தத்துவ ஞானிகளில் ஒருவரான டயோஜினிஸ் ஒரு நாள் சூப் வைப்பதற்காக அவரை விதைகளைக் கழுவிக் கொண்டிருந்தார்.
அதை அருகிலிருந்து அரிஸ்டிபஸ் என்ற இன்னொரு விஞ்ஞானி பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கிரேக்க மன்னனுக்குத் துதிபாடியே வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார்.
அரிஸ்டிபஸ், “நீங்கள் மட்டும் மன்னரைப் புகழ்ந்து துதி பாடத் தெரிந்து கொண்டிருந்தால், இந்த மாதிரி அவரை விதைகளைக் கழுவிக் கொண்டிருக்க வேண்டாம்!" என டயோஜினிஸிடம் கூறினார்.
பதிலுக்கு டயோஜனிஸ், “நீங்களும் இப்படி சாதாரண அவரை விதை சூப்பைக் குடித்து வாழப் பழகியிருந்தால், மன்னருக்குத் துதி பாடிக் கொண்டிருக்க வேண்டாமே!" என்றார்.