சர யோகம்
மேடம், கடகம், துலாம், மகரம்.
சாமர யோகம்
ஓர் சுப யோகம்.
1. இலக்கினத்தோன் கேந்திரம், உச்சம் இவைகளில் இருக்க, குரு நேர் பார்வை பெற்று நின்றாலும்,
2. இலக்கினத்தோன் குருவோடு கூடி பணபரத்தில் இருக்க, அதைச் சுக்கிரன் பார்த்தாலும்,
3. இலக்கினம் சர ராசியாக, இலக்கினத்தோன் ஒன்பது பத்து இவைகளில் நின்றாலும்,
4. இலக்கினத்தில் இரண்டு சுபக்கிரகம் இருக்க, அல்லது வேறு கிரகங்களில் இருந்து, ஏழு ஒன்பது இவ்வீட்டு அதிபர்கள் பத்தில் இருந்தாலும்,
5. மூன்று, பதினொன்றில் பாவர் இருக்க, அல்லது சுபக்கிரகமாவது இருக்க, இலக்கின அதிபன் அதிக வலுவுற்று இருந்தாலும்,
6. சூரியன் வர்க்கோத்தமம் ஆகவும், இலக்கின அதிபன் உச்சமாயும், ஐந்து, ஒன்பதில் புதன் இருந்தாலும்,
7. இலக்கினம் சராசரியாக இருந்து நான்கு, ஏழுக்கு உடையவர்கள் அதிக பலம் பெற்றிருந்தாலும்,
8. இலக்கினம் சரராசியாக பன்னிரண்டில் இலக்கின அதிபன் இருக்க, குரு கேந்திரத்தில் பூர்வ பட்சமாக இருந்தாலும்,
9. திரராசி உதயமாகி இலக்கின அதிபதி உச்சத்தில் இருந்து, இலாப அதிபன் பாக்கியம் ஏறி இருந்தாலும்,
10. பூரணையில் பிறந்த சாதகருக்கு, இலக்கின அதிபன் உச்சத்தில் இருக்க, இலக்கினத்தில் கிரகங்கள் இருந்தாலும்,
11. புதன், சுக்கிரன், சூரியன், ஒன்றுக்கு ஒன்று கேந்திரத்தில் இருக்க அல்லது கூடி நின்றாலும்,
12. இலக்கினத்தில் சுபர்கள் இருக்க, அல்லது பார்க்க, இலக்கின அதிபதி ஆறு, எட்டுப் பன்னிரண்டு, நீங்கிய இடங்களில் ஆட்சி, உச்சம் பெற்றும் நின்றாலும்,
அவை சாமர யோகம் ஆகும்.
சிரக யோகம்
ஓர் சுப யோகம். இது குரு, புதன், சுக்கிரன், இவர்கள் அமிச ராசியில் மூன்று கேந்திரங்களில் இருக்க மற்றொரு கேந்திரத்தில் பாவர் இல்லாமல் இருப்பதாகும்.
சிவ யோகம்
1. பன்னிரண்டாம் இடம்,
2. பஞ்சம லாப அதிபர்கள் பாக்கியத்தில் இருக்க, தர்ம கர்ம அதிபர் ஐந்தாம் இடத்தில் இருப்பதாகும். இது ஓர் நல்ல யோகம்.
சீருங்காட யோகம்
ஓர் சுப யோகம்.
இது ஐந்து ஒன்பது ஆகிய இவ்விடங்களில் சூரியாதி ஏழு கிரகங்கள் நிற்பதாகும்.
சுபயோகம்
ஓர் நல்ல யோகம். இது தன ஸ்தானத்துக்கு சுப கிரகங்கள் இருக்க பாவிகள் பார்க்காது இருப்பதாகும்.
சுப மாலா யோகம்
ஓர் நல்ல யோகம். இது எல்லாக் கிரகங்களும் ஐந்து, ஆறு, ஏழு ஸ்தானங்களில் வரிசையாய் நிற்பதாகும்.
சுப மாலிகா யோகம்
ஓர் நல்ல யோகம். அது ஒன்பதாம் இடம் முதல் மூன்றாம் இடம் வரை ஏழு கிரகங்கள் நிற்பது.
