"அம்மா, நான் வாங்கி (கொள்முதல் செய்து) வந்திருக்கிறேன்"
"எந்தப் பொருளை நீ இவ்வளவு சீக்கிரம் வாங்கி வந்திருக்கிறாய் மகனே? உன்னிடம் பொருள் எதையும் காணோமே?"
"இந்த உலகில் வாழ்வதற்கு, மக்கள் பொருள்களைக் கொள்முதல் செய்கிறார்கள் (வாங்குகிறார்கள்). மறுவுலகில் வாழ்வதற்கும் பொருள்கள் தேவைப்படும் அல்லவா? அதைத்தான் நான் வாங்கி வந்திருக்கிறேன்"
"எப்படி?" என்று தாய் கேட்டாள்.
"எல்லாப் பணத்துக்கும் தானியம் வாங்கி ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டேன். அம்மா, அவர்கள் மிகவும் பசியாக இருந்தார்கள். அவர்களின் பசியை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை"
தாய், தன் மகன் செய்த வியாபாரம் பற்றி அறிந்து பெரிதும் மகிழ்ச்சியடைந்தாள்.
அவ்விதம் பிறர் துன்பத்தைத் தன் துன்பமாக எண்ணும் சிறுவன்தான் நானக், பிற்காலத்தில் அவரே சீக்கிய மத நிறுவனர் 'குருநானக்' என்று அழைக்கப்பட்டார்.