ஆசிரியர் அன்று புவியீர்ப்பு சக்தி பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
முடிவில் மாணவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார்:
“பூமி ஏன் கீழே விழுவதில்லை?"
ஆளுக்கு ஒவ்வொரு விதமாகப் பதில் சொன்னார்கள்.
ஒரு புத்திசாலி சிறுமி எழுந்து, “பூமி எங்கே சார் விழும்?" என்று வேகமாகக் கேட்டாள்.
ஆசிரியர் திகைத்துப் போய் நின்றார். ஆனாலும், அதுதான் சரியான பதில்.
எல்லையற்ற அண்டவெளியில் எது மேற்புறம்? எது கீழ்புறம்? அதில் மேலே, கீழே என்பதெல்லாம் ஒன்றும் கிடையாது. அப்படி இருக்கும் போது, பூமி ஏன் கீழே விழுவதில்லை?" என்ற கேள்வியேச் சரி இல்லை!
ஆசிரியர் அச்சிறுமியைப் பாராட்டினார்.