18 ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு அரசில் ரிஷிலு என்ற மந்திரி இருந்தார்.
அவரிடம் ஒரு முறை பிரெஞ்சு எழுத்தாளர் பௌலன் ஒரு தர்ம நிலையத்திற்காக நன்கொடை கேட்டார். ரிஷிலு மறுத்துவிட்டார்.
ஒரு நாள் இருவரும் ஓர் ஓவியக் கண்காட்சியில் சந்தித்துக் கொண்டனர்.
''அந்த அறையில் உங்கள் ஓவியத்தைப் பார்த்தேன்'' என்றார் பௌலன்.
''உடனே அதனிடம் ஏதாவது நன்கொடை கேட்டிருப்பீர்களே?'' என்று கிண்டலடித்தார் ரிஷிலு.
''எனக்கென்ன பைத்தியமா? ஓவியம் உங்களைப் போலவே இருந்ததால், பயன் இருக்காது என்பதுதான் தெரிந்ததாயிற்றே'' என்று பதிலடி தந்தார் பௌலன் சிரித்தபடி.