ஒன்றிற்கு மேற்பட்ட கோள்கள் கூடியுள்ள நிலையே யோகம் எனப்படும். அவ்விதம் சேரும் போது, அவற்றின் தன்மை, ஆட்சி, உச்சம், நீசம், பகை முதலான பல்வேறு தன்மைகளின் அடிப்படையில் பலன்கள் தருகின்றன. அவை பல்வேறு பெயர்களுடன் சோதிடத்தின் பல நுால்களிலும் பரவிக் காணப்படுகின்றன. பல்வேறு யோகங்கள் காணப்பெறுகின்றன. பல நூல்களின் தொகுப்பு வழியாக இவற்றை நாம் இங்கு பார்ப்போம்.
அக்நி யோகம்
ஞாயிற்றுக் கிழமையில் துவாதசியும், திங்களில் சஷ்டியும், செவ்வாயில் சப்தமியும், வௌ்ளியில் தசமியும், சனியில் ஏகாதசியும் வருவதாம்.
அக்கினியோகம்
அக்கினிக்குரிய யோகம், தக்க யோகம். அது ஞாயிற்றுக் கிழமையிலே சத்தமி, துவாதசிகளும், திங்களிலே சஷ்டி ஏகாதசிகளும், செவ்வாயிலே பஞ்சமி சப்தமிகளும், புதனிலே துதியை அஷ்டமிகளும், வியாழனிலே சஷ்டி நவமிகளும், வௌ்ளியிலே அஷ்டமி தசமிகளும், சனியிலே நவமி ஏகாதசிகளும் வரும் நாள். அங்கச்சனி, செவ்வாய், சோமன். இது, ஞாயிற்றில் துவாதசியும், திங்களில் சஷ்டியும், செவ்வாயில் சப்தமியும். புதனில் அஷ்டமியும். வியாழனில் நவமியும், வௌ்ளியில் தசமியும், சனியில் ஏகாதசியும் வருவனவாம்.
அங்குசாயதார யோகம்
இது இலக்கினம். சர ராசியாய் 11 இல் குருவும், 12 இல் செவ்வாயும் நிற்க, வௌ்ளி, சனி கேந்திர திரிகோணமேற அமாவாசை அல்லது பௌர்ணமி கூடி இருத்தலுமாம். இலக்கினஞ் சரமாய் குரு திரிகோணம் ஏறி, மற்ற கிரகங்கள் ஆறு, எட்டு, பன்னிரண்டில் நிற்பதுமாம். இலக்கினம் ஸ்திர ராசியாய் குரு பார்க்க, ஒரு பாவக்கிரகம் உச்ச கேந்திரத்தில் நிற்பதுமாம்.
அசுப மாலா யோகம்
எல்லாக் கிரகங்களும் ஆறு, எட்டு, பன்னிரண்டு ஆகிய இடங்களில் நிற்பதாம்.
அசுபயோகம்
சுபம் இல்லாத யோகம். அது சாதகனுடைய இலக்கினத்திற்குப் பனிரண்டாமிடத்திலே சந்திர சூரியர் அல்லாத மற்ற கிரகங்கள் கூடி நிற்கும் நிலை.
அதியோகம்
ஓர் சுப யோகம். இது ஜென்ம லக்கினம், சந்திர லக்கினம் இவைகட்கு ஆறிலாவது, ஏழிலாவது, எட்டிலாவது சுபக்கிரகங்கள் அமைய நிற்பதாகும். சென்ம லக்கினத்துக்காவது, சந்திர லக்கினத்துக்காவது ஆறாம், ஏழாம், எட்டாம் இடங்களிற் சுபக் கிரகம் இருக்கும் நிலை. இது ஞானம், கீர்த்தி, மன்னர் பிரியம் முதலிய சுபக் காரியங்களைக் கொடுக்கும் யோகம்.
அநந்தாதியோகம்
இன்ன கிழமையில் இன்ன நட்சத்திரம் வருவது என்பது விபரம்: ஆனந்தாதி யோகத்தில் விவரம் காண்க.
அநபாயோகம்
சந்திரனுக்குப் பன்னிரண்டாம் இடத்திற் சுபக் கிரகங்கள் நிற்கும் நிலை. அனபா யோகத்தைப் பார்க்க.
