந்தக் கருப்பம் கரைந்து விழுந்தால், விழுந்த மாதம் ஒன்றாயின் ஒரு நாளும், இரண்டாயின் இரண்டு நாளும் மூன்றாயின் மூன்று நாளும், முறையே நாலு, ஐந்து, ஆறு மாதங்களாயின் அத்தனைக் கணக்குள்ள நாட்கள் மாதாவிற்கு மாத்திரம் ஆசூசம் உண்டு. பிதாவிற்கு இல்லை. கரு அழியாமல் பிறந்து மூன்று வயதிற்குள் மாண்டால் மாண்ட அக்குழந்தையைக் குறித்துப் பாற்சோறும், தயிர்ச் சோறும் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். மூன்று வயதிற்கு மேல் ஐந்து வயதிற்குள் இறந்தால் மேற்சொன்னபடி பாலகர்களுக்கு அன்னம் அளித்தல் வேண்டும். பிறந்து ஒரு மாதத்திற்குள் மாய்ந்தால் பால் பாயசாதிகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும். (மநு.)


இறுதி

சாவு, முடிவு, மரணம்.

இறுதிச்சடங்கு

சாவைத் தொடர்ந்து செய்யும் கடன்கள்.

இறுதி நாள்

1.இறக்கும் காலம். 2. யுகாந்த காலம்.

திருமாங்கலி

திங்கள், புதன், வியாழம், வௌ்ளி வாரங்களும், பிரதமை, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, சதுர்த்தசி, பூரணை, அமாவாசியை ஒழிந்த திதிகளும், அச்சுவினி, ரோகிணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், மகம், உத்திரத்திரயம், அத்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், அவிட்டம், சதயம், ரேவதி ஆகிய நட்சத்திரங்களும், விருஷபம், மிதுனம், கர்க்கடகம், கன்னி, துலாம், தனுசு, மீனம் இராசிகளும், எட்டாமிடம் சுத்தமுமாக ஸ்திரீ புருஷர்களுக்கு அநுகூலமான நட்சத்திரங்களிலே திருமங்கலியத் திற்குப் பொன் உருக்க நன்று.

தொட்டிலேற்றல்

பிள்ளை பிறந்த 10 ஆம் நாள், 12 ஆம் நாள், 14 ஆம் நாள், 32 ஆம் நாளாதல். சுபக்கிரகம் உதயமாகப் பஞ்சாங்க யோகம் நன்றாக ஊர்த்துவ முகராசி நட்சத்திரங்களிலே பிள்ளையைத் தொட்டில் ஏற்ற வேண்டும்.

நாமகரணம்

பிராமணருக்குப் பிள்ளை பிறந்த 12 ஆம் நாளும், சத்திரியருக்கு 16 ஆம் நாளும், வைசியருக்கு 21 ஆம் நாளும், சூத்திரருக்கு 31 ஆம் நாளும் நாமகரணம் செய்ய வேண்டும். இந்த நாட்கள் கழிந்தால் சுப தினங்களிலே ஸ்திரி ராசிகள் உதயமாக லக்கினம் 5 ஆம் இடம், 8 ஆம் இடம் சுத்தமாகப் பூர்வான்னத்திலே நாமகரணஞ் செய்ய வேண்டும்.

பாலூட்டல்

பிள்ளை பிறந்த 31 ஆம் நாள் சந்திர பகவானையும், பூமி தேவியையும், பூசித்து சுபக்கிரக முதயமாகப் பிள்ளைக்குச் சங்கினாற் பாலூட்டல் வேண்டும்.

புங்கசவனம்

குழந்தை பிறந்த ஐந்தாம் மாதத்தில் செய்யும் ஓர் சடங்கு. ஐந்தாம் மாதச் சடங்கு, பூ முடித்தல்.

புஞ்சவனம்

இதனை பும்சவனம் என்பர். கருப்பம் கொண்ட மூன்றாம் திங்களில் செய்யும் ஓர் (கருமம்) சடங்கு. மூன்றாம் மாதக்கருப்பம்.

புது வஸ்திரமுடுத்தல்

திங்கள், புதன், வியாழன், வௌ;ளி வாரங்களும், அசுவினி, ரோகிணி, புனர்பூசம், பூசம், உத்தரம், அத்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், உத்திராடம், உத்திரட்டாதி, ரேவதிஆகிய இந்நட்சத்திரங்களும், சதுர்த்தி, அஷ்டமி, நவமி, சதுர்த்தசி, அமாவாசியை ஒழிந்த திதிகளும், விருஷபம், மிதுனம், கர்க்கடகம், கன்னி, துலாம், மகரம், கும்ப ராசிகளும் ஆறாமிடஞ் சுத்தமாகக் கோடி வஸ்திரம் உடுக்க உத்தமம்.