சுப யோகம்
ஒரு நல்ல யோகம். இது இரண்டாமிடத்தில் சந்திரனும் சுக்கிரனும் நிற்க, பதினொன்றுக்கு உடையவன் ஒன்பதாம் இடத்தில் நின்றாலும், இலக்கின அதிபதி உச்சம் பெற்றிருக்க, இரண்டுக்கு உடையவன் சுயச்சேத்திரம் அடைய ஏழுக்கு உடையவன் மூலத் திரிகோணம் பெற்று நின்றாலும், ஒன்பதுக்கு உடையவன் நின்ற அங்கிச அதிபதி உச்சம் பெற்றும், இரண்டுக்கு உடையவனும் ஒன்பதுக்கு உடையவனும் இரண்டாம் இடத்தில் நின்றாலும் சுப யோகம்.
அன்றியும் ஞாயிறில் அஷ்டமி யும், திங்களில் நவமியும், செவ்வாயில் சஷ்டியும், புதனில் திருதியையும், வியாழனில் ஏகாதசியும், வௌ்ளியில் திரயோ தசியும், சனியில் சதுர்த்தசியும் வந்தாலும் சுப யோகமாகும். ஓர் யோகம். ஒரு யோகம்.
சுனபா யோகம்
ஒரு நல்ல யோகம். இது சந்திரனுக்கு இரண்டில் சூரியனைத் தவிர மற்றக் கிரகங்கள் நிற்பதாகும்.
சௌரி யோகம்
ஒரு நல்ல யோகம். அது மூன்றாம் இடம் சுபருடைய பார்வை பெற மூன்றுக்கு உடையவன் ஆறு, எட்டு, பன்னிரண்டு நீங்கிய சுபர் வீட்டில் ஆட்சி உச்சத்தோடு இருப்பதாகும்.
தடாக யோகம்
ஒரு நல்ல யோகம். அது இரண்டு, ஐந்து, எட்டு, இவ்விடங்களில் ஏழு கிரகம் இருந்தாலும், மூன்று, ஆறு, ஒன்பது இவ்விடங்களில் ஏழு கிரகங்கள் இருந்தாலும் ஆகும்.
தண்டயோகம்
ஒரு மத்திம யோகம். அது இராகு, கேது நீங்கிய சூரியாதி எழுவர் பத்து, பதினொன்று, பன்னிரண்டு ஆகியவைகளில் நின்றாலும், மூன்றோன் உச்சமாக, மூன்றில் குரு இருக்க, சுக்கிரன்
பார்வை பெற்றிருத்தலுமாகும்.
தத்த யோகம்
இன்ன கிழமையில் இன்ன திதி வருவது என்பது. விவரம்: ஞாயிற்றுக் கிழமையில் துவாதசியும், திங்கட்கிழமையில் ஏகாதசியும், செவ்வாய்க்கிழமையில் பஞ்சமியும், புதன் கிழமையில்
துவிதியையும், வியாழக்கிழமையில் சஷ்டியும், வௌ்ளிக்கிழமையில் அஷ்டமியும், சனிக்கிழமையில் நவமியும் வருவதாகும்.
தரித்திர மாலிகா யோகம்
ஒரு கெட்ட யோகம். அது ஆறாம் இடம் முதல் பன்னிரண்டாம் இடம் வரை ஏழு கிரகங்கள் நிற்பதாகும்.
தனுர் யோகம்
ஒரு நல்ல யோகம். அது இராகு. கேது நீங்கிய சூரியாதி எழுவரும் பத்து, பதினொரு, பன்னிரண்டு, ஒன்று, இரண்டு, மூன்று, நாலு ஆகிய இந்த ராசிகள் வரை நிற்பதாகும்.
தாம யோகம்
ஒரு நல்ல யோகம். அது இராகு கேது நீங்கிய சூரியனாதி எழுவர் ஆறு ராசிகளில் இருப்பதாகும்.
சுப யோகங்கள்
ஞாயிற்றுக்கிழமையில் அஷ்டமியும், திங்களில் நவமியும், செவ்வாயில் சஷ்டியும், புதனில் திரிதியையும், வியாழனில் ஏகாதசியும், வௌ்ளியில் திரியோதசியும், சனியில் சதுர்த்தசியும் வருவன.
நாச யோகங்கள்
ஞாயிற்றில் சதுர்த்தசியும், திங்களில் சஷ்டியும், செவ்வாயில் சப்தமியும், புதனில் துவிதியையும், வியாழனில் அஷ்டமியும், வௌ்ளியில் நவமியும். சனியில் சப்தமியும் வருவன. ஞாயிற்றில் பஞ்சமியும், கார்த்திகையும், திங்களில் துவிதியையும், சித்திரையும், செவ்வாயில் பூரணையும், ரோகணியும், புதனில் சப்தமியும், பரணியும், வியாழனில் திரயோதசியும், அனுஷமும், வௌ்ளியில் சஷ்டியும், திருவோணமும், சனியில் அஷ்டமியும் ரேவதியும் வருவனவாம்.