அநபாதியோகம்
யோகம் அறியும் இடத்து யாவன் ஒருவன் ஜென்மித்த காலத்துச் சந்திரனுக்கு 12 ஆம் இடத்துச் சுபக்கிரகங்கள் நின்றால் அனபா யோகம் என்றும், 2 ஆம் இடத்துச் சுபக்கிரகங்கள் நின்றால் சுனபா யோகம் என்றும், இவை இரண்டு யோகம் உண்டானால் துருதுரா யோகம் என்றும் பெயராம். இதில் அனபா யோகத்துப் பிறந்தால் ஆயுள், ஆரோக்கியம் மிகவுண்டாம். சுனபா யோகத்தும் இப்படியே. துருதுரா யோகத்துப் பிறந்தால் ஆயுள் ஆரோக்கியமும், ஐஸ்வரியமும், சந்தான விருத்தியும் மிக உண்டாம். சென்ம லக்கினத்துக்கு 7 ஆம் இடத்து நின்ற பூரண சந்திரனுக்கு இரண்டு பாரிசங்களினுஞ் சுபக்கோள் நின்றால் அதியோகம் என்றும் பெயராம். இதில் பிறந்தால் மிகவும் பிரபுத்துவமாம். (விதான மாலை.)
அமிர்தயோகம்
சுப காரியங்களுக்கு உபயோகமான வாரமும் நட்சத்திரமும் கூடிய ஒரு கூட்டம். சுப யோகம். விபரம் அமிர்தாதி யோகம் பார்க்க.
அமிர்தாதி யோகம்
சுபா சுபங்களை ஆறு வகையாக விவரித்துக் கூறுவது.
விபரம்.
ஞாயிறன்று, அசுபதி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயிலியம், பூரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, பூராடம், சதயம், பூரட்டாதி இவை வந்தால் சித்த யோகம் ஆகும். உத்திரம், அஸ்தம், மூலம், உத்திராடம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி, இவை வரின் அமிர்தயோகம் ஆகும். அஸ்தம் வரின் அமிர்த சித்த யோகம் ஆகும். மகம், அனுசம், கேட்டை, அவிட்டம் இவை வரின் மரண யோகம் ஆகும். பரணி வரின் பிரபலாரிஷ்ட யோகம். விசாகன் வரின் உற்பாத யோகமாகும்.
திங்களன்று, அசுபதி, பரணி, மிருகசீரிடம், திருவாதிரை, பூசம், ஆயிலியம், பூரம், உத்திரம், அஸ்தம், அனுசம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி இவை வரின் சித்த யோகம் ஆகும். ரோகிணி, மிருகசீரிடம், புனர்பூசம், சுவாதி, திருவோணம் இவை வரின் அமிர்த யோகம் ஆகும். மிருகசீரிடம் வரின் அமிர்த சித்த யோகமாம். பூராடம் வரின் உற்பாத யோகமாம்.
செவ்வாயன்று, அசுபதி, பரணி, கார்த்திகை, மிருகசீரிடம், புனர்பூசம், முதல் பூரம் வரையில் உள்ளனவும், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுசம், பூராடம், திருவோணம், அவிட்டம், ரேவதி ஆகிய இவை வரின் சித்த யோகமாம். ரோகிணி, உத்திரம், மூலம், உத்திரட்டாதி இவை வரின் அமிர்த யோகமாம். அசுபதி வரின், அமிர்த சித்த யோகமாம். திருவாதிரை, விசாகம், சதயம், பூரட்டாதி இவை வரின் மரண யோகமாம். கேட்டை வரின் உற்பாத யோகமாம். உத்திராடம் வரின் பிரபலாரிஷ்ட யோகமாம்.
புதனன்று, பரணி, ரோகிணி முதல் மகம் வரையில் உள்ளனவும், சித்திரை, சுவாதி, விசாகம், அனுசம், கேட்டை, திருவோணம், சதயம், உத்திரட்டாதியும் ஆகிய இவை வரின் சித்த யோகமாம். கார்த்திகை, பூரம், உத்திரம், அனுசம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி இவை வரின் அமிர்த யோகமாம். அனுசம் வரின் அமிர்த சித்த யோகமாம். அசுபதி, அஸ்தம், மூலம் ஆகிய இவை வரின் மரண யோகமாம். அவிட்டம் வரின் பிரபலாரிஷ்ட யோகமாம். ரேவதி வரின் உற்பாத யோகம்.