பும்சவனம்

1. இது கர்ப்பிணிகள் ஆண் சிசு பெறும் படி செய்யுங் கிரியை. கர்ப்பம் வியக்தமாவதற்கு முன் முதல் மாசத்தில் பூசம் நட்சத்திரத்தில் பொன், வௌ்ளி, இரும்பு இவை முதலியவற்றால் சிறு புருஷ உருச்செய்து அக்னியிற் சிவக்கக் காய்ச்சி நான்கு பலம் பாலில் தோய்த்து அப்பாலைக் கர்ப்பிணிக்கு அருத்துவது. வெளுத்த தண்டோடு கூடிய நாயுருவி வேர், ஜீவகம், ரிஷபகம், முள் ஐவனம் இவைகளை அரைத்துத் தண்ணீரிற் கலக்கி அருந்தச் செய்யுங் கிரியை.

2. ஒரு விரதம். மார்கழி மாத சுக்ல பட்ச பிரதமையில் அநுட்டிப்பது.

பூரி கொடுத்தல்

சிராத்தச் சடங்கின் ஒன்று.

பூரி போசனம்

சிராத்தத்தின் பிற் கொடுக்கும் போசனப் பொருள்.

முதுநீர்ச்சடங்கு

முதுகு நீர்ச்சடங்கு, சீமந்தச் சடங்கு என்பர். நிறை மாத கர்ப்பிணிக்கு ஒன்பதாம் மாதம் நிகழ்த்தும் ஓர் சடங்கு.

கிருகப்பிரவேசம்

ஆனி, ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி, பங்குனி மாதங்களும் ஞாயிறு, செவ்வாய், வியாழமும் அஸ்வனி, மிருகசீரிடம், புனர்பூசம் அஸ்தம், சித்திரை, சுவாதி, மூன்று உத்திரங்கள் அனுஷம், திருவோணந் தவிர மற்ற நட்சத்திரங்களும், விருச்சிகம், கும்பமும் இருத்தை ஆகாவாம். அஷ்டம சுத்தம் உள்ள லக்கினம் உத்தமம்.

வியாதி கொண்டால் நீங்காத நாள்

பரணி, கார்த்திகை, திருவாதிரை. ஆயிலியம், முப்பூரம், சுவாதி, கேட்டை, அவிட்டம், சதயம் ஆகிய நட்சத்திரங்களும், சதுர்த்தி, சஷ்டி, நவமி, துவாதசிகள் ஆகிய திதிகளும், ஞாயிறு, செவ்வாய், சனி ஆகிய வாரங்களும் கூடின நாட்களில் வியாதி கொண்டால் நீங்காதாம்.


வியாதியஸ்தர் மருந்துண்ணல்

ஞாயிறு, திங்கள், புதன், வியாழன் வார உதயமும், அசுவினி, ரோகிணி, மிருகசீரிடம், புநர்பூசம், உத்திரம், சித்திரை, சுவாதி, அனு‘ம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதியும் ஆகிய நட்சத்திரங்களும், மே‘ம், கர்க்கடகம், கன்னி, துலாம், மகரமும், 3 ம் இடம், 7 ம் இடம், 8 ம் இடம் சுத்தியும் மருந்து உண்ண உத்தமம். வௌ்ளி வார உதய அம்சமும், சனி வாரமும், பூர்வ பட்சமும், இருத்தைகளும், சென்மத் திரயங்களும், சந்திராஷ்டமும் ஆகாது. திருவாதிரை, ஆயில்யம், மூலம், கேட்டை, ஆகிய நட்சத்திரங்களும், சதுர்த்தி, நவமி, சதுர்த்தசி ஆகிய திதிகளும், ஞாயிறு, செவ்வாய், சனி வார உதயமும், புண்ணறுத்தல், சுடுதல், காரமிடுதல், அட்டை விடுதல் முதலானவை செய்ய உத்தமம். சென்மத் திரயங்களும், சந்திராஷ்டமும் விலக்கப்பட்டன. சடுதியான ரோகங்களுக்குக் கால நியமமில்லை. ஞாயிறு, செவ்வாய், புதன், சனி வார உதயங்களும், சதுர்த்தி, அஷ்டமி, நவமி, தசமி, சதுர்த்தசித் திதிகளும், அசுவினி, மிருகசீரிடம், பூசம், அஸ்தம், சித்திரை, அநுஷம், மூலம், திருவோணம், அவிட்டம், சதயம் ஆகிய நட்சத்திரங்களும், மேடம், மிதுனம், சிங்கம், கன்னி, தனுசு, மகரம், மீனம் ஆகிய இராசிகளும், பகற்காலமும் நோய் மாறிக் குறிக்க உத்தமம்.

(கற்பித்தல் தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: https://www.muthukamalam.com:443/astrology/serial/p15.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License