அக்னி யோகங்கள்
ஞாயிற்றில் துவாதசியும், திங்களில் சஷ்டியும், செவ்வாயில் சப்தமியும், வௌ்ளியில் தசமியும், சனியில் ஏகாதசியும் வருவனவாம்.
தக்க யோகங்கள்
ஞாயிற்றில் துவாதசியும், திங்களில் ஏகாதசியும், செவ்வாயில் பஞ்சமியும், புதனில் துவிதியையும், வியாழனில் சஷ்டியும், வௌ்ளியில் அஷ்டமியும். சனியில் நவமியும் வருவனவாம்.
திதி அமிர்த யோகம்
இன்ன கிழமையில் இன்ன திதி வருவது என்பது. விவரம்: ஞாயிறில் பிரதமையும், சஷ்டியும், திங்களில் துதிகையும், சப்தமியும், செவ்வாயில் சதுர்த்தசியும், புதனில் அஷ்டமியும், திருதிகையும், திரயோதசியும், வியாழனில் நவமியும், வௌ்ளியில் ஏகாதசியும், சனியில் சதுர்த்தசியும் வருவதாகும்.
திதி நாசயோகம், திதி நட்சத்திர நாசயோகம்
நாச யோகம். விவரம்: நாச யோகத்தில் காண்க.
திதியமிர்த யோகம்
திதிகளைக் காண்க.
திரிமூர்த்தி யோகம்
1. ஒரு ராஜயோகம். இது சந்திரன் சிங்காசனாங்கிசமாகவும், குரு பாரிசாதாங்கி சமாகவும், சுக்கிரன் ஐராவதாங்கிசமாகவும் இருந்தாலும்,
2. சுக்கிரன் பர்வதாங்கிசத்திலாவது, குரு சிங்காசனாங்கிசத்திலாவது, சந்திரன் ஐராவதாங்கிசத்திலாவது இருந்தாலும்,
3. இரண்டாம் இடத்து அதிபதிக்கு இரண்டு, எட்டு, ஆகிய இவ்விடங்களில் பாபரும், சுபரும் கூடி இருந்தாலும்,
4. பத்துக்கு உடையோன் நின்ற ராசி அதிபதியின் அங்கிச அதிபதி, கேந்திர உச்சமாக இருந்தாலும் அல்லது அந்த ஸ்தானத்துக்கு உடையோனும் ஒன்பது, எட்டு, நான்கு ஆகிய இவ்விடங்களில் குரு,
புதன், சுக்கிரன் ஆகியவர்கள் தனித்தனியே நின்றாலும், அல்லது நான்கு, பத்து, பன்னிரண்டு ஆகிய இவ்விடங்களில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் ஆகிய இவர்கள் தனித்தனியே நின்றாலும் இந்த
யோகமாகும்.
திருப்பிரவேசயோகம்
பூர்வ பட்சத்து நல்ல கிழமையுடன் கூடின அன்றைய பட்சமும், நட்சத்திரமும், சுப யோகமும் வர, வாராதிபன் உச்சத்தானம் ஏறி உச்சாம்சம் பெற உச்சராசி, இலக்னமாகக் கற்பாதானம், கிரகாரம்பம், விவாகம் செய்யின் முறையே சக்ரவர்த்தித்வம், அழியாச்செல்வம், பூர்ணாயுள் பெருஞ் செல்வம் உண்டாகும்.
திவாயோகம்
ஆயிலியம், அச்வநி முதற்கால், பரணி, மூலம் இரண்டாங்கால், திருவோணம், உத்திரம் மூன்றாம் கால், மிருகசீரிஷம், சோதி நாலாங்கால் திவா யோகமாம். இவற்றில் சுபங்கள் செய்தல் ஆகாது. இரவிற் செய்யலாம். சந்திரன் பூரணனாய் ஒரு சுபக்கிரகத்துடன் நிற்கையில் பகலும் தோஷமில்லை. (விதான.)
துற்பாக்கிய மாலிகா யோகம்
ஒரு நல்ல யோகம். இது எட்டாம் இடம் முதல் இரண்டாம் இடம் வரை ஏழு கிரகங்கள் இருப்பது.