வியாழனன்று, பரணி, பூசம், ஆயிலியம், பூரம், அஸ்தம், சித்திரை, விசாகம், அனுசம், மூலம் முதல் அவிட்டம் வரையில் உள்ளனவும், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதியும் ஆகிய இவை வரின் சித்த யோகமாம், அசுபதி, புனர்பூசம், பூசம், மகம், சுவாதி இவை வரின் அமிர்த யோகமாம். கார்த்திகை, மிருகசீரிடம், திருவாதிரை, உத்திரம், சதயம் இவை வரின் மரண யோகமாம். ரோகிணி வரின் உற்பாத யோகமாம். கேட்டை வரின் பிரபலாரிஷ்ட யோகமாம்.
வௌ்ளியன்று, பரணி, கார்த்திகை, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், உத்திரம், சித்திரை முதல் அனுசம் வரையில் உள்ளனவும், உத்திராடம், அவிட்டம் முதல் ரேவதி வரையிலும் உள்ளனவுமாகிய இவை வரின் சித்த யோகமாம். அசுபதி, அஸ்தம், மூலம், ரேவதி, இவை வரின் அமிர்த யோகமாம். ரேவதி வரின் அமிர்த சித்த யோகமாம். கிணி, ஆயிலியம், மகம், கேட்டை. திருவோணம் இவை வரின் மரண யோகமாம். பூசம் வரின் உற்பாத யோகமாம். பூராடம் வரின் பிரபலாரிஷ்ட யோகமாம்.
சனியன்று, அசுபதி, பரணி, ரோகிணி முதல் பூசம் வரையில் உள்ளனவும், பூரம், விசாகம் முதல் அவிட்டம் வரையில் உள்ளனவும், உத்திரட்டாதியும் ஆகிய இவை வரின் சித்த யோகமாம். கார்த்திகை, ரோகிணி வரின் அமிர்த சித்த யோகமாம். ஆயிலியம். அஸ்தம், சித்திரை, பூரட்டாதி, இவை வரின் மரண யோகமாம். உத்திரம் வரின் உற்பாத யோகமாம். ரேவதி வரின் பிரபலாரிஷ்ட யோகமாம்.
அமுத சித்த யோகம்
ஞாயிற்றுக் கிழமையில் அத்தமும், திங்கட் கிழமையில் மிருக சீரமும், செவ்வாய்க் கிழமையில் அச்சுவினியும், புதன் கிழமையில் அனுடமும், வியாழக்கிழமையில் பூசமும், வௌ்ளிக் கிழமையில் இரேவதியும், சனிக்கிழமையில் உரோகிணியும் வருங்காலம்.
அமுத சம்பூதனன், அமுத சித்தயோகம், அமுதயோகம் - ஓர் சுப யோகம். விபரம்: அமுதாதி யோகத்தில் காண்க.
அமுத யோகம்
அமிர்த யோகம். அது ஞாயிற்றுக் கிழமையின் மூலம், திருவோணம், இரேவதி, அத்தம், உரோகிணி, உத்தரம், உத்தராடம், உத்திரட்டாதி ஆன நட்சத்திரங்களிலோ அறுவருங்காலம், திங்கட் கிழமையில் மிருகசிரம், சோதி, உரோகிணி, புநர்பூசம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களிலொன்று வருங்காலம், செவ்வாய்க் கிழமையில் உரோகிணி, மூலம், உத்திரட்டாதி, உத்தரமாகிய நட்சத்திரங்களில் ஒன்று வருங்காலம், புதன் கிழமையில் பூரம், பூராடம், பூரட்டாதி, உத்தராடம், கார்த்திகை, உத்தரமாகிய நட்சத்திரங்களில் ஒன்று வருங்காலம், வியாழக்கிழமையில், புனர்பூசம், சோதி, பூசம், அச்சுவினி, மகமாகிய நட்சத்திரங்களில் ஒன்று வருங் காலம், வௌ்ளிக் கிழமையில் மூலம், அத்தம், இரேவதி, அச்சிவினியாகிய நட்சத்திரங்களில் ஒன்று வரும் காலம், சனிக்கிழமையின் மகம், சோதி, கார்த்திகை, உரோகிணி, சதயமாகிய நட்சத்திரங்களில் ஒன்று வரும் காலம்.