தூப யோகம்
1. ஒரு சுப யோகம். இது செவ்வாயின் அங்கிச அதிபதி, சந்திர லக்கின அதிபதி, ஆகியவர்களுக்கு ஐந்து, ஒன்பது ஆகிய இவ்விடங்களில் குரு, சுக்கிரன் இருக்க பத்தாம் இடத்தில் சனி
உச்சமாய் இருத்தலுமாகும்.
2. லக்கின அதிபதி நின்ற அங்கிச அதிபதி ஐந்தில் இருக்க சுக்கிரன் பார்ப்பதும் ஆகும்.
தேவேந்திர யோகம்
ஒரு நல்ல யோகம். இது இலக்கினம் திரராசியாகி லக்கின அதிபதி இலாபத்திலும் குடும்ப அதிபதி கரும ஸ்தானத்திலும், பஞ்சம் அதிபதி குடும்ப ஸ்தானத்திலும், பாக்கிய அதிபதி லக்கின கேந்திரத்திலும் நிற்றலாகும்.
தேனு யோகம்
ஒரு நல்ல யோகம். இது இரண்டில் சுபக்கோள் சம்பந்தம் அல்லது பார்வை பெற்றேனும், தன அதிபன் ஆறு, எட்டு, பன்னிரண்டு நீங்கிய சுப வீட்டில் ஆட்சி உச்சனாய் இருப்பது.
தைன்ய யோகம்
இதனை பரிவர்த்தன யோகம், கிரக மாற்று யோகம் என்பர். அது விரைய அதிபன் ஒன்று முதல் பதினொன்று வரை எந்த வீட்டிலாவது இருந்து அவ்வீட்டதிபர் பன்னிரண்டில் நிற்பது. இந்த ஸ்தானமாறுதல் பதினொரு வகையாகும். ஆறுக்கு உடையவன் ஒன்பது, பத்து, பதினொன்று, ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, இவைகளில் எவ்வீட்டிலாவது இருந்து அவ்வீட்டதிபர்கள்
ஆறில் நிற்பதாகும். இந்த ஸ்தான மாறுதல் பத்து வகையாகும். எட்டுக்கு உடையவன் ஒன்பது, பத்து, பதினொன்று, ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு இவ்விடங்களில் எவ்வீட்டிலாவது இருந்து அவ்வீட்டதிபர்கள் எட்டில் நிற்பதாகும். இந்த ஸ்தான மாறுதல் ஒன்பது வகையாகும். பொதுவாய் இவை நல்ல யோகம் அல்ல.
நட்சத்திர நாச யோகம்
மரண யோகத்துக்கு உள்ள நட்சத்திரம். விவரம் நாச யோகத்தைப் பார்க்க.
நல்ல யோகம்
ஓர் சுப யோகம். இது இலக்கினம் முதல் ஏழாம் இடம் வரை இராகு, கேது நீங்கிய ஏழு கிரகங்கள் ஒன்றன் பின் ஒன்றாய் நிற்றல். மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ராசிகளில்
இராகு, கேது நீங்கிய சூரியாதி ஏழு கிரகங்கள் நிற்றல்.
நள யோகம்
ஒரு சுப யோகம். இது பாக்கிய அதிபதி நின்ற அங்கிச அதிபதி, இலக்கின அதிபனோடு கூடி உச்சம் பெற்று நிற்றல்.
நட்சத்திர நாச யோகங்கள்
ஞாயிற்றில் விசாகமும், திங்களில் சதயமும், செவ்வாயில் அவிட்டமும், புதனில் ரேவதி, வியாழனில் ரோகிணியும், வௌ்ளியில் பூசமும், சனியில் உத்திரமும், வருவன.
கிழமை பிறந்த நாள், ஞாயிறில் பரணியும், திங்களில் சித்திரையும், செவ்வாயில் உத்திராடமும், புதனில் அவிட்டமும், வியாழனில் கேட்டையும், வௌ்ளியில் பூராடமும், சனியில் ரேவதியும் வருவனவாம். இந்த நாள்களில் செய்யும் காரியங்கள் எல்லாம் தீமையாய் விளையும்.
நாச யோகம்
மரணயோகம், திதிகளைக் காண்க.
மரண யோகம். அவை மூன்று வகைப்படும்.
1. ஞாயிறில் சதுர்த்தசியும், திங்களில் சஷ்டியும், செவ்வாய், சனியில் சப்தமியும், புதனில் துதிகையும், வியாழனில் அஷ்டமியும், வௌ்ளியில் நவமியும் வருவன திதி நாச யோகமாகும்.
2. ஞாயிறில் விசாகமும், திங்களில் சதயமும், செவ்வாயில் அவிட்டமும், புதனில் இரேவதியும், வியாழனில் உரோகிணியும், வௌ்ளியில் பூசமும், சனியில் உத்திரமும் வருவன நட்சத்திர நாச
யோகமாகும்.
3. ஞாயிறில் பஞ்சமியும் கார்த்திகையும், திங்களில் துதிகையும், சித்திரையும், செவ்வாயில் பூரணையும், உரோகணியும், புதனில் சப்தமியும், பரணியும், வியாழனில் திரயோதசியும், அனுசமும், வௌ்ளியில் சஷ்டியும், திருவோணமும், சனியில் அஷ்டமியும், ரேவதியும் வருவது திதி நட்சத்திர நாச யோகம் என்பதாகும்.
நாசிகா யோகம்
ஒரு நல்ல யோகம். இது உயிர் அதிபன், வியாழன் ஆகிய இவர்கள் பத்திலும், சந்திரன் இரண்டிலும், சப்தம் அதிபதி இலக்கினத்திலும் இருக்க, இலக்கின அதிபதியால் பார்க்கப்
பெற்றிருத்தலுமாகும்.
நாபி யோகம்
ஒரு நல்ல யோகம். இது பதினொன்றில் குரு நிற்க அதற்குப் பதினொன்றில் இலாப அதிபன் சந்திரனோடு கூடி நிற்பதாகும்.
நாள யோகம்
ஒரு நல்ல யோகம். அது ஒன்பதில் பூருவ பட்சத்துச் சந்திரன், வியாழன், சுக்கிரன் ஆகிய இவர்கள் ஒன்று பட்டிருக்க புதன் இலக்கின அங்கிசம் பெற்று நிற்பதாகும்.
நீச பங்க ராசயோகம்
ஓர் யோகம், ஒரு யோகம். நீசம் பெற்ற கிரகம், நீசங் கெட்டு இராஜ யோகத்தைத் தருவதாகும். விவரம்: நீசக் கிரகம் இருந்த வீட்டுக்கு உடையவன், ஆட்சி அல்லது உச்சம் பெற்றாவது, சந்திரனுக்குக் கேந்திரம் பெற்றாவது நிற்பதாகும்.
நௌ யோகம்
ஒரு சம யோகம். அது இராகு, கேது சூரியாதி எழுவர் தனித் தனியாக இலக்கினம் முதல் ஏழாம் ராசி வரையில் இருப்பதாகும்.
பட்சி யோகம்
ஒரு கெட்ட யோகம். அது நாலாம் இடம், பத்தாம் இடம் இவைகளில் எல்லாக் கிரகங்களும் நிற்றல்.
பத்திர யோகம்
ஒரு நல்ல யோகம். அது சந்திரனுக்கு ஒன்பதில் குருவும், இலக்கினத்துக்கு ஒன்பதில் சுக்கிரனும் நிற்பதாகும். இராகு, கேது, சூரியன், சந்திரன் இவர்கள் நீங்கிய குசாதி பஞ்சக் கோள்கள்
ஆட்சியிலாவது, உச்சத்திலாவது கேந்திரித்து நிற்பதாகும்.
பத்ம யோகம்
ஒரு நல்ல யோகம். அது நான்கு கேந்திரங்களிலும் சுபரும், பாவரும் கலந்து இருப்பதாகும்.
பரமானந்த யோகம்
ஒரு நல்ல யோகம். அது இலக்கினம் திரமாகவும், ஏழு, ஐந்து, பதினொன்று, இவைகளில் சூரியன், சந்திரன், சனி இவர்கள் தனித்தனியே நின்று குரு உச்சம் பெற்றிருப்பதாகும்.
பரிவர்த்தன யோகம்
ஒரு நல்ல யோகம். ஒருவர் வீட்டில் ஒருவர் மாறி நிற்பதால் வரும் யோகம். இதில் பன்னிரண்டு, ஆறு, எட்டு, இந்த அதிபர்களால் உண்டாகும் யோகம் முப்பது: மூன்றாம் அதிபதியினால் வரும் யோகம் எட்டு: ஒன்று, இரண்டு, நான்கு, ஐந்து, ஏழு, ஒன்பது, பத்து இந்த அதிபர்களால் உண்டாகும் யோகம் இருபத்தெட்டு. ஆக மொத்தம் அறுபத்தாறு வகையாகும்.
விவரம்: தைந்ய யோகம், கல யோகம், மகா யோகம் இவைகளில் காண்க.