அம்ச யோகம்
பஞ்சக் கிரகங்கள் ஆட்சி உச்சமாகிய இடங்களில் கேந்திரிந்து நிற்பதாம் (பலதீ)
அவமிருத்தி யோகம்
இந்த யோகத்திலே வியாதி கொள்ளின் மரணம் வரும் என்பது பற்றி வந்த பெயர். ஓர் கெட்ட யோகம். இது திருவாதிரை கேட்டை, ஆயிலியம், பரணி, கார்த்திகை முப்பூரம் என்னும் நாட்களுடன் பாவ வாரமும், இருத்தையும் கூடி வருவதாம். இதில் நோய் காணில் தீதாம்.
அவயோகம்
துர்ச்சம்பவம், நாச யோகம், அன்றியும் இலக்கினத்திலும், பன்னிரண்டாம் இடத்திலும் ஏழு கிரகங்கள் கூடி நிற்பதாம்.
அஷ்டாங்கயோகம்
அங்க யோகம் காண்க.
அனபா யோகம்
சந்திரனுக்கு முன்னும், பின்னும் சுபர்கள் நிற்பது.
ஆச்சந்திரார்க்கம்
சூரிய சந்திராளுள்ள மட்டும்.
ஆநந்தாதி யோகம்
ஓர் யோகம். இது இன்ன கிழமையில் இன்ன நட்சத்திரம் வரின் இன்ன யோகம் என்பதும், இதற்கு நன்மை தீமையும், விபரம்;
1. ஞாயிறில் - அசுபதி வரின், ஆனந்த யோகம், தன லாபம், பரணி வரின் கால தண்ட யோகம், விக்கினம்: கார்த்திகை வரின் தர்ம யோகம், காரிய சித்தி: உரோகிணி வரின் பிரசாப தியோகம், சித்திகரம்: மிருகசீரிடம் வரின், சௌமிய யோகம், கனலாபம்: திருவாதிரை வரின் துவாம்சயோகம். விக்கினம்: புனர்பூசம் வரின் துவஜ யோகம், வஸ்து லாபம்: பூசம் வரின் ஸ்ரீவத்ச யோகம், லட்சுமி கரம்: ஆயிலியம் வரின் வச்சிர யோகம். கலகம்: மகம் வரின் முத்க்ர யோகம், காரியக் கெடுதி: பூரம் வரின் …. ஷத்திர யோகம், சௌக்கியம்: உத்திரம் வரின் மித்திர யோகம், பூலாபம்: அஸ்தம் வரின் மானசயோகம், ராசிபூசிதம்: சித்திரை வரின் பத்மயோகம், மித்திர லாபம்: சுவாதி வரின் இலம்பயோகம், போசன லாபம்: விசாகம் வரின் உற்பாத யோகம், துக்கரம்: அனுசம் வரின் மிருத்துயோகம், தீமை உண்டாகும்: கேட்டை வரின், சாரண யோகம், சம்பத்து உண்டாகும்: மூலம் வரின் சித்தயோகம், சகல சித்தி. பூராடம் வரின் சுப யோகம், நன்மை உண்டாகும். உத்திராடம் வரின் அமிர்த யோகம், வஸ்திர லாபம். அபிசித்து வரின் முசல யோகம், அசௌக்கியம். திருவோணம் வரின் தண்டயோகம் கெட்டபலன். அவிட்டம் வரின் மாதங்க யோகம், கஷ்ட பலன்: சதயம் வரின் இராக்கத யோகம், அப சகுனம். பூரட்டாதி வரின் சரயோகம், சீக்கிரச் சித்தி: உத்திரட்டாதி வரின் ஸ்திரயோகம், தீர்க்க சித்தி. ரேவதி வரின் வர்த்தமான யோகம், லாபகரம் இவை உண்டு என்பதாம்.
2.திங்களில் மிருகசீரிடம் வரின் ஆனந்த யோகம். தன லாபம்: திருவாதிரை வரின் கால தண்ட யோகம், விக்கினம்: புனர்பூசம் வரின் தர்மயோகம், காரிய சித்திப் பூசம் வரின் பிரசாபதி யோகம், சித்திகரம். ஆயிலியம் வரின் சௌமிய யோகம். தன லாபம், மகம் வரின் துவாம்ச யோகம், விக்கினம். பூரம் வரின் துவஜ யோகம், வஸ்து லாபம். உத்திரம் வரின் ஸ்ரீவத்ச யோகம், லட்சுமிகரம். அஸ்தம் வரின் வச்சிர யோகம், கலகம். சித்திரை வரின் முத்கர யோகம். காரியக் கெடுதி. சுவாதி வரின் சத்திர யோகம், சௌக்கியம். விசாகம் வரின் மித்திர யோகம், பூலாபம், அனுசம் வரின், மானச யோகம், ராசபூசிதம், கேட்டை வரின் பத்மயோகம், மித்திர லாபம். மூலம் வரின் இலம்ப யோகம், போசன லாபம். பூராடம் வரின் உற்பாத யோகம், துக்ககரம். உத்திராடம் வரின் மிருத்துயோகம், அசுபகரம், அபசித்து வரின் சாரண யோகம், சம்பத்து உண்டாம். திருவோணம் வரின், சித்த யோகம் சகல சித்தி, அவிட்டம் வரின் சுப யோகம், நன்மை உண்டாம். சதையம் வரின் அமிர்தயோகம். வஸ்திர லாபம், பூரட்டாதி வரின் முசல யோகம், அசௌக்கியம், உத்திரட்டாதி வரின், தண்ட யோகம், அசுபகரம். ரேவதி வரின் மாதங்க யோகம், கஷ்டம். அசுபதி வரின் இராக்கத யோகம், அப சகுனம். பரணி வரின் சர யோகம். சீக்கிரச் சித்தி கார்த்திகை வரின் ஸ்திர யோகம். தீர்க்க சித்தி. ரோகிணி வரின் வர்த்தமான யோகம், இலாபகரம்
3. செவ்வாயில் - ஆயிலியம் வரின் ஆனந்த யோகம். தனலாபம், மகம் வரின் கால தண்ட யோகம், விக்கினம். பூரம் வரின் தர்ம யோகம், காரிய சித்தி, உத்திரம் வரின் பிரசாபதி யோகம், சித்திகரம், அஸ்தம் வரின் சௌமிய யோகம், தன லாபம் சித்திரை வரின் துவாம்ச யோகம் விக்கினம். வாதி வரின் துவசயோகம், வஸ்து லாபம், விசாகம் வரின் ஸ்ரீ வத்சயோகம், லட்சுமீகரம், அனுசம் வரின் வச்சிர யோகம், கலகம். கேட்டை வரின் முத்கர யோகம், காரியக் கெடுதி, மூலம் வரின் சத்திரயோகம், சௌக்கியம், பூராடம் வரின் மித்திரயோகம், பூ லாபம், உத்திராடம் வரின் மானச யோகம், ராசபூசிதம், அபிசித்து வரின் பத்மயோகம், மித்திர லாபம். திருவோணம் வரின் இலம்ப யோகம், போசன லாபம், அவிட்டம் வரின் உற்பாத யோகம், துக்கரம்: சதயம் வரின் மிருத்து யோகம் அசுபகரம். பூரட்டாதி வரின் சாரண யோகம், சம்பத்து: உத்திரட்டாதி வரின் சித்த யோகம், சகல சித்தி. ரேவதி வரின் சுப யோகம், சுப்பிரதம். அசுபதி வரின் அமிர்தயோகம், வஸ்திர லாபம்: பரணி வரின், முசல யோகம், அசௌக்கியம்: கார்த்திகை வரின் தண்ட யோகம். அசுப கர ரோகிணி வரின் மாதங்க யோகட கஷ்டம். மிருகசீரிடம் வரின் ராக்கதயோகம், அப சகுனம். திருவாதிரை வரின் சரயோகம், சீக்கர சித்தி. புனர்பூசம் வரின் ஸ்திர யோகம் தீர்க்க சித்தி. பூசம் வரின் வர்த்தமான யோகம், இலாபகரம்
4. புதனில் அஸ்தம் வரின் ஆனந்த யோகம், தன லாபம். சித்திரை வரின் கால தண்ட யோகம், விக்கினம். சுவாதி வரின் தர்ம யோகம் காரிய சித்தி, விசாகம் வரின் பிரசாபதி யோகம், சித்திகரம். அனுஷம் வரின் சௌமிய யோகம் தன லாபம். கேட்டை வரின் துவாம்ச யோகம் விக்கினம் மூலம் வரின் துவச யோகம், வஸ்து லாபம். பூராடம் வரின் ஸ்ரீவத்ச யோகம், லட்சுமிகரம், உத்திரடம் வரின் வச்சிர யோகம், கலகம். அபிசித்து வரின் முத்கர யோகம், காரியக் கெடுதி. திருவோணம் வரின் சத்திர யோகம், சௌக்கியம். அவிட்டம் வரின் மித்திர யோகம், பூ லாபம். சதயம் வரின் மானச யோகம் ராச பூசிதம். பூரட்டாதி வரின் பத்ம யோகம், மித்திர லாபம். உத்திராட்டதி வரின் இலம்ப யோகம், போசன லாபம். ரேவதி வரின் உற்பாத யோகம், துக்ககரம் அசுபதி வரின் மிருத்து யோகம், அசுபகரம். பரணி வரின் சாரண யோகம், சம்பத்து. கார்த்திகை வரின் சித்த யோகம், சகல சித்தி. ரோகிணி வரின் சுபயோகம், சுபப்பிரதம். மிருகசீரிடம் வரின் அமிர்த யோகம், வஸ்திர லாபம். திருவாதிரை வரின் முசல யோகம், அசௌக்கியம். புனர்பூசம் வரின் தண்ட யோகம், அசுபம். பூசம் வரின் மாதங்க யோகம், கஷ்டம். ஆயில்யம் வரின் ராக்கத யோகம், அப சகுனம். மகம் வரின் சர யோகம், சிக்கிர சித்தி. பூரம் வரின் ஸ்திர யோகம் தீர்க்க சித்தி. உத்திரம் வரின் வர்த்தமான யோகம், இலாபகரம்.
5. வியாழனில் அனுசம் வரின் ஆனந்த யோகம். தன லாபம்: கேட்டை வரின் கால தண்ட யோகம், விக்கினம்: மூலம் வரின் தர்மயோகம், காரிய சித்தி: பூராடம் வரின் பிரசாபதி யோகம், சித்திகரம். உத்திராடம் வரின் சௌமிய யோகம், தன லாபம்: அபசித்து வரின் துவாம்ச யோகம், விக்கினம். திருவோணம் வரின் துவச யோகம், வஸ்து லாபம்: அவிட்டம் வரின் ஸ்ரீ வத்ச யோகம், லட்சுமீகரம். சதயம் வரின் வச்சிர யோகம் கலகம். பூரட்டாதி வரின் முத்கர யோகம், காரியக்கேடு. உத்திரட்டாதி வரின் சத்திரயோகம், சௌக்கியம். ரேவதி வரின் மித்திரயோகம், பூ லாபம், அசுபதி வரின் மானசயோகம், ராசபூசிதம். பரணி வரின், பத்மயோகம், மித்திர லாபம். கார்த்திகை வரின் இலம்ப யோகம், போசன லாபம். ரோகிணி வரின் உற்பாத யோகம், துக்ககரம். மிருகசீரிடம் வரின் மிருத்து யோகம், அசுபகரம். திருவாதிரை வரின் சாரண யோகம், சம்பத்து. புனர்பூசம் வரின் சித்த யோகம், சகல சித்தி. பூசம் வரின் சுப யோகம், சுபப்பிரதம், ஆயிலியம் வரின் அமிர்த யோகம் வஸ்திர லாபம். மகம் வரின் முசலயோகம், அசௌக்கியம். பூரம் வரின் தண்ட யோகம், அசுபம். உத்திரம் வரின் மாதங்க யோகம், கஷ்டம். அஸ்தம் வரின் ராக்கத யோகம், அப சகுனம். சித்திரை வரின், சர யோகம், சீக்கிர சித்தி. சுவாதி வரின் ஸ்திர யோகம், தீர்க்க சித்தி. விசாகம் வரின் வர்த்தமான யோகம், இலாபம்.
6. வௌ்ளியில் உத்திராடம் வரின் ஆனந்த யோகம், தன லாபம். அபிசித்து வரின் கால தண்ட யோகம், விக்கினம். திருவோணம் வரின் தர்ம யோகம், காரிய சித்தி. அவிட்டம் வரின் பிரசாபதி யோகம், சித்திகரம். சதயம் வரின் சௌமிய யோகம், தன லாபம். பூரட்டாதி வரின் துவாம்ச யோகம், விக்கினம். உத்திரட்டாதி வரின் துவச யோகம், வஸ்து லாபம். ரேவதி வரின் ஸ்ரீ வத்ச யோகம், லட்சுமீகரம். அசுபதி வரின் வச்சிரயோகம், கலகம், பரணி வரின் முத்கர யோகம், காரியக் கெடுதி. கார்த்திகை வரின் சத்திரயோகம், சௌக்கியம். ரோகிணி வரின் மித்திரயோகம், பூ லாபம். மிருகசீரிடம் வரின் மானசயோகம், ராசபூசிதம். திருவாதிரை வரின் பத்ம யோகம், மித்திரலாபம். புனர்பூசம் வரின் இலம்பயோகம், போசன லாபம். பூசம் வரின் உற்பாத யோகம், துக்கரம், ஆயிலியம் வரின் மிருத்து யோகம், அசுபகரம். மகம் வரின் சாரண யோகம், சம்பத்து, பூரம் வரின் சித்த யோகம், சகல சித்தி, உத்திரம் வரின் சுபயோகம், சுபப்பிரதம், அஸ்தம் வரின் அமிர்த யோகம் வஸ்திர லாபம். சித்திரை வரின் முசல யோகம் அசௌக்கியம். சுவாதி வரின் தண்ட யோகம், அசுபகரம். விசாகம் வரின் மாதங்க யோகம், கஷ்டம். அனுசம் வரின் இராக்கத யோகம், அபசகுனம். கேட்டை வரின் சர யோகம், சீக்கிர சித்தி, மூலம் வரின் ஸ்திர யோகம், தீர்க்க சித்தி. பூராடம் வரின் வர்த்தமான யோகம், இலாபகரம்.
7. சனியில் சதயம் வரின் ஆனந்த யோகம், தன லாபம், பூரட்டாதி வரின் கால தண்ட யோகம், விக்கினம், உத்திரட்டாதி வரின் தர்ம யோகம், காரிய சித்தி, ரேவதி வரின் பிரசாபதி யோகம், சித்திகரம், அசுபதி வரின் சௌமிய யோகம், தன லாபம், பரணி வரின் துவாம்ச யோகம், விக்கினம், கார்த்திகை வரின் துவசயோகம், வஸ்து லாபம், ரோகிணி வரின் ஸ்ரீ வத்ச யோகம், இலட்சுமீகரம். மிருகசீரிடம் வரின் வச்சிர யோகம், கலகம், திருவாதிரை வரின் முத்கர யோகம், காரியக்கெடுதி, புனர்பூசம் வரின் சத்திர யோகம், சௌக்கியம், பூசம் வரின் மித்திர யோகம், பூ லாபம், ஆயிலியம் வரின் மானச யோகம், ராசபூசிதம், மகம் வரின் பத்மயோகம், மித்திரலாபம், பூரம் வரின் இலம்பயோகம், போசன லாபம், உத்திரம் வரின் உற்பாத யோகம், துக்ககரம். அஸ்தம் வரின் மிருத்து யோகம், அசுபகரம், சித்திரை வரின் சாரண யோகம், சம்பத்து, சுவாதி வரின் சித்த யோகம், சகல சித்தி, விசாகம் வரின் சுப யோகம், சுபப்பிரதம், அனுசம் வரின் அமிர்தயோகம், வஸ்திர லாபம், கேட்டை வரின் முசல யோகம், அசௌக்கியம், மூலம் வரின் தண்ட யோகம், அசுபம், பூராடம் வரின் மாதங்க யோகம், கஷ்டம், உத்திராடம் வரின் இராக்கத யோகம், அப சகுனம், அபிசித்து வரின் சர யோகம், சீக்கிர சித்தி, திருவோணம் வரின் ஸ்திர யோகம், தீர்க்கச் சித்தி. அவிட்டம் வரின் வர்த்தமான யோகம், இலாபகரம